PDA

View Full Version : விண்டோஸ் விஸ்டாவில் Shutdown நேரத்தை குறைக்க..



Honeytamil
09-06-2009, 06:39 AM
Start க்கு சென்று Search box - ல் Regedit என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.

இப்பொழுது ரெஜிஸ்டரி எடிட்டரில்

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control

என்ற பகுதிக்கு சென்று, வலது புற பேனில் உள்ள "WaitToKillServiceTimeout" என்ற String - ல் கிளிக் செய்து அதன் வேல்யுவை மாற்றுங்கள்.

வழ்க்கமாக 20000 என இருக்கும் அதனை 5000 அல்லது 3000 என மாற்றிப்பாருங்கள்.

(3000 க்கு கீழே செல்வது கொஞ்சம் ரிஸ்க் தான்.)

Source : சூர்யா கண்ணன்

பால்ராஜ்
09-06-2009, 09:22 AM
நல்ல செய்தி... முயன்று பார்க்கிறேன்
தெரியாமல் விஸ்டா உள்ள கணிணி ஒன்று வாங்கி விட்டு அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறேன். எனது வேலையின் உயிர்நாடி Outlook Express..
இதை விஸ்டாவில் இயங்க ஏதாவது வழி உள்ளதா??

ஓவியன்
11-06-2009, 06:44 PM
தேந்தமிழ், தமிழ் மன்றத்தில் என்றுமே சொந்த ஆக்கங்களுக்கு முன்னுரிமை வழங்கப் படுவதே வழமை....


20)மற்ற இடங்களிலிருந்து காப்பி & பேஸ்ட் செய்வதை தவிர்க்கவும். அதே நேரம், முக்கியமான தகவலாக இருப்பின், தகவலின் சாரத்தைக் கொடுத்து அந்த தளத்தின் சுட்டியை கொடுத்தல் வேண்டும், குறைந்தபட்சம் தளத்தின் பெயரை குறிப்பிட்டு நன்றி சொல்ல வேண்டும். அப்படி செய்யாத பதிவுகளை முன் அறிவிப்பின்றி நீக்குவதற்கு மன்ற பொறுப்பாளர்களுக்கு முழு அனுமதி உள்ளது.

21)மற்ற தளங்களில் உள்ள மற்றவர்களுடைய பதிவுகளை தம்முடைய பதிவாக இங்கு வெளியிடுவது தவறு. அவ்வாறு செய்பவர்களுக்கு எச்சரிக்கை புள்ளி வழங்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த பதிவு சூர்யா கண்ணன் (http://suryakannan.blogspot.com/) என்பவரது வலைத்தளத்தில் வெளியிடப் பட்டிருக்க அதனை அவரது அனுமதியின்றி இங்கே பிரதி செய்வது மன்ற விதிகளுக்கு முரணானது....

இவ்வாறான தவறான நடைமுறை இனி வரும் காலங்களில் உங்களிடமிருந்து வராதென நான் நம்புகிறேன்...

விகடன்
13-06-2009, 04:48 PM
பயந்தரு தகவல்தான். இருந்தாலும் கொப்பி செய்யப்பட்ட ஆக்கங்களிற்கு, அவை எடுக்கப்பட்ட மூல இடத்தை குறிப்பிட்டு பதிவதுதான் அதன் உரிமையாளரிற்கும் மீள்பதித்தவரிற்கும் பெருமை.