PDA

View Full Version : ஐம்பதை கடந்தேன்...(மன்றதிற்கு ஒரு சமர்ப்பணம்)



இன்பக்கவி
04-06-2009, 09:17 AM
தமிழை போற்றும் ஒரு மன்றம்
நம் தமிழ் மன்றம்.....

தமிழின் பெருமையை
தமிழராலே உணர முடியும்...
தமிழர்கள் பலர் கூடி
தமிழை வளர்க்கும் மன்றம்
நம் தமிழ் மன்றம்.......

எங்கு சென்றாலும்
எம் தாய்மொழியாம்
தமிழை மறவேன் என்று
பல நாட்டுப்பறவைகள்
ஒன்று கூடும் மன்றம்
நம் தமிழ் மன்றம்.......

கவிஞர்கள், கவிதாயினிகள்,
பல பேர் இருக்க...
கத்துக் குட்டி "கவி" நான்....

எளிய தமிழை தவிர
இலக்கிய நடை எல்லாம்
தெரியாது தட்டு தடுமாறி
கவிதை படைத்து..
பயத்தோடு பதிலை எதிர்பார்க்கும்
"கவி"...நான்.....

இங்கு நட்புக் கொள்ள
ஆசை எனக்கு...
கூடவே கொஞ்சம் பயமும்
இருக்கு.....
எல்லோரும் எட்டாத உயரத்தில்
இருப்பதால் பிரம்மிப்பு எனக்கு...
உங்களை தூர இருந்து ரசிக்கும்
தோழி நான்.......

வார்த்தைகளை அடுக்க
முயற்சிக்கிறேன்...அது மட்டும்
சிரமமாய் இன்றும் எனக்கு.....

ஐம்பதை கடந்தேன்.....
ஐம்பது சிறு அளவே தான்....
எனக்கு பெருமூச்சு வாங்க
வைத்ததும் இது தான்......

முதலில் எனக்கும்
கவி எழுத வரும் என்று
உணர்த்திய தளம் இது....
இன்னும் கற்க பல உள்ள
தளமும் இது தான்....:icon_b::)


என் குறைகளை சுட்டிக் காட்டி...
என்னை வழி நடத்திய
உள்ளங்களுக்கு
நன்றிகள் ஆயிரம்......:):):)

என்றும் அன்புடன்
கவிதா.

கா.ரமேஷ்
04-06-2009, 09:23 AM
வாழ்த்துக்கள்...!
தொடருங்கள் 'கவி' பயணத்தை.......

aren
04-06-2009, 09:31 AM
ஏதோ உங்கள் வயதைத்தான் சொல்கிறீர்களோ என்று தலைப்பார்த்தவுடன் நினைத்தேன். நானும் என்னுடைய வயது 37 என்று சொல்லிவிடலாமா என்று நினைத்தேன். நல்லவேளை அப்படி எதுவும் இல்லை, நானும் என் வயதைச் சொல்லப்போவதில்லை.

கவிதை அருமையாக இருக்கிறது கவிதா அவர்களே. பாராட்டுக்கள். தொடருங்கள்.

பூமகள்
04-06-2009, 09:49 AM
ஏதோ உங்கள் வயதைத்தான் சொல்கிறீர்களோ என்று தலைப்பார்த்தவுடன் நினைத்தேன். நானும் என்னுடைய வயது 37 என்று சொல்லிவிடலாமா என்று நினைத்தேன். நல்லவேளை அப்படி எதுவும் இல்லை, நானும் என் வயதைச் சொல்லப்போவதில்லை.
ஹா ஹா....... ஹி ஹி.... ஹூ ஹூ... :icon_rollout::icon_rollout:

நம்பிட்டேன் அரென் அண்ணா...!! :D:D

---
இனிய கவி பல படைத்து வரும் கவிதைத் தங்கைக்கு இனிய வாழ்த்துகள்.. இன்னும் பல நூறுகள் கடந்து ஆயிரங்கள் கடந்து பல லட்சம் பதிவுகள் தர வாழ்த்துகள்..

மன்றத்தின் மீதான உங்கள் பாசம் நெகிழ வைக்கிறது.. தட்டவும் குட்டவும் நாங்கள் இருக்கிறோம். தைரியமாக எழுதுங்கள்.

வாழ்த்துகள். :)

அமரன்
04-06-2009, 10:11 AM
நல்ல கவி..
இந்தக் கவியை மட்டும் சொல்லவில்லை..

தமிழ் பேசுவோர் கூடி
இழுக்கும் தேர் நமது மன்றம்..

இத்தேர்
தமிழால் அழகுறும் தேர்..
தமிழால் பலதை அழகுறுத்தும் தேர்..

