PDA

View Full Version : வின் ரர் உபயோகிக்கும் முறை(How to Use Winrar)



நூர்
18-06-2009, 06:14 AM
வின் ரர் உபயோகிக்கும் முறை(How to Use Winrar)
http://images.cooltext.com/617550.jpg

http://1.bp.blogspot.com/_f22wx7G6e8M/SjkreHEBdII/AAAAAAAABmg/Ng0zG5oLdnA/s320/12.jpg

நம்மிடம் சில பைல்கள் இருக்கும்.அதனை மற்றவர்களுக்கு அனுப்ப

அதை ஒவ்வொன்றாக அனுப்புவதைவிட அனைத்தையும் ஒன்றாக கட்டி

அனுப்பிவைத்தால் பைல்கள் தொலையாது - பத்திரமாக போய்

சேரும். அந்த வகையில் உபயோகப்படும் மற்றும் ஓரு சாப்ட்வேர்தான் WINRAR.

ஏற்கனவே நீங்கள் Zip பைல்களை உப யோகித்திருப்பீர்கள். அதன் மற்றும் ஒரு அங்கம் தான் இது. எனது அடுத்துவரும் பதிவுகளில் இந்த சாப்ட்வேர் மூலம்

உங்களுக்கு அளிக்க விரும்புவதால் புதியவர்களுக்காக இதை பதிவிடுகின்றேன்.முதலில் இதைஇந்த http://www.topshareware.com/WinRAR-transfer-102.htm தளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

இதை பதிவிறக்கம் செய்த போல்டரில் சென்று பார்க்கும் சமயம் உங்களுக்கு இந்த சாப்ட்வேர் ஆனது கீழ்கண்டவாறு காட்சியளிக்கும்.

http://1.bp.blogspot.com/_f22wx7G6e8M/SjkreHEBdII/AAAAAAAABmg/Ng0zG5oLdnA/s320/12.jpg

இனி இதை கிளிக் செய்து நீங்கள் விருப்பப்பட்ட டிரைவில் இன்ஸ்டால் செய்யவும்.

ஒரு சாதாரண .rar பைலானது கீழ்கண்டவாறு காட்சியளிக்கும்.
http://4.bp.blogspot.com/_f22wx7G6e8M/SjkmkL3culI/AAAAAAAABlY/66Q4Hz9FsXk/s320/2.jpg
நீங்கள் இதை இன்ட்டால் செய்தபின் உங்களுக்கு அதே பைலானது புத்தகங்கள்

அடுக்கிவைத்து அதை ஒரு பெல்டால் கட்டியுள்ளதுபோல் மாறிவிடும்.கீழே

உள்ள படத்தை பாருங்கள்.
http://4.bp.blogspot.com/_f22wx7G6e8M/SjkoBekLYKI/AAAAAAAABmY/hiPW3rYiErs/s320/10.jpg
இப்போது இதை பயன்படுத்தி நம்மிடம் உள்ள பைல்களை எப்படி

வின்ரர் (winrar) செய்யலாம் என பார்க்கலாம். முதலில் நீங்கள்

வின் ரர் செய்யவிரும்பும் பைல்களை ஒரு போல்டருக்குள் கொண்டு வரவும். பின் னர் அந்த போல்டரின் மேல்கிளிக் செய்ய உங்களுக்கு இந்தமாதிரி விண்டோ ஓப்பன் ஆகும்.
http://1.bp.blogspot.com/_f22wx7G6e8M/Sjkmk28KCmI/AAAAAAAABlw/K8La67tzF5g/s320/4.jpg
அதில் உள்ள Add to Archive கிளிக் செய்யவும்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.

http://1.bp.blogspot.com/_f22wx7G6e8M/SjkmkVoQr2I/AAAAAAAABlg/Fu4Q_2MQjwo/s320/1.jpg
ஒரு புதிய போல்டரில் பதிய விரும்பினால் ப்ரவ்சரில் சென்று வேண்டிய போல்டரை-டிரைவை தேர்ந்தேடுக்கவும். இல்லை யென்றால்

ஓகே கொடுக்கவும்.

கண்இமைக்கும்நேரத்தில் உங்களுக்கு புதிய Winrar பைல் நீங்கள் விரும்பிய இடத்தில் ஓப்பன் ஆகி இருக்கும். நீங்கள் டிரைவ் ஏதும் தேர்ந்தெடுக்கவில்லை யென்றால் உங்கள் பழைய பைலுக்கு
பக்கத்திலேயே அது இருக்கும்.

இப்போது இந்த பைலை பாருங்கள்.
http://3.bp.blogspot.com/_f22wx7G6e8M/SjkmkVOWBpI/AAAAAAAABlo/uTjxRT69cpk/s320/3.jpg
இப்போது இதில் நீங்கள் மவுஸால் கிளிக் செய்து ஓப்பன் கொடுத்தால்

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
http://3.bp.blogspot.com/_f22wx7G6e8M/SjkmwHQzu3I/AAAAAAAABmA/f5HnqF-quHc/s320/7.jpg
அதில் உள்ளபோல்டரை கிளிக் செய்தால் நீங்கள் போல்டரில்

வைத்துள்ள பைல்களை பார்க்கலாம். அதில் நீங்கள் விரும்பும் பைலை கிளிக் செய்து உங்கள் பைலை பார்க்கலாம்.
http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/9-2.jpg அதைப்போல் நீங்கள் அதை

Extract Here செய்தும் பயன்படுத்தலாம்.
http://3.bp.blogspot.com/_f22wx7G6e8M/SjkmlHSPX9I/AAAAAAAABl4/i4Sq6uSbg4I/s320/6.jpg
உங்களிடம் உள்ள பைல்களை இதன்மூலம் பரிசோதித்துப்பாருங்கள். நான்கு ஐந்து முறைசெய்தால் பிறகு உங்களுக்கு இது சரியாக வந்துவிடும்.

பதிவை பாருங்கள்.

பிடித்திருந்தால் இங்கு http://velang.blogspot.com/ ஒட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

நன்றி:http://velang.blogspot.com/

dhilipramki
09-02-2011, 03:14 AM
அருமை பகிர்வுக்கு நன்றி :)

vseenu
20-09-2011, 03:39 PM
பகிர்ந்த பயனுள்ள தகவலுக்கு நன்றி