PDA

View Full Version : அலற வைக்கும் ஆபரேஷன் முத்துமாலை!--அதிர்சியில் இந்தியாதூயவன்
05-06-2009, 04:40 PM
ஆபத்து எப்போதும் தூரத்தில்தான் இருக்கும் என்பதில்லை. நம் நிழலுக்கு அடியிலேகூட இருக்கக் கூடும். உதாரணத்துக்கு... சீனா!

'சீன ராணுவம் வலுவாக வளர்ந்து வருகிறது. எல்லை-யில் பெருமளவில் ராணுவத்தைக் குவித்து வரு-கிறது. பாகிஸ்தானைவிட சீனா பெரிதும்நமக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதைச் சமாளிக்க நமது விமானப் படையிலும் அதிநவீன விமானங்கள்வழங்கப் பட வேண்டும்' என்று அலறியவர் இந்தியாவின் விமானப் படை தலைமை மார்ஷல் பாலி ஹோமி மேஜர்.
அமெரிக்காவுக்கு இணையான ராணுவ மற்றும் பொருளாதார பலத்துடன் சீனா உருவாகி வருகிறது என்று அமெரிக்க உளவுத் துறையின் சமீபத்திய அறிக்கை சொல்கிறது. அமெரிக்காவையே சீனா பயமுறுத்துகிறது என்றால், இந்தியாவுக்கு?

சமீபத்தில் ஹைனன் தீவில் அணு ஆயுத நீர் மூழ்கிக் கப்பல் தளத்தை சீனா அமைத்தது. சீனப் பத்திரிகை ஒன்று இது குறித்த தகவலைப் பெருமையாக வெளியிட்டபோது, இந்தியாவுக்குப் பேயறைந்தது போல் இருந்தது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் தளத்தில், அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் 20 கப்பல்-களைமறைத்து வைக்க முடியும்.

உலக அளவில் அணு ஆயுதம் மற்றும் பயங்கர ஆயுதங்களை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவிஞ் ஞானிகளின் கூட்டமைப்பு (ஃபெடரேஷன் ஆஃப் அமெரிக்கன் சயின்டிஸ்ட்) எடுத்த செயற்கைக்கோள் புகைப் படத்தில் இந்தியாவுக்கு இன்னும் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. டெல்லி உட்பட இந்திய நகரங்களைக்குறி வைத்தபடி சீனா ஏவுகணைகளை நிறுவியிருப்பது தெரிய வந்திருக்கிறது. சீனாவின் கிங்கை மாகாணத்தில் டெலிங்கா அருகே 2,000 சதுர கி.மீ பரப்பளவில் கிட்டத் தட்ட 60 ஏவுகணைத் தளங்களை சீனா அமைத் துள்ளது.

http://www.fas.org/programs/ssp/nukes/_images/Hainan-full.jpg

ஒரு பட்டனைத் தட்டினால் போதும், ஒரு சில நிமிடங்களில் டி.எஃப்-21 ரக ஏவுகணைகள் விண்ணில் சீறிப் பாய்ந்து தாக்கும். இந்த ஏவுகணைகளில் அணு குண்டுகளையும் ஏற்றி அனுப்ப முடியும்!

தனது நாட்டுக்குள் இருந்து இந்தியாவைக் குறி-வைப்பதற்கு அடுத்ததாக, அண்டை நாடுகளுக்குள் புகுந்து, தனது தளங்களை நிறுவி வருகிறது சீனா. இதில் முக்கியமானவை, துறைமுகங்கள். சரக்குகளைக் கொண்டுசெல்வதற்காக என்று நொண்டிச்சாக்கு சொன்னா-லும், துறைமுகம் அமையும் இடங்களில் எல்லாம் விரைவில் கடற்படைத் தளத்தை சீனா அமைக்கும் என்று தகவல். உலக அளவில் கச்சா எண்ணெயை அதிக அளவில் இறக்கு-மதி செய்யும் இரண்டாவது பெரிய நாடு சீனா.

http://www.china-briefing.com/news/wp-content/uploads/2009/03/string-of-pearls1.jpg

வளைகுடா நாடுகளில் இருந்து பெருமளவில் எண்ணெயைக் கப்பல் மூலம் கொண்டுசெல்கிறது. இந்தக் கப்பல்களின் பாதுகாப்புக்கு எனக் கூறிக்கொண்டு பாகிஸ்-தானில் கவுடார், வங்கதேசத்தில் சிட்டகாங், மியான்மரில் சிட்வி, இலங்கையில் ஹம்பன்தோடா ஆகிய இடங்களில் துறைமுகங்களை அமைத்துள்ளது சீனா.

