PDA

View Full Version : சமீபத்தில் ரசித்தவை



umakarthick
03-06-2009, 01:05 PM
சமீபத்தில் கேட்ட பாடல்:

பசங்க

ஒரு வெட்கம் வருதே வருதே..அழகான பாடல்..இயல்பான காட்சியமைப்பு..படத்தை பற்றி நல்ல விமர்சங்கள் இது வரை..எப்படியாது பார்த்துப்புடனும் பா

குங்குமபூவும் கொஞ்சும் புறாவும்

ஒரு ஊரில் ஒரு தோப்பு..பாடல் அடிக்கடி முணுமுணுப்பது...பாடியது யுவனோ எனவோ நல்லா பாடியிருந்தாப்புல..ஹீரோயினும் ஹீரோவும் பார்க்கும் போது காமெடியா இருந்தாலும் யதார்த்தத்தில் அது தான் நிஜம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்...


சமீபத்தில் சென்ற இடம்:


பாண்டிச்சேரி


காலேஜ் நண்பர்கள் திடீரென்று வந்து என்னை அள்ளிக்கொண்டு பாண்டிச்சேரி கூட்டிச்சென்றார்கