PDA

View Full Version : தினமும் ஒரு பிரபலம்rajeshkrv
24-09-2003, 12:29 PM
[b]ஒவ்வொரு நாளும் ஒரு பிரபலத்தை பற்றி இங்கே பேசலாம்,
விவாதிக்கலாம்.
அவர் கலைத்துறை,அரசியல்,மருத்துவம், இலக்கியம்,
பொதுசேவை,இசை என எந்த துறையை சார்ந்தவராகவும் இருக்கலாம்

24/09/03
இந்த பிரபலங்களின் வரிசையின் தொடக்கமாக

திருமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி

இவரை தெரியாதவர்களே இருக்க முடியாது.
1916'ல் கோயில்கள் நகரமான மதுரையில் வீணை கலைஞர் சண்முகவடிவுக்கு பிறந்தவர்.
இவரது முதல் ரெக்கார்ட் அவரது 10 வயதிலேயே வெளிவந்தது

சதாசிவத்தை மணந்து இரு
பிரபலங்களும் ஆதர்ஸ தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர்

இன்றும் நாம் தினமும் காலையில் சுப்ரபாதமாக கேட்பது இவர் குரல் தான்.

இசையுலகின் பல விருதுகள் இவரை தேடி வந்தன
உயரிய பாரத ரத்னா விருதும் பெற்ற பெருமையுடையவர்

மகாத்மா காந்தி அவர்கள் இவர் பாடிய வைஷ்னவ ஜனதோ வை மிகவும் ரசிப்பாராம்

1954'ல் பத்மபூஷன் விருது பெற்றவர்
1966'ல் ஐக்கிய நாடு சபையில் பாடியவர்
1968'ல் மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருது பெற்ற முதல் பெண்மனி இவரே.
1975'ல் பத்மவிபூஷன் என சொல்லிக்கொண்டே போகலாம்

இந்த இசையரசியின் புகழ் உலகில் இசை உள்ள வரைக்கும் நிலைத்து இருக்கும்

ராஜ்
[/color]

இக்பால்
24-09-2003, 01:38 PM
தன்ராஜ் பிள்ளை

ஹாக்கி என்றாலே நமக்கு நினைவுக்கு வருகிறவர் தன்ராஜ் பிள்ளை ஆவார்.
இவர் தமிழராக இருந்தாலும் மகாராஷ்டிராவிலுள்ளா பூனாவுக்கு அருகில்
உள்ள கிர்கி என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தவர். 16.7.1968-ல் பிறந்த இவருக்கு 34 வயது ஆகிறது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் ஐவரில்
ஒருவராக பிறந்தவர்.

இவர் 1995-ல் அர்ஜூன புரஷ்கர் அவார்டும், 1998-99க்கான சிறந்த
விளையாட்டு வீரருக்கான கே.கே.பிர்லா அவார்டும், 1999-ல் ராஜீவ் காந்தி
கேல் ரத்னா அவார்டும் பெற்ற இவர் 2000 வருடத்தில் பத்மஸ்ரீ அவார்டும்
வாங்கியுள்ளார். இவர் 3 ஒலிம்பிக் விளையாட்டுகளிலும், 4 ஆசியன்
விளையாட்டுகளிலும், 3 உலகக் கோப்பை போட்டிகளிலும் விளையாடி
உள்ள ஒரே இந்தியர் என்ற சாதனையை அடைந்திருப்பவர்.

இவர் சிறந்த தன்னம்பிக்கைக்கு ஒரு அடையாளமாகத் திகழ்கிறார்.
இவருடைய சிறந்த விளையாட்டு ஆர்வம் நமக்கு மகிழ்ச்சியாகவும்,
எதிர் அணிகளுக்கு கவலையும் கொடுக்க கூடியாத இருக்கிறது.

-அன்புடன் அண்ணா.

poo
24-09-2003, 03:43 PM
நல்ல பயனுள்ள தலைப்பு!!

அனைத்து நண்பர்களும் தொடர்வார்கள் என நம்புகிறேன்!!!

இளசு
24-09-2003, 06:34 PM
மிக மிக நல்ல முயற்சி..
என் உற்சாகமான வரவேற்பும்
உள்ளம் நிறைந்த வாழ்த்துகளும்..

இசையரசி எம். எஸ் அம்மா அவர்களுடன்
சுபமங்கள ஆரம்பம்...
காற்றினிலே வரும் கீதம் போல்
நீடித்து நெஞ்சில் நிலைக்க ஆசிகள்..

இளவலின் இரண்டாம் பதிவு அருமை..
அண்மையில் குமுதம் ஆரம்பித்த தொடருக்கு
மன்றம் அளிக்கும் எசப்பாட்டு இந்த தொடர்.

ஆரம்பித்த நண்பர் ராஜ் அவர்களை மிகவும் பாராட்டுகிறேன்.

rajeshkrv
25-09-2003, 04:20 AM
பாராட்டுக்களுக்கு நன்றி
பூ கூறியது போல் தன்ராஜ் பிள்ளை ஒரு தலைசிறந்த
விளையாட்டு வீரர்.

25/09/03

ஆப்ரஹாம் லிங்கன்

பிப்ரவரி 12, 1809'ல் ஏழை குடும்பத்தில்
பிறந்த இவர் அமெரிக்க ஜனாதிபதி ஆனது சாதனையே.