இந்தத் திட்டத்துக்கு சீனா வைத்துள்ள பெயர், 'முத்து மாலை'. முத்துக்களைக் கோத்தால் முத்துமாலை கிடைப்பது போன்று, இந்தத் துறைமுகங்களை இணைப்பதுதான் சீனாவின் பகீர் பாதுகாப்புத் திட்டம். கண்ணை மூடிக்கொண்டு யோசித்தால், இந்தியாவைச் சுற்றி பாகிஸ்தான், இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளில் சீனாவின் இரும்பு வளையம் அமைக்கப்பட்டு-விட் டது. ஒருவிதமான சுழலில் சிக்கி இருக்கிறது இந்தியா.

சீனாவின் எண்ணெய்க் கப்பல்கள் செல்லும் வழிக்கும், வங்க தேசம் மற்றும் மியான்மர் துறைமுகத்துக்கும் சம்பந்தமே இல்லை. இதனால், இந்தத் துறைமுக அபி விருத்திப் பணி மேற்கொள்வது இந்தியா-வுக்கு நெருக்கடி தருவதற்காகத்தான் என்று சந்தேகிக்கப்படுகிறது.

http://www.topnews.in/files/China-Nepal-89258.jpg

தவிர, சீனா கமுக்கமாக இந்திய எல்லையில் இது-வரை கிட்டத்தட்ட 3 லட்சம் வீரர்களைக் குவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் சீனா படுகில்லாடி. ஆனால், நாமோ படு லேட்! இப்போதுதான் அலர்ட் ஆன இந்தியா, இன்னும் சில ஆண்டுகளில் சீன எல்லைப் பகுதியில் பாதுகாப்புக்காக இரண்டு புதிய பிரிவுகளைத் தொடங்கி, மொத்தம் 40 ஆயிரம் வீரர்-களை அனுப்ப உள்ளது. பல்வேறு ராணுவ அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள என அதிரடியாக 5 ஆயிரம் கோடி ரூபாயை இந்தியா செலவிட உள்ளது.

இந்தியாவை இவர்கள் எதிரியாக நினைக்க என்ன காரணம்?

இந்தியா - சீனா இடையே 3,500 கி.மீ-. நீளம் எல்லை உள்ளது. இதில் சீனா - காஷ் மீர் பகுதியில் 38 ஆயிரம் சதுர கி.மீ. தூரத்தை ஆக்கிர-மித்து வைத்துள்ளது. இந்தியா-வின் கிழக்குப் பகுதியில் 90 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பைத் தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடுகிறது. அதாவது அருணாச்சலப் பிரதேசம்... சீனாவுடையதாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சி பெற்று வந்த அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த கணேஷ் கோயு உள்ளிட்ட பயிற்சி அதிகாரிகள் சீனா செல் வதாக இருந்தது.

அனைவருக்கும் விசா கொடுத்த சீன தூதரகம், கணேசுக்கு மட்டும் விசா தரவில்லை. இதற்கு அவர்கள் கூறிய காரணம், கணேஷ் ஒரு சீனப் பிரஜை. சொந்த நாட்டுக் குள் செல்ல விசா தேவை இல்லை என்றது. இதனால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்து, கடைசியில் அந்தப் பயணத்தையே இந்தியா ரத்து செய்தது.

கணேஷ் என்ற தனிப்பட்ட இளைஞ-னுக்கு ஏற்பட்டதல்ல அந்தச் சிக்கல். அது மொத்த இந்தியனுக்கும் வரப்போகிற ஆபத்து.

