PDA

View Full Version : வீரன்



ஐரேனிபுரம் பால்ராசய்யா
22-06-2009, 08:46 AM
ஜல்லிக்கட்டில் திமிறிய காளையை துரத்தி வந்து அதன் திமிலைப்பிடித்து அடக்கினான் லிங்கம். வெற்றிக்களிப்பில் கறிச்சோறு தின்றுவிட்டு பரிசாக கிடைத்த பணமுடிப்பை கையில் வைத்துக்கொண்டு தன்னை திருமணம் செய்ய மறுத்து வரும் முறைப்பெண் வசந்தியைப் பார்க்கப் புறப்பட்டான்.

வசந்தி குளத்தங்கரையில் துணி துவைத்துக்கொண்டு நின்றாள். அவளுக்கு முன்பாக நெஞ்சை நிமிர்த்தியபடி வந்து நின்றான் லிங்கம்.

’’ பார்த்தியா காளைய அடக்கி பணமுடிப்பும் வாங்கியிட்டேன், இப்ப சொல்லு இந்த வீரன கட்டிக்கிறியா இல்ல அந்த ஒல்லிப்பிசாசு தங்கவேலுவ கட்டிக்கப்போறியா?’’

’’ தங்கவேலு உன்ன விட வீரன், நான் அவனத்தான் கட்டிக்குவேன்!’’ வசந்தி முடிவாகச்சொன்னாள்.

“ என்னவிட அவன் எந்த விதத்துல வீரன் சொல்லு!’’ கோபம் கொப்பளிக்க கேட்டான் லிங்கம்.

‘’ தெருக்கோடியுல இருக்கிற டீக்கடையுல இருந்த இரட்டை டம்ளர் முறையுல டீ குடிக்க கூடாதுன்னு போராடி, அத வேரோட பிடுங்கி எறிஞ்சி எல்லாரையும் ஒரே டம்ளர்ல டீ குடிக்க வெச்சானே தங்கவேலு, என் பார்வைக்கு அவன்தான் வீரனா தெரியறான்!’’ வசந்தி சொன்னபோது தங்கவேலு வீரன் என்பதை ஒத்துக்கொண்டு வந்தவழியே திரும்பி நடந்தான் லிங்கம், அவளை மறந்தபடி..

பரஞ்சோதி
22-06-2009, 09:38 AM
ஆஹா!

வீரம் என்பது பிறருக்கு பயன்படனுமே தவிர பயம்படும்படியாக இருக்கக்கூடாது என்பதை சொன்ன கதை.

நன்றி அய்யா.

மதுரை மைந்தன்
22-06-2009, 10:18 AM
பிறருக்கு பயன் படாத செயல் வீரம் ஆகாது என்பதை கதை வடிவில் தந்திருக்கிறீர்கள் அய்யா. பாராட்டுக்கள்

நேசம்
22-06-2009, 11:12 AM
குமுதத்தில் வரும் ஒரு பக்க கதை போல் உண்மையனா வீரம் என்றால் என்ன என்பதை சின்ன கதை முலம் சொல்லி இருக்கிறிர்கள்:icon_b:

அமரன்
22-06-2009, 01:29 PM
கூர்மையான கதை. நீர்மம் போன்றது வீரம். அதை தக்கபடி பயன்படுத்த வேணும். காந்தியும் வீரனே. கர்ம வீரனும் வீரனே.

பாராட்டுகள் ஐபாரா.