PDA

View Full Version : சானியா மிர்ஸா திருமணம்



அறிஞர்
04-06-2009, 03:39 PM
மிஸஸ் மிர்ஸா ஆகவிருக்கிறார் சானியா மிர்ஸா!

சானியாவின் குடும்பத்துக்கு அறிமுகமான தொழிலதிபர் சோரப் மிர்ஸாவை சானியாவுக்கு நிச்சயத்திருப்பதாக அறிவித்திருக்கிறார் சானியாவின் தந்தை இம்ரன் மிர்ஸா.

சோரப்பின் தாத்தா, ஹைதராபாத் ஏழாவது நிஜாமின் ஆஸ்தான சமையல்காரர். ஹைதராபாத் பிரியாணியைக் காரசார ருசியுடன் சமைக்கத் தெரிந்தவர். 'யுனிவர்சல் பேக்கர்ஸ்' என்ற பெயரில் ஹைதராபாத்தில் மட்டும் ஏழெட்டு ஹோட்டல்கள் நடத்திவருகிறார்கள். அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் திருமணம் இருக்கும் என்கிறார்கள். எல்லாம் சரி... ஆனால், 22 வயதிலேயே சானியாவுக்கு ஏன் திடீர் அவசரக் கல்யாணம்? சில நெருங்கிய உறவுகள், சானியாவுக்கு நடக்கவிருப்பது கட்டாயக் கல்யாணம் என்கின்றன. அப்படியா?

தனது 17-வது வயதில் சர்வதேச டென்னிஸ் விளையாட ஆரம்பித்த சானியா மிர்ஸாவுக்குக் கை கொடுத்தது அவரது திறமையும் அழகும். டென்னிஸில் சானியா ஜெயித்த கோப்பைகளை அதற்கு முன் எந்த இந்தியப் பெண்ணும் ஜெயித்ததில்லை என்பதாலும், அழகாக இருந்தார் என்பதாலுமே மீடியா வெளிச்சத்தில் மிதந்தார். ஆனால், தற்போது சானியாவின் வலது மணிக்கட்டு பலவீனமாகிவிட்டதால், சானியாவால் முன்பு மாதிரி ஸ்பீட் சர்வீஸ் போட முடியவில்லை. இரண்டு கால் மூட்டுக்களிலும் காயம் என்பதால், ஓடுவதற்கும் சிரமம். 'இனி, சானியாவால் அதிக நாள் டென்னிஸில் தாக்குப்பிடிக்க முடியாது' என்று ஃபிட்-னெஸ் ஆலோசகர்கள் கணிக்க, புகழ் வெளிச்சம் மங்கும் முன் அவருக்குத் திருமணம் முடிக்கலாம் என்பது ஒரு காரணம்.

ஆனால், பலரோடு கிசுகிசுக்கப்பட்டாலும் ஹிந்தி நடிகர் இம்ரன் ஹஸ்மியை சானியா காதலித்தார்; அவரைத் திருமணம் செய்துகொள்ளவும் தீர்மானித்-திருக்கிறார் என்ற வதந்திதான் சானியாவின் பெற்றோ-ருக்கு அதிர்ச்சி அளித்ததாம். இதனாலேயே அலறிப் பதறி அவசர அவசரமாக சானியாவைப் பல வழிகளில் தாஜா செய்து சோரப்புடனான திருமணத்துக்குச் சம்மதிக்கவைத்திருக்கிறார்களாம். 'திருமணம் முடிந்த ஒரு வருடத்துக்குள் சானியாவிடம் இருந்து ஓய்வு அறிவிப்பும், டென்னிஸ் அகாடமி துவக்க விழா அறிவிப்பும் வரும்' என்கிறார்கள்.

இந்தியப் பெண்கள் டென்னிஸில் சானியாவின் இடம் ஒரு வரலாறு. அதைத் தொடர்ந்து எழுதுவது சானியாவின் கையில்தான் இருக்கிறது!
நன்றி - விகடன்

ஓவியா
04-06-2009, 05:57 PM
அட காதல கட்டிபோடுவதே இந்த பெத்தவங்க முழுநேர தொழிலா போச்சுனு யோசிக்க வருது. :)

பிரியாணி கட முதாலாளியா!! அப்ப கலயாணத்துக்கு போக எல்லாரும் முயற்ச்சி செய்யுங்கள்.

