PDA

View Full Version : தேடி தவிக்குது என் உறவு.....



இன்பக்கவி
10-06-2009, 09:21 AM
தொலைந்த ஒரு நட்பை
தேடி தவிக்குது என் உறவு.....

கண்ணீர் சிந்திய உன்
கண்களை துடைக்க
அருகில் நான் இல்லை.....

உன் துக்கத்தை
என்ன வார்த்தை கொண்டு
நான் துடைக்க....

உனக்கு ஆறுதல்
சொல்லவும் தெரியாமல்
நீ அழுவதை தாங்க முடியாமல்
தவிக்கிறேன் நான்......

உன் இதயத்தை
தொலைவில் வைத்துவிட்டு
உன்னை சுவாசிக்க
சொல்வது முட்டாள்தனம்....

நானும் இழந்தேன் பல
நட்புகளை...
காய்ந்து சறுகாய்
என் உள்ளம் இப்போது.....
உன் வேதனை நான்
அறிவேன்..
என் செய்வேன் நான்......

என்ன சொல்லி உன்னை தேற்ற...
ஆயிரம் பேர் உன்னை
சுற்றி இருந்தாலும் நீ
காணும் வெறுமையை
யாரால் நிரப்ப முடியும்
உன் தோழனை தவிர......

நிச்சயம் உன் கண்ணீர்
துடைக்க...
நீ ஆறுதலாய் தோள் சாய
உன் தோழன் வருவார்...
விரைவில்..
நம்பிக்கையில் நானும்.....

நட்புக்கு இலக்கணமாய்
நீங்கள்...
உனக்கு கிடைத்த நட்புப் போல
இனி யாருக்கும் கிடைக்குமா
என்பது ஐயம் தான் எனக்கு.....

நட்பு என்ற ஓவியத்தை
வரைந்த ஓவி...
நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள்

உங்களால் தீட்டப்பட்ட
நட்பு ஓவியம் முடிவு
பெறாமல்,
உயிர் பெறாமல் தவிக்கிறது.....
ஓவியத்தை தொடர
ஓவி...
நீங்கள் வரவேண்டும்...
நீங்கள் வரும் நாள்தான்
என் உறவு கண்ணீர் சிந்தும்
கடைசி நாளாக அமையவேண்டும்.......

கண்ணீருடன்
கவிதா.....

களத்தில் நின்று போரிட்டு கொண்டு இருந்த நண்பன் நிலை என்ன என்று தெரியாமல்...
கதறும் என் சகோதரிகாக...இந்த கவிதை.......

அமரன்
12-06-2009, 07:21 AM
கவிதையின் கடைசிவரை வராமலே இப்படித்தான் இருக்கும் என நிலை எடுத்துக்கொண்டேன். என்னிலை தோல்வி அடையவில்லை.

தோழனின் நிலை அறியாது அங்கலாய்த்துத் தேம்பும் ஒரு தோழி..
அவளின் நிலை கண்டு தேற்ற இயலாத சங்கடத்தில் இன்னொரு தோழி.

மூவரைச் சுற்றி நகரும் கவிதை மனக்கண்களில் பல் பிம்பங்களை திரைப்படுத்துவதில் வாகை சூடுகிறது.

தொலைந்து போன நட்புக்கும் தொலைத்த நட்புக்கும் அதிக வித்தியாசம்.

உங்கள் நட்பின் நட்பு தொலைந்து போகவில்லை. காற்றில் கரைந்து போயிருக்கும் கற்பூரமாய்.. கடவுளாய்..

பங்கெடுக்கிறேன் தோழி!