PDA

View Full Version : சொர்கத்தில் அசத்தப் போவது யாரு



மதுரை மைந்தன்
19-06-2009, 03:16 AM
சன் தொலைக்காட்சியில் ஒரு பெண்மணி வேடம் தரித்து அனைவரது உள்ளங்களையும் கவர்ந்த கோவை ரமேஷ் கார் விபத்தில் பலியானது பெரும் இழப்பாகும். சொர்கத்திற்கு செல்லும் அவர் அங்கு அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியை நடத்துவதாக ஒரு கற்பனை.இது அவருக்கு அஞசலி செலுத்தும் என்று வேண்டுகிறேன்.

சொர்கத்தில் இந்திரன்: வாங்க ரமேஷ். வாரம் தோறும் அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியில் உங்களை தொலைக்காட்சி பெட்டி மூலம் கண்டு களித்த எங்களுக்கு இப்போ நேராகவே அதை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சி. அங்கே பாருங்க " சொர்கமே ஆனாலும் சொந்த ஊர் போல் வருமானு சோகமா இருக்காங்களே ஆயிரக்கணக்கான அப்பாவி இலங்கை தமிழர்கள் அவர்கள் சிரித்து தங்கள் துக்கங்களை மறக்க நீங்கள் ஒரு நிகழ்ச்சி நடத்தணும்.

ரமேஷ்: ஓ கண்டிப்பா. செய்கிறேன்

இந்திரன் : ஓ.கே. ரமேஷ் இன்னிக்கு என்ன செஞ்சு அசத்தப் போறீங்க?

ரமேஷ்: ஸடாண்ட் அப் காமெடி பண்ணலாம்னு இருக்கேன்.

இந்திரன்: அசத்துங்க

ரமேஷ் ஆரம்பிக்கிறார்.

நான் சொல்லப் போற ஜோக்ஸ் எல்லாம் சொர்கம் சம்பந்தப்பட்டதாக இருக்கும். முதலாவதாக

இரண்டு சர்தார்ஜிகள் இறந்தபின் சொர்கத்தில் சந்திக்கிறார்கள்.

முதல் சர்தார்ஜி: நீ எப்படி இங்கே வந்தே?

இரண்டாவது சர்தார்ஜி: குளிர்ல விறைச்சு செத்துட்டேன். நீ எப்படி இங்கே வந்தே?

முதல் சர்தார்ஜி: ராத்திரி வீட்டக்குள்ளே ஒரு திருடன் வந்துட்டான். அவனை தேடி தேடி மேல கீழ போனதில ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு.

இரண்டாவது சர்தார்ஜி (மனசுக்குள்): அடப் பாவி பிரிட்ஜை திறந்து பார்திருந்தீனா நாம இரண்டு பேருமே உயிரோடு இருந்திருப் போம்.

அடுத்ததாக

ஒரு டீச்சர் பள்ளிக் கூடத்தில பசங்களுக்கு இறந்தபின் எப்படி சொர்கத்துக்கு போக முடியும் னு விளக்கினார்.

டீச்சர்: சொர்கத்துக்கு போகணும்னா முதல்ல என்ன பண்ணனும்? நிறைய நல்ல காரிங்கள் பண்ணனும். ஏழைகளுக்கு உதவணும். எல்லா உயிரினங்களிடமும் அன்பா இருக்கணும். வேற என்ன பண்ணணும்? உங்களால சொல்ல முடியுமா?

ஒரு மாணவன் எழுந்து சொன்னான்: டீச்சர் சொர்கம் போக முதல்ல செத்து போகணும்.

அடுத்ததாக

விஞ்ஞானி ஐன்ஸ்டைன் இறந்த பின் சொர்கம் வருகிறார். அங்கு வாயில் காப்பவர்கள் "நீங்கள் தான் ஐன்ஸ்டைன் என்று எப்படி நாங்கள் நம்புவது?"

ஐன்ஸ்டைன் அவர்களிடம் ஒரு கரும்பலகையை கேட்டு வாங்கி அதில் தனது ரிலேடிவிடி தத்துவத்தை விளக்கினார் காவலாளிகளும் நீங்கள் ஐன்ஸ்டைன் தான் உள்ளெ செல்லுங்கள் என்றார்கள்.

