PDA

View Full Version : கச்சத்தீவில் இலங்கை ராணுவ முகாம் - கண்காணிக்க கருணாநிதி கோரிக்கை



அமரன்
18-06-2009, 07:21 AM
இலங்கை கடற்படை கச்சத்தீவில் மையம் அமைக்கவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து மத்திய அரசு கவனிக்க வேண்டும். இதுதொடர்பாக தீவிரமாக கண்காணிக்க வேண்டியது அவசியம் என முதல்வர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கையில் போர் முடிந்துள்ள நிலையில், புலிகள் மீண்டும் தலை தூக்கி விடாமல் தடுக்கும் முயற்சிகளில் இலங்கைப் படைகள் இறங்கியுள்ளன.

இதன் ஒரு முயற்சியாக கச்சத்தீவில் கடற்படை தளத்தை அமைக்க இலங்கை அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை கச்சத்தீவுக்கு அருகே சென்று மீன் பிடித்துத் திரும்பிய தமிழக மீனவர்களும் உறுதி செய்துள்ளனர்.

கச்சத்தீவில் இலங்கை கடற்படை முகாம் அமைந்தால் அது ஒட்டுமொத்த தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் சீர்குலைத்து விடும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், முதல்வர் கருணாநிதி இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நன்றி : தட்ஸ்தமிழ்

நேசம்
18-06-2009, 07:49 AM
அங்கே தொட்டு இங்கெ தொட்டு கடைசியில் அடி மடியில் கை வைக்கிறார்கள்.இதற்கு மத்திய அரசி என்ன செய்ய போகிறது என்று பார்ப்போம். ஏனென்றால் இப்பொழுது திமுக அரசின் ஆதரவை எதிர்பார்க்கவில்லை

அன்புரசிகன்
18-06-2009, 07:56 AM
அது இலங்கையிடம் வீழும் நாள் வெகு விரைவில். காரணம் இப்போது இலங்கைக்கு ஆதரவாக சீனா பாக்கிஸ்தான் போன்ற நாடுகள் பக்கபலமாக உள்ளன... இந்தியா தாரைவார்த்து கொடுத்தாலும் அதிர்ச்சியடையவேண்டி வராது...

இலங்கையாக விட்டுக்கொடுத்தால் தான் உண்டு...

உதயா
18-06-2009, 08:03 AM
திரு. நாகூர் ஹனிபா பாடிய இந்தப்பாடல் தான் எனக்கு ஞாபம் வருகிறது...

” வளர்த்த கடா மார்பில் பாய்ந்த தடா! வஞ்சகரின் சூழ்ச்சியிலே வீழ்ந்ததடா “

உனக்கும் பப்பே... உங்கள் நாட்டுக்கும் பப்பே என்று சொல்லாமல் சொல்கிறான் சிங்களவன்...

ஹி ஹி....

அய்யா
18-06-2009, 08:09 AM
அது இலங்கையிடம் வீழும் நாள் வெகு விரைவில். காரணம் இப்போது இலங்கைக்கு ஆதரவாக சீனா பாக்கிஸ்தான் போன்ற நாடுகள் பக்கபலமாக உள்ளன... இந்தியா தாரைவார்த்து கொடுத்தாலும் அதிர்ச்சியடையவேண்டி வராது...

இலங்கையாக விட்டுக்கொடுத்தால் தான் உண்டு...

எது? கச்சத்தீவா அண்ணா?

இந்திரா காலத்திலேயே அது தாரை வார்க்கப்பட்டுவிட்டதே!

praveen
19-06-2009, 02:24 PM
எது? கச்சத்தீவா அண்ணா?

இந்திரா காலத்திலேயே அது தாரை வார்க்கப்பட்டுவிட்டதே!

மேலும் இதுபற்றி முழுமையான தகவல் அறிய கீழே கண்ட யுனிகோடில் அமைந்த கட்டூரையை படித்து பாருங்கள்.


http://noolaham.net/project/04/332/332.htm