Log in

View Full Version : புதிய களம்… தயாராகும் புலிகளின் அமைப்புகள்!



Honeytamil
17-06-2009, 12:23 PM
லண்டன்: பல்வேறு குழப்பங்கள், முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் என விடுதலைப் புலிகளைப் பற்றி வந்து கொண்டிருந்தாலும், புதிய வழியில் போராட்டங்களை முன்னெடுக்க புலிகளின் பல்வேறு அமைப்புகள் தயாராகி வருகின்றன.

பிரபாகரனால் நியமிக்கப்பட்ட புலிகளின் வெளியுலக தொடர்புகளுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் எனப்படும் கேபி தன்னிச்சையான அறிவிப்புகளை வெளியிடுவதாக கூறப்படும் நிலையில், புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவே இப்போதும் தமிழர் ஆதரவு பெற்ற அமைப்பாகத் திகழ்ந்து வருகிறது.

உளவுப் பிரிவுத் தரப்பின் ஆதிகாரப்பூர்வ அறிவிப்பு வராத வரையில் எந்த முடிவும் இப்போதைக்கு எடுக்க வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனவே இருதரப்பும் இணக்கமான செயல்திட்டத்துடன் விடுதலைப் போரை புதிய களத்தில் முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பட்டு வருகிறது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்து விட்டதாகவும், பிரபாகரன் ‘கொல்லப்பட்டு’ விட்டதாகவும் இலங்கை அரசு அறிவித்த பின்னர், விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களது ஆதரவுத் தளங்களில் மாறுபட்ட கருத்துக்கள் வரத் துவங்கிவிட்டன.

பிரபாகரன் மறைவு குறித்து புலிகள் ஆதரவு அமைப்புகள் சில மாறி மாறி வேறுபட்ட கருத்துக்களைச் சொல்லி விருகின்றன.

இந்த நிலையில் கேபி என்று அனைவராலும் அறியப்படும் செல்வராசா பத்மநாதன் என்ற குமரன் பத்மநாபன் புதிய பாதையில் புலிகள் இயக்கத்தையும், ஈழப் போராட்டத்தையும் எடுத்துச் செல்லப் போவதாக அறிவித்துள்ளார்.

அமைதி காக்கும் உளவுப் பிரிவு

ஆனால் பொட்டு அம்மான் தலைமையிலான உளவுப் பிரிவு மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பிரிவினர் இதற்கு எந்த எதிர் விளைவையும் காட்டாமல் உள்ளனர்.

தற்போதைய நிலையில், புலம் பெயர்ந்த தமிழர்கள் (கிட்டத்தட்ட எட்டு லட்சம் பேர் இருப்பார்கள் என மதிப்பிடப்பட்டப்பட்டுள்ளது) விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோரிடமிருந்து நிச்சயம் தங்களுக்கான வழிகாட்டல் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிய வருகிறது.

மேலும் இவர்கள் புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவுக்கு ஆதரவாக நிற்க தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

இந்த அமைப்பின் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாகவே இலங்கை அரசும் நம்புகிறது.
மேலும், ‘தாயகத்தில் தனி ஈழம்’என்ற புலிகளின் அடிப்படைக் கொள்கையையும் எந்தவித நிர்ப்பந்தத்தாலும் விட்டுக் கொடுக்க தாங்கள் தயாராக இல்லை என்றும் அவர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.

கேபிக்கு ஆதரவில்லை?

புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில், கேபிக்கு எதிர்பார்த்த அளவு ஆதரவு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது கேபி வசம் பெரும் நிதி ஆதாரங்கள் மட்டுமே இருப்பதாகவும், முக்கியமான, புலம் பெயர் தமிழர்களின் ஆதரவு அவருக்கு இல்லை என்றும் கூறப்படுகிறது.

அந்த ஆதரவைப் பெறும் முயற்சியில்தான் தற்போது கேபி தீவிரமாக இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கு முன்பே அவர் கைது செய்யப்படக் கூடும் என்றும் இன்னொரு தரப்பினர் கருதுகிறார்கள்.

பொட்டு அம்மானால் நேரடியாக நியமிக்கப்பட்ட சில முக்கிய இரண்டாம் கட்ட தலைவர்கள் நிர்வாகத்தில் புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், புலம் பெயர் தமிழர்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் அது வெற்றி பெற்றுள்ளதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கேபியைவிட, உளவுப் பிரிவிடம் அதிக தொடர்புகளும், ஆதரவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

30 ஆண்டு கால போராட்டத்தை புலிகள் அமைப்பு சீரிய முறையில் நடத்தியதால்தான், இன்று உலக அரங்கில் ஈழத் தமிழர்களின் அவலம் ஓரளவுக்கேனும் வெளிச்சத்துக்கு வந்தள்ளது என்பதே புலம்பெயர் மக்களின் ஒட்டு மொத்த கருத்தாக உள்ளது. எனவே கேபி தனித்த பாதையில் போவதை விட உளவுப் பிரிவினருடன் இணக்கமான போக்கில் செல்வதே இன்றைய சூழலுக்கு சரியானது என்று பெரும்பான்மையோர் கருதுகின்றனர்.

