PDA

View Full Version : முதல் நூறு....மன்றத்திற்கே



இன்பக்கவி
23-06-2009, 09:32 AM
http://www.pittsburghweddingessentials.com/images/weddingessentials/storyphotos/bridal_20080626_flowers_banner.jpg
மீண்டும் ஒரு சமர்ப்பணம்

மன்றத்தில் பூத்த
ஒற்றை ரோஜா நான்....
தமிழ்ப் பூஞ்சோலையில்
தயக்கதோடு தனியாய்
நின்றேன்....

என்னை நானே குறைத்து
மதிப்பீடு செய்து
எதிலும் சேராமல் இருந்தேன்....
சிறிது தயக்கதோடு
ஐம்பதை தொட்டவுடன்
அச்சம் தவிர்த்து
நட்புக் கரம் நீட்டினேன்.....
மன்ற உறவுகள்
நட்பைக் கொடுத்தனர்......
அன்று அடைந்த ஆனந்தம்
இன்னும் என் நெஞ்சில்......

மனங்கவர் தேர்தல்...
அதில் என் பெயர்...
முதலில் அதிர்ச்சி...
பின் ஆனந்தம்...
தோல்வி ஏற்பட்டாலும்
கவலை இல்லை....
தோல்வி எனக்கு புதிதும்
இல்லை.....

உங்கள் மனதில்
எனக்கு இருக்கும் இடத்திற்கு
தேர்தல் இல்லை...
அதில் எனக்கு தானே வெற்றி....
அதைவிட சந்தோஷம் வேறு
என்ன எனக்கு....

கேட்காமலேயே உதவியும்...
தன்மையோடு சொல்லும் பாங்கும்
மன்றத்திற்க்கே உண்டான தன்மை....
இம்மன்றத்தில் இருப்பது எங்களுக்கு
பெருமை....

முன்புபோல கவி எழுத
என்னால் ஏனோ இயலவில்லை...
தோல்விகளால்
என் சிந்தை செயல் இழந்தது போல்
ஓர் உணர்வு....
அதிலிருந்து மீண்டு வருவேன்...
மீண்டும் வருவேன்...
தினமும் "கவி" படைக்க....


(இனி உங்களை ஐந்நூறில் சந்திக்கிறேன்...)

நேசம்
23-06-2009, 10:13 AM
மிண்டும் வாருங்கள் சகோதரி.வாழ்த்துகள்

ஆதி
23-06-2009, 10:26 AM
வீழ்வது வீழ்ச்சி அன்று
எழுச்சி..
அழாதவரும்
விழாதவரும் அவணியில் இல்லை..
அழுவது ஆற..
விழுவது வாழ..

வெற்றி மட்டுமே அறிந்தவர்க்கு
வீழ்ச்சியின் வலி தெரியாது
விழுந்தால் எழ வழி தெரியாது..

தோற்பவர்க்கு
வெற்றியின் மாட்சி புரியும்
வெற்றியின் உண்மை மகிழ்ச்சியும் புரியும்..

தோல்வியிலும் சிந்தை சோராமல் தொடருங்கள்..

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்..
காராக பெய்யுங்கள் கணக்கற்ற பதிவுகளை..

கா.ரமேஷ்
23-06-2009, 10:27 AM
இயல்புதான் மீண்டு வாருங்கள்....
உங்களை தேர்வு செய்த அன்றே நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள் பிறகு என்ன தயக்கம்...
தொடருங்கள் வாழ்த்துக்கள்...!

samuthraselvam
23-06-2009, 10:44 AM
மீண்டும் மீண்டு வருக கவி....

நூரைத் தோட்டத்திற்கு வாழ்த்துக்கள்...

வசீகரன்
23-06-2009, 11:16 AM
[/SIZE][/B]

தயக்கம் எதற்க்கு..... தடைக்கல்லை ஒதுக்கு.........
என் ஆரம்பகால கவிதைகளை பாருங்கள் செம
காமெடியாக இருக்கும் எல்லாம்........
மன்றமே போதும் நிப்பாட்றா தாங்கமுடில என்று என்னை அடிக்க வந்ததால் நானே நிப்பாட்டி விட்டேன் மன்றம் பாவம் என்று......!

உங்கள் கவிதைகள் எல்லாமே அருமைதான் தொடர்ந்து எழுதுங்கள்....
விரைவில் 500 சதம் அடியுங்க........

நூர்
23-06-2009, 02:46 PM
நூரைத் தொட்டத்திற்கு வாழ்த்துக்கள்...-நூர்-

அறிஞர்
23-06-2009, 03:04 PM
வாழ்த்துக்கள் கவி...
கவிதையில் தங்களின் மகிழ்ச்சி தெரிகிறது.
இன்னும் பல நூறு கவிதைகளை கொடுக்க வாழ்த்துக்கள்..

பரஞ்சோதி
23-06-2009, 07:04 PM
வாழ்த்துகள் சகோதரி,
ஒற்றை ரோஜா என்று மாலையில் நடுவில் இருக்கும் ரோஜாவாக மாறியிருக்கீங்க.

மன்றத்தின் பூமாலையாக திகழ வாழ்த்துகள்.

இளசு
23-06-2009, 07:13 PM
விழாமல் நடைபழகிய குழந்தை உண்டா சகோதரி?

விடாமுயற்சி நம் இயல்பில் உள்ளது..

செயற்கை முடக்கம் வேண்டாம்..

ஊற்றெடுக்கும் படைப்புகளை தடையின்றி மன்றத்தில் பதியனிடுங்கள்..

காலமகள் கைகொடுப்பாள்... நம் மன்றச் சொந்தம் போல..

வாழ்த்துகள்!

அமரன்
24-06-2009, 11:01 PM
சதமடித்த கவிப்புயலுக்கு வாழ்த்துகள்.

பொன்மொழி ஒன்றுண்டு.

வீழ்வது தோல்வியல்ல.

வீழ்ந்தே இருப்பதுதான் தோல்வி.

வீழ்வு என்பது சிறியதோர் ஓய்வு.

நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஓய்வு உங்களை மெருகேற்றும்.

ஒரு குட்டிக்கவிதை..

கண்ணீர் விட்டேன்
காவியமாகி
கலகலத்தது காகிதம்.