PDA

View Full Version : சிறிலங்கா மீது விசாரணை நடத்துவதற்கு ஐ.நா.வில் இந்தியா மீண்டும் எதிர்ப்பு



புதியவன்
05-06-2009, 05:32 PM
இலங்கையின் தமிழர் பகுதிகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்தியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியா, இந்த விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 11 ஆவது கூட்டத்தொடர் கடந்த 2 ஆம் நாள் தொடங்கி எதிர்வரும் 19 ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கையின் தமிழர் பகுதிகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறிலங்கா தொடர்பாக கடந்த 25, 26 ஆம் நாட்களில் நடைபெற்ற சிறப்புக் கூட்டம் வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்திருந்தார்.

நவநீதம்பிள்ளையின் இந்த கருத்தை இந்திய தூதுவர் கோபிநாதன் ஆச்சம்குலங்காரே எதிர்த்ததுடன் அவர் அங்கு தனது கருத்தையும் முன்வைத்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பாக நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தை நவநீதம்பிள்ளை வரவேற்றிருக்கிறாரே தவிர அன்றைய நாள் சிறிலங்காவுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட தீர்மானத்தை அவர் வரவேற்கவில்லை. இது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு சபைக்கு உகந்தது அல்ல என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்த கூட்டத்தொடரில் இன்று நடைபெற்ற அமர்வில் செக் குடியரசு, பிரான்ஸ், பிரித்தானியா, ஜப்பான், தென்கொரியா, மெக்சிக்கோ போன்ற நாடுகளும் இலங்கையின் தமிழர் பகுதிகளில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் முறையாகக் கண்காணிக்கப்படவில்லை என்று இந்த நாடுகள் தெரிவித்துள்ளன.

எனினும் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாது சிறிலங்கா அரசாங்கத்தை காப்பாற்றிவிடும் முயற்சிகளிலேயே இந்த கூட்டத்தொடரில் காய் நகர்த்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக ஜப்பான், தென்கொரியா, மெக்சிக்கோ போன்ற நாடுகளே சிறிலங்கா தொடர்பான அனைத்துலக விசாரணையை வலியுறுத்த தொடங்கியுள்ள நிலையில் இந்தியா தொடர்ந்தும் அதற்கு முட்டுக்கட்டை போட்டுவருவது மனித உரிமை ஆர்வலர்களுக்கு இடையே கடுமையான விசனத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், நவநீதம்பிள்ளையின் இந்த கருத்தை அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவும் வரவேற்று உரையாற்றியிருந்தன.

நன்றி புதினம்

பாலகன்
05-06-2009, 07:01 PM
இன்னும் உலக நாடுகள் மீது நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது. இந்தியாவும் இந்த விடயத்தில் தன்நிலையை மாற்றிக்கொன்டால் நல்லது

praveen
06-06-2009, 04:04 AM
இரண்டு பேரும் சேர்ந்து திருட்டு வேலை செய்கையில், ஒருவன் மட்டும் பிடிபட்டால் இன்னொருத்தன் தானும் பிடிபடுவோமே என்ற அச்சத்தில் சுட்டிக்காட்டப்படுபவனை யோக்கியன் என்று சொல்வானே அது போன்றே இருக்கிறது.

இலங்கை அரசாங்கம் இப்போது, பிரிட்டன் தொடங்கி அமெரிக்கா வரை இதுவரை தந்த ஆயுதங்களுக்கு நண்றி தெரிவித்து அறிக்கை விட்டு குட்டையை குழப்புகிறது.

பிச்சைக்காரனிடம் பிச்சை எடுத்த கதையாக பாகிஸ்தானிடம் ஆயுதங்கள்+விமானிகள் பிச்சை வாங்கி இந்த போரில் பயன்படுத்தியிருக்கிறது. அந்த பாகிஸ்தான் விமானிகளும் கண்மண் தெரியாமல் தாக்கியே பெருத்த உயிர்சேதம் விளைவித்திருக்கிறார்கள்.

இந்த லட்சனத்தில் அய்.நா சபையில் தமிழர்க்கு ஆதரவான (தமிழனுக்கு என்று தனி நாடு இல்லாத பட்சத்தில்) கருத்து அம்பலம் ஏறாது.

அமரன்
06-06-2009, 08:31 AM
இந்தியாவின் போரை நான் முன்நின்று நடத்தினேன் என்றும் போருக்கு உதவிய நாடுகளைப் பட்டியலிட்டு நன்றி பாராட்டியதையும் சில நாடுகள் அழுத்தம் தருகின்றன என்று சொல்லி எந்த நாடுகளெனச் சொல்லாமல் விட்டதும் மகிந்தாவின் ராசதந்திரம். இந்த தந்திரத்துக்கு எத்தனை பேர் பலியோ?