சானியாக்கு விருப்பமில்லாத திருமணம் என்றால் எப்படி வாழ்த்து சொல்வது!!

நன்றி அறிஞரே.

அமரன்
04-06-2009, 07:15 PM
சே... இனி யாரப்பா ஆரென் அண்ணாவின் கனவில் வருவது?

பூமகள்
05-06-2009, 01:19 AM
சே... இனி யாரப்பா ஆரென் அண்ணாவின் கனவில் வருவது?
அமரன் அண்ணா உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு...!!:p:rolleyes:

எல்லாருக்கும் ஒரு கவலைன்னா.. உங்களுக்கு என்னே ஒரு பொது நலமான கவலை..!! :lachen001::lachen001:

பக்கத்து இலைக்கு பாயாசம் கேக்கும் ஆட்கள் தானே நாம....!! :aetsch013::rolleyes: :D:D

aren
05-06-2009, 02:34 AM
சே... இனி யாரப்பா ஆரென் அண்ணாவின் கனவில் வருவது?

அடப்பாவி!!!

என்னை ஏனப்பா இந்த வம்பில் இழுக்கிறீர்கள்.

ஆமாம், யார் இந்த* சானியா மிர்சா?

குழப்பத்துடன்
ஆரென்

praveen
05-06-2009, 04:41 AM
அடப்பாவி!!!

என்னை ஏனப்பா இந்த வம்பில் இழுக்கிறீர்கள்.

ஆமாம், யார் இந்த* சானியா மிர்சா?

குழப்பத்துடன்
ஆரென்

சீ சீ இந்த பழம் புளிக்கும்.:lachen001:

samuthraselvam
05-06-2009, 05:03 AM
சீ சீ இந்த பழம் புளிக்கும்.:lachen001:

தங்கச்சிக்கு வாழ்த்து சொல்லுறதை விட்டுட்டு என்ன ஆளாளுக்கு நக்கல் அடிக்கிறீங்க? :lachen001::lachen001:

சரி விடுங்க அண்ணன்மார்களின் சார்பா நானே தங்கச்சிக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கறேன்...:music-smiley-012::music-smiley-012:

வாழ்த்துக்கள் சானியா......:icon_b:

தாமரை
05-06-2009, 05:17 AM
ம்ம் தங்கச்சியே தங்கச்சின்னு சொல்லியாச்சு அப்ப வாழ்த்து பாடிட வேண்டியதுதான்

திருநிறைச் செல்வி மங்கையர்க்கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக - என்
இருவிழி போலே இருவரும் இங்கு
இல்லறம் காணட்டும் நலமாக..

பாலகன்
05-06-2009, 06:25 AM
சானியா அக்காவுக்கு கல்யாணமா? அதுவும் அவங்க விருப்பம் இல்லாமலா? ம் மனசு மாறிடுவாங்கன்னு நினைக்கிறேன்.

அப்போ என்னோட வாழ்த்துக்களை அவங்களுக்கு நேர்ல போயி சொல்லிடுறேன். (பிரியாணி கிடைக்கும்ல) :)

ஆதவா
05-06-2009, 07:14 AM
சானியா என்னோட சொந்தக்கார பொண்ணுதான்.. ஆக்சுவலா என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டா, நாந்தான் சும்மா சும்மா தோத்துப்போற பொண்ணை கல்யாணம் பண்ணீக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்..

பாவம் சானியாவோட ஹஸ்பேண்டு.

வாழ்த்துக்கள்!!!

ஓவியன்
05-06-2009, 07:28 AM
ஆதவா, பார்த்து அப்புறம் தமனா கோவிக்கப் போறாங்க......!! :lachen001::lachen001::lachen001:

அமரன்
05-06-2009, 08:11 AM
சானியா என்னோட சொந்தக்கார பொண்ணுதான்.. ஆக்சுவலா என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டா, நாந்தான் சும்மா சும்மா தோத்துப்போற பொண்ணை கல்யாணம் பண்ணீக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்..