இவர் அமெரிக்காவின் 16'வது குடியரசுத்தலைவர்
(1861-1865 )
குடியரசுக்கட்சியை பலப்படுத்தியவர் இவரே. இவரின் தலமையில் நடந்த சிவில் போர் யாரும் மறக்க இயலாத ஒன்று.
ஒரு புனித வெள்ளியன்று(ஏப்ரல் 14, 1865) இவர் நடிகர் ஜான் வில்க்ஸ் பூத் என்பவரால் வாஷிங்க்டன்னில் சுட்டுக்
கொல்லப்பட்டார்.
உலக அரசியலில் இவரது பெயர் என்றும் நிலைத்து நிற்கும்
ராஜ்

இளசு
25-09-2003, 11:19 PM
ராஜ் அவர்களின் அரிய தொடர்.. அருமைத் தொடர்.
பாராட்டுகள். தொடருங்கள்.

பாரதி
26-09-2003, 02:07 AM
நல்ல பதிவு ராஜேஷ். பாராட்டுக்கள்.

rajeshkrv
26-09-2003, 04:02 AM
[b]26/09/03
[i]ஸ்ரீனிவாஸ ராமானுஜம்

கணக்கில் பூஜ்யத்தை அறிமுகப்படுத்திய மாமேதை.

1887'ல் டிசம்பர் 22 ஆம் நாள் ஈரோட்டில் பிறந்தார்.
13 வயதிலேயே ட்ரிக்னோமெட்ரி யை கறைத்து குடித்தார்.

பள்ளியில் கணக்கில் காட்டிய ஆர்வத்தை மற்ற பாடங்களில் அவர்
காட்டவில்லை.

அவருடைய கணக்கு எண் விளையாட்டிற்கு மாதம் 2000 தாள்கள் தேவைப்பட்டதாம்

இவரின் இந்த போக்கு குறித்து அவரது தந்தை மிகுந்த கவலையடைந்தார்
அவருக்கு திருமணம் நடத்தி வைத்தார்.

பின் கணக்கு மேதை ஹார்டியிடம் சேர்ந்தார். அவர் இவரை கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்திற்கு அனுப்பி படிக்க வைத்தார்.

ட்ரினிட்டி கல்லூரியின் fellow ஆக 1918'ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்

ஆனால் டியூபர்குலோசிஸ் காரணமாக அவர் இந்தியா திருப்பி அனுப்பப்பட்டார். இறக்கும் தருவாயில் கூட எண்களோடு
விளையாடிக்கொண்டிருந்தாராம்
32 வயதில் ஏப்ரல் 26 1920'ல் இந்த கணக்கியல் மாமேதையின் உயிர்
பிறிந்தது.

அவருடைய கடைசி கடிதத்தில் ஹார்டிக்கு தன் தீட்டா தியரி பற்றி
எழுதியிருந்தார்
1962'ஆம் ஆண்டு அவரது 75வது பிறந்த நாளையொட்டி தபால்தலை
வெளியிட்டது.
அவரது மறைவுக்கு பின் ஹார்டியும் வாட்சனும் அவரது புத்தகத்திலிருந்து
சிலவற்றை தொகுக்கும் முயர்ச்சியில் இறங்கினர்
ஆனால் வாட்சனின் மறைவினால் அது
பாதியின் நின்றுபோனது.

இவரது புகழ் கணக்கு உள்ளவரை நிலைத்து நிற்கும்.
ராஜ்

இளசு
26-09-2003, 06:54 AM
காலம் காசக் கத்தியால் பாதியில் கிழித்துப்போட்ட கணிதக் கவிதை!
அந்நியன் அளவுக்கு அண்டைவீடு அங்கீகரிக்க மறுத்த புதுக்கவிதை!

நன்றி நண்பர் ராஜுக்கு!

gankrish
26-09-2003, 07:30 AM
ராஜேஷ் நல்ல தலைப்பை ஆரம்பித்து உள்ளீர்.

எம். எஸ்: இவர் குரலை கேட்காமல் விடியாது காலை (சுப்பர்பாதம்)
தன்ராஜ்பிள்ளை: இவர் இல்லையேல் .. ஹாக்கி இல்லை
ராமனுஜம்: எனக்கு இவரை பிடிக்காது. ஏன் என்றால் அவர் கணித மேதை . ஆனா எனக்கு சுட்டு போட்டாலும் கணக்கு வராது (பள்ளிக்கூடத்திலேயும் .. பார்டர் மார்க் வாங்கி தான் பாஸ் செய்தேன்)

Nanban
26-09-2003, 04:20 PM
நல்ல பயனுள்ள தலைப்பு. பங்கு பெறும் பிரபலங்களைப் பற்றி மேலும் கூடுதல் தகவல்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும். Readers Digestல் இந்தத் தலைப்பில் ஒரு புத்தகமே உண்டு. ஆனால், அதில் இடம் பெற்ற இந்தியர்கள் மிகக் குறைவு. நண்பர் ராஜின் இந்த சீரிய முயற்சியால், பல இந்திய சாதனையாளர்களை அறிந்து கொள்ள முடிந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வாழ்த்துகள், இந்தத் தொடர் வெற்றி பெற....

Emperor
27-09-2003, 09:15 AM
நல்லதொரு தலைப்பு, வாழ்த்துக்கள் திரு. ராஜேஷ் அவர்களே, ஆனால் இது "பயனுள்ள தகவல்கள், கட்டுரைகள்" பகுதியில் வந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து.

poo
27-09-2003, 05:49 PM
தொடருங்கள் ராஜ்.. சுவையாய் உள்ளது!

rajeshkrv
29-09-2003, 12:09 PM
சில காரணங்களால் தினம் ஒரு பிரபலம்
இன்று பிரசுரிக்க முடியவில்லை
கட்டாயம் நாளை வரும்

ராஜ்

சேரன்கயல்
29-09-2003, 03:50 PM
இதுவரை தந்த பிரபலங்களது தகவல்கள் அருமை ராஜ்...
தொடருங்கள்...காத்திருக்கத் தயார்...

