PDA

View Full Version : சுதந்திர ஈழ எழுச்சி!



நாகரா
18-06-2009, 09:49 AM
எம்மால்
இன்னுங் கீழே
விழ முடியாது!
எழுவதைத் தவிர
வேறெந்த அலுவலும்
இனி எமக்குக் கிடையாது!
சிதைந்த மெய்களே
வளமிகு மண்ணாக
உலராத குருதியே
நன்னீராக
எம் இருதய சூரிய ஒளியில்
வீறுடன் எழுவோம் யாம்
ஈழமென்னும்
ஜீவ விருட்சமாய்!
இன வாதக் கோடரிகளோ
பேத பாவ அணு குண்டுகளோ
எம் ஓரணுவையும் சிதைக்க முடியாத
திட காத்திரத்துடன் நின்று
யாம் அமரக் கனிகள் தருவோம்
எவர்க்கும் புசிக்க!
எம் மன இத நிழலில்
மன்னிப்பென்னும் பெருந் தண்டிப்பு
எம்மைப் புழுவினும் இழிஞர்களாய் நடத்தும்
ஈனர்களுக்கும்
அவர்களது கைக்கூலிகளுக்குங்
காத்திருக்கிறது!
ஈழம் என்பது உயிரற்ற வெற்று வார்த்தையல்ல
இழியும் தமிழின் அமுதமே ஈழம்!
மீள மீளச்
செத்து மடியும் யாம்
ஈழத்தில் மாயா நிலை
எய்தும் காலம் விரைவில் வரும்!
அப்போது ஈனர்கள் நீவிர்
எமக்குச் செய்த இன்னா ஒறுக்க
உம் அங்கையில் அழுத்துவோம்
அமுதம்!
நீவிர் நாண
அப்போது யாம் செயும் நன்னயம்
இப்போது புரிந்தால்
ஈனர் நீவிரும்
இப்போதே உத்தமர் ஆகலாம்!
மனந் திரும்பினால் புரியும்
நம் இருதய ஆழம்!
அதுவன்றோ மாளா ஈழம்!
எப்படி மடியும்
இந்த சுதந்திர தாகம்!
புலி மாமிசத்தையும்
சிங்க இறைச்சியையும்
ஜீவனுள்ள பசுக்களாய் மாற்றும்
இழியும் தமிழின் அமுதமாம்
ஈழம்!
இழக்கவே முடியாத
இந்த இருதய ஆழத்தை
எப்படிப் பறிப்பீர் ஈனர்களே!
இது உமது எமது பேத பாவம் தாண்டிய
நமது இருதய ஆழம்!
வேறென்ன சொல்ல முடியும் எம்மால்!
உம் செவிட்டுக் காதுகளில் கொதிக்கும் ஈயமாய்
விழட்டும் ஈழம்!