PDA

View Full Version : என்னுடன் சிரிக்கலாம் வாங்க...3மதுரை மைந்தன்
08-06-2009, 10:26 AM
ஒரு பள்ளியில் ஆசிரியை பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு எப்படி பெயரிட்டிருக்கிறார்கள் என்று அறிய " பசங்களா ஒவ்வொரத்தரா முதல்ல உங்க அப்பா பெயர் அப்பறம் உங்க பெயரை சொல்லுங்க"

முதல் பையன்: எங்க அப்பா பெயர் கிருஸ்ணப்பா என் பெயர் கிருஸ்ணா

இரண்டாவது பையன்: எங்க அப்பா பெயர் ராஜப்பா என் பெயர் ராஜா

மூன்றாவது பையன்: எங்க அப்பா பெயர் பழனியப்பா என் பெயர் பழனி

ஆசிரியைக்கு அலுத்து விட்டது. என்னது அப்பா பெயரிலிருந்து அப்பாவை நீக்கி விட்டு பையன்களுக்கு பெயர் வைக்கிறாங்களே என்று.

அடுத்த பையன்: எங்க அப்பா பெயர் ஜான்.

ஆசிரியைக்கு ஆர்வம் வந்து " சொல்லு உன் பெயர் என்ன?"

பையன்: என் பெயர் ஜான்சன்
___________________________________________________________________________________________________________________________


ஒரு வக்கீல் குமாஸ்தாவிடம் வழக்கை பதிய ஒருவர் வந்தார்.

குமாஸ்தா: உங்க கொள்ளு தாத்தா தாத்தா அப்பா இவர்களொட பெயர்களை சொல்லுங்க

வந்தவர்: எங்க கொள்ளு தாத்தா பெயர் அலகாபாத் தாத்தா பெயர் அகமதாபாத் அப்பா பெயர் ஹைதராபாத்

குமாஸ்தா: என்னது இப்படி ஊர்கள் பெயரா சொல்றீங்க

வந்தவர்: நீங்க மட்டும் தமிழ்ல பழனி திருப்பதி சிதம்பரம்னு வைக்கும் போது நாங்க ஊர்கள் பெயர்களை வைக்க கூடாதா?

__________________________________________________________________________________________________________________________________________________________________

இரு நண்பர்கள் தெருவில் சந்தித்துக் கொண்டனர்.

" எனக்கு ரொம்ப உடம்பு சரியில்லை டாக்டரை பார்க்க போயிட்டிருக்கேன்" என்றார் ஆரோக்கியசாமி"

" எனக்கு மார்பல அடிக்கடி வலி வருது. டாக்டரை பார்க்க நானும் போயிட்டிருக்கேன்" என்றார் இருதயசாமி
______________________________________________________________________________________________________________________________________________________________________

கார்கில் சண்டையின் போது இந்திய பாக்கிஸ்தான் துருப்புக்கள் எதிர் எதிர் குழிகளில் பதுங்கி இருந்தனர். யாருடய தலை தென்படுகிறதோ அவர் சுடப்படுவார் என்ற நிலை. இந்திய சர்தார்ஜி கர்னல் யோசித்தார். பாகிஸ்தானில் பரவலாக உள்ள பெயர்களை வைத்து "ஏய் அப்துலஇ ஏய் கரீம் ஏய் முகமது" என்று கூப்பிட ஒவ்வொருவராக எழுந்து யார் தன்னை கூப்பிடுகிறார்கள் என பார்க்க சுடப் படுகிறார்கள். இதை பார்த்த பாகிஸ்தான் கர்னல் பரபல சர்தார்ஜி பெயர்களை தானும் கூப்பிட்டு சுடலாம் என்று " ஏய் லால் சிங்" என்று கூப்பிட்டார். லால் சிங் புத்திசாலி. குழிக்குள்ளிருந்தே " யார் என்னை கூப்பிட்டது" என்று கேட்க பாக் கர்னல் எழுந்து " நான் தான்" என்று சொல்ல அவர் சுடப் பட்டார்.
_____________________________________________________________________________________________________________________________________________________________________

நோயாளி நர்ஸிடம்: "இந்த நர்ஸிங் ஹோம் பெயர் பலகையில் டாக்டர் பெயரே இல்லை?"

நர்ஸ்: எங்க டாக்டர் பெயர் போன டாக்டர்"
_________________________________________________________________________________________________________________________________________________________________________

நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தார் ஒருவர். அங்கு நண்பர் தனது மனைவியை "டார்லிங் ஹனி ஸ்விடி என்றெல்லாம் கூப்பிட்டார். நண்பரிடம் " என்ன உங்க மனைவி மேல ரொம்ப பிரியம் போலிருக்கு" என்றார் இவர். நண்பர் உடனே " போங்க நீங்க ஒண்ணு அவ பெயர் மறந்து போய் 10 வருசம் ஆயிடுச்சு" என்றார்.
________________________________________________________________________________________________________________________________

நண்பரிடம் கேட்டார் " உங்களுக்கு எத்தனை பசங்க?" . நண்பர் சொன்னார் " இரண்டு பசங்க. மூத்தவன் பெயர் ரோலக்ஸ் இரண்டாமவன் பெயர் டைமெக்ஸ்". " என்ன வாட்ச் பெயரா வச்சிருக்கீங்க?" என்றதற்கு நண்பர் சொன்னார் " இரண்டு பேரும் மணியான பசங்க அதனால தான்."
___________________________________________________________________________________________________________________________________________________________

அமரன்
08-06-2009, 08:38 PM
ஹஹ்ஹ்ஹ்ஹா.. பேர் சொல்லும் சிரிப்புகள்.

ஜான்சன், கர்னல், பேர்போன டாக்டர் என ஆளாளுக்கு வஞ்சனை இல்லாமல் விருந்து வைக்கிறாங்கப்பா.

சந்தடி சாக்கில சில உண்மைகளும் வந்து விழுந்து விட்டன.

நன்றி மதுர.
மல்லிகையாக மனம் மணம் வீசக் காரணமாகி விட்டீங்க.

(பக்கச் சீரமைப்பில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் மதுர. படிக்கக் கஷ்டமாக இருந்துச்சு)

அன்புரசிகன்
09-06-2009, 03:31 AM
இராணுவத்தினரின் நகைச்சுவை ரொம்ப சூப்பர்........ தொடருங்கள்...

மதுரை மைந்தன்
09-06-2009, 03:52 AM
ஹஹ்ஹ்ஹ்ஹா.. பேர் சொல்லும் சிரிப்புகள்.

ஜான்சன், கர்னல், பேர்போன டாக்டர் என ஆளாளுக்கு வஞ்சனை இல்லாமல் விருந்து வைக்கிறாங்கப்பா.

சந்தடி சாக்கில சில உண்மைகளும் வந்து விழுந்து விட்டன.

நன்றி மதுர.
மல்லிகையாக மனம் மணம் வீசக் காரணமாகி விட்டீங்க.

(பக்கச் சீரமைப்பில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் மதுர. படிக்கக் கஷ்டமாக இருந்துச்சு)

பின்னூட்டம் போட்டு என்னை ஊக்குவிற்பதற்கு நன்றி அமரன். பக்க சீரமைப்பு செய்துள்ளேன்.

மதுரை மைந்தன்
09-06-2009, 03:53 AM
இராணுவத்தினரின் நகைச்சுவை ரொம்ப சூப்பர்........ தொடருங்கள்...

பின்னூட்டம் போட்டு என்னை ஊக்குவிற்பதற்கு நன்றி அன்புரசிகன்.