''பாகிஸ்தானால் ஆபத்து'' என்று சும்மா பேசு பவர்கள், அக்கறையுடன் அலற வேண்டியது இப்போது சீனாவையும் பார்த்துதான்

சீன படைத்துறை புகைப்படங்கள்

http://cache.daylife.com/imageserve/0bgYgTM7b68x9/610x.jpg
http://cache.daylife.com/imageserve/0aOMbcjaLGfZg/610x.jpg
http://cache.daylife.com/imageserve/06fM195gRC7E2/610x.jpg
http://cache.daylife.com/imageserve/0gou5vefoT6JY/610x.jpg
http://cache.daylife.com/imageserve/05U6ftS9JPbu4/610x.jpg
http://cache.daylife.com/imageserve/0gc4bj250J2Zi/610x.jpg

நன்றி : TSN

அமரன்
05-06-2009, 05:47 PM
எதையும் சாதுர்யமாக எதிர்கொள்ளும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு. சீனா வம்புச் செய்தால் அதனை முறியடிக்க தேவையானதை செய்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

கா.ரமேஷ்
06-06-2009, 07:01 AM
நமது ராணுவமும் சாதரனமல்ல பாதுகாக்கபடுவோம் என் நம்புவோம்....!

இப்படி ஒரு அச்சுறுத்தல் வரும் வரை என்ன செய்கிறார்கள் எனத்தான் புரியவில்லை...? தேவையானதை விட்டுவிட்டு தேவையில்லத பல விஷயங்களில் தலையிட்டு கொண்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

ஓவியா
06-06-2009, 11:55 PM
இதான்யா டெக்னோலோஜி.... என்ன தந்திரமாக கையாளுகிறார்கள். :redface:

இந்தியா மீது எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கின்றது, எல்லா பலமும் அதிக அளவிலே இருந்தாலும்...

அன்மைய மும்பாய் தீவிரவாத விபத்து, இந்தியாவில் எத்தனை ஓட்டைகள் இருக்கின்றன என்று கொஞ்சம் அதிகமாகவே சுட்டிக்காட்டிவிட்டன.

சீனாவின் உயர்வு, ஆசியாவிற்க்கு ஒரு மிரட்டலாக இல்லாமல் இருந்தால் சரி.

நல்ல சுட்டி, புதிய விடங்களை அறிந்துக்கொண்டேன்.

எழுதியவருக்கும் இங்கு வழங்கியவருக்கும் நன்றிகள்.


......................................................................................

அந்த வளயத்தை மலேசியா சுற்றி கொண்டு செல்வதினால் நான் லண்டனில் செட்டல் ஆவதே சிறந்தது.... :lachen001::lachen001:

மன்மதன்
10-06-2009, 02:00 PM
சமீபத்தில் விகடனில் வெளியான ஒரு கட்டுரை
இலங்கையில் சீனா கால் பதித்ததே, இந்தியாவுக்காகத்தான்
என்றும், ஏன் என்றும் விலாவரியாக எழுதியிருந்தார்கள்.

ஓவியன்
10-06-2009, 03:11 PM
ஊசி போவதையெல்லாம் பார்ப்பவர்கள், உலக்கை போவதையும் பார்த்து கண்காணித்தால் சரி... :rolleyes:

அய்யா
11-06-2009, 03:40 AM
இவ்விடயத்தில் இந்தியா மெத்தனமாக இருத்தலாகாது.

அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தை இடதுசாரிகள் எதிர்த்ததன் காரணம் இப்போது புரிந்திருக்குமே.

நாட்டுநலனுக்கு வேட்டு வைக்கும் சீன அடிவருடிகளின் ஆதிக்கம் கடந்த தேர்தலில் வீழ்ந்துவிட்டது.

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற Aவகையில், இந்தியா அமெரிக்கச் சார்புநிலை எடுக்கவேண்டும்.