இலக்கை இயம்பிய எதுவும்
இலக்கிய இன்பம் தரும்.
எளிய தமிழிலக்கியத்தால்
எளிதாய் இன்பம் புகும்.

உங்கள் கவி'தைகளில்
கலந்திருக்கிறது
எளிமையெனும் கவின் கலைகள்..

பழகல் பயம்.. அநாவசியம்..

தொட்டு விடும் தூரத்தில்
எல்லாரையும் கொண்டு வந்தது
உங்கள் எழுத்து வசியம்.

தயக்கம் தவிருங்கள்..

வாழ்த்துகளும் பாராட்டுகளும்..

ஆதி
04-06-2009, 12:58 PM
எடுத்த கருவுக்கேற்ற உயிரோட்டம் உங்களின் கவிதைகளில் கண்டிருக்கிறேன்..

வார்த்தையோட்டம் அமர் சொன்னது போல் எளிமையாய் ஆட்டம் புரிவதால் கவிதை இனிமையில் எம்மை ஆழ்த்துக்கிறது..

சகோதரி, இன்று போல் என்றும் தங்களின் எண்ண மேகம் பெய்தவாறிருக்கட்டும் எளிய கவிதைகளை..

வாழ்த்துக்கள்..

பாரதி
04-06-2009, 03:49 PM
எல்லோருமே குழந்தைகளாக பிறந்தவர்கள்தாம்; தட்டுத்தடுமாறி விழுந்தவர்கள்தாம்; பின் எழுந்து நடந்தவர்கள்தாம்.

கற்பது என்பது அன்றாடம் நடந்து கொண்டிருக்கும் ஒரு நடப்பே. எளிய வார்த்தைகள்தாம் படிப்பவர் இதயத்தை ஊடுருவ வல்லவை. நடை தெரியாது என்ற தயக்கத்தை தூக்கி எறிந்து ஐம்பதை அடைந்தேன் என்ற மகிழ்வில் மன்றத்தை பாராட்டி கவி இயற்றும் போதே, உங்களிடம் இருந்து மன்றத்திற்கு வர வேண்டிய கவிதைகள் ஏராளம் என்பது எளிதாகப் புலனாகிறதே..!

மகிழ்ந்து வாழ்த்துகிறேன்.

அறிஞர்
04-06-2009, 04:06 PM
வாழ்த்துக்கள்..
நல்ல கவிஞரை மன்றத்தில் பெற்றது எங்கள் பாக்கியமே.
உம் எழுத்து பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

ஓவியா
04-06-2009, 05:42 PM
கவி என்று பெயர் வைத்துகொண்டதினால் எப்படுப்பட்டவது நீங்க ஒரு கவிதாயிணியாக வந்துதான் ஆகனும். :D

ஒரு விசயம் உங்களுக்கு, அன்பான அட்வைஸ்ஸா எடுத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களின் படைப்புகளுக்கு விமர்சனம் எழுதுங்கள் அதிலே பல விசயங்கள் கற்றுக்கொள்வீர்கள்.


பாரட்டுகளுடன் வாழ்த்துக்கள் கவி. :icon_b:

சிவா.ஜி
04-06-2009, 06:23 PM
நானும் முதலில் ஐம்பது வயதைக்கடந்த ஒருவரின் திரி என்றுதான் நினைத்தேன்.

வாழ்த்துகள் கவிதா. எல்லோரும் சொல்லியதைப்போல எளிமையான வரிகள் எளிதில் விளங்கும். பழகவோ நெருங்கவோ துளியளவாவது தயக்கம் காட்ட வேண்டிய தேவையில்லாதது இம் மாமன்றம்.

தொடர்ந்து வாருங்கள், கவியோடு வாருங்கள்.

samuthraselvam
05-06-2009, 05:57 AM
வாழ்த்துக்கள் கவி...

உங்களின் கவித்திறன் மேலும் மேலும் மெருகேற்ற நம் தாய் மன்றம் உங்களை ஊக்குவிக்க காத்துக்கொண்டு இருக்கிறது....

மேலும் பலாயிரம் கவிகலைப் படைக்க வாழ்த்துக்கள்.....

ஆதவா
05-06-2009, 06:16 PM
முதலில் எனக்கும்
கவி எழுத வரும் என்று
உணர்த்திய தளம் இது....
இன்னும் கற்க பல உள்ள
தளமும் இது தான்..

உங்களுக்கு மட்டுமல்ல, இங்குள்ள அனைவருக்குமே!!