வன்னிக் களத்தில் மடிந்த 50 ஆயிரம் உறவுகளின் தியாகத்துக்கு, பிரபாகரனின் கனவான தனித் தமிழீழத்தை அமைப்பதே சரியான மரியாதையாக இருக்கும் என நம்பும் இவர்கள், இப்போதைக்கு பிரபாகரனைப் பற்றியும் அவரது ‘மறைவு’ குறித்த சர்ச்சைகளையும் விவாதிப்பதையும்விட, தாயகத்தில் உள்ள மக்களை அகதி நிலையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவோம் என்று கூறியிருகிறார்கள்.

புலிகள் அமைப்பின் பல்வேறு பிரிவுகள் தற்போது உறக்க நிலையில் இருப்பதாகவும், விரைவில் அனைத்துப் பிரிவுகளும் மீண்டும் செயலூக்கம் பெற்று இந்த முயற்சியில் இறங்குவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், ஈழத்தமிழர் மிகுந்த மனவேதனையில் இருக்கும் இந்த தருணத்தில், அவர்களுள்ளேயே பிளவை உண்டாக்கும் ‘ரா’ போன்ற அமைப்புகளின் முயற்சிக்கு புலிகளின் அமைப்புகளோ, புலம்பெயர் மக்களோ ஆளாகிவிடக் கூடாது என்றும் வெளிப்படையான வேண்டுகோள்கள் வரத் துவங்கியுள்ளன, கேபி மற்றும் உளவுப் பிரிவு பொறுப்பாளர்களுக்கு.

‘தலைமை சில காரணங்களுக்காக தனித்து இருக்க வேண்டிய சூழல் இன்று நிலவுகிறது. அதைப் புரிந்து கொண்டு அனைத்து அமைப்புகளும் ஒரே தலைமைதான் நமக்கு என்ற சிந்தனையுடன் செயல்பட வேண்டும். தனித் தனி பாதைகள் காண்பது மீண்டும் எண்பதுகளுக்கு கொண்டு போய்விட்டுவிடும்’, என்ற பழ நெடுமாறனின் கருத்தையும் மனதில் கொள்ளுவது நலம்.

வீழ்ச்சியிலிருந்து எழுவதுதான் சிறந்த வீரமாக இருக்கும். இன்று ஈழத் தமிழர் அமைப்புகளுக்கு அப்படியொரு தருணம் வாய்த்திருக்கிறது. இழப்பின் வலிகளூடே இந்த ஒற்றுமைச் சிந்தனையும் இருப்பதுதான் இன்றைக்கு முக்கியம். சிங்கள- இந்திய கூட்டுச் சதிகளை உடைக்க அது உதவும்.

புலிகள், புலம் பெயர் அமைப்புகள், பன்னாட்டு ஆதரவு தளம் மூன்றையும் வலுப்படுத்தி அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதே தமிழர் முன் உள்ள ஒரே சிந்தனையாக இருக்க வேண்டும்.

-வன்னிமகன்
(என்வழி.காம்)

அமரன்
17-06-2009, 07:57 PM
தமிழனுக்கு தமிழந்தான் எதிரியென்பது அடிக்கடி நிரூபணமாகிறது.

கே.பி இந்தளவு ஆடியும் உளவுப்படை அமைதிப்படையாக இருப்பதேனோ? மக்களை இயங்கு நிலையில் வைச்சிருங்கப்பா. உறங்க வைக்காதீங்க.

அய்யா
18-06-2009, 05:54 AM
கேபீயும் துரோகியா?

இந்தக் கம்பெனி தேறாது!

தூயவன்
18-06-2009, 11:25 AM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20504

இந்த பகுதியில் படியபட்டுள்ள செய்தியை பார்கவும்

அமரன்
18-06-2009, 12:35 PM
கேபீயும் துரோகியா?
இந்தக் கம்பெனி தேறாது!

இருக்க வேண்டியங்க இருக்க வேண்டும் என்பது இதுக்குத்தான். இதை அறிந்தவர்கள் பிழை செய்யாமல் இருந்திருக்க வேண்டும். பிழைக்கு தண்டனை வழங்கியவர்கள் எங்களுக்கு நல்லதைச் செய்திருக்கனும். . இப்பப் பாருங்க.. இதுவரைக்கும் தலைவர்களுக்கிடையில் இருந்த பிளவு இப்போ மக்களிடத்திலும். இனி ஈழத்தமிழனை "ஆண்டவனாலும்" காப்பாத்த முடியாது.

ஆனாலும் ஒரு விடயத்தில் ஒன்று பட்டு விட்டோம். எல்லாரும் அந்தந்த* நாட்டுக் குடியுரிமைக பெறத் தீர்மானித்து விட்டோம். என்ன... பிறந்த இடத்தையும் இலங்கைத் தமிழன் என்பதையும் தாங்கி இருக்கும் குடியுரிமை குடுக்கும் கொடுமையை தாங்கிட்டு வாழப்பழகிக்க வேண்டும் - சாகும் வரைக்கும்...