PDA

View Full Version : தமிழ்சினிமா நடிகர்கள் ஐ.பி எல் அணிகளின் உரிமையாளர்களாக இருந்தால் !Honeytamil
07-06-2009, 12:48 PM
/*இந்த பதிவு முழுக்க முழுக்க கற்பனையே... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல.. யாரேனும் புண்பட்டால் தயவு செய்து மன்னிக்கவும் */

அகில உலகத்தையே கலக்கும் ஐ.பி.எல் பற்றிதான் இப்போ ஊரெங்கும் பேச்சு. பல நடிகர்கள் இதில் ஓனர்களாக இருபதால் அவர்களுக்கும் நல்ல பப்ளிசிட்டி. இதனால் நம் தமிழ் நடிகர்கள் சிலரும் புதிய அணிகளை உருவாக்கினால் எப்படி இருக்கும் என ஒரு கற்பனை கலாட்டா.

http://i433.photobucket.com/albums/qq52/honeytamil/kamal.jpg

பத்து வேடத்தில் நடித்து சாதனை செய்தாயிற்று அடுத்து என்ன செய்யலாம் என யோசித்த கமல்ஜி இந்த அணியை வாங்கியிருக்கிறார்.... அது சரி அது என்ன கமல் லெவன் ஹாலிவுட் என்றுதானே கேட்கிறீர்கள்.. காரணம் இருக்கிறது... சச்சின், யுவராஜ், டோனி, கவாஸ்கர் என கமல்ஜியே பதினொரு வேடத்தில் களமிறங்கி விளையாடுகிறார்.. இதற்காக ஆஸ்த்ரேலியாவில் இருந்து சிறப்பு மேக்கப் நிபுணர்கள் வர இருக்கிறார்கள். இந்த கமல்ஜியின் அதிரடி புராஜெக்டினால் ஒட்டுமொத்த ஹாலிவுட்டும் அதிர்ச்சி அடைந்திருக்கிறது.

http://i433.photobucket.com/albums/qq52/honeytamil/rajini.jpg

நம்ம தலைவரும் ஒரு அணியை வாங்குகிறார். மும்பை எந்திரன்ஸ் என பெயர் வைக்கபட்டுள்ளது. டீம் கோச்சாக நியமிக்கப்பட்டுள்ள இயக்குனர் ஷங்கரின் ஐடியா படி மும்பை விஞ்ஞானி ஒருவரின் உதவியில் 11 ரோபோக்கள் உருவாக்கப்பட உள்ளன. மனிதர்களை வைத்து விளையாடினால் தோற்பதற்கு வாய்பிருப்பதால் இந்த ரோபோக்களை களமிறக்குகின்றனர். சிறப்பு ப்ரோக்ராம் செய்யப்பட்ட இந்த எந்திரன்ஸ், 20 ஓவர்களில் சுமார் 1000 ரன்கள் வரை அடிக்கும் என எதிர்பார்க்கபடுகின்றது.

http://i433.photobucket.com/albums/qq52/honeytamil/trajendar.jpg

அன்னிய ஆதிக்கத்தின் அடையாளமே இந்த கிரிகெட் என சாடிய டி.ஆர் சார், ஒரு அணியை உருவாக்கி தமிழ்ர்களின் பெருமையை நிலை நாட்ட உள்ளார். ஆம் கிரிகெட் பேட், மற்றும் பால் வைத்து விளையாட கடும் எதிர்ப்பு தெரிவித்த அவர்.... தென்னை மட்டை வைத்து பேட் செய்யவும், இளனியை வைத்து பௌலிங் செய்யவும் மனு செய்துள்ளார். இது குறித்து அவர் கொடுத்த பேட்டியில் " டேய்.... இந்த ஐ.பிஎல் மேட்சி ரொம்ப போரு...அத பாத்து என் தங்கச்சி கண்ல கண்ணீரு..... பேட் பால் கண்டுபிடிச்சவன் யாரு...அத மாத்த போறேண்டா இந்த டி.ஆரு..... " என உணர்ச்சி வசப்பட்டு சொடுக்கு போட்டு கொண்டே கூறினார்.

http://i433.photobucket.com/albums/qq52/honeytamil/captain.jpg

எல்லோரும் இறங்கும்போது நம்ம கேப்டன் சும்மா விடுவாரா.... கேப்டன் டாப் டென் கிங்க்ஸ் என்ற அணியை வாங்கியிருக்கிறார். இதில் கேப்டனுடன் டாப் டென் ப்ளேயர்ஸ்களின் மாதிரிகள் விளையாட உள்ளனர். அதாவது கருப்பு டெண்டுல்கர் , சிகப்பு பிரைன் லாரா, மாநிறம்..........

