PDA

View Full Version : அரக்கர்களாய் சிலர்......



இன்பக்கவி
14-06-2009, 11:02 AM
இறைவன் படைத்தான்
மனிதனை மனிதனாய்....
ஆனால்
மனிதன் மனிதனாய் இல்லை..
மிருகமாய்.... இன்று....

சொத்து இல்லா பெண்ணை
மணக்க மனம் இல்லாத மிருகம்
தமக்கைக்கு
சொத்தில் பங்கு தர மறுக்கிறது....

வாங்கிய வரதட்சணை
போதாது என்று ஒரு மிருகம்
வாழ வந்தவளை வாழ வைக்காது
வழி அனுப்புகிறது இடுகாட்டுக்கு.....

மாமியார் என்ற மிருகம்
பெண்ணை பெண்ணாய் பார்க்க
மறுத்து அவளை கொடுமை
செய்யத் துடிக்கிறது.....

குழந்தைகளைக் கடத்தும்
மிருகம்...
அதன் கல்மனம் ஏனோ
கரையாமல் பணத்திற்காக
உயிரைகுடிக்கிறது......

அஹிம்சையை மறந்து
உயிர்களை இம்சை செய்யும்
அரக்கர்களாய் சிலர்......

இருதயத்தைக் கொடுத்து
இன்றும் வாழ்கிறான்
ஹித்தேந்திரன்....
ஆயிரம் இதயமாற்று
செய்தாலும் மாறாது
இந்த மிருகங்களின் இதயங்கள்......

நேசம்
14-06-2009, 11:53 AM
தனது இதயத்தை கொடுத்து மக்கள் மனதில் வாழும் ஹிந்தேத்திரன் எத்தனை பேர் இருந்தாலும் இந்த அரக்கர்கள் பெருகி கொண்டுதான் இருக்கிறார்கள் சகோதரி

அமரன்
17-06-2009, 06:56 AM
சமூகத்தில் வீழ்ந்து கிடக்கும் முட்களை அடையாளம் காட்டியுள்ளது கவிதை. அரக்கர்கள் இருப்பதாலேயே தேவர்களைத் தெரிகிறது. தேவர்கள் வடிவில் அரக்கர்கள் இருப்பதுதான் வேதனையானது..

பாராட்டுகள் கவிதா123.