Dr. Agaththiyan
29-09-2003, 08:12 PM
அருமையான கட்டுரைகள்.
பாராட்டுகள்.

suma
29-09-2003, 09:38 PM
தொடருங்கள்...காத்திருக்கத் தயார்...

இக்பால்
30-09-2003, 06:38 AM
[size=18]டாக்டர் அ.ப.ஜெ. அப்துல் கலாம்.

உங்கள் அனைவருக்கும் நம் குடியரசுத் தலைவரைப் பற்றி நிறையத்
தெரிந்து இருக்கும். இருந்தாலும் நம் தளத்தில் அவரைப் பற்றி ஒரு
கட்டுரை இருப்பது நமக்கு பெருமை என்பதால் இந்தப் பதிவு.

தமிழகத்தில் உள்ள இராமேசுவரத்தில் 15.10.1931-ல் பிறந்தார். இவரது
பள்ளிப் படிப்பு இராமநாதபுரத்திலுள்ள ஸ்வார்ட்ஸ் உயர் நிலைப் பள்ளியிலும்,
கல்லூரி படிப்பு திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் பயின்றார்.
சென்னை எம்.ஐ.டி.யில் டி.எம்.ஐ.டி படிப்பு ஏரோனாட்டிகல் எஞ்சினியரிங்
பாடத்தில் முடித்தார். பயிற்சியை பெங்களூரிலுள்ள ஹிந்துஸ்தான்
ஏரோனாட்டிகல் எஞ்சினியரிங்-இல் முடித்தார்.

இந்திய விமானப் படையில் சேரும் முயற்சி தோல்வியடைந்து கவலையில்
ரிஷிகேஷ் சென்று கங்கையில் நீராடிய போது சுவாமி சினானந்தாவைச்
சந்தித்தார். இவருடைய கவலையில் காரணத்தைக் கேள்விப் பட்ட அவர்
வருபவைகளை மனம் தளராமல் சந்தித்து ஏற்றுக் கொண்டு மேலே
போகுமாறும், எல்லாம் கடவுளால் முன்னரே நிர்ணயிக்கப் பட்டது என்றும்,
ஆகையால் கடவுளிடம் உன்னை அர்பணித்து உனக்கென்று வாழ்க்கையில்
வருவதை ஏற்றுக் கொள் என உபதேசித்தார்.

அதன் பிறகு சிவில் ஏவியேஷனில் ரூ.250/= சம்பளத்தில் இவர் வாழ்க்கை
துவங்கியது. 1980-இல் இவர் கீழிருந்த துறை ரோகினி செயற்கைக்
கோளை வானில் ஏவியது. 1981-இல் பத்மபூஷன் விருது பெற்றார்.

நாக், பிரிதிவி,ஆகாஷ்,திரிசூல், அக்னி போன்ற செயற்கைக் கோள்கள்
இவர் பணியாற்றிய காலத்தில் சோதனை செய்யப் பட்டது.

இவர் சாதனைகளைப் பட்டியலிட்டால் புத்தகமாகி விடும் என்பதால்
இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

-அன்புடன் அண்ணா.

Emperor
30-09-2003, 08:30 AM
இயர் பெயர்: ஆக்னஸ் கோங்ஸா (Agnes Gonxha)
பிறந்த ஊர்: ஸ்காப்ஜெ (யூகோஸ்லாவியா)
பிறந்த தேதி: ஆகஸ்ட் 27 1910
இறந்த தேதி: செப்டம்பர் 5, 1997
பெற்ற விருதுகள்:
- போப் ஜான் பால் XXIII அமைதிக்கான விருது (1971)
- நேரு விருது (1972)
- பால்சன் மற்றும் நோபல் விருது (1979)

இவரது பன்னிரெண்டாவது வயதிலேயே ஏழைகளுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் இவருக்கு உருவாகியது, சில வருடங்களுக்கு பிறகு இவர் இந்தியாவில் சேவைகள் புரிய ஆசைபட்டார்.
இவர் பதினெட்டாவது வயதில் ஐரிஷ் கன்னியாஸ்திகள் மடத்தில் போய் சேர்ந்தார் அவர்களுக்கு கல்கத்தாவில் மிஷினரி வேலைகள் செய்யும் பனி கொடுக்கப்பட்டது. சில மாதங்கள் டப்லினில் பனிபுரிந்துவிட்டு 1928 ஆம் ஆண்டு கன்னியாஸ்திரி அந்த்ஸ்துடன் கல்கத்தா வந்தார்.

1929 - 1948 வரை கல்கத்தாவில் உள்ள புனித மேரி மேல் நிலைபள்ளியில் பனியாற்றினார், ஆனால் பள்ளிக்கு வெளியில் அவர் கண்ட காட்சிகள் அவர் மனதை ஆழமாக காயபடுத்தியது, வறுமையிலும் பட்டினியாலும் வாடும் சிறுவர்கள், படிப்பதற்க்கு தேவையான வசதிகள் இல்லாமல் இருப்பவர்கள் என்று பல தரப்பட்ட தாழ்த்தபட்டோருக்கு உதவிகள் புரிய பள்ளியை விட்டு வெளியேறினார். சிலர் அவருக்கு உதவ முன்வந்தனர். 1950 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் "மிஷினரீஸ் ஆப் சாரிட்டி" துவங்க அனுமதி வழங்கப்பட்டது. இன்று இதில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மருத்துவர்கள், நர்ஸ்கள், மற்றும் பலர் பனிபுரிகிறார்கள்.

rajeshkrv
30-09-2003, 11:40 AM
அன்னை தெரெஸா - நீடு துயர் நீக்க வந்த நிலா
அப்துல் கலாம் - இவர் ஒரு அக்னி சிறகு


30/09/03
மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதய்யர்
---------------------------------------------------------------

உத்தமதானபுரத்தில் ஆனந்த வருஷம் மாசி மாதம் 9'ம் தேதி (19-2-1855) இரவு பிறந்தார்
அவருடைய 5'வது வயதில் அவரது பாட்டனார் அரிச்சுவடி சொல்லித் தந்தார்
பின் அவர்கள் ஊரின் வடக்குத் தெருவில் இருந்த பள்ளியில் நாராயண ஐயர் என்பவரிடம் சில மாதங்களும்
சாமி நாத ஐயரிடம் சில மாதங்களும் படித்தார்.

