PDA

View Full Version : எந்த பைலையும் எம்பி 3 ஆக்கலாம்



நூர்
14-06-2009, 02:01 AM
எந்த பைலையும் எம்பி 3 ஆக்கலாம்
--------------------------------
ஸம்ஸார் – ஆன்லைனில் பல வசதிகளைத் தரும் டூல்களை வழங்கி வரும் நிறுவனம் இது. இலவச மாகவும், கூடுதல் வசதிகளுடன் கட்டணம் பெற்றும் இந்நிறுவனம் பல டூல்களைத் தந்து வருகிறது. அண்மையில் ஸம்ஸார் மிக அருமையான டூல் ஒன்றைத் தந்துள்ளது. இந்த டூல் பார்வை சக்தி குறைந்தவர்களுக்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும்.


இந்த வசதி மூலம் எந்த ஒரு பைலையும் கம்ப்யூட்டர் படித்துக் கேட்கும் வகையில் எம்பி 3பைலாக மாற்றித் தருகிறது. pdf, doc, docx, text, opt, pub, wpd, wps

என எந்த ஒரு வகை பைலையும் இதன் தளத்திற்குக் கொண்டு சென்று டாகுமெண்ட்டிலிருந்து பேசும் வசதி கொண்டதாக மாற்றி இயக்கலாம். இதன் தளத்திற்குச் (www.zamzar.com) சென்று இலவசமாக இந்த சேவையைத் தரும் இடத்தில் கிளிக் செய்தால் உங்களின் இமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்துப் பதிந்தால், உடனே பைலை அப்லோட் செய்திடச் சொல்லி கேட்கும். பைலை அனுப்பியவுடன் அது எம்பி 3 பைலாக மாற்றப்பட்டு உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். பைலை எம்பி3 பாடலை இயக்குவது போல இயக்கி டெக்ஸ்ட்டைக் கேட்கலாம்.
நன்றி: தினமலர் கம்ப்யூட்டர்மலர்.

பாலகன்
14-06-2009, 02:57 AM
நன்றி அப்படின்னு சொல்லிட்டா அது ரொம்ப சின்னதா இருக்கும்

அதனால தொடர்ந்து கணினி சேவை ஆற்றிவரும் உங்களுக்கு ஒரு பெரிய நன்றி

அன்புரசிகன்
14-06-2009, 04:07 AM
பகிர்வுக்கு மிக்க நன்றி.

அமரன்
14-06-2009, 05:37 PM
கண்டதை எல்லாம் கொண்டு வந்து தரும் உங்களை எந்தளவு பாராட்டினாலும் தகும். என்றும் உங்களால் மன்றமும் கணினிப் பக்கமும் நிறையட்டும்.

நன்றி நூர்.

ரவிசங்கர்
04-03-2010, 05:23 PM
நூர் அவர்களே, உமக்கு என் வாழ்த்துக்கள்.