PDA

View Full Version : கூகிளின் நேரடி தமிழ் தட்டச்சு முறை..பாரதி
05-06-2009, 02:40 PM
அன்பு நண்பர்களே,

இ-கலப்பை, என்.ஹெச்.எம் ரைட்டர் போன்ற மென்பொருட்களை நிறுவி தமிழில் தட்டச்சுவது குறித்து மன்றத்தில் சில திரிகள் இருக்கின்றன.

நமது மன்றத்திலேயே நேரடியாக தமிழை தட்டச்ச வசதி உண்டு என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதாவது வேறு மென்பொருள் எதையும் நிறுவாமலேயே தமிழில் நேரடியாக தட்டச்சலாம்.

1. கூகிளின் தமிழ் தட்டச்சு வசதி - Google Transliteration Box: இதில் ஃபோனடிக் முறையில் தமிழில் தட்டச்ச முடியும். தட்டச்சியதை நகல் எடுத்து பதிவிட முடியும்.

2. ஒருங்குறி மாற்றி - Unicode convertor : இதில் திஸ்கி, அஞ்சல், மயிலை, பாமினி, டேப், டேம் ஆகிய தட்டச்சு முறைமைகளில் தட்டச்சு செய்தவற்றை ஒருங்குறியாக மாற்றவும், ரோமனைஸ்டு முறையில் தட்டச்சு செய்து ஒருங்குறியாக மாற்றவும் முடியும். அவ்விதம் மாற்றியதை நகல் எடுத்து மன்றத்தில் எளிதாக பதிக்க முடியும்.

இந்த இரண்டு வசதிகளும் மன்றத்தின் பக்கங்களில் கீழ்ப்பகுதியில் இருக்கின்றன.

இப்போது கூகிள் இணையத்தளங்கள் எல்லாவற்றிலும் நேரடியாக ஃபோனடிக் முறையில் தமிழில் ஒருங்குறியைத் தட்டச்ச வசதி செய்திருக்கிறது.

அதன்படி மிகச்சிறிய அளவுள்ள ஜாவா நிரலைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கருவிப்பட்டையை நமது உலாவியில் நிறுவிக்கொள்ள வேண்டும். நிறுவிக்கொண்ட பின்னர் நேரடியாக தமிழில் தட்டச்சலாம்.

இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் அரபி மொழிகளுக்கான கருவிப்பட்டை கிடைக்கிறது.

இண்டர்நெட் எக்ஸ்புளோரர், ஃபயர் ஃபாக்ஸ், குரோம், சஃபாரி ஆகிய உலாவிகளில் நாம் அதைப் பொருத்திக்கொள்ள முடியும். கூகிளின் உதவித்தளங்களில், ஒவ்வொரு உலாவியிலும் நாம் எவ்விதம் இந்தக்கருவிப்பட்டையை இணைப்பது என்பதையும், எவ்விதம் பயன்படுத்தலாம் என்பதையும் படங்களுடன் தெளிவாக கொடுத்திருக்கிறார்கள்.

எப்படி கருவிப்பட்டையை நிறுவுவது என்பதை அறிய : (How to install transliteration bookmarklet)
http://t13n.googlecode.com/svn/trunk/blet/docs/help_ta.html

எப்படி பயன்படுத்துவது என்பதை அறிய : (Using the transliteration bookmarklet)
http://t13n.googlecode.com/svn/trunk/blet/docs/help_ta.html#Use

கூகிளின் இந்த வசதியின் மூலம் பெரும்பாலான வலைத்தளங்களில் நாம் நேரடியாக தமிழில் தட்டச்ச முடியும். ஒரு சில இடங்களில் இது வேலை செய்வதில்லை என்ற குறை இருந்தாலும், உடனடியாக நேரடியாக தமிழில் தட்டச்ச வசதியைத் தருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

நான் அதை நிறுவி நமது மன்றத்தில் சோதித்ததில், புதிய திரி தொடங்கும் போது தலைப்புப் பகுதி (தலைப்பு கருவிப்பட்டையைக்கொண்டே தட்டச்சு செய்யப்பட்டது), கூகிள் தமிழ் தட்டச்சும் வசதி, ஒருங்குறி மாற்றி ஆகியவற்றில் நேரடியாக தமிழில் தட்டச்ச முடிகிறது. ஆனால் பதிவுகளை தட்டச்சும் பகுதியில் கூகிள் கருவிப்பட்டை வேலை செய்யவில்லை.

