PDA

View Full Version : உடலில் சில இடங்களில் வெள்ளை புள்ளியாக..........



pathman
23-06-2009, 09:06 AM
இது ஒரு வகையான தோல் நோய். முதலில் உடலில் சில இடங்களில் வெள்ளை புள்ளியாக தோன்றும்.

முக்கியமாக கை விரல்களில், கையில், உதடுகளில். சில மாதங்களில் முகம் கைகள் பாதி வெள்ளையாகவும் பாதி தோலின் நிறமாகவும் இருக்கும்

நண்பர்களே உங்களில் யாருக்காவது இந்த நோய் பற்றி தொ¢யுமா ?

தொ¢ந்தால் விபரம் தரவும்

praveen
23-06-2009, 10:42 AM
தலையும் புரியவில்லை வாலும் தெரியவில்லை. இந்தக்கேள்வியை ஏன் கேட்கிறீர்கள் நண்பரே, உங்களுக்கு தெரிந்தவர் யாராவது பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா?. நோயின் பெயர் சரியாக தெரியாமலும் அதன் அறிகுறிகளை மட்டும் வைத்து ஒன்றும் செய்ய இயலாது.

எதுவானலும் நேரடியாக தோல் மருத்துவரை கண்டு அவரிடம் காட்டி தான் கிசிக்சை பெற முற்பட வேண்டும். அதை விடுத்து இப்படி பாரத்தில் கேட்டு மருந்து பரீட்சை செய்து பார்ப்பது சிக்கலில் தான் முடியும்.

மேலும் இந்த மாதிரி விசயத்தில் கூச்சம் அல்லது தயக்கம் செய்து தாமதப்படுத்துவது, நோயை முற்றச்செய்யும், பின் இறுதியில் சென்றால் மருத்துவர் சொல்வார், "ஆரம்பத்திலே வந்திருந்தால் விரைவில் குணமடைய வைத்திருக்கலாம்".

தற்போது அனைத்து வகையான நோய்களுக்கும் மருந்து உள்ளதென்பதால் விரைந்து மருத்துவரை நாடவும்.

அமரன்
25-06-2009, 12:37 PM
பத்மன் சொல்வது, உடலில் ஆங்காங்கே வெந்நீர் பட்டது போலிருக்கும் வெண்ணிற அடையாளங்களை என்று எண்ணுகிறேன். விபரமாகச் சொன்னால் நண்பர்கள் உதவுவார்கள்.

தாமரை
25-06-2009, 12:40 PM
தேமல், வெண்குஷ்டம் எனப் பலவித வியாதிகள் இந்த அடையாளங்களில் உண்டு.

தோல் மருத்துவர் சோதித்து அறிந்த பின்னரே சொல்ல முடியும்

ராஜா
29-06-2009, 11:07 AM
வைட்டமின் சி ஒவ்வாமை உள்ளோருக்கும்கூட அவ்வாறு வெள்ளைப்புள்ளிகள் தோன்றுவதுண்டு பத்மன்..!

தக்காளி, ஆரஞ்சு, தவிர்க்கவும்.

kavitha
16-07-2009, 07:05 AM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20160 -- லியூகோடெர்மா/விடிலிகோ ( Leucoderma/Vitiligo): ( நன்றி இளசு அண்ணா.) வாகவும் இருக்கலாம். ராஜா அவர்கள் சொல்வதை போல புளிப்பு மற்றும் 'டின்' பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது.

aravinthan21st
18-09-2009, 11:05 PM
ஆம் இது அனேகமாக Vitiligo ஆக இருக்கலாமென்று நினைக்கிறான்.எதுக்கும் அயலில் உள்ள தோல் வைத்திய நிபுணரை அணுகுவது நலம்.Vitiligo ஆக இருந்தாலும் இப்போ நல்ல வைத்திய முறைகள்,மருந்துகள் உண்டு .

pathman
23-10-2009, 05:20 AM
நண்பர்களே உங்கள் கருத்துகளுக்கு நன்றிகள்

ஆம் அந்த நோய் Vitiligo என்று அறிந்தேன் இடு எதனால் வருகின்றது இதற்கு மருந்து ஏதேனும் உண்டா ?

வெற்றி
27-10-2009, 07:44 AM
ராஜா அண்ணன் சொன்னது தான் விட்டமின் சி குறைபாடு இருக்கும் போது பயர் வால் இல்லாத கம்ப்யூட்டரில் எப்படி வைரஸ் வருமோ அப்படி நிறைய வரும்.. (தோல் மருத்துவரே ஒரே தீர்வு)
எனக்கு தெரிந்து வேப்ப இலையை அரைத்து உடலில் தடவி 10 நிமிடம் கழித்து குளிந்து விட்டு (சோப் உபயோகிக்க கூடாது) அதன் பின் சோத்துக்கற்றாழை கூல் தேய்த்து குளித்தால் மிக வேகமாக முன்றேன்றம் தெரியும்..
கற்றாழை கிடைக்கவில்லை எனில் குப்பை மேனி அல்லது துளசியை முயற்சிக்கலாம்..
100 % மஞ்சள் கிடைத்தால் அதையும் தடவலாம்...

பொதுவாக உடலுக்குள் ஒவ்வாமை நிகழும் போது எல்லாம் அது தோல் வழியாக வெளியேறப்பார்க்கும் என்பது ஒரு மருத்துவ நியதி அதனால் ஒரு எம்.டி யையும் பார்க்கவும்...

aren
27-10-2009, 08:42 AM
நேராக மருத்துவரிடம் அவர் ஆலோசனைபடி மருந்து எடுத்துக்கொள்ளவும்.