PDA

View Full Version : நீரிழிவை(சர்க்கரை நோய்) விரட்டும் நாவல்

நாகரா
21-06-2009, 04:59 AM
சித்தர்கள் தவநிலையிலேயே நோய்களுக்கு ஏற்ற மருந்துகளைக் கண்டறிந்தனர். ஒரு பொருளின் வடிவம், தன்மை, நிறம் மூன்றையும் உடலின் பாகங்களோடு ஒப்பிட்டு, ஒத்துப்போகும் குணங்களையுடையவற்றை அப்பகுதியில் வரும் நோய்களுக்கு மருந்தாக்கினர்.

http://www.vallalarspace.com/userfiles/vallalargroups@gmail.com/file/Health%20Tips/udalnalam.jpg

துவர்ப்பிலிருந்தே இனிப்பு உருவாகும் என்பது சித்தர்களின் முடிவாகும். மானுட தேகத்தில் கணையத்தின் தன்மை துவர்ப்பு சுவையின் தன்மையைக் கொண்டது. அங்கிருந்துதான் இன்சுலின் சுரக்கிறது. கணையத்தில் துவர்ப்பின் ஆதிக்கம் குறையும்பொழுது இன்சுலின் சுரப்பு குறைகிறது. இன்சுலின் குறைவதால் சர்க்கரை நோய் உண்டாகிறது.

கணையத்தில் துவர்ப்பு குறைவதற்குக் காரணம் நமது உணவில் துவர்ப்பு குறைந்து விட்டதுதான் காரணமாகும். வாழைப்பூ துவர்ப்புச் சுவையுள்ளது. அந்தப் பூ காயாகி கனியாகும்போது எப்படி இனிக்கிறது? கனிக்கு முந்தைய நிலை காயாகும். காய்க்கு முந்தியது பூவாகும். ஆக பூவின் சாரமே கனியின் வெளிப் பாடாகும்.

இப்பொழுது சர்க்கரை வியாதிக்கு துவர்ப்புச் சுவையுள்ள நாவல் கொட்டையை மருந்தாக்கிப் பாருங்கள். அதன் அதி அற்புதப் பலனை நீங்களே உணர்வீர்கள்.

நாவல் கொட்டையில் உள்ள "ஜம்புலின்' என்ற வேதிப்பொருள் இன்சுலினைத் தேவையான அளவில் சுரக்கும் வல்லமையைப் பெற்றது.

தேவையான அளவில் நாவல் கொட்டையை உலர்த்தி அதன் ஓட்டினை நீக்கி பருப்பை மட்டுமே தூள் செய்ய வேண்டும்.

இதில் ஐந்து கிராம் (ஒரு ஸ்பூன்) அளவு காலை, மாலை இருவேளையும் 48 நாட்கள் (ஒரு மண்டலம்) சாப்பிட்டு வர, சர்க்கரை வியாதி குணமாகிவிடும்

நன்றி: வள்ளலார்ஸ்பேஸ்.காம் (http://www.vallalarspace.com/VallalarGroups/Articles/2654)

அய்யா
05-10-2009, 06:34 AM
பயனுள்ள தகவலுக்கு நன்றியண்ணா!

நாவற்பொடி உடல் சூட்டை அதிகரிக்கும் என்று சொல்கிறார்களே?

உண்மையா?

வியாசன்
05-10-2009, 08:32 AM
நாவல்கொட்டை பொடி நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் என்று அறிந்திருக்கின்றேன். இந்த இணைப்பு அதை உறுதிப்படுத்தகின்றது. இணைப்புக்கு நன்றி அன்பரே

ஸ்ரீதர்
05-10-2009, 10:40 AM
சித்தர்கள் தவநிலையிலேயே நோய்களுக்கு ஏற்ற மருந்துகளைக் கண்டறிந்தனர். ஒரு பொருளின் வடிவம், தன்மை, நிறம் மூன்றையும் உடலின் பாகங்களோடு ஒப்பிட்டு, ஒத்துப்போகும் குணங்களையுடையவற்றை அப்பகுதியில் வரும் நோய்களுக்கு மருந்தாக்கினர்.