வழங்கி, இயங்குதளம் மற்றும் மென்பொருள் ஒத்துழைக்குமெனில் இந்த இடத்திலும் தட்டச்சும் வசதியை மன்ற நிர்வாகம் ஏற்படுத்தலாம் என்ற ஆலோசனையை முன் வைக்கிறேன்.
இப்பதிவு யாருக்கேனும் பயன்பட்டால் மகிழ்வேன்.

அறிஞர்
05-06-2009, 03:10 PM
தகவலுக்கு நன்றி அண்ணா... நான் இகலப்பை வைத்து உபயோகிக்கிறேன். புதிய முறையையும் முயற்சித்துப் பார்க்கிறேன்.

அமரன்
05-06-2009, 05:37 PM
தகவலுக்கு நன்றி அண்ணா. இடத்துக்கேற்றாற்போல் பயன்படுத்த பல செயலிகளை அறிமுகப்படுத்தும் உங்களை எந்தளவு பாராட்டினாலும் தகும்.

பாரதி
06-06-2009, 04:52 PM
நன்றி அறிஞர், அமரன். சொந்தமாக கணினி இல்லாத நிலைமையில் கணினி நிலையங்களிலோ அல்லது வேறு இடங்களிலோ எளிதாக தமிழில் தட்டச்ச உதவும் அனைத்தையும் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே என் ஆவல். வருங்காலத்தில் இன்னும் என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறதோ...!!

மனோஜ்
15-06-2009, 04:26 AM
நல்ல தகவலுக்கு நன்றி அண்ணா

நேசம்
15-06-2009, 04:43 AM
வெளி இடங்களில் கணினி உபயோகபடுத்தும் பொது இந்த வசதி உண்மையில் பயன்படும் அண்ணா.பகிர்தலுக்கு நன்றி

praveen
15-06-2009, 05:20 AM
ஆனால் பாருங்கள் பாரதி, துரதிருஸ்டவசமாக நான் எப்போதும் உபயோகிக்கும் ஒபேராவில் இந்த வசதி வேலை செய்ய மாட்டேன்கிறது :)

பா.ராஜேஷ்
25-06-2009, 01:10 PM
நன்றி பாரதி. மன்றம் புதிதாய் பொலிவு பெற்றிருக்கிறது. அதன் படி பழைய நேரடி கூகிள் தட்டச்சு வசதிகள் தென்படவில்லையே என்று தேடி கொண்டிருக்கும்போது இந்த திரியை காண நேர்ந்தது. மிகவும் பயனுள்ள தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி பல.

வெற்றி வாசன்
08-08-2009, 08:25 AM
இந்த தட்டச்சு முறை மிக எளிதாக உள்ளது. செய்திக்கு மிக்க நன்றி

வெற்றி வாசன்
08-08-2009, 08:28 AM
மன்னிக்கவும் , இந்த தட்டச்சு முரியியை பரிசோதிக்க இந்த திரியை உபயோகித்து கொள்ள. கூகிள் எப்போதும் இது போன்ற பயன் உள்ள விசியங்களை செய்வது மிக மகிழ்ச்சி. இது பிழையை கூட திருத்தி விடுகின்றது

அமரன்
08-08-2009, 08:35 AM
பரிசோதனை வெற்றிதானே வாசன்.
இனி என்ன மன்றத்தில் உங்கள் பயணம் தங்கு தடையின்றி தமிழில் தொடரட்டும்.

Ranjitham
09-08-2009, 02:02 AM
என்
ஹட்ச்
எம்
நிறுவ வுதவி தேவை
நன்றியுடன்
இரஞ்சிதம்

பாரதி
09-08-2009, 08:19 AM
என்
ஹட்ச்
எம்
நிறுவ வுதவி தேவை
நன்றியுடன்
இரஞ்சிதம்


இந்த சுட்டியைப் பாருங்கள்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13959

மேற்கொண்டு உங்களுக்கு உதவி தேவைப்படுகிறதெனில் விளக்கமாக உங்கள் வினாக்களை கேளுங்கள். எனக்குத்தெரிந்த வரையில் பதிலளிக்க தயாராக இருக்கிறேன்.