வாழ்த்துகள்.. இன்னும் நீங்கள் பல்லாயிரம் தொடுங்கள். அநேகமாக, ஐம்பது பதிவிலேயே மனதைக் கவர்தவரும், ஐம்பதாவது பதிவிலேயே பலரது வாழ்த்தையும் பெற்றவரும் நீங்கள் ஒருவர்தான் என்று நினைக்கிறேன்

இன்பக்கவி
07-06-2009, 01:12 PM
உங்கள் வாழ்த்து மழையில்
என் கண்ணீர்த் துளிகள் கரைகின்றன.......
வாழ்த்திய உள்ளங்களுக்கு
நன்றிகள்...
உங்கள் வாழ்த்துக்கள்...
என்னை மேம்படுத்த உதவியாக இருக்கும்...

பரஞ்சோதி
14-06-2009, 06:14 AM
ஹா! ஹா!

நானும் ஐம்பது வயது கடந்த பெரியவரா நீங்க, நீங்க என்னிடம் நட்பு பாராட்டுறீங்களே என்று பெருமையாக வந்தேன். கவிதை கண்டு பெருமிதமடைகிறேன்.

கவிதை அருமையாக இருக்குது. மன்ற உறவுகளுக்கு பெருமை சேர்த்திருக்கீங்க.

தொடர்ந்து எழுதுங்கள், ஐம்பது வயது என்ன நூறு வயதை தாண்டியும் நீங்க எழுதுங்க, நாங்களும் படிப்போமுல்ல.

பரஞ்சோதி
14-06-2009, 06:17 AM
ஏதோ உங்கள் வயதைத்தான் சொல்கிறீர்களோ என்று தலைப்பார்த்தவுடன் நினைத்தேன். நானும் என்னுடைய வயது 37 என்று சொல்லிவிடலாமா என்று நினைத்தேன். நல்லவேளை அப்படி எதுவும் இல்லை, நானும் என் வயதைச் சொல்லப்போவதில்லை.

கவிதை அருமையாக இருக்கிறது கவிதா அவர்களே. பாராட்டுக்கள். தொடருங்கள்.

அண்ணா, தட்டச்சு பிழை இருக்கிறதே. 7 பிந்தி வந்திருக்குதே.

ஹி ஹி உங்க பாணியில் நாங்களும் 40 தாண்டியவுடன் மூன்றை தான் முன்னாடி வைச்சி வயசை சொல்ல இருக்கிறோம். :icon_ush:

நேசம்
14-06-2009, 10:24 AM
தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி.நிறை குறை சுட்டி காட்டி உங்கள் திறமை வளர்த்திட பலர் இருக்கிறார்கள்.வாழ்த்துகள்

அமரன்
14-06-2009, 05:28 PM
அண்ணா, தட்டச்சு பிழை இருக்கிறதே. 7 பிந்தி வந்திருக்குதே.

ஹி ஹி உங்க பாணியில் நாங்களும் 40 தாண்டியவுடன் மூன்றை தான் முன்னாடி வைச்சி வயசை சொல்ல இருக்கிறோம். :icon_ush:

வயசானாலே கை நடுக்கம், பார்வைக் கோளாறு, தடுமாற்றம் எல்லாம் இருக்கத்தானே செய்யும் அண்ணா.

பரஞ்சோதி
15-06-2009, 09:30 AM
ஹி ஹி

அமரன், இனிமேல் நான் தட்டச்சு பிழை இல்லாமல் இங்கே பதிவு கொடுக்கணும், இல்லைன்னா எனக்கும் 40+ என்று தெரிஞ்சிடும் தானே :)

kavitha
17-06-2009, 08:38 AM
எனது பெயரில் கிடைத்த தோழிக்கு,
உங்களது எளிமையான நடை தான் வெற்றியின் ரகசியம். நன்றாக எழுதுகிறீர்கள். போக போக வடிவம் வந்து விடும். தொடர்ந்து எழுதுங்கள். நிறைய 50 கள் அடைய வாழ்த்துக்கள்.

த.ஜார்ஜ்
17-06-2009, 09:43 AM
கலக்கம் வேண்டாம் கவிதா.எழுத எழுதத்தான் எழுத்து வசப்படும்.

நிறைய்ய... எழுதுங்கள்.

இன்பக்கவி
19-06-2009, 03:53 AM
எல்லோருக்கும்
நன்றிகள்...:):)
விரைவில் வருவேன் 100 வது படைப்பு மற்றும் சமர்ப்பணத்தோடு......:icon_b:
உங்களை எல்லாம் விடுவதாக இல்லை....:lachen001:
காத்திருங்கள்;)
வாழ்த்தவோ இல்லை திட்டவோ........:icon_rollout::icon_rollout:

நாகரா
19-06-2009, 06:41 AM
வாழ்த்துக்கள் கவிதா
புதுக் கவிதைக்கு எளிமையே பலம்.
எளிமை மிளிர்கிறது உம் கவிகளில்.
பல்லாயிரங்களாக உம் நவ கவி வெள்ளம் பெருகட்டும்.