PDA

View Full Version : நம்புவது நம் குற்றம்..



இன்பக்கவி
09-06-2009, 10:44 AM
நம்பிக்கை இல்லா உலகம்
நம்பாத மனிதர்கள்.....
நட்புகள் எல்லாம் உண்டு
நம்பிக்கை இல்லா
நட்பும் உண்டு...
நம்புவது நம் குற்றம்....
நட்புகள் எல்லாம் பொய்யோ???
நட்பு வேண்டாம் இனி...
நரகமான தனிமை போதும்
நலம் விசாரிக்க சில உறவுகள்......
நட்போடு இருந்தால் போதும்....
நல்லது இனிதே வந்தே சேரும்......
நட்பில் பொய் சொல்லும் பழக்கம்.,
நட்பில் ஒளிவு மறைவு.,
நாம் செய்தால் அது
நட்பே அல்ல...
நல்ல நட்புக்கு..அது அழகும் இல்லை......
நஞ்சாய் வார்த்தைகள்,
நாம் கண்டு கொள்ளலாம் சில
நட்பில்.....
நாள்கள் பல ஓடின....
நட்பில் சிலவும் காணாமல் போயின.....
நல்லவர்களாய் இருந்தோம்
நட்பாய் இருந்தபோது.....
நட்பு போனபின் உணர்வோம்
நல்ல நட்பு எது என்று.....
நட்பு போனபின்
நட்பை பழிப்பது
நம் கண்ணை
நாமே குத்தி கொள்வது போலாகும்..
நலமாய் நட்பு கொண்டால்
நலமாய் பிரிந்து விடுங்கள்....
நட்பை பழிக்காதீர்கள்.........

kavitha
18-06-2009, 06:28 AM
இறுதி இரண்டு வரிகள் அபாரம்.

நேசம்
18-06-2009, 07:45 AM
நட்பு என்னும் வாழ்க்கையிலும் எடுத்து கொள்ள வேண்டிய விசயங்களை எளிமையான வரிகளை கொண்டு தந்துள்ளிர்கள்.அதிலும் நலமாய் நட்பு கொண்டால் நட்பாய் பிரிந்து விடுங்கள் என்ற வரிகள அருமை.வாழ்த்துகள் சகோதரி

இன்பக்கவி
19-06-2009, 03:48 AM
நன்றிகள்...
இதுவரை நான் போட்ட கவிதைகளை பாராட்டும் உங்களுக்கு எல்லாம் நன்றி சொல்ல தவறி விட்டேன்
பார்த்து ஆனந்தம் மட்டுமே அடைவேன்...
ஏனோ சிறு பயம்...
இனி பதில் போடுவேன்...
நன்றிகள்....
நன்றிகள்....
நன்றிகள்....

அமரன்
19-06-2009, 09:29 AM
கவிதா..

உங்களுப் பயம் வரும் போதெல்லாம் பாரதியை நினையுங்கள். அச்சம் தவித்து விடும்.

அப்படியே மற்றவர்கள் கவிதைகளையும் படித்து உங்கள் கருத்தைச் சொல்லி உறவை வலுப்படுத்துங்கள்.

நாகரா
19-06-2009, 09:55 AM
நகரம் ஆடும் நட்பை நயமாய்ப்
பகர்ந்தார் நண்பர்(பி) கவிதா

நண்பர்கள் பிரிந்தாலும் அழியா திருக்கும்
நட்பென்னும் நியதிக்கு வணங்கு

நகர ஆட்ட நட்புக் கவிதை அபாரம்
வாழ்த்துக்கள் கவிதா
முடிவின்றித் தொடரட்டும் உம் நவ கவிப் பெருக்கு

அமரன்
19-06-2009, 09:57 AM
முன்னால் துரோகிகள்
பின்னால் பகைவர்கள்.
பக்கத்தில் சினேகிதர்கள்.
இப்படித்தான் சென்றுகொண்டிருக்கிறேன் நான்.
மகிழ்ச்சியாப் பயணிக்கிறேன் நான்.

பின்னால் வந்து
முன்னால் செல்வோரும்
முன்னால் வந்து
பின்னால் செல்வோரும்
கணெமேனும் பக்கத்தில்
வராது சென்றதில்லை.

அந்தக் கணங்கள்
மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி
உற்சாகமூட்டும் தருணங்கள்.
என்னை உணர்த்தும் விம்பகங்கள்.

நாகரா
19-06-2009, 10:13 AM
சினேகிதம் என்பது
துரோக எதிர்ப்புத் தீவிரங்கள்
தாண்டிய நடுநிலை!

நடுநிலையில் நின்று
தீவிரங்கள் இரண்டும்
தன்னைத் தொட்டுச் செல்லுங்
கணங்களை மகிழ்வோடு இரசிக்கும்
அமரனின் மன இதம் அருமை!

அருமையானதோர் பின்னூட்டக் கவிக்கு வாழ்த்துக்கள் அமரன்

நகர ஆட்டத்தில் அமரனுந் தானாட
நட்பின் நயங்காட்டுங் கவி

விம்பகம் என்றால் பொருள் என்ன அமரன்?

அமரன்
19-06-2009, 10:16 AM
விம்பகம் என்றால் பொருள் என்ன அமரன்?
ஈழ வழக்கில் பிம்பம் விம்பம் எனப்ப*டும்

விலங்ககம் மாதிரி விம்பகம் பிறந்தது.

நன்றி நாகரா அய்யா.

நாகரா
19-06-2009, 10:23 AM
விளக்கத்துக்கு நன்றி அமரன், விம்பகம் கேட்க இனிக்கிறது.

துரோகத்தையும்
எதிர்ப்பையும்
தன் பிம்பங்களாகவே காணும்
நட்பின் நடுநிலை
விம்பகம் சொற்பொருள் புரிந்ததும்
இன்னும் இனிக்கிறது!

கா.ரமேஷ்
20-06-2009, 06:18 AM
நலமாய் பிரிந்து விடுங்கள்....
நட்பை பழிக்காதீர்கள்.........

அருமை .... அருமை...!