PDA

View Full Version : கம்ப்யூட்டர் கடவுளாய் பார்த்து கொடுத்த ஹைபர்நேட்



praveen
05-06-2009, 05:32 AM
கம்ப்யூட்டர் கடவுளாய் பார்த்து கொடுத்த ஹைபர்நேட்

நண்பர்களே உங்கள் கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்து பின் இயக்குவதை விட ஹைபர்நேட் மூலம் ஆப் செய்து பின் திரும்ப இயக்கினால் சில நொடிகளில் இயங்க காண்பீர்கள்.

பூட் ஆகி ரெம்ப நேரம் கழித்து டெஸ்க்டாப் வரும் கம்ப்யூட்டரில் இதனை செய்து பாருங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்.

கம்ப்யூட்டரை ஷட் டவுன் கொடுத்த பின் வரும் மெனுவில் ஷிப்ட் கீயை அழுத்திக்கொண்டு பார்த்தால் ஹைபர்நேட் என்ற பட்டன் கிடைக்க கூடும் அதனை அழுத்தி கம்ப்யூட்டரை அப்படியே உறைய வைக்கலாம். பின் திரும்ப கம்ப்யூட்டரை இயக்கும் போது விரைவில் உறைநிலைக்கு போகும் போது ராமில் இருந்ததை ஹார்ட் டிஸ்கி எழுதியதை திரும்ப ராமில் எழுதிய உடன் உங்கள் டெஸ்க்டாப் ரெடி.

பாலகன்
05-06-2009, 06:23 AM
புதுசால்ல இருக்கு, இது ஏற்கெனவே மடிகணினிகளில் இருக்கும் வசதி. ஆனால் மேஜை கணினியில் இது இத்தனை நான் இருந்திருக்கு.

அதை எங்களுக்கு காண்பித்த பிரவீண்க்கு நன்றி

தாமரை
05-06-2009, 07:24 AM
இதைப் பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இருந்தாலும் எளிமையாக சொல்ல முயற்சி செய்கிறேன்.

கம்ப்யூட்டர்களில் அட்வான்ஸ்ட் கான்ஃபிக்ரேஷன் ஆஃப் பவர் இண்டர்ஃபேஸ்(ACPI) என்பது 1996 லிருந்து உள்ளது.

இதில் மூன்று குளோபல் ஸ்டேட்ஸ்களும்(பொது நிலை) 6 ஸ்லீப் ஸ்டேட்ஸ்களும் (உறக்க நிலைகளும்) வரையறுக்கப் பட்டுள்ளன, ACPI - Aware BIOS, ACPI OS Enabled போன்ற BIOS Set-up களின் மூலம் இவற்றை உபயோகிக்கலாம்.

இதில் பொதுநிலை 0 (G0) மற்றும் உறக்கநிலை 0 (S0) என்பது கணினி இயங்கும் நிலையில் உள்ளதாகும்.

பொதுநிலை 1 (G1) - இதில் நான்கு உறக்க நிலைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

உறக்கநிலை 1 (S1)

இதில் கிளாக்(துடிப்பு) மட்டும் நிறுத்தப்படும். இதனால் கணினி மேற்கொண்டு எந்த இயக்கமும் கொள்ளாது. இதனால் குறைந்த அளவே மின்செலவு ஆகும். இதிலிருந்து வெளிவருவது எளிது. நாம் வரையறுத்த விசைப்பலகை, எலி போன்றவற்றில் இண்டரப்ட் தூண்டப்படும் பொழுது கணிணி விழித்து S0 நிலைக்குப் போகும்.

உறக்கநிலை 2 (S2)

உறக்கநிலை இரண்டு. இதில் நுண்செயலியின் மின்சாரம் துண்டிக்கப்படும். எனவே முதல் நிலையை விட அதிக மின்சாரம் மிச்சப்படும்.

இதிலிருந்து வெளிவருவது எளிது. நாம் வரையறுத்த விசைப்பலகை, எலி போன்றவற்றில் இண்டரப்ட் தூண்டப்படும் பொழுது கணிணி விழித்து S0 நிலைக்குப் போகும்.

உறக்க நிலை 3 (S3)

இதில் கணினியில் ரேம் (RAM) மற்றபகுதிளுக்கு மின் துண்டிப்பு செய்யப்படும். இதை ஸ்டாண்ட்பை என்கிறோம். இதிலிருந்து வெளிவருவது எளிது. நாம் வரையறுத்த விசைப்பலகை, எலி போன்றவற்றில் இண்டரப்ட் தூண்டப்படும் பொழுது கணிணி விழித்து S0 நிலைக்குப் போகும். ரேம் அப்படியே இருப்பதால் விட்ட இடத்திலிருந்து பணியைத் துவங்கலாம்.

உறக்கநிலை 4 (S4)

இதுதான் ஹைபர்நேட் எனப்படும் நீளுறக்கம், இதில் ரேமில் உள்ள தகவல்கள் ஹார்ட்டிஸ்கில் சேமிக்கப்படுகின்றன. பிறகு எழுப்பும் பகுதி தவிர மற்ற பகுதிகள் உறக்கத்தில் ஆழ்கின்றன. இதனால் மிக அதிகமான மின்சேமிப்பு உண்டு.
இதிலிருந்து வெளிவருவது எளிது. பவர் பட்டனை அழுத்தும் பொழுது கணிணி விழித்து S0 நிலைக்குப் போகும். ஹார்ட்டிஸ்கில் இருப்பவை ரேமில் மாற்றப்பட்ட உடன் கணினியில் நாம் விட்ட இடத்திலிருந்து பணியைத் துவங்கலாம்.