சாமி நாத ஐயரிடம் சமஸ்கிருதம்,சங்கீதம்,ராமாயணம், விஷ்னு சஹஸ்ரநாமம். கூடவே கணக்கு, தமிழ் என்றும் கற்று கொண்டார்.
சிறு வயதில் நீச்சல், சங்கீதம், சித்திர பழக்கம் என்று பல கலைகளை கற்று கொண்டார்
இவரது தந்தையின் நண்பராகிய சடகோப ஐயங்கார் இவருக்கு தமிழ் விதையை வித்திட்டவர்.

குன்னத்தில் தான் இவருக்கு தமிழ் வேள்வி உண்டானது. பல அறிஞர் அங்கே வருவதுண்டு. அதை இவர் கேட்டு தமிழ் மீது பற்றை வளர்த்து கொண்டார்
செங்கண்ணத்தில் வாசம் செய்தபோது நிறைய படித்தார். அங்கே விருத்தாச்சல செட்டியாரிடம் பல அறிஞர்கள் வந்து தமிழ் சம்பாஷனை செய்வதுண்டு. அப்படித்தான் அவருக்கு தமிழ் தனிப் பாடல்கள் திரட்டுவதில் ஆர்வம் உண்டானது.
சுப்பிரமணிய தேசிகர் கொடுத்த கம்பரந்தாதி தான் இவருக்கு கிடைத்த முதல் பரிசு.

பின்பு இவரே தனிப்பாடல்கள் இயற்றலானார்.
திருவேரக மாலை, ஆனந்தவல்லி பஞ்சரத்தினம் ஆகியவை அவற்றுள் சில.

இவ்வாறு தேடி தேடி தமிழ் பாடல்களையும் நூல்களையும் திரட்டிய பெருமை இவரயே சாரும்
அதனால் தான் இவருக்கு தமிழ் தாத்தா என்று பட்டமும் உண்டு.

இவர் மறைந்தாலும் இவரது தமிழ் தொண்டு மறையாது

ராஜ்

kathukutti
30-09-2003, 02:01 PM
ராஜேஷ் அருமையான தொடர். பல விசயங்கள் இப்ப தான் எனக்கு தெரிய வருகிறது.
வாழ்த்துக்கள்.

இளசு
30-09-2003, 05:14 PM
மன்றத்தின் மூவேந்தர்கள்
பதித்த மும்மூர்த்திகள்...

பாராட்டுகள் நண்பர்கள் இளவல் இக்பால், எம் சொந்தம் எம்ப்பரர்,இசைத் தென்றல் இனிய ராஜ் மூவருக்கும்...

ஊர் கூடி தேரிழுக்கும் இவ்வுயரிய முயற்சி நிச்சயம் வெல்லும்.

(சுவரோட்டியாய் ஆகும் காட்சி இப்பவே என் மனக்கண்ணில்... .)

Emperor
04-10-2003, 08:10 AM
சச்சின் டெண்டுல்கர்
-----------------------------------------
முழு பெயர்: ரமேஷ் சச்சின் டெண்டுல்கர்
பிறந்த தேதி: 23 ஏப்ரல், 1973
பிறந்த ஊர்: மும்பை
பேட்டிங்: வலது கை பேட்ஸ்மேன்
பொளலிங்: வலது கை மீடியம் பேஸ், லெங் பிரேக், வலது கை ஆப் பிரேக்
முதல் ஒரு நாள் போட்டி: பாக்கிஸ்தானோடு, குஜ்ரவாலாவில் நடந்தது 1989/90
முதல் டெஸ்ட் போட்டி: பாக்கிஸ்தானோடு, கராச்சியில் நடந்தது, 1989/90
இப்போட்டிகள் விளையாடும் போது அவருக்கு வயது 16.

ஒரு நாள் போட்டிகள்: 314
- மொத்த ரன்கள்: 12219
- அதிக ரன்கள் (ஒரு போட்டியில்): 186 N.O
- சராசரி: 44.43

டெஸ்ட் போட்டிகள்: 105
- மொத்த ரன்கள்: 8811
- அதிக ரன்கள் (ஒரு போட்டியில்): 217
- சராசரி: 57.58

அவர் விளையாடும் முக்கிய அணிகள்: இந்தியா, யோர்க்ஷயர், மும்பை.
உயரம்: 5 அடி 4அங்குலம்
சாதனை: ஒரு நாள் போட்டிகளில் 10,000 ரன் அடித்த ஒரே பேட்ஸ்மேன். இதில் 28 சதங்களும் 50 அரை சதங்களும் அடங்கும்.
விருப்பமான விளையாட்டு மைதானம்: சிட்னி கிரிக்கெட் மைதானம்
பிடித்த கிரிக்கெட்டர்கள்: கவாஸ்கர், விவ்வியன் ரிச்சர்ட்ஸ், இம்ரான் கான், சண்டிப் பட்டேல்
பிடித்த வேறு விளையாட்டு வீரர்கள்: மரடோனா, போரிஸ் பெக்கர்

இளசு
04-10-2003, 10:28 AM
மூவர் கூட்டணி வெற்றிக்கூட்டணி..
இன்றைய ஆட்டக்காரர் எம்ப்பரருக்கு நன்றி.
சச்சின் - நம் பெருமை, அண்டை வீ(நா)ட்டார் பொறாமை..

