PDA

View Full Version : தறிகெட்ட வாழ்க்கை



இன்பக்கவி
15-06-2009, 12:52 PM
http://i164.photobucket.com/albums/u40/giftson/AIDS.jpg
உற்றார் கூடி நிற்க
ஊரார் பலர் பார்க்க...
உன்னதமான வாழ்க்கை
உயர்வோடு வாழ எண்ணி
மணாளனை கை பிடித்து
மணவறை வலம் வந்தாள்
மகிழ்வோடு...

மங்கலநாண் பெற்ற
மகளை மனதார வாழ்த்தினர்
பெற்றோர்.....
தன்னடக்கமான மணமகனை
மலர்தூவி வரவேற்றனர்.....

நாள்கள் போனபின் தான்
தெரிந்தது...
அவன் தறிகெட்ட வாழ்க்கை
வாழ்ந்தவன் என்று......

நோயும் வந்து நொந்து
போனது அவன் மட்டுமா??
மனைவியாய் வந்தவளும்தான்...
மரணத்தின் பிடியில் நின்ற
அவனை மீட்க போராடிய
அவளுக்கு மணவாளன்
இடுகாடு போகும் போதும்
மறக்கவில்லை இவளை....

முழுவதுமாக விட்டுப் போகாமல்
நோய்யை பாதி இவளுக்கும்
தந்து விட்டுப் போனான்
பாவியவள் வாழக்கையும் போனது..
நாட்களும் போனது...
தீராத பழியொடு இவள் இன்று...

வாழ்த்தியவர்கள் எல்லாம்
வசை பாட...
ஊரார் ஒதுக்கி வைக்க...
இனி அவள் நிலை....
கேள்வி குறியாய்...
மரணத்தின் வருகைக்காய்
காத்திருக்கிறாள்
வழி மீது விழி வைத்து......

அமரன்
15-06-2009, 07:06 PM
சந்திக்கு சந்தி விளம்பரப் பலகை வைத்து ஒருத்தனுக்கு ஒருத்தி என்றார்கள். கண் கொடுத்தோமா நாம்.

தொலைக்காட்சிகளில் கவர்ச்சியாகவும் கருத்தாகவும் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள் என்றார்கள். செவிமடுக்கிறோமா நாம்.

பாதுகாப்பில்தான் எத்தனை முன்னேற்றம். எதையும் குறைக்காத அளவுக்கு தொழில்நுடபம். ம்ஹும். ஆசை தன் "வேலை"யை அவசரமாகக் காட்டி விடுகிறது.

இனி ஜாதகத்தை கேட்காமல் மருத்துவ அறிக்கையைக் கேட்க வேண்டும் போலும். முதலில் புரிந்துணர்வு பெருக்கெடுக்கட்டும் எல்லாரிடத்திலும்.

ஒன்றுக்கும் உதவாத 'எயிட்'ஸ் ஒதுக்கி வைக்கப்படுவர்களின் வேதனையிலாவது காணாமல் போகட்டும்.

நேசம்
16-06-2009, 04:49 AM
இவர்களை திருத்த முடியாது.ஆனால் அந்த தவறை ஒழுங்காக செய்தால் மற்றவர்களுக்கு பாதிப்பில்லை

சிவா.ஜி
16-06-2009, 08:41 AM
உண்மையை சொல்லும் கவிதை. தறிகெட்டவர்கள் தானும் கெட்டு தன்னை நாடி வந்தவளையும் கெடுப்பது கொடுமை.

அமரன் சொன்னதைப்போல, அரசாங்கமும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் சந்திக்கு சந்தி வைத்திருக்கும் விழிப்புணர்வு விளம்பரங்களை பார்ப்பது மட்டுமல்ல...மனதில் இருத்த வேண்டும்.

வாழ்த்துகள் கவிதா.