அடுத்தாற் போல் சிறந்த ஓவியர் பிகாஸோ வந்தார். அவரிடமும் "நீங்கள் தான் பிகாஸோ என்று எப்படி நாங்கள் நம்புவது?" என்று அவர்கள் கேட்க பிகாஸோ அதே கரும் பலகையில் ஒரு ஓவியத்தை வரைந்தவுடன் நீங்கள் பிகாஸோ தான் உள்ளெ செல்லுங்கள் என்றார்கள்.

அடுத்தாற்போல் ஒரு சர்தார்ஜி வந்தார் அவரிடமும் காவலாளிகள் " ஐன்ஸ்டைன் பிகாஸோ இருவரும் தாங்கள் யார் என்று நிரூபித்து உள்ளே போனார்கள். நீங்களும் அதே மாதிரி செய்யுங்கள்" என்றார்கள். சர்தார்ஜி அவர்களிடம் " ஐன்ஸ்டைன் பிகாஸோ இவங்கள்ளெல்லாம் யாரு?" என்றார். காவலாளிகள் உடன் அவரை உள்ளெ செல்ல அனுமதித்தனர்.

அடுத்ததாக

மூன்று மனிதர்கள் இறந்த பின் சொர்கம் செல்கிறார்கள்.

அவர்களிடம் இந்திரன் " நீங்க இங்கெ வந்திட்டீங்க. அனால் இங்கே பொய் பேசாமல் இருக்கணும். அப்படி பேசி விட்டால் வாழ் நாள் முழுவதும் நீங்கள் மிக கோரமான பெண்மணியுடன் வாழ வேண்டியிரக்கும்" என்றார்.

ஒரு வாரம் கழித்து ஒருவர் தான் பூமியில் பெரும் பணக்காரராக இருந்தார் என்று பொய் சொல்லவே மிக கோரமான பெண்மணியுடன் வாழ வேண்டியதாயிற்று.

இரண்டாமவரும் பொய் சொல்லி கோரமான பெண்மணியுடன் வாழ வேண்டியதாயிற்று.

சில நாட்கள் கழித்து இந்த இருவரும் தங்களத கோர பெண்மணியுடன் சென்று கொண்டிருக்கும் போது எதிர்த்தார் போல் மூன்றாவது மனிதர் ஒரு மிக அழகான பெண்ணுடன் வந்தார். இந்த இருவரும் அவரிடம் இது எப்படி என்று கேட்க அந்த அழகான பெண்மணி சொன்னார் " நான் பொய் சொல்லி விட்டேன்".

நன்றி நன்றி நன்றி

அன்புரசிகன்
19-06-2009, 03:49 AM
ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் செய்வாங்க என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். இவுங்க ஒவ்வொரு பொய் சொல்லி திருமணம் செஞ்சிருக்காங்க...

காவலாளியிடம் தங்களை நிருபணப்படுத்திய நகைச்சுவையில்....
ப்ரூஸ்லி வரும் போது காவலாளிகள் நீ தான் ப்ரூஸ்லி என்று எப்படி நம்புவது என்று கேட்டிருந்தால் காவலாளிகளின் நிலை எப்படி இருந்திருக்கும்..:D

தொடருங்கள்..

அமரன்
20-06-2009, 08:51 AM
ஆகா மதுரையாரே..

நகைச்சுவையில் ஆளை அள்ளுறீங்களே.

சொக்கத்தில் ரமேசை வைத்து எங்களுக்குச் சொர்க்கத்தைக் காட்டிட்டீங்களே.

உங்க ஸ்பெசாலிடீயே ரியாலிட்டிதான். பொய்கள் மூலம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் பற்றிச் சொன்னீங்க பாருங்க. நிஜமாவே பின்னிட்டீங்க..

தொடர்ந்து அசத்துங்க.

வாழ்த்துகள்.

-பாப்கார் கொறித்தபடி மதன்"பாப்"

ஓவியா
20-06-2009, 11:33 PM
சூப்பரா இருக்கு. கலக்கறீங்க விஞ்ஞானியாறே!!!

நன்றி.