PDA

View Full Version : மறந்து போன மனித நேயம்



நேசம்
11-06-2009, 08:52 AM
மறந்து போன மனித நேயம்.....


இவர்கள் தான் மக்களுக்கு பணியாற்ற போகிறார்களா என்பதை நினைக்கும் போது வேதனை படுவதை தவிர வேறு வழியில்லை

http://www.tamilmantram.com/photogal/images/2878/large/1_2451500.jpg

நன்றி தினமணி

aren
11-06-2009, 10:00 AM
உதவப்போய் உபத்திரவமாகிவிடப்போகிறதோ என்ற பயம்தான்.

பக்கத்திலும் பலர் நிற்கிறார்களே. அவர்களில் யாராவது ஒருவர் வந்து கவனித்திருக்கலாமே.

படம் எடுப்பதை விட்டுவிட்டு இந்த தினமணி நிருபர், அந்த பெரியவருக்கு உதவியிருக்கலாமே?

நேசம்
11-06-2009, 10:17 AM
நிச்சயமாக உங்கள் கேள்வி நியாயம் தான்.ஆனால் மற்றவர்களை காட்டிலும் அவர்களுக்கு தான் பொறுப்பு அதிகம் இல்லையா....படம் எடுத்தது விட்டு உதவி செய்து இருக்கலாம்.இருந்தாலும் அது அவரின் தொழில்

அமரன்
11-06-2009, 10:22 AM
அந்தப் பெரியவர் என்ன ஆனாருன்னு தெரிஞ்சுதுங்களா?

சிவா.ஜி
11-06-2009, 03:07 PM
அரசியல்வாதிகளிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும். விடுங்க நேசம். யாரோ ஒருத்தர் நிச்சயம் உதவியிருப்பார். இந்த அசிங்கங்களெல்லாம் போய்த்தொலையட்டும் என காத்திருந்திருப்பார்.

நேசம்
14-06-2009, 12:35 PM
அதிலும் எதற்காக அந்த முதியவர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார் என்பதை படிக்கும் போது நாட்டின் நிலைமை நல்ல போகிறது என்பது அறிய முடிகிறது சிவண்ணா

அமரன்
14-06-2009, 05:17 PM
நேசம்!
எங்களூரில், ஒளிக்கத் தெரியாமல் போய் விதானையார் வீட்டில ஒளித்தது போல் என்று ஒரு சொலவடை உண்டு. அது ஒலியாடியது.

பரஞ்சோதி
15-06-2009, 09:46 AM
வேதனையான விசயம் தான்.

இதுவே தேர்தலுக்கு முந்தைய நாட்கள் என்றால் பெரியவருக்கு தனி கவனிப்பே நடந்திருக்கும்.

அரசியல்வாதிகளையும், அரசு ஊழியர்களை குறை சொல்லி பயனில்லை, அவர்களாக மனித நேயத்தை கொண்டிருக்க வேண்டும்.

புகைப்படம் எடுத்தவரையும் குறை சொல்ல முடியாது. ஒருவேளை படம் எடுத்த கையோடு ஒரு சோடா வாங்கி கொடுத்திருந்தால் அவர் தான் கடவுள்.

அமரன்
15-06-2009, 09:55 AM
அண்ணா..

அந்த முதியவருக்கு யாராவது ஒருவர் உதவி செய்திருப்பார். அந்த ஒருவர் அதிகாரியாகவோ, அரசியல்வாதியாகவோ, திருவாளர் பொதுசனமாகவோ இருப்பார். கெட்டவரை அடையாளம் காட்டும் நாம் நல்லவரையும் அடையாளம் காட்ட வேண்டும். அதை செய்யாதவரை மறந்து போன மனிதநேயம் தலைப்பூ வாடாமல் இருக்கும்.

பரஞ்சோதி
15-06-2009, 10:31 AM
உண்மை தான் தம்பி

இப்படி கெட்டவற்றையே காட்டி, காட்டி சமுதாயம் முழுக்க கெட்டவை தான் இருக்கிறதோ என்று எண்ணம் அளவிற்கு நம்ம ஊடகங்கள், புரளிகள், செய்திகள், எண்ணங்கள் இருக்கின்றன.

அவற்றில் மாற்றங்கள் வரவேண்டும்.

பத்திரிகையின் நோக்கம் என்ன தெரியுமா?

நாய்கள் மனிதனை கடித்தால் அது சகஜம்,
நாயை மனிதன் கடித்தால் அது செய்தி.

ஒருமுறை நம்ம முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் இஸ்ரேல் நாட்டிற்கு சென்றாராம், அங்கே சென்ற சில மணி நேரத்தில் அவர் தங்கியிருந்த ஓட்டல் அருகே பெரிய வெடிகுண்டு வெடித்தததாம்.

அந்த வெடிகுண்டு யாரால் வெடிக்கப்பட்டது, ஏன், என்ன என்ன இழப்புகள் போன்றவற்றை அறிய அடுத்த நாள் செய்திதாளை வாங்கி பார்த்தாராம், அவர் தேடிய வெடிகுண்டு செய்தி 8, 10வது பக்கத்தில் ஒரு ஓரமாக குட்டி செய்தியாக, நேற்று குண்டு வெடித்தது 4 பேர் காயம் என்பது போல் செய்தியாம், ஆனால் முதல் பக்கத்தில் மிகக் குறைந்த அளவு நீரை பயன்படுத்தி அதிக விளைச்சலை காண உதவிய விஞ்ஞானியில் புகைப்படம், வாழ்க்கை வரலாறு, பேட்டி இருந்ததாம்.

இதுவே நம்ம ஊர் என்றால் எப்படி இருந்திருக்கும் என்று யோசிக்கிறீங்க தானே?