சுகந்தப்ரீதன்
11-06-2009, 05:11 AM
அந்த வளயத்தை மலேசியா சுற்றி கொண்டு செல்வதினால் நான் லண்டனில் செட்டல் ஆவதே சிறந்தது.... :lachen001::lachen001:உண்மைதான் அக்கா... அந்த வளையம் மலேசியாவை சுற்றிக்கொண்டு மட்டும் செல்லவில்லை... அதனோட ஆணிவேரே அங்க இருக்குற ஒரு தமிழரடோ கையிலதான் இருக்குதுன்னு, "அழிவின் விளிம்பில் தமிழினம்; முற்றுகைக்குள் இந்தியா" (http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=485) - என்கிற கட்டுரை புத்தகத்தில் சொல்லியிருக்காங்க அக்கா.. நீங்களே கொஞ்சம் படித்துப்பாருங்கள்..!!

ஓவியா
11-06-2009, 05:18 PM
நன்றி சுகி, ஆனால் என்னால் ஏனோ அதை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை...

//ஓவியா, you do not have permission to access this page. This could be due to one of several reasons//

தலைவர், எனக்கும் வழி விட்டா படிக்கலாம்!! ;)

அக்னி
11-06-2009, 07:39 PM
எங்கும் எதிலும் சீனத்தின் பெயர் தவிர்க்க முடியாததாகிவிட்டது.
இராணுவ வலிமையைச் சீனம் பெருக்குவதில் ஆச்சரியமில்லை.
அதனை எதிர்பார்க்காமல் உலகம் இருந்தாற்தான் ஆச்சரியம்.


அந்த வளயத்தை மலேசியா சுற்றி கொண்டு செல்வதினால் நான் லண்டனில் செட்டல் ஆவதே சிறந்தது.... :lachen001::lachen001:
யாருப்ப்பா அது...
அக்காவ ரவுண்டப் பண்றது... :sauer028:
(மின்னூல் மின்னஞ்சலில் வந்துகொண்டிருக்கின்றது)

இன்பா
12-06-2009, 04:07 AM
தென் இந்திய எல்லையில் சீனா தனது கோட்டையை நிறுவ யோசிக்கும் போது புலிகள் அதற்கு இடையூறாக இருந்தார்கள், அவர்களை அழிக்க ஏறாளமான ஆயுதங்கள்/பயிற்சிகள் கொடுத்து அழித்துவிட்டார்கள்.

எல்லா வல்லமை படைத்தும் இந்தியா(அரசியல் தலைவர்கள்) எப்போதும் சில விடயங்களில் கவனக்குறைவாக இருந்துவிடுகிறார்கள். இப்படி கவனக்குறைவால் தான் முன்பு சீனாவுடன் தோற்க நேறிட்டது.

பாதுகாப்பு விடயத்தில் இந்தியா இன்னும் அதிகமாக முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது இன்றியமையாதது. தனிப்பட்ட விரோதங்களை தீர்த்துக்கொள்ள காட்டும் அக்கரையை விட பாதுக்காப்பு விடயத்தில் அதிக அக்கரை செலுத்த வேண்டும். நாம் போருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைவந்துக்கொண்டு வருவது சந்தோசம் என்றாலும் அதை சீர்குலைக்க அண்டை நாட்டு சக்திகள் சமயம் காத்துக்கொண்டிருக்கிறன.

அத்தனையும் மீறும் சவால்களை சாமாளித்து 2020 ல் பலம்மிக்க வல்லரசாக திகழும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.

அன்புரசிகன்
12-06-2009, 04:41 AM
அத்தனையும் மீறும் சவால்களை சாமாளித்து 2020 ல் பலம்மிக்க வல்லரசாக திகழும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.
நீங்கள் யாரை சொல்கிறீர்கள்...?

கிண்டலுக்காக அல்ல... 2010 இலிருந்து 2020 ஆகிவிட்டது...

நீங்கள் விரும்பினாலும் அரசியல்வாதிகள் விடமாட்டார்கள். காரணம் வல்லரசாகிவிட்டால் அவர்களுக்கு உழைப்பிருக்காது...

இன்று செய்தியில் பார்த்தேன். சீனா இந்தியாவை எல்லைப்பிரச்சனை சம்பந்தமாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளதாம்...

இன்பா
12-06-2009, 11:40 AM
இன்று செய்தியில் பார்த்தேன். சீனா இந்தியாவை எல்லைப்பிரச்சனை சம்பந்தமாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளதாம்...