(Owner's pride, Neighbours' envy!)

Emperor
06-10-2003, 12:07 PM
வாழ்த்து கூறிய இஅளசு அவர்களுக்கு நன்றி, எங்கே மற்றவர்களை கானவில்லை?
---------------------------------------------------------------------------------------
இன்றைய பிரபலம் திரு.கோபி அன்னன்

பிறந்த ஊர்: குமாஸி (Kumasi), கானா (Ghana)
பிறந்த தேதி: 8 ஏப்ரல் 1938
வகிக்கும் பதவி: (ஏழாவது) செக்ரடரி ஜெனரல் - யுனைடெட் நேஷன்
மனைவியின் பெயர்: நேன் அன்னன் (Nane Annan) இவர் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஒரு வக்கீல்
குழந்தைகள்: 3
இவர் 1962 ஆம் ஆண்டு யுனைடெட் நேஷனில் சேர்ந்தார்
பெற்ற விருது: அமைதிக்கான நோபல் விருது,
விருது பெற்ற தேதி: 10 டிசம்பர், 2001
இவர் பணியாற்றிய பதவிகள் மற்றும் இடங்கள்:
(எதற்க்கும் சரியான் தமிழ் வார்த்தை தெரியவில்லை அதனால் அப்படியே பதித்துவிட்டேன், மன்னித்துவிடுங்கள்)

- அட்மினிஸ்ட்ரேட்டிவ் மற்றும் பட்ஜெட் ஆபீஸர் (WHO), ஜெனீவா
- யூஎன் எக்கனாமிக் கமிஷன் பார் அப்பிரிக்கா (ECA), அடிஸ் அபாபா
- யூஎன் எமர்ஜென்சி போர்ஸ் (UNEF II), இஸ்லாமியா
- யூஎன் ஹை கமிஷன் பார் ரெப்யூஜீஸ் (UNHCR), ஜெனீவா
- யூஎன் ஹெட்குவாடர்ஸ், நீயூயார்க்
- அஸிஸ்டெண்ட் செக்ரட்டரி-ஜெனரல் பார் புரோகிராம் பிலானிங் பட்ஜெட் அண்ட் பினான்ஸ் கன்ரோலர்.

இக்பால்
06-10-2003, 12:09 PM
எம்பரர் தம்பி.... தூள் கிளப்பிறீங்க.... நன்றி.-அன்புடன் அண்ணா.

இளசு
06-10-2003, 08:38 PM
ஐநா சபை வரை கொடிபறக்கவிடும் எம் சொந்தம் பேரரசரை
பாராட்டுகிறேன்.

rajeshkrv
07-10-2003, 09:55 AM
07/10/03

மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி

காந்தி ஜெயந்தி இப்பொழுது தான் முடிந்தது
அதை ஒட்டி பிரபலத்தில் அவரை பற்றியே பேசலாம் என நினைத்தேன்.
போர்பந்தர் நகரத்தில் அக்டோபர் 2'ம் தேதி 1869'ல் பிறந்தார்

முதல் கல்வி ராஜ்கோட்டில் . என்ன தான் இந்தியா ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்தாலும் ஒரு 500 மாகானங்கள் தானாக இயங்க அனுமதி அளித்திருந்தது . ராஜ்கோட் அதில் ஒன்று.
பள்ளி படிப்பை முடிக்கும் முன் அவர் தந்தை மரணம் அடைந்தார்

அவரது 13 வயதில் கஸ்தூரிபாயை மணந்தார்
1888'ல் இங்கிலாந்து சென்று சட்டம் படிக்க முனைந்தார். அவரது அன்னை அப்பொழுது "மது,மாது,மாமிசம்" தொடுவதில்லை என்ற சத்தியத்தை வாங்கி கொண்டார். அங்கே படித்து அங்கே சில காலம் பார் கவுன்சிலில் வேலை செய்தார். பின் இந்தியா திரும்பினார்.

பின்னர் தென் ஆப்ரிக்காவில் தாதா அப்துல்லா என்பவருக்கு சட்ட ஆலோசகராக பணி புரிய சென்றார். அங்கே 20 ஆண்டுகள் தங்கினார்.
அங்கே அவர் கண்ட இன வெறியும் அவருக்கு இரயில் வண்டியில் நடந்த அனுபவமும் அவரை இந்தியர்களின் தலைவராகியது. அங்கே தான்
சத்தியாகிரகம் என்ற சொல்லுக்கு உயிரூட்டினார். சத்தியம் அஹிம்சை தவிர வேறு எதுவாலும் பெற இயலாது என்ற கொள்கையை தீவிரமாக பின் பற்றினார்.

1915 இந்தியா திரும்பி அவரது குருவாக அவர் கருதிய கோகலேயின் சொல் கேட்டு நடந்தார். பின் பல பாகங்களுக்கு சுற்று பயணம் செய்தார்.
பல விதமான ஆர்பாட்டங்களில் கலந்து கொண்டார். பின் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கினார்.

1924'ல் கோஹாட்டில் நடந்த இந்து - முஸ்லிம் கலவரத்திற்காக
சிறையில் இருந்த படியே 21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்

மார்ச் 2 1930'ல் காந்தி வைசிராய் லார்ட் இர்வினுக்கு எழுதிய கடிதத்தில் இந்தியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் உப்பு சட்டதை உடைப்பதை தவிர வழியே இல்லை என்று கூறியிருந்தார்.
சொன்னபடியே மார்ச் 12'ம் தேதி தண்டியை நோக்கி நடை பயணம் மேற்கொண்டார். உப்பு சத்தியாகிரகமானது அது தான்.

