PDA

View Full Version : ஐதராபாத்தில் 3 பாக்.தீவிரவாதிகள் ஊடுருவல்- பயங்கர தாக்குதலுக்கு திட்டம்



கா.ரமேஷ்
05-06-2009, 06:56 AM
நன்றி மாலைமலர்.
ஐதராபாத், ஜூன். 5-
மும்பை தாக்குதலை போல இந்தியாவில் மேலும் ஒரு தாக்கு தலை நடத்த பாகிஸ் தான் தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதை இந்திய உளவுத் துறை கண்டுபிடித்து உள்ளது. இந்த முறை தென் இந்தியாவில் அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்ப தாகவும் தெரிய வந்தது. பாகிஸ்தானில் செயல் படும் லஷ்கர்- இ-தொய்பா தீவிரவாதிகள் இந்த சதித் திட்டத்தை தீட்டி இருந்தனர். இதற்காக தீவிரவாதிகள் குழு ஒன்று பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊருடுவியது.

இதில் 3 தீவிரவாதிகள் கடந்த 1-ந் தேதி ஸ்ரீநகருக்குள் ஊடுருவி அங்கிருந்து டாடா சுமோ கார் மூலம் டெல்லி புறப்பட்டனர். அங்கிருந்து டெக்கான் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் ஐதராபாத் வருவதாகவும் அவர்களுக்கு ஐதராபாத்தில் ஏற்கனவே உள்ள தீவிரவாதிகள் ஆயுதங்களை வழங்க இருப்ப தாகவும் தகவல்கள் கிடைத்தன.

எனவே ஐதராபாத் போலீசாரை உளவுத்துறை உஷார்ப்படுத்தியது. போலீசார் நகரம் முழுவதும் சல் லடை போட்டு தேடி வருகிறார்கள். ஐதராபாத்தில் ஏற்க னவே பலமுறை தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். ஐதராபாத்தை சேர்ந்தசில இளைஞர்களே தீவிரவாத இயக்கத்தில் உள்ளனர். வங்காள தேசத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஷ§ஜி தீவிர வாத இயக்கத்தில் அவர்கள் சேர்ந்துள்ளனர்.

எனவே பாகிஸ்தானில் இருந்து வந்துள்ள தீவிரவாதிகள் உள்ளூர் தீவிரவாதி களுடன் சேர்ந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. இதனால் ஐதராபாத்தை சேர்ந்த இளைஞர்கள் யார்-யார்? தீவிரவாத இயக் கத்தில் இருக்கிறார்கள் என பட்டியல் தயாரித்து தேடி வருகிறார்கள்.

ஐதராபாத்தில் ஊடுருவி உள்ள 3 தீவிரவாதிகள் பெயரும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அபுமசாப் (வயது 23), நசீர் அகமது (31), முகமது அகமது (28) என்று தெரியவந்தது. இது குறித்து ஐதராபாத் போலீஸ் கமிஷனர் பிரசாத் ராவ் கூறியதாவது:-

ஐதராபாத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பதாக மத்திய உளவு துறையான ஐ.பி. கூறியுள் ளது. 3 தீவிரவாதிகள் ஐதராபாத்துக்குள் புகுந்து விட்டதாகவும் தகவல் கிடைத் தது. எனவே நாங்கள் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்து உள்ளோம். அனைத்து பகுதி களிலும் சோதனை நடத்தி வருகிறோம்.

சந்தேகப்படும் பகுதிகளில் முழுகண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம். மக்களை யும் உஷாராக இருக்கும் படி கூறியுள்ளோம். சந்தேகப்படும் பொருட்களை பார்த் தாலோ, அல்லது சந்தேகப்படும் நபர்களை கண்டாலோ உடனே தெரிவிக்கும்படி கூறி இருக்கிறோம்.

ஓட்டல்களில் சந்தேகப்படும் நபர்களுக்கு அறைகள் கொடுக்க வேண்டாம். சிறு சந்தேகம் இருந்தால் கூட போலீசுக்கு தெரிவியுங்கள் என்றும் சொல்லி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐதராபாத்தவிர சென்னை, பெங்களூர், போன்ற நகரங்களிலும் தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தலாம் என கருதப்படுகிறது. எனவே கர்நாடகாவில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள் ளனர். பெங்களூர் நகரில் அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனை நடத்தப்பட்டது. லாட் ஜுகளிலும் மற்றும் சந்தேகப்படும் வீடுகளிலும் சோதனை நடத்தினார்கள்.

இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடக்க போகிறது என்று அமெரிக்காவும் கூறியுள்ளது. எனவே அவர்களுக்கு கிடைத்ததக வல்களையும் இந்திய உள வுத்துறை சேகரித்து இருக்கிறது.

http://www.maalaimalar.com/2009/06/05103129/CNI03050609.html

கா.ரமேஷ்
05-06-2009, 07:08 AM
நேற்றுதான் நமது உள்துறை அமைச்சர் அவர்கள்,அமெரிக்கா எச்சரித்ததிற்க்கு இந்தியா போன்று பாதுகாப்பான நாடு இல்லை அதனால் அமெரிக்க அந்த எச்சரிக்கையை திரும்ப பெறவேண்டும் என்றார்.இப்பொழுது என்ன சொல்ல போகிறார்?
ஒருவேளை இப்பொழுதுதான் விழித்தார்களா என்ன? காஷ்மீர் வழியாக டாடா சுமோ பிடித்து புதுதில்லி வந்து,ஐதராபாத் வரும்வரை தூங்கி கொண்டிருந்தார்களோ? இதில் வேறொரு செய்தி வேறு நேற்று சைனாவின் ஆயுதங்கள் காஷ்மீரில் கண்டு பிடிக்கப்பட்டதாம்... என்ன பாதுகாப்போ?

இப்பொழுதாவது கண்டு பிடித்தார்களே அந்த வகையில் பாராட்டலாம்.

விக்ரம்
05-06-2009, 12:06 PM
ஒரு நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வது எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று நாட்டின் பாதுகாப்பும் முக்கியம்.

நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த சக்தியையும் அனுமதிக்கக் கூடாது. ஓட்டு வங்கியை மட்டுமே கணக்கில் கொண்டு செயல்பட்டால், பாதுகாப்பை பலப்படுத்த முடியாது.

தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். பிடிபட்ட தீவிரவாதிகளை உடனே தூக்கிலிட வேண்டும்.. அவ்வாறு செய்யாவிட்டால், அதுவே தீவிரவாதத்தை மறைமுகமாக வளர்ப்பதற்குச் சமம்.

குறிப்பு: பிடிபட்ட தீவிரவாதிகள் என்றால், பாராளுமன்ற தாக்குதல் மற்றும் பம்பாய் தாக்குதலில் பிடிபட்ட தீவிரவாதிகள். இன்னும் ஏன் அவர்களை தண்டிக்கவில்லை.???!!!