http://i433.photobucket.com/albums/qq52/honeytamil/vadivelu.jpg

கேப்டன் எது செய்தாலும் அவருக்கு போட்டியாக இருப்பேன் என வைகை புயல் வடிவேலு அண்ணனும் பல நாளாய் கிளப்பாமல் கிடந்த தன் அதிரடி குரலை தூசு தட்டி கிளம்பி விட்டார். வைகை வாரியர்ஸ் மதுரை என அணியை உருவாகிய அவர் கூறுகையில்...."அண்ணே மதுரை பக்கம் மன்னார்குடி பக்கம் நமக்கு ரசிகர்கள் ஜாஸ்திண்ணே... அவிங்கள்ள எவ்ளோ அடிச்சாலும் தாங்குற ஒரு 11 பேரை செலக்ட் பண்ணியிருக்கொம்னே...அவரு எந்த மேட்சில விளையாண்டாலும் எதிர்த்து நிப்போம்னே..." என நான் ஸ்டாப்பை பொரிந்து தள்ளினார்.

http://i433.photobucket.com/albums/qq52/honeytamil/jkr.jpg

அண்ணன் ஜே.கே.ரித்தீஷின் "ராமாநாதபுரம் ரணகள ரைடர்ஸ்" அணியில் விளையாடவே அனைத்து வீரர்களும் விருமபுவதாய் தகவல். இந்த அணியின் சிறப்பம்சமே .... விளையாடும் அனைத்து ப்ளேயர்ஸ்களுக்கும் வித வித கலர் ஜெர்சிக்கள்....விளையாடும் ஒவ்வொரு பாலுக்கும் ஆயிரம் ஆயிரமாக கட்டுகள் அள்ளி அள்ளி கொடுக்கப்படுமாம்.. தோத்தாலும் ஜெயிச்சாலும் அண்ணன் வைய்யவே மாட்டாராம். சிரிச்சிகிட்டே பிரியாணி பொட்டலம் கொடுப்பாராம்.

நன்றி : வலைமனை

நேசம்
07-06-2009, 01:24 PM
இதிலே டீ ஆர் அணிதான் டாப்.ஆனால் ரசிகர்கள் ரித்திஷ் அணிக்கு அதிகமாக இருக்கும்.பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

பாலகன்
07-06-2009, 02:28 PM
வைகை வாரியர்ஸ். அப்படியே ஜெயிச்சிட்டாலும்.

அனைத்து தலைப்புக்களும் நன்றி. வித்தியாசமா யோசிக்கிறீங்களே நண்பரே. ஒருவேளை மதுரையில ரூம் போட்டு யோசிச்சீங்களோ? :)

பரஞ்சோதி
14-06-2009, 06:11 AM
நம்ம அணி டி.ஆர். டெரர் கைய்ஸ் தான்.

அப்போ அப்போ வெயிலுக்கு இதமாக இளநீர் கிடைக்குமுல்ல.

இதனை உருவாக்கியவரின் கற்பனைக்கு என் பாராட்டுகள்.

நூர்
14-06-2009, 06:46 AM
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

சிவா.ஜி
14-06-2009, 06:54 AM
இதில் புகைப்படம் எங்கே இருக்கிறது? இது நகைச்சுவைப் பகுதியில் இருந்தால் நன்றாக இருக்கும். கற்பனை அருமை. பகிர்வுக்கு நன்றி தேன் தமிழ்.

அமரன்
14-06-2009, 05:15 PM
கமல் : டெக்னோலொஜி அது இதுன்னு புருடா விட்டாலும், பத்துப் பேருக்கு மாஸ் மாட்டி விட்டு திருகுதாளம் செய்றதை எப்படித்தான் கண்டு பிடிக்கிறாங்களோ.

விவேக் : அடப்பாவிங்களா அவனவன் பட்டினி கிடந்து, மணிக்கணக்கா மேக்கப் போட்டு, வெயில் படுத்து, கண்ணாடியைப் பாத்து தன் மூஞ்சில தானே கரி பூசி, கஷ்டப்பட்டு வேஷம் கட்டினால் இப்படிக் காமெடி பண்ணிட்டியளே. எத்தனை பேர் வந்தாலும் உங்களைத் திருத்த முடியாதுடா.

நல்ல கற்பனை. ஒவ்வொருத்தரதும் பிரத்யேகங்களை வைத்துக் கட்டப்பட்ட சிரிப்பூ.

புகைப்படக் களஞ்சியத்திலிருந்து நகைச்சுவைப் பகுதிக்கு நகர்த்தப்பட்டது சிவா.
நன்றி.