Ranjitham
10-08-2009, 12:05 AM
பாரதி
அவர்களக்கு http://www.nhm.in/software/
இந்த சுட்டியைப் பலமுறை முயன்றும் திறக்கமுடியவில்லை
தயவுகூர்ந்து உதவுங்கள்

பாரதி
10-08-2009, 01:51 AM
என்.ஹெச்.எம் அவர்களது பதிவிறக்க முகவரியை மாற்றி விட்டார்கள் போலும்.

http://www.nhm.in என தட்டச்சுங்கள். வரும் பக்கத்தில் software என்னும் சுட்டியை தேர்வு செய்யுங்கள். அதன் பின்னர் வரும் பக்கத்தில் N.H.M. Writer 1.5.1.1 என்பதை சொடுக்கி பதிவிறக்குங்கள்.

அல்லது நேரடியாக பதிவிறக்க பக்கத்திற்கு செல்ல http://software.nhm.in/products/writer என்று தட்டச்சுங்கள். அந்தப்பக்கத்தில் இருக்கும் download எனும் சுட்டியை அழுத்தி பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.

Ranjitham
11-08-2009, 11:52 PM
அன்பின் பாரதி அவர்களுக்கு மிக்க நன்றி. NHM நிருவியுள்ளேன் நன்றாக வேலை செய்கின்றது.
நன்றியுடன்
இரன்சிதம்.

பாரதி
15-08-2009, 01:52 PM
உங்கள் தேவை நிறைவேறியது குறித்து மகிழ்ச்சி.

இராசகுமாரன்
23-06-2010, 01:20 PM
கூகிள் முறையை விட எளிதாக தற்போது "எகலப்பையின்" மூலப் பொருளான கீமேன் மென்பொருள் கொண்டு புதிய Keyman Bookmarklet வந்துள்ளது. இது அனைத்து இடங்களிலும் மிகச் சிறப்பாக இயங்குகிறது. உங்கள் கணிணியில் தமிழ் தட்டச்சு செய்ய மென்பொருள் இல்லாத போது உங்கள் Favourite Bookmark மூலம் தமிழ் தட்டச்சு செய்யலாம். தேவைப் படுபவர்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

சுட்டி இதோ: http://www.tavultesoft.com/keymanweb/bookmarklet.php

பாரதி
23-06-2010, 01:35 PM
மென்பொருளை நிறுவுவதில் சிரமம் இருப்பவர்களுக்கு இது உதவியாக இருக்கும் என நம்புகிறேன். நன்றி நண்பரே.

சிவா.ஜி
23-06-2010, 01:41 PM
நல்லதொரு பயண்மிக்க பகிர்வுக்கு மிக்க நன்றி தலைவரே.

jeeva.p
12-08-2011, 06:57 PM
My Meeting Notes
https://chrome.google.com/webstore/detail/abjidiofaphknicoajhefbbgghmhjgno
இது தட்டச்சு செய்த வார்த்தைகளை தானாக சேமித்துக்கொள்ளும்.
This is chrome application, after installed "My Meeting Notes" icon will appear in Installed Apps section.

Chrome Notepad Editor
https://chrome.google.com/webstore/detail/jafjhocainhibnnfgnohcokdejocdndf
நாம் தட்டச்சு செய்தவைகளை, நமக்கு தேவையான பெயரில் சேமிக்கலாம்.
This is chrome extension, after installed notepad icon will appear right top.

Both are used HTML5 localstorage to store notes. All notes will be available until we clear the browser cache.

இரண்டுமே கூகிளின் நேரடி தமிழ் தட்டச்சு முறை பயன்படுத்தபட்டுள்ளது. தமிழில் தட்டச்சு செய்ய வலதுபக்கம் மேலே உள்ள மெனுவில் தமிழை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். மேலும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி பல மொழிகளில் தட்டச்சு செய்யலாம்.

நன்றி
ஜீவா