1930'ன் பாதியில் சீகன்(சேவாகிராம்) என்ற ஒரு சின்ன கிராமத்தில் குடியேறினார். அங்கு மின்சாரம், ஓடும் நீர் என எதுவும் இல்லாத கிராமம்

1942'ல் காந்தி கடைசி அடியாக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை துவங்கினார்.

போராட்டங்கள் பல நடந்தன. கடைசியாக 1947'ல் சுதந்திரம் கிடைத்தது. அப்பொழுது காந்தி அங்கு இல்லை. ஆயினும் இதற்கு
காரணம் மகாத்மா காந்தியே என்று நேருவும், மற்றவர்களும் அவரை வணங்கினர்.

ஜனவரி 30 1948.
பல வேலைகளால் அன்று மாலை நடக்கவிருந்த கூட்டத்திற்கு அவர் தாமதாமாக வந்தார். தாமதாகிவிட்டதே என்ற பதட்டத்தில் அபு , மனு(காந்தியின் நடை கோல்கள்)இருவரின் உதவியுடன் வேகமாக நடந்தார்.
மேடையின் படியில் ஏறப்போகும் தருவாயில் எல்லோருக்கும் திரும்பிவணக்கம் செய்தார்.அப்பொழுது ஒரு இளைஞன் மனுவை தள்ளி விட்டு காந்தியின் காலடியில் விழுந்து வணங்கி பின் துப்பாக்கியை எடுத்து காந்தியின் மார்பில் 3 முறை சுட்டான். அவருடைய வெள்ளை சால்வை முழுவதும் இரத்த கறை. அவர் ஹேராம் ஹேராம் என்று தன்னை கொன்றவனையும் ஆசிர்வதித்தார். அவர் கீழே விழுந்ததும் அவரது கடிகாரமும் கீழே விழுந்து முட்கள் ஓடாமல் நின்றன. அவை நின்ற மணி 5.12.

மக்களுக்காகவே வாழ்ந்து/உழைத்த இந்த மாமனிதர் நம் இந்தியாவில் அவதரித்த ஒரு அவதார புருஷர்

ராஜ்

இக்பால்
07-10-2003, 12:42 PM
பாராட்டுக்கள் ராஜேஷ். நல்ல பதிவுகள். அது சரி கைத்தடி

ஏன் உடைந்து இருக்கிறது படத்தில்.-அன்புடன் அண்ணா.

இளசு
08-10-2003, 03:50 AM
நல்ல பதிவு ராஜ்.
மன்றத்துக்கு பெருமை சேர்க்கும் பதிவு.
பாராட்டும் நன்றியும்.

Emperor
08-10-2003, 06:37 AM
இன்றைய பிரபலம் வில்லியம் ஷேக்ஸ்பியர்

முழு பெயர்: வில்லியம் ஷேக்ஸ்பியர்
தந்தை பெயர்: ஜான் ஷேக்ஸ்பியர்
தாயார் பெயர்: மேரி ஆர்டென்
பிறந்த தேதி: 23 ஏப்ரல் 1564 (உத்தேசமான தேதி)
பிறந்த ஊர்: ஸ்ராட்போர்ட் அப்பான் ஏவன் (Stratford upon Avon)

அவர் பதினெட்டாவது வயதில் ஆன் ஹாத்வே-ஐ மணந்தார் அதாவது 1582-ல்

அவருக்கு மூண்று பெண் குழந்தைகள் சூசன், ஜூடித் மற்றும் ஹாம்னெட்.
ஹாம்னெட் தனது பதினோறாவது வயதில் இறந்து விட்டார்

1590-ல் லண்டனில் நடிப்பு மற்றும் நாடகம் எழுதும் பனியில் இருந்தார்.
ஆனால் அவருக்கு பிரதான தொழில் ரியல் எஸ்டேட்.
இறந்த தேதி: ஏப்ரல் மாதம் 1616, இவர் இறந்தது இவர் பிறந்த தேதியிலேயே தான் என்று பல செய்திகள் வெளியாயின.

அவரது படைப்புகள்
- ஆண்டோனி அண்ட் கிலியோபட்ரா
- கோரியோலேனஸ்
- ஹாம்லெட்
- ஜூலியஸ் சீஸர்
- கிங் லியர்
- மாக்பெத்
- ஒத்தெல்லோ
- ரோமியோ அண்ட் ஜூலியட்
- டைமன் ஆப் ஏத்தன்ஸ்
- டைட்டிஸ் ஆன்றோநிக்கஸ்
- ஆல்ஸ் வெல் தட் என்ட்ஸ் வெல்
- வீனள் அண்ட் அடானிஸ்
- தீ பீனிக்ஸ் அண்ட் தீ டர்டல்
- சோனெட்ஸ்
- ஹென்றி VI
- ரிச்சர்ட் III
- கிங் ஜான்
- காமெடி ஆப் எரர்ஸ்
- தீ டேமிங் ஆப் தீ ஷரு
- தீ டூ ஜெண்டில்மென் ஆப் வெரோனா
- லவ்'ஸ் லேபர்'ஸ் லாஸ்ட்
- மிட் சம்மர் நைட்ஸ் டிரீம்ஸ்
- ரிச்சர்ட் II
- ஹென்றி IV
- ஹென்றி V
- ஹென்றி VIII
- மெரி ஒய்ப்ஸ் ஆப் வின்ஸ்டர்
- மச் அடூ அபொளட் நத்திங்
- ஆஸ் யூ லைக் இட்
- டுவெள்த் நைட்
- ட்ராய்லஸ் அண்ட் க்ரேஸிடா
- மெஷர் பார் மெஷர்
- பெரிகில்ஸ்
- சிம்பெலின்
- தீ விண்டர்ஸ் டேல்
- தீ டெம்பெஸ்ட்
- தீ டூ நோபல் கின்ஸ்மென்

இக்பால்
08-10-2003, 07:16 AM
பிரமிக்க வைக்கும் படைப்புகள்.