பாவம் சானியாவோட ஹஸ்பேண்டு.

வாழ்த்துக்கள்!!!

சானியா மிர்சாவை கஜினி ஆக்கிட்டீங்களே ஆதவா!!

ஆதவா
05-06-2009, 10:06 AM
ஆதவா, பார்த்து அப்புறம் தமனா கோவிக்கப் போறாங்க......!! :lachen001::lachen001::lachen001:

தமன்னாவுக்கு தமிழ் எழுதபடிக்கத் தெரியாது!! அதனால தப்பிச்சேன்... :wuerg019:

மதி
05-06-2009, 10:11 AM
தமன்னாவுக்கு தமிழ் எழுதபடிக்கத் தெரியாது!! அதனால தப்பிச்சேன்... :wuerg019:
இப்போ எழுத படிக்க கத்துக்கிட்டு இருக்கறதா கேள்வி.. அப்புறம் தமிழ்மன்றத்தையும் அறிமுகம் செஞ்சு வச்சுடலாம்...

samuthraselvam
06-06-2009, 04:57 AM
இப்போ எழுத படிக்க கத்துக்கிட்டு இருக்கறதா கேள்வி.. அப்புறம் தமிழ்மன்றத்தையும் அறிமுகம் செஞ்சு வச்சுடலாம்...

அப்புறம் எல்லோரும் தமனா திரிக்கு மட்டும் தானே விமர்சனம் போடுவீங்க.....

எல்லோருடைய ஜொல்லிலும் தமிழ் மன்றம் நனைந்து நமுத்துப் போகுமே பரவாயில்லையா?

பா.ராஜேஷ்
06-06-2009, 10:26 AM
சானியாவிற்கு வாழ்த்துக்கள்! டென்னிஸ் அக்கடமி மூலம் மேலும் பல சானியாவை உருவாக்க வாழ்த்துக்கள்!

மன்மதன்
10-06-2009, 08:22 AM
போட்டோவோட செய்தி போட்டிருக்கலாம்..அந்த விகடன் போட்டோவைத்தான் சொல்றேன்..ஹிஹி..

அய்யா
13-06-2009, 06:11 AM
சானியா என்னோட சொந்தக்கார பொண்ணுதான்.. ஆக்சுவலா என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டா, நாந்தான் சும்மா சும்மா தோத்துப்போற பொண்ணை கல்யாணம் பண்ணீக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்..



அதிர்ச்சி இருக்கும் தான்.. ஆனால் இந்த அளவுக்கா ஆதவா அண்ணா?

சிவா.ஜி
13-06-2009, 08:28 AM
கட்டாயக்கல்யாணம்ன்னு சொல்றாங்க. பாவம் சானியா விருப்பத்தைக் கேட்டிருந்தா ஆதவாவைத்தான் கை காட்டியிருப்பார்.

பாவம் ஆதவா.

பரஞ்சோதி
13-06-2009, 09:21 AM
சானியா என்னோட சொந்தக்கார பொண்ணுதான்.. ஆக்சுவலா என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டா, நாந்தான் சும்மா சும்மா தோத்துப்போற பொண்ணை கல்யாணம் பண்ணீக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்..

பாவம் சானியாவோட ஹஸ்பேண்டு.

வாழ்த்துக்கள்!!!

எப்படி தம்பி இதுவெல்லாம்.

ஆளு தான் அப்பாவியாக இருக்கீங்கன்னா, எழுத்திலுமா?

அசத்துங்க அசத்துங்க, நான் நம்பிட்டேனுல்ல :)

xavier_raja
18-06-2009, 02:07 PM
மணமக்கள் நீண்ட நாள் வளமுடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகள்.

பால்ராஜ்
02-09-2009, 08:34 AM
சானியா திருமணத்துக்குப் பின்னரும் தொடர்ந்து விளையாடி (டென்னிஸ்தான்...!) சாதனைகளை இன்னும் அதிகரிக்க வாழ்த்துக்கள்.