அடுத்து G2 எனப்படும் பொதுநிலை 2, உறக்க நிலை 5(S5)

இது ஸாஃப்ட் ஆஃப் எனப்படும் மெந்நிறுத்தம் ஆகும். சாதாரணமாக் கணினியை ஷட்டவுன் செய்தாலோ அல்லது பவர் பட்டனை அழுத்தி அணைத்தாலோ கணினி இந்த நிலைக்குச் செல்கிறது. பவர்பட்டனை மறுபடி அழுத்த கணினி S0 நிலைக்குச் சென்று வேலையை ஆரம்பிக்கிறது. இதில் என்ன வித்தியாசம் என்றால் கணினியை மறுபடி துவக்குவதால் எந்தப் பணியும் திறந்திருக்காது.

அடுத்து பொதுநிலை 3 அதாவது G3. இது மின் தடை, பவர் ஸ்விட் ஆஃப் போன்று நிரந்தரமாய் மின் இணைப்பு துண்டிக்கப்படும்பொழுது ஏற்படுகிறது. மினிணைப்பு திரும்பியவுடன் பயாஸ் செட்டப்பிற்கு ஏற்ப S0 அல்லது S5 நிலைக்கு
கணினி செல்கிறது.

ACPI - Setup இதற்கு முக்கியம்

நாம் அதிகமாக உபயோகிப்பது S0(ஆபரேடிங்), S3(சஸ்பெண்ட்), S4(ஹைபர்நேட்) S5(பவர் ஆஃப்) ஆகியவை ஆகும். இந்தியாவில் வீடுகளில் S6(நோ பவர்) நிலையும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. :D :D :D

பாலகன்
16-11-2010, 04:01 PM
கணினியில் உறக்கம் மற்றும் எழுந்திரிக்கும் விசயங்களை தெள்ளத்தெளிவாக இன்று தான் படித்தேன். தாமரை அண்ணா நன்றி

எந்திரன்
27-01-2011, 02:11 PM
பொதுவாக ஹைபர்நேட் ஆப்சன் ஆக்டிவேட்டாக இருக்காது. நாம்தான் அதை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

விண்டோஸ் எக்ஸ் பீ க்கு -

Start Menu -> Control Panel -> Power Options -> சென்றால் அதில் மூன்றாவதாக இருக்கும் Hibernate என்ற Tabக்குள் சென்று, அங்கிருக்கும் செக் பாக்ஸை "டிக்" செய்ய வேண்டும்.

மேற்கண்டவற்றை செய்து கொண்டால்தான் பிரவீன் குறிப்பிட்டிருக்கும் இந்த வேலை நடக்கும்.



கம்ப்யூட்டரை ஷட் டவுன் கொடுத்த பின் வரும் மெனுவில் ஷிப்ட் கீயை அழுத்திக்கொண்டு பார்த்தால் ஹைபர்நேட் என்ற பட்டன் கிடைக்க கூடும் அதனை அழுத்தி கம்ப்யூட்டரை அப்படியே உறைய வைக்கலாம். பின் திரும்ப கம்ப்யூட்டரை இயக்கும் போது விரைவில் உறைநிலைக்கு போகும் போது ராமில் இருந்ததை ஹார்ட் டிஸ்கி எழுதியதை திரும்ப ராமில் எழுதிய உடன் உங்கள் டெஸ்க்டாப் ரெடி.

விண்டோஸ் 7 என்றால் இதற்கு வேறு மாதிரி செய்ய வேண்டும். அது கீழே தரப்பட்டுள்ளது.

1. அட்மின் அக்கவுண்டிலிருந்துதான் இதை செயல்படுத்த வேண்டும்.

2. ஸ்டார்ட் மெனுவில் cmd என டைப் செய்து கமாண்ட் விண்டோவை வரச்செய்யுங்கள் அல்லது Ctrl + Shift + Enter அழுத்துங்கள்.

3. powercfg /hibernate on என டைப் செய்யுங்கள்.

4. அடுத்து exit டைப் செய்து enter தட்டினால் அந்த விண்டோ மறைந்துவிடும்.

இப்பொழுது ஷட்டவுன் மெனுவில் Hibernate என்பதும் இணைந்து கொண்டிருக்கும். அப்படி வரவில்லையெனில்

அ. Start Menu -> Control Panel -> Hardware & Sound -> சென்று நாலாவதாக இருக்கும் Power Options -> சொடுக்குங்கள்

ஆ. இடதுபக்க பேனலில் இருக்கும் சுட்டிகளில் “Change when the computer sleeps” சொடுக்குங்கள். பிறகு “Change advanced power settings” என்பதை க்ளிக்கினால். இந்த விண்டோ தோன்றும்.

http://farm4.static.flickr.com/3345/3209604223_eab3bd48db.jpg

இ. அதில் Advanced Sleep ஆப்ஷனில், Sleep Treeயை விரியுங்கள்.

ஈ. Hybrid Sleep என்பதில் off ஐ தேர்ந்தெடுத்து Apply, Ok கொடுக்கவும்.

உ. இப்போது ஸ்டார்ட் மெனுவில் ஹைபர்நேட் என்பது புதிதாக இணைந்திருப்பதை காணலாம்.

maggi
28-02-2011, 10:44 PM
இது ரொம்ப நல்ல இருக்கே நன்றிகள் பல

sarcharan
01-03-2011, 03:51 AM
நல்ல தகவல் தமரயாரே... ஒரு புதிய தகவலை தெரிந்து கொண்டேன் எந்திரன். உங்கள் பகிர்வுக்கு நன்றி.