தந்த எம்பரர் தம்பிக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்.

-அன்புடன் அண்ணா.

rajeshkrv
15-10-2003, 08:35 AM
திரு . தியாகராஜ சுவாமிகள் ( கிபி.1767 - 1847)

கர்நாடக இசையின் முன்னோடி, மும்மூர்த்திகளில் ஒருவரான
தியாகராஜர்.

சிறிய வயதில் திரு ராமகிருஷ்ணானந்த் சுவாமிகள் அவரிடம் விதைத்த ராமபக்தி கடைசி வரை அவரிடம் இருந்தது. தன்னை ராமனுக்கு அடிமையாகவே அர்பணித்துக் கொண்டார்.

இவரது கீர்தணைகளை பாடாமல் எந்த கச்சேரியும் இல்லை.

பஞ்சரத்ன கீர்த்தணைகளை இயற்றினார்
அவர் மொத்தம் 24,000 பகுதிகளை 211 ராகத்தில் இயற்றியுள்ளார்.

அவருக்கு முன்னால் இருந்த ஜெயதேவா,புரந்தரதாசர்
கீர்த்தணைகளையும் தவறாது பஜனைகளில் பாடுவார்.

இவரது ராமர் பாடல்கள் இன்றளவும் பிரபலம்
"ராம கோதண்ட ராமா கல்யாண ராமா" என்ற பாடலை
பாலமுரளியும் சுசீலாவும் பாடியிருக்கிறார்கள்.

இவரது சீடர்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவர்கள்
உமயாள்புரம் கிருஷ்ண பாகவதர்,
சியாமா சாஸ்த்ரியின் மகர் சுப்பராய சாஸ்த்ரி

கர்நாடக சங்கீதம் வாழும் வரை இந்த இசை மேதையின் புகழும் வாழும்

இக்பால்
15-10-2003, 09:05 AM
நன்றி ராஜேஷ் அவர்களே....

நானே தியாகராய சுவாமிகள் பற்றி எழுதலாம் என இருந்தேன்.

ஆனால் யோசனையாக இருந்தது. பரவாயில்லை. இப்பொழுது

நீங்கள் கொடுத்து விட்டீர்கள்.-அன்புடன் அண்ணா.

rajeshkrv
10-11-2003, 10:09 AM
எம்.எல்.வசந்தகுமாரி
Csmlv.jpg
1928'ல் திருமதி லலிதாங்கி - திரு கூத்தனூர் அய்யாசாமி தம்பதியருக்கு பிறந்தார். சிறிய வயதிலேயே தன் தாயாருடன் மேடை ஏறத் துவங்கினார். முதல் நிலைப்பயிற்சியை தாயிடமிருந்தும் பின் ஜி.என்.பாலசுப்பிரமணியத்திடமிருந்தும் கற்று தேர்ந்தார். அதனால் அவரிடம் ஜி.என்.பி. சாயல் தென்பட்டது.

மெலோடி, லயம், வித்வாத்(எம்.எல்.வி) என்ன பொருத்தம். அனாயசமாக பாடுவார். எல்லோரும் பாடாததை புது தாளத்தில் அமைத்து பாடுவார்.
புரந்தரதாஸரின் கீர்த்திகளை பாடி புகழ் பரப்பினார்.

இது தவிர திரைப்பட பின்னனிப்பாடகியாகவும் விளங்கினார்

இவரது திரைப்பாடல்கள் சில

கூவாமல் கூவும் கோகிலம்
ஆடல் காணீரோ
ஆடாத மனமும் உண்டோ
வா வா ..

எனக்கு பிடித்தது கூவாமல் கூவும் கோகிலம்

இவரது புதல்வி தான் ஸ்ரீவித்யா. சிறந்த நடிகை.

இன்று குருவின் பெயரை காப்பாற்றி வருபவர் எம்.எல்.வி யின் சிஷ்யையான
திருமதி சுதாரகுனாதன்

ராஜ்

இக்பால்
10-11-2003, 10:13 AM
ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு பதிவு. பாராட்டுக்கள்.

ஸ்ரீவித்யா எம்.எல்.வசந்தகுமாரியின் புதல்வி நல்ல தகவல்.

poo
10-11-2003, 11:16 AM
கோள்மூட்டி வந்த நேரம் அண்ணா!!

இக்பால்
10-11-2003, 11:34 AM
ராஜேஷ் கேஆர்வி ரொம்ப முன் ஜாக்கிரதையாக இருக்கிறாரே!!!
நானும் என் தொடாத தலைப்புகளிலெல்லாம் ஒரு பதிவைப் போட்டு
வைப்பது நல்லது மாதிரி தெரிகிறது.-அன்புடன் இக்பால்.

இளசு
11-11-2003, 06:24 AM
ராஜ்,
நன்றியும் பாராட்டும் இந்த நல்ல பதிவுக்கு....

ஸ்ரீவித்யா ஒரு முழுநேரப் பாடகி ஆகாததில் எனக்கு வருத்தமே...
சுதாவால் அது குறைகிறது.

இளந்தமிழ்ச்செல்வன்
26-07-2004, 11:12 PM
இன்றைய பிரபலம்.

