PDA

View Full Version : வன்னியில் நிலைகொண்டுள்ள ராணுவத்திற்கு தேவையான ஆயுதக்கிடங்கு தீப்பற்றியுள்ளது.



புதியவன்
09-06-2009, 04:39 PM
வன்னி முழுவதும் நிலைகொண்டுள்ள ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கைளை வழங்கி வன்னியை அண்டிய வவுனியா மாவட்டத்தில் ஜோசப் படை முகாம் அமைந்துள்ள இந்த பெரும் ஆயுதக்கிடங்கில் சற்று முன் தீ விபத்து ஏற்பட்டுள்ளது,இந்த தீ விபத்திற்கும் தமிழீழவிடுதலைப்புலிகளிற்கும் எதாவது தொடர்பு இருக்கக்கூடும் என்று சந்தேகம் எழுந்துள்ளது,அத்தோடு யாழ்மாவட்ட ராணுவ ஆயுதக்கிடங்கில் பொன வாரம் தீவிபத்து ஏற்பட்டதுடன் அதனுடைய காரனம் இதுவரையில் தெரிய வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜோசப் படைமுகாமை குறி வைத்து போன வருடம் புலிகள் நடாத்திய கரும்புலித்தாக்குதலில் வன்னி முழுவதையுமே அவதானித்து வந்த இந்தியாவால் வழங்கப்பட்டு இந்திய ராணுவ நிபுனர்களால் இயக்கி வந்த ராடரை குறிவைத்து நடாத்திய தாக்குதலில் ராடர் உட்பட பல கனரக ஆயுதங்களும் புலிகளால் அழிக்கப்பட்டதுடன் அங்கு பணிபுரிந்த இரு இந்திய ராணுவத்தை சேர்ந்த இருவர் படுகாயமடைந்ததுடன் பல சிங்கள ராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி ஈழதேசம்.கொம் (http://www.eeladhesam.com)

ராஜா
09-06-2009, 04:58 PM
வேறொரு தளத்தில் புலிகள், 6 அரச படையினரின் தலைகளை வெட்டிக்கொன்றுவிட்டதாகப் படித்தேன்..!

அமரன்
09-06-2009, 08:04 PM
அப்பாவி மக்களின் அவல நிலை கண்ணுக்குள் விழுந்து கலங்க வைக்குது.

அறிஞர்
09-06-2009, 08:10 PM
இது மாதிரி செய்திகள்.. அப்பாவி தமிழர்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடக்கூடாது..
சில இராணுவ வீரர் இறப்பிற்கு... சில ஆயிரம் தமிழர்களின் உயிரை பறிகொடுக்க வேண்டியிருக்கும்.

விகடன்
09-06-2009, 08:15 PM
இதெல்லாம் அகதிகளாக இருக்கும் தமிழர்களை அவ்விடங்களிலேலே அகதிகளாக தொடர்ந்து வைத்திருக்கு செய்யும் சதிச்செயலாகவும் இருக்கலாம்.

அன்புரசிகன்
10-06-2009, 02:08 AM
இதெல்லாம் அகதிகளாக இருக்கும் தமிழர்களை அவ்விடங்களிலேலே அகதிகளாக தொடர்ந்து வைத்திருக்கு செய்யும் சதிச்செயலாகவும் இருக்கலாம்.
அதே அதே...

இதை காரணம் காட்டி தடைமுகாம்களை தொடரவேண்டி இருக்கலாம். ஜப்பானின் சிறப்புத்தூததர் இருந்த நேரத்தில் இது நிகழ்ந்திருப்பது குறிப்பிடப்படவேண்டியது.

புலிகளை அழித்துவிட்டோம். இப்போது இலங்கை முழுதாக மீட்க்கப்பட்டுவிட்டது என்று சொல்லிவிட்டு நேற்றும் அவசரகால சட்டம் பாராளுமன்றத்தில் 95 மேலதிகவாக்குகளால் நீடிக்கப்பட்டுள்ளது...

பாதுகாப்பு காரண(???!!!)ம் வேண்டி இது நடந்திருக்கலாம்.

புலி மறைந்தாலும் புள்ளி மாறவில்லை என்று இலங்கையின் பிரதமர் ரத்னஸ்ரீவிக்ரமநாயக்க நேற்று சொல்லியிருக்கார்.............

கூட்டிக்கழித்துப்பார்த்தால் கணக்கு எல்லாம் சரியாகஇருக்கும்.

தூயவன்
10-06-2009, 04:46 AM
அட இவ்வளவு தானா இந்தியாவுக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ ஒரு போனை போட்டா சரி.. ஆயுதங்கள் வந்து குவியும்.
இதை கோத்த பாயவே பெருசாய் எடுத்திருக்க மாட்டார் நீங்க போயி...

அமரன்
10-06-2009, 05:48 AM
என்ன செய்யுறது பேட்மான்.
எங்க அடிச்சாலும் கண்ணில தண்ணி வடியுறது போல ஆச்சு எங்கட நிலமை.

Honeytamil
10-06-2009, 06:33 AM
கோத்த பாய பதவிய ராஜினாமா செய்திருக்கிராராமே ????????