PDA

View Full Version : என் அக்கா...



இன்பக்கவி
20-06-2009, 06:28 AM
என் அக்கா...(mercy) நினைவாக.

உன் நினைவாக...
என்றென்றும் நாங்கள்....

அக்கா...
நீ என் அன்னையே...
பெற்ற தாய் சுமந்தது
பத்து மாதம் தான்...
நீ என்னை பனிரெண்டு வருடங்கள்
சுமந்தாயே!!!!!

பார்த்து பார்த்து
என்னை பக்குவமாய் வளர்த்தாய்..
இன்று உன்னை பார்க்க நினைத்தாலும்
பார்க்க முடியாமல் எங்கே அக்கா சென்றாய்....

இன்று உனக்கு பிறந்த நாள்...
கொண்டாட நீ இல்லை....
என் வளர்ச்சியை கண்டு..
ஒரு தாய் மகிழ்வது போல்
மகிழ்ந்தவளே!!!!

இன்று நீ இருந்தால்
நான் இன்னும் நிறைய
அறிந்து இருப்பேன்...

எங்கு சென்றாலும்
நீ தான் என் துணை....
நாம் சென்ற இடத்தில் எல்லாம்
இன்று நான் தனியே!!!!!
எங்கும் உன் நினைவுகள்.....

ஆசையாய் பெற்ற
குழந்தையை
கூட ஏன் பிரிந்தாய்...

நான் தான் உன் முதல்
குழந்தை என்பாயே!!!!
இன்று உன் குழந்தை
இன்னொரு குழந்தையிடம்!!!!!

அக்கா, உன் நினைவாக
நீ எனக்கு அளித்த பரிசா????

இரக்கம் அற்ற இறைவன்
நம்மை பிரித்தான்....
அக்கா!!!
உனக்கு ஏற்பட்டது விபத்து...
நீ மறித்து விட்டாய்...
ஒரு முறை..

நான் தினமும்
பல விபத்தினை சந்திக்கின்றேன்...
ஆனால் மறிக்கத் தான்
முடிய வில்லை....
காரணம் கையில்
உன் குழந்தை......

என்றும் கண்ணீரோடு...
உன் கவி.....

அமரன்
20-06-2009, 08:37 AM
உங்கள் துயரில் பங்கெடுக்கிறேன் தோழி!

இழப்புகள் தாங்கொணா துயர்களை தருவிப்பவை.

அத்துயர்களே எதையும் தாங்கும் வல்லமையை தரவல்லவை.

உங்களுக்கும் அவ்வல்லமை நிறைவாய்க்கிடைக்கட்டும்.

தமக்கை வடிவில் தாய்.. எங்கள் குடும்பமும் திளைத்திருந்தது அதில். இனிமையான நாட்களவை.

சிவா.ஜி
20-06-2009, 08:53 AM
பனிரெண்டு வருடங்களாய் சுமந்து சீராட்டிய தாய்....
இனி இல்லை என்ற நிலை தாங்கவொன்னா துயரம்.

அமரன் சொன்னதைப்போல அந்த துயரமே உங்களுக்கு வல்லமை தரட்டும். உங்கள் தாயின் குழந்தைக்கு தாயாயிருந்து காக்க அந்த பலம் உதவட்டும்.

உங்களோடு நாங்கள் என்றும் இருப்போம்.

ஆதி
23-06-2009, 09:47 AM
//பார்த்து பார்த்து
என்னை பக்குவமாய் வளர்த்தாய்..
இன்று உன்னை பார்க்க நினைத்தாலும்
பார்க்க முடியாமல் எங்கே அக்கா சென்றாய்....//

//நான் தினமும்
பல விபத்தினை சந்திக்கின்றேன்...
ஆனால் மறிக்கத் தான்
முடிய வில்லை....
காரணம் கையில்
உன் குழந்தை......//

தளுதளுக்கும் வரிகள்.. உங்கள் மனதி வலியை உணர வைக்கும் வரிகளும் கூட..

வரிகள் மட்டுமல்ல வரியோடு சேர்ந்து மனதும் விழிகளும் ததும்புகிறது..


கேட்காமலே கொடுத்தான்
கேட்காமலே எடுத்துக் கொள்கிறான் என்று
சித்தவர் வழி ஏக
சித்தம் கருதுவதில்லை..
இறைவன் ஈரமற்றவனென
ஏசவே தோன்றுகிறது..

ஆற மறுக்கும் ரணத்தை
ஆற்ற ஆண்டவனிடம் மன்றாடுகிறேன்..
அமைதி மனதை அனைக்கட்டும்..

நேசம்
23-06-2009, 11:05 AM
உங்கள் மனதின் வலிகளை கவிதையின் வரிகள் இயம்புகிறது.உங்கள் மனதுயரம் நிங்க மன்ற உறவுகளின் பிராத்தனைகள் உண்டு சகோதரி

samuthraselvam
23-06-2009, 11:09 AM
கண்ணீரை வரவழைக்கும் துக்கமான வரிகள் கவி...

வாழ்க்கையின் துயரங்களை பங்கு போட்டு தாங்குவதற்க்காகத் தான் உறவுகள் .....

ஆனால் அந்த uravukal இல்லை enumpothu manathin valiyai thangikkolla முடியாது....

கவலை வேண்டாம் கவி உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்....

அக்காவின் குழந்தையை அக்காவே இருப்பதாக நினைத்து நல்ல நிலைமைக்கு கொண்டு வாருங்கள்....