http://www.vallalarspace.com/userfiles/vallalargroups@gmail.com/file/Health%20Tips/udalnalam.jpg

துவர்ப்பிலிருந்தே இனிப்பு உருவாகும் என்பது சித்தர்களின் முடிவாகும். மானுட தேகத்தில் கணையத்தின் தன்மை துவர்ப்பு சுவையின் தன்மையைக் கொண்டது. அங்கிருந்துதான் இன்சுலின் சுரக்கிறது. கணையத்தில் துவர்ப்பின் ஆதிக்கம் குறையும்பொழுது இன்சுலின் சுரப்பு குறைகிறது. இன்சுலின் குறைவதால் சர்க்கரை நோய் உண்டாகிறது.

கணையத்தில் துவர்ப்பு குறைவதற்குக் காரணம் நமது உணவில் துவர்ப்பு குறைந்து விட்டதுதான் காரணமாகும். வாழைப்பூ துவர்ப்புச் சுவையுள்ளது. அந்தப் பூ காயாகி கனியாகும்போது எப்படி இனிக்கிறது? கனிக்கு முந்தைய நிலை காயாகும். காய்க்கு முந்தியது பூவாகும். ஆக பூவின் சாரமே கனியின் வெளிப் பாடாகும்.

இப்பொழுது சர்க்கரை வியாதிக்கு துவர்ப்புச் சுவையுள்ள நாவல் கொட்டையை மருந்தாக்கிப் பாருங்கள். அதன் அதி அற்புதப் பலனை நீங்களே உணர்வீர்கள்.

நாவல் கொட்டையில் உள்ள "ஜம்புலின்' என்ற வேதிப்பொருள் இன்சுலினைத் தேவையான அளவில் சுரக்கும் வல்லமையைப் பெற்றது.

தேவையான அளவில் நாவல் கொட்டையை உலர்த்தி அதன் ஓட்டினை நீக்கி பருப்பை மட்டுமே தூள் செய்ய வேண்டும்.

இதில் ஐந்து கிராம் (ஒரு ஸ்பூன்) அளவு காலை, மாலை இருவேளையும் 48 நாட்கள் (ஒரு மண்டலம்) சாப்பிட்டு வர, சர்க்கரை வியாதி குணமாகிவிடும்

நன்றி: வள்ளலார்ஸ்பேஸ்.காம் (http://www.vallalarspace.com/VallalarGroups/Articles/2654)

நல்ல பயனுள்ள தகவல். என்னுடைய தாத்தா நாவல் கொட்டைகளை உலர்த்தி பொடி செய்து சாப்பிட்ட ஞாபகம் உள்ளது. தேவையானவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்கிறேன். மிக்க நன்றி

ஓவியன்
05-10-2009, 10:55 AM
எங்கட வீட்டுக்கு பின்னால ஒரு நாவல் மரம் நிண்டது, முந்தி எங்கட அம்மாவும் அப்பாவும் நாவற்பழம் சாப்பிட்டா காலில புண் வரும்(!) எண்டு சொல்லி அந்த மரத்துக்குக் கிட்ட போக விட மாட்டினம், அப்படியும் நாங்கள் களவாக போய் நாவற் பழம் பொறுக்கிச் சாப்பிட்டிருக்கம். :aetsch013:

என் பழைய நினைவுகளைக் கிளறி, நாவலின் மகிமை சொன்ன பதிவுப் பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா..!!

aren
05-10-2009, 01:01 PM
நான் இந்த முறை சென்னை சென்றபொழுது நாவல்பழம் வாங்கி சாப்பிட்டேன். எனக்கு பிடித்த பழங்களும் இதுவும் ஒன்று.

இதன்பயனைப் பற்றி எடுத்துச் சொன்ன நாகரா அவர்களுக்கு என் நன்றிகள்.