PDA

View Full Version : நான் பிணம் தான்........



இன்பக்கவி
19-06-2009, 03:44 AM
தோழியே!
கூடி மகிழ்ந்து இருந்த
காலம் மறக்கவில்லை....
மறுக்கவும் இல்லை.....

தேடி அலைந்த காலம்
எல்லாம் இன்னும்
என் கண்முன்னே....
அன்றும்...இன்றும்...
என்னைத் தேடி அலைய
வைத்துவிட்டாயே......

சிறுபெண் தான் என்றாலும்
கண்ணீர் விட்டேன்
உனக்காக....
என் கண்ணீர் எல்லாம்
என் கண்ணை மட்டுமே
கரைத்தன...
ஏனோ! உன் நெஞ்சை அல்ல....

நெருக்கம் விட்டுப் போனதால்
என் மனத்தில் இறுக்கம்
தொற்றிக் கொண்டது.....
கண்டும் காணாமல் இருப்பதை
நானும் பழகிக் கொண்டேன்
உன்னிடம் இருந்து......

தாளாத துயரம்
நெஞ்சில் என்றாலும்
என் சிரிப்புக்கு பஞ்சம்
இல்லை....

சிரிப்பை கொண்டு தான் இதுவரை
என் துக்கத்தை
கழுவிக் கொண்டு இருக்கிறேன்...
ஏனோ அது என்னை விட்டு
போக மறுக்கிறது....
கண்ணீரால் கழுவ சொல்லி
கேட்கிறது......

கண்ணீருக்கா பஞ்சம்....
எப்போதும் என்னோடு
மாறாமல்..மறையாமல்
பிரியாமல் இருப்பது
என் கண்ணீரும், துயரமும் தான்......
இதுவும் இல்லை எனில்
நான் பிணம் தான்........:traurig001:

kavitha
19-06-2009, 05:01 AM
உயிர்ப்பூவில் நறுமணம் சுரப்பதை போல, உயிருள்ளவர்களில் அன்பு என்ற ஒன்று சுரக்கும்வரை சுற்றி இருப்பவர் யாவரும் சுற்றத்தாரே! கலங்காதே தோழி!

ஆதி
19-06-2009, 08:37 AM
நமக்கு பிடித்தவர்க்கெல்லாம்
நம்மை பிடிக்க வேண்டுமென
கட்டாயமில்லை..
கட்டாயமென்றால் அது ப்ரியம் இல்லை..


இந்த உலகில்
யாவர்க்கும் கொடுக்க
அன்பை தவிர மற்றொன்று
நம்மிடம் இல்லை..

வழங்க படுகிற எவையும்
வந்தடைகிறது
மாற்றாகவோ !!
மறுப்பாகவோ !!

மற்றாக வந்தாலும் அன்புதான்
மறுப்பாக வந்தாலும் அன்புதான்..

கொடுத்துக் கொண்டே இருங்கள்
கொள்வோர் இருந்தாலும் இல்லாவிடினும்..

நிலவுக்கு இருண்ட பக்கங்கள் உண்டு
நினைவுக்கும் அன்புக்கும் அது தகாது..

அன்பின் நிழலில்
அமர நினைப்பது சரிதான்
அன்பின் நிழலாய் இருந்து
அமர வருவோரை
ஆயாசப்படுத்தல் சிறந்ததன்றோ!!

வாழ்த்துக்கள் சகோதரி..

அமரன்
19-06-2009, 09:02 AM
வசூல்ராஜா திரைப்படத்தில் ஒரு காட்சி. உணர்ச்சி மேலீட்டால் கோமா நிலையில் இருப்பவர் கண்களிலிருந்து கண்ணீர் கோடாக வழியும். ரசிகனும் உணர்ச்சியில் முழுகுவான். இந்தக் கவிதையும் அப்படித்தான். ஆதியின் கவி அதுக்குச் சாட்சி.

கண்ணீர் சுரப்பதால்தான் கண்கள் சுத்தமாகிறது.

அந்தக் கண்ணீரே இதயத்தில் சுரந்த அன்பாக இருந்தால் உலகமே சுத்தமாகும்.

உலகை நீங்கள் மாற்றத் தொடங்கி விட்டீர்கள்.

பாராட்டுகள் கவிதா123.

நாகரா
19-06-2009, 09:04 AM
காதல் இருதயம் இருக்கும் வரை
சாதல் என்பது சாத்தியம் இல்லை.

எளிய வரிகளில்
அரிய காதலை உணர்த்துகம்
அழகுக் கவிதைக்கு வாழ்த்துக்கள் கவிதா

நாகரா
19-06-2009, 09:16 AM
நமக்குப் பிடித்தவர்க்கெல்லாம்
நம்மைப் பிடிக்க வேண்டுமெனக்
கட்டாயமில்லை..
கட்டாயமென்றால் அது ப்ரியம் இல்லை..


இந்த உலகில்
யாவர்க்கும் கொடுக்க
அன்பைத் தவிர மற்றொன்று
நம்மிடம் இல்லை..

வழங்கப் படுகிற எவையும்
வந்தடைகிறது
மாற்றாகவோ !!
மறுப்பாகவோ !!

மாற்றாக வந்தாலும் அன்புதான்
மறுப்பாக வந்தாலும் அன்புதான்..

கொடுத்துக் கொண்டே இருங்கள்
கொள்வோர் இருந்தாலும் இல்லாவிடினும்..

நிலவுக்கு இருண்ட பக்கங்கள் உண்டு
நினைவுக்கும் அன்புக்கும் அது தகாது..

அன்பின் நிழலில்
அமர நினைப்பது சரிதான்
அன்பின் நிழலாய் இருந்து
அமர வருவோரை
ஆயாசப்படுத்தல் சிறந்ததன்றோ!!

இப்படிப்பட்ட ஓர் அருமையான பின்னூட்டக் கவிதையை வரவழைத்த கவிதாவுக்கு நன்றிகளும் ஆதிக்கு வாழ்த்துக்களும்.

இணைந்த இருதயங்கட் கிடையே சந்தியாய்ப்
பிணைக்கும் ஒட்டுக்கூழ் அன்பு

புரிகிறதா ஆதி!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
20-06-2009, 06:21 AM
நல்ல கவிதை. நெஞ்சைக் கனக்க வைத்தக் கவிதை. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு இது போன்றதொரு கவிதையைக் கண்டிருக்கிறேன் உங்கள் கவிதை வாயிலாக.

சிவா.ஜி
20-06-2009, 06:49 AM
அன்பு செலுத்துதலை அன்றாடம் செய்து வருதலே நாம் நாமாய் இருப்பதற்கான சான்று. ஆதி சொல்லியதைப்போல எப்படி வந்தாலும் அன்பை அமரவைத்து ஆசுவாசப்படுத்துவோம்.

அழகான கவிதைக்காக கவிதாவுக்கும், ஆதிக்கும் அன்பான வாழ்த்துகள்.