PDA

View Full Version : இந்தோனேசிய ஒபன் - சாய்னா சாதனையுடன் சாம்பியன்



பரஞ்சோதி
22-06-2009, 06:59 AM
ஜகார்த்தா: இந்திய பேட்மின்டன் நட்சத்திரம் சாய்னா நெஹ்வால், இந்தோனேசிய ஓபன் பட்டத்தை வென்று, சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

சீனாவைச் சேர்ந்த முன்னணி வீராங்கனை லின் வாங்கை வீழ்த்தி அருமையான வெற்றியைப் பெற்றுள்ளார் சாய்னா.

இன்று நடந்த இறுதிப் போட்டியில், சாய்னா, 12-21, 21-18, 21-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 49 நிமிடங்களில் இந்தப் போட்டி முடிவடைந்தது.

இதுவரை உலக அளவில் எந்த வீராங்கனையும் இவ்வளவு சிறப்பாக ஆடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சாய்னாவிடம் தோல்வியுற்ற வாங் உலக அளவில் 3வது ரேங்க்கில் இருப்பவர். சாய்னா 8வது ரேங்க்கில் இருக்கிறார்.

நன்றி: தட்ஸ்தமிழ்

நேசம்
22-06-2009, 07:09 AM
கிரிகெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நம் நாட்டில் பெருமைப்படகூடிய சாதனைகள் பின்னுக்கு தள்ளப்படுகின்றன.இந்த மாதிரி சாதனைகள் கிரிகெட் அல்லாத விரர்களுக்கு ஊக்கமாக இருக்க வேண்டும்.

பரஞ்சோதி
22-06-2009, 07:10 AM
http://d.yimg.com/a/p/afp/20090621/capt.photo_1245583879531-1-0.jpg

பரஞ்சோதி
22-06-2009, 07:10 AM
நன்றி நேசம், நீங்க எனக்கு ஊக்கம் கொடுத்துட்டீங்கப்பூ.

தொடர்ந்து பல விளையாட்டு தகவல்களை கொடுப்போம், விவாதிப்போம்.

பரஞ்சோதி
22-06-2009, 07:11 AM
http://d.yimg.com/a/p/rids/20090621/i/r1516539879.jpg

பரஞ்சோதி
22-06-2009, 07:11 AM
http://d.yimg.com/a/p/rids/20090621/i/r3203193532.jpg?

பரஞ்சோதி
22-06-2009, 07:11 AM
http://d.yimg.com/a/p/rids/20090621/i/r3539352060.jpg?

பரஞ்சோதி
22-06-2009, 07:12 AM
http://d.yimg.com/a/p/ap/20090621/capt.531f1d51e2d1440c8208198280a0fb6b.aptopix_indonesia_open_badminton_ai102.jpg?

கா.ரமேஷ்
22-06-2009, 07:16 AM
வாழ்த்துக்கள் செய்னா வெற்றிகள் தொடரட்டும்.... மட்டைபந்து மட்டுமே விளையாட்டல்ல மற்றவையும்தான் என நிரூபியுங்கள்.... தொடரட்டும் வெற்றிகள்...

அமரன்
22-06-2009, 03:32 PM
ஆம்.. மட்டைப்பந்தைப் பற்றி மட்டும் பேசி மற்ற விளையாட்டுகள் மட்டமானவை என்ற இருட்டுப் படிய நாங்களும் காரணமாகி விட்டோம். நாங்கள் விழித்து ஏனையோரை துயில் கலைப்போம்.

கூவிய அண்ணனுக்கு ஜே!
பெருமை குவித்த சாதனையாளனுக்கு வாழ்த்து.

மன்மதன்
23-06-2009, 08:07 AM
எனக்கு பிடித்த விளையாட்டு பேட் மிட்டன்..

சாய்னாவிற்கு பாராட்டுகள்..!!

கடைசி புகைப்படம் அசத்தல் நண்பா..

பரஞ்சோதி
23-06-2009, 03:10 PM
சானியாவின் ரசிகர்கள் எல்லாம் இப்போ சாய்னா ரசிகர்கள் ஆகிட்டு வருகிறார்கள்.

சாய்னா மேலும் மேலும் வெற்றிகள் குவிக்க எல்லோரும் வாழ்த்துவோம்.

அறிஞர்
23-06-2009, 03:13 PM
சாய்னாவுக்கு வாழ்த்துக்கள்... பல துறைகளில் இந்தியா இன்னும் ஜொலிக்கட்டும்.

அமரன்
24-06-2009, 11:02 PM
சானியாவின் ரசிகர்கள் எல்லாம் இப்போ சாய்னா ரசிகர்கள் ஆகிட்டு வருகிறார்கள்.

சாய்னா மேலும் மேலும் வெற்றிகள் குவிக்க எல்லோரும் வாழ்த்துவோம்.

என்னதான் இருந்தாலும் மன்மியை நீங்க இப்படிச் சொல்லியிருக்கக் கூடாதுண்ணா.:)

aren
25-06-2009, 07:23 AM
வெற்றி பெற்றவருக்கு என் பாராட்டுக்கள்.

இங்கேயாவது ஜெயிக்கிறார்களே என்று சந்தோஷமாக இருக்கிறது

பரஞ்சோதி
25-06-2009, 07:32 AM
என்னதான் இருந்தாலும் மன்மியை நீங்க இப்படிச் சொல்லியிருக்கக் கூடாதுண்ணா.:)

ஹி ஹி

மன்மியை பற்றி எனக்கு தானே நல்லா தெரியும்.

எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிடுவான்.