எந்த செய்தியில்...?

ஓவியன்
12-06-2009, 12:01 PM
அத்தனையும் மீறும் சவால்களை சாமாளித்து 2020 ல் பலம்மிக்க வல்லரசாக திகழும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.

இது என்னவோ எனக்கு ஐபில் 20/20 ஐ சொல்லுற மாதிரி இருக்கு..!! :rolleyes:

அன்புரசிகன்
12-06-2009, 02:04 PM
எந்த செய்தியில்...?
ஐ சனல் (ரூபவாகினி) இல் சொன்னார்கள். (இலங்கை தேசிய ஒளிபரப்பு)
நேற்றும் இந்திய செய்தி (மக்கள் தொ.கா) ஆக இருக்கவேண்டும். பல செய்திகள் பார்ப்பதால் (அது தான் தற்போதய எனது தொழில்:D) எது என்று ஞாபகம் சரியாக இல்லை. பத்திரிக்கை செய்தியாக வந்தது கண்டால் பகிர்கிறேன்.

அறிஞர்
12-06-2009, 03:06 PM
ஒரு பக்கம் தீவிரவாதிகள்.....
மற்றொறு பக்கம்... பாகிஸ்தான்...
அடுத்த பக்கம்.. சீனா...
எவ்வளவோ பேரைதான் சமாளிக்கிறது.....
காலம் தான் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லனும்...
ஐநா சபையோடு உண்மையான வேலைதான் என்ன.. என யாராவது சொல்லுங்களேன்.

தூயவன்
12-06-2009, 04:43 PM
ஐநா சபையோடு உண்மையான வேலைதான் என்ன.. என யாராவது சொல்லுங்களேன்.

எல்லாம் முடிந்த பிறகு வந்து பார்த்து அறிக்கை விடுறது

அக்னி
12-06-2009, 08:37 PM
எல்லாம் முடிந்த பிறகு வந்து பார்த்து அறிக்கை விடுறது
:icon_b:
வெட்டி(யான்) வேலை...

சுகந்தப்ரீதன்
13-06-2009, 04:50 AM
நன்றி சுகி, ஆனால் என்னால் ஏனோ அதை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை...

//ஓவியா, you do not have permission to access this page. This could be due to one of several reasons//

தலைவர், எனக்கும் வழி விட்டா படிக்கலாம்!! ;)அக்கா... மன்ற நிர்வாகம் Approval கொடுக்கறதுக்குள்ள நீங்க ஆட்டோவை எடுத்துக்கிட்டு அங்க போயிட்டிங்க போலிருக்கு...!!:mini023:

இப்ப க்ரீன் சிக்னல் போட்டிருக்கு... இனி நீங்க தாராளமா அதை (http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=485) பதிவிறக்கி கொள்ளலாம்..!!:icon_rollout:

விகடன்
13-06-2009, 04:58 PM
20/20 என்று சொல்லத்தான் ஞாபகம் வருகிறது. இலங்கைப் பிரச்சினையின்போது பலரது கவனத்தை திசைதிருப்பியதும் அந்த விளையாட்டுத்தான்.

ஓவியா
14-06-2009, 12:37 AM
அக்கா... மன்ற நிர்வாகம் Approval கொடுக்கறதுக்குள்ள நீங்க ஆட்டோவை எடுத்துக்கிட்டு அங்க போயிட்டிங்க போலிருக்கு...!!:mini023:

இப்ப க்ரீன் சிக்னல் போட்டிருக்கு... இனி நீங்க தாராளமா அதை (http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=485) பதிவிறக்கி கொள்ளலாம்..!!:icon_rollout:

ஆமாம் ஆனாலும் சுட்டியில் பதிவிறக்கம் செய்ய சென்றால் முழு புத்தகமும் 96 பக்கம்னு காட்டுது, :mini023::mini023:

நன்றிபா.

anna
16-07-2009, 10:49 AM
வரும் முன் காப்பதுதான் நல்லது. இல்லையெனில் நமது நாட்டின் வரைபடம் உலகவரைபடத்தில் சிறு புள்ளியாகி விடு.