PDA

View Full Version : சீன கைபேசி பற்றிய ஒரு சந்தேகம்



kalaiselvan2
19-06-2009, 03:33 PM
அய்யா, என்னிடம் சீன கைபேசியான NKTEL 5000 உள்ளது. அதில் நான் கணிணியியோடு இணைத்து கணிணியில் இணையத்தினை எவ்வாறு உபயோகிப்பது என்பது பற்றியும். மேலும் அதில் வெப் கேம் இருந்தும் அது செயல்பட மாட்டேன் என்கிறது. யாறேனும் கூறினால், பரவாயில்லை

praveen
19-06-2009, 03:55 PM
சீனா மற்றும் சீன பொருட்களை தமிழர்கள் நாம் புறக்கனிப்போம்.

(உண்மையிலே இந்த சீன கைபேசி பொருட்களுக்கு ஒரு மென்பொருளும் இருப்பதாக நான் கண்டதில்லை)

kalaiselvan2
19-06-2009, 03:57 PM
நன்றி தோழரே இவ்வளவு விரைவாக தாங்கள் பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி.

கலைச்செல்வன்.

அன்புரசிகன்
20-06-2009, 03:28 AM
இந்த அலைபேசி பற்றி அவ்வளவாக தெரியவில்லை. ஆனால் GPRS settings இனை உங்கள் அலைபேசி வழங்குனர்கள் தாமாகவே அனுப்புவார்களே...

ஸ்ரீதர்
20-06-2009, 06:19 AM
எனக்கும் இந்த அனுபவம் உண்டு. சீன கைபேசியுடன் வந்த கைப்புத்தகத்தில் இதைப்பற்றி ஒன்றும் கொடுக்கப்படவில்லை. அந்த கைபேசியில் உள்ள ஆங்கிலத்தை படித்தால் எனக்கு கொஞ்சம் தெரிந்த ஆங்கிலமும் மறந்துவிடும் அளவுக்கு மோசமாக இருந்தது. அதிலிருந்து வரும் கதிர்வீச்சும் அதிகமாக இருப்பதாக பத்திரிக்கைகளில் படித்ததால் அதை பரண் மேல் தூக்கிப்போட்டுள்ளேன்.

நண்பர் ப்ரவீண் கூறியுள்ளதைப்போல் விலை மட்டும் மலிவாக உள்ள , தரம் அற்ற சீனப்பொருட்களை புறக்கணிப்பதே நல்லது.

நேசம்
20-06-2009, 06:55 AM
முக்கியமாக பாதுகாப்பு காரணமாக சினா கைப்பேசி இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது

தங்கவேல்
28-08-2009, 12:15 PM
சைனா மொபைல் இரண்டு கிஃப்டாக வந்தது. இரண்டு சிம்கார்டு, டச் ஸ்கீரீன், கேமரா, வீடியோ, ஆடியோ, ப்ளூடூத் என்று இன்னும் பலவகை சிறப்பம்சங்களுடன் இருக்கிறது. ஆனால் பேட்டரி மட்டும் நிற்கவே மாட்டேன் என்கிறது. இஎம் ஐ நம்பருடன் இருக்கிறது. தற்போது இரண்டு தூங்கிக் கொண்டிருக்கிறது... சைனா மொபைல் சரியானது அல்ல என்பது என் கருத்து..

மயூ
09-08-2010, 10:04 AM
சைனா மொபைல் இரண்டு கிஃப்டாக வந்தது. இரண்டு சிம்கார்டு, டச் ஸ்கீரீன், கேமரா, வீடியோ, ஆடியோ, ப்ளூடூத் என்று இன்னும் பலவகை சிறப்பம்சங்களுடன் இருக்கிறது. ஆனால் பேட்டரி மட்டும் நிற்கவே மாட்டேன் என்கிறது. இஎம் ஐ நம்பருடன் இருக்கிறது. தற்போது இரண்டு தூங்கிக் கொண்டிருக்கிறது... சைனா மொபைல் சரியானது அல்ல என்பது என் கருத்து..
கொடுக்கும் விலைக்குத்தான் பொருள்.. அதான் சீனப் பொருட்கள் இவ்வாறு உள்ளன.

சூரியன்
09-08-2010, 10:16 AM
சைனா கைப்பேசியுடன் மன்றாட முடியாமல் மீண்டும் எனது பழைய கைப்பேசியையே உபயோகிக்கின்றேன்.

mojahun
16-08-2010, 01:39 AM
சீனப் பொருட்களில் பெரும்பான்மை ஆக்கத்திறத்தால் விளைந்தவை அல்ல! நகலெடுப்பில் வெளிவந்தமை. எனவே ஆக்கத்திற்குத் தோள் கொடுப்போம்.