PDA

View Full Version : கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க



புதியவன்
14-06-2009, 04:15 AM
http://3.bp.blogspot.com/_VAJ4G464dkE/SjOP8EoFH0I/AAAAAAAAAjw/y8e1czHEycE/s320/2.png
எல்லாருமே இப்பவெல்லாம் GPRS/WAP வசதிகள் உள்ள கைப்பேசியைத்தான் உபயோகிக்கிறோம். மற்ற எல்லா விதங்களிலும் நமக்கு முழு திருப்தியானதாக அது இருந்தாலும், பெரும்பாலானவை தமிழ் எழுத்துருக்களுக்கு ஆதரவு அளிப்பதில்லை. எனவே அலைபேசியில் நம்மால் நமக்குப் பிடித்தமான தமிழில் வரும் வலைப்பூக்களை படிக்க முடிவதேயில்லை. tvs50 என ஒரு வலைப்பூ இதற்கு ஒரு நல்ல வழிகாட்டியது. அந்த எளிமையான வழி இங்கே இருக்கிறது. திருப்தியென்றால் tvs50க்கு நன்றி சொல்லுங்கள்.


http://tvs50.blogspot.com/2009/06/probl ... obile.html

praveen
14-06-2009, 06:24 AM
நண்பரே, இப்படி பிற தள லிங்குகளை இங்கே வெளியிட்டு நம் தள நண்பர்களை பிற தளங்களுக்கு திருப்பி விடாதீர்கள். நம் தளம் தனித்தண்மை வாய்ந்தது, மற்ற பிளாக் போன்றதல்ல. அங்கே இருந்து படத்தை காப்பி செய்து இங்கே போட்ட உங்களால் அந்த யுனிகோடு செய்தியை இட முடியவில்லையா?.

என்ன தான் சிறந்த, அவசியம் தேவைப்படும் தகவல் என்றாலும் ஒரு கட்டுக்குள் இருந்து பங்களியுங்கள், இத்தனைக்கும் அந்த தளத்தில் தரப்பட்ட அந்த செய்தியும் அவர்களிதில்லை, இன்னொரு இடத்தில் இருந்து எடுத்து போட்டு நன்றி பாராட்டியிருக்கிறார்கள்.

அந்த ப்ளாக்கில் எப்படி விவரமாக அந்த எடுத்த தள லிங்க் இல்லாமல் அதே நேரத்தில் அந்த தள பெயரை மட்டும் தமிழில் குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.

பிற தள லிங்க் போடுவதை என்று நிறுத்துகிறோமோ அன்று தான் நம் தளம் வளரும், இல்லாவிட்டால் இப்படியே இனையத்தின் நகல்கள் + லிங்க் கொண்ட ஒரு அறிவிப்பு பலகையாகவே இருந்து வரும்.

முடிந்தால் அப்படி செய்யுங்கள், இல்லாவிட்டால் என்னை மாதிரி இருங்கள். நான் தினமும் எத்தனை தமிழ் தளம் செல்கிறேன் தெரியுமா?. அவற்றை எல்லாம் உங்களை போல நம் மன்றத்தில் இட்டு வந்தால் நான் ஒரு மாதத்தில் அதிக பதிப்புகள் செய்தவனாகி விடுவேன். ஆனால் இதில் நம் கைதட்டச்சு அல்லது உழைப்பு என்று என்ன இருக்கிறது.

டிவிஎஸ்50 பிளாக்-ல் கண்ட செய்தி



http://3.bp.blogspot.com/_VAJ4G464dkE/SjOP8EoFH0I/AAAAAAAAAjw/y8e1czHEycE/s320/2.png

இணையத்தில் பதிவுகளை வாசித்து கொண்டிருக்கும் போது பதிவர் டாக்டர். புருனோ அவர்களின் பயணங்கள் பிளாக்கில் மொபைல் போனில் அவர் பிளாக்கை பார்ப்பது பற்றி எழுதியிருந்த இடுகை கண்ணில் பட்டது.

முன்பு என்னுடைய சோனி எரிக்சன் மொபைலில் தமிழ் தளங்களை பார்ப்பதில் எழுத்துரு பிரச்சினை இருந்தது. ஆர்வம் இல்லாததால் அத்துடன் விட்டு விட்டேன். இப்போது மீண்டும் முயன்ற போது அதே எழுத்துரு பிரச்சினை. தமிழ் இணைய தளங்களின் தமிழ் எழுத்துகள் சரியாக தெரியவில்லை.

புருனோ அவர்களின் இடுகையின் பின்னூட்டத்திலேயே பதிவர் மின்னுது மின்னல் இந்த பிரச்சினையை தீர்க்க ஒரு உதவி லிங்க் தந்து இருந்தார். அதன்படி உபயோகித்து பார்த்தேன். தமிழ் எழுத்துரு பிரச்சினை தீர்ந்து விட்டது. மேலும் இது போன்ற பிரச்சினை உள்ள பலரை சென்றடையட்டும் என்று இங்கு பகிர்கிறேன்.

மொபைலில் தமிழ் தளங்களின் எழுத்துரு பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை

1. உங்கள் மொபைலில் GPRS வசதியை உயிர்ப்பித்து கொண்டு, மொபைல் மூலம் http://www.opera.com/mini/ இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினி தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.

2. மொபைலில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.
3. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
4. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.

இனி உங்கள் மொபைலில் நீங்கள் தமிழ் இணைய தளங்களை எந்த தடை இன்றியும் பார்க்கலாம்.

இது எனக்கு எவ்வித தடை இன்றி வேலை செய்தது. வேறேதும் வழிமுறைகள் இருந்தால் பின்னூட்டத்தில் கூறுங்கள்.

உபயோகித்து பாருங்கள். குறைகள் ஏதேனும் இருந்தால் சுட்டி காட்டுங்கள். என்னை திருத்திக்கொள்ள உதவியாய் இருக்கும்.

நன்றி : டாக்டர். புருனோ, மின்னுது மின்னல் ,

பாரதி
14-06-2009, 02:49 PM
தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே. நானும் இதைக்குறித்து விபரம் தர எண்ணி இருந்தேன். நிச்சயம் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அன்புரசிகன்
14-06-2009, 03:25 PM
பிரவீன். தங்களது பதிவு மிக உதவிகரமாக இருந்தது. எனது அலைபேசியில் முதன்முறையாக தமிழ் வருகிறது...

நன்றி.

seguwera
27-08-2011, 02:23 PM
நானும் முயர்ச்சி செய்கிறேன் நன்றி