இவரின் இயர் பெயர் <span style='color:#1b00ff'>"வேதாத்திரி"</span>

பாமர மக்களின் பகுத்தறிவாளர் என்றும், அருட்தந்தை, யோகிராஜ், மகரிஷி என்றும் அனைவராலும் அன்போடு அழைக்கப் படுபவர்.

இவரைப் பற்றி முழுமையாக http://www.vethathiri.org இங்கே தெரிந்து கொள்ளலாம்.

அவரைப் பற்றி எழுத நிறைய பக்கங்கள் தேவை என்பதால் அவரின் வலைதள சுட்டியை தந்துள்ளேன்.

தஞ்சை தமிழன்
27-07-2004, 05:16 AM
நல்ல பயனுள்ள தகவல்களை தந்து கொண்டிருக்கும் நண்பர்களுக்கு'

எனது நன்றியும் பாராட்டுக்களும்.

பரஞ்சோதி
27-07-2004, 12:34 PM
புதைந்து கிடந்த பொக்கிஷத்தை வெளிக் கொண்டு வந்த இளந்தமிழ் செல்வன் அவர்களுக்கு நன்றி.

தொடருங்கள் நண்பர்களே!

இளந்தமிழ்ச்செல்வன்
27-07-2004, 04:15 PM
நன்றி நண்பர்களே.

இந்த பதிவை சில மாதங்களுக்கு முன்பே பதிய முயன்றேன் ஆனால் இந்த தலைப்பை எங்கே கண்டேன் என்பது மறந்து விட்டது. அதனால்தான் தாமதம்.

இனி நண்பர்கள் தொடர்வார்கள் என நம்புகிறேன். முன்பு எம்பரரை பார்க்க கிடைத்த வாய்ப்பு இப்பக்கம். தற்போது பல நாட்களாகிவிட்டன அவரைப் பார்த்து.

இளசு
27-07-2004, 10:19 PM
இ.த.செ.. ராமன்..

இப்பதிவு அகலிகை..


மகரிஷி பற்றி மேலும் அறிய உதவும் சுட்டிக்கு நன்றி..

நானும் சொந்தம் எம்ப்பரருக்காக ஏங்கியபடி உள்ளேன் இ.த செ...

பரஞ்சோதி
28-07-2004, 05:01 AM
இ.த.செ.. ராமன்..

இப்பதிவு அகலிகை..


மகரிஷி பற்றி மேலும் அறிய உதவும் சுட்டிக்கு நன்றி..

நானும் சொந்தம் எம்ப்பரருக்காக ஏங்கியபடி உள்ளேன் இ.த செ...

உண்மை தான் அண்ணா,

நானே காணவில்லை, காரணம் ஏன் என்று இவரைப் பற்றி கேட்க நினைத்தேன்.

அலை வந்தது போல் எம்பரரும் வருவார் என்று காத்திருக்கிறேன்.

kavitha
28-07-2004, 11:31 AM
மிக அருமையானப்பதிவு.. இப்படி ஒரு பதிவை ஆரம்பிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிற போது இது மேலெழும்பியதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி இ.த.செல்வன்.

எம்பெரர், ராஜேஷ், இக்பால் அண்ணா, இளசு அண்ணா .. மற்றும் தகவல் அளித்த அனைவருக்கும் நன்றிகள்.ஸ்ரீவித்யா ஒரு முழுநேரப் பாடகி ஆகாததில் எனக்கு வருத்தமே...
சுதாவால் அது குறைகிறது.
எம்.எல் வசந்தகுமாரியின் புதல்விகளா நடிகை ஸ்ரீவித்யாவும், சுதாவும் (எந்த சுதா? கர் நாடகபாடகியா? நடிகையா?) அண்ணா?

rajeshkrv
28-07-2004, 11:35 AM
சுதாரகுனாதன் - எம்.எல்.வி யின் சிஷ்யை.

சாகரன்
28-07-2004, 11:56 AM
சில மாதங்களுக்கு முன்னர் புரட்டி ஆச்சரியப்பட்ட பதிப்பு இது.

நண்பர்கள் மீண்டும் தொடருவது கண்டு மகிழ்ச்சி...

இளந்தமிழ்ச்செல்வன்
28-07-2004, 06:26 PM
இ.த.செ.. ராமன்..

இப்பதிவு அகலிகை..


மகரிஷி பற்றி மேலும் அறிய உதவும் சுட்டிக்கு நன்றி..

நானும் சொந்தம் எம்ப்பரருக்காக ஏங்கியபடி உள்ளேன் இ.த செ...

என்னவொரு ஒப்பீடு இளசு அவர்களே...

எம்பரர் எங்கு இருக்கிறார்? தாங்கள் அவரை பார்த்ததுண்டா? பரஞ்சோதியும் ஆவலாய் உள்ளார்.

பலரும் இப்பகுதியில் பதிய, படிக்க ஆர்வமாய் உள்ளார்கள் போலுள்ளது.

அந்த எண்ணத்தின் அழுத்தமும் தாக்கமும் தான் என்னை இதனை முனைப்பாய் தேட வைத்தது போல.

மைதிலியின் "அர்த்தமுள்ள இந்து மத"த்தில் எழுந்த கேள்விக்கு இங்கு பதில்.

"எண்ணத்தின் சக்தி"

தமிழ்குமரன்
04-11-2004, 05:31 AM
மிக சிறந்த முயற்சி

மன்மதன்
06-11-2004, 11:22 AM
தெரிந்த பிரபலங்களின் தெரியாத விசயங்களையும், தெரிந்த விஷயங்களின் தெரியாத பிரபலங்களையும் வெளிக்கொணரும் இந்த பதிவு ஒரு அற்புத பதிவு. நண்பர்கள் மிக அருமையாக தொகுக்கிறார்கள்.
அன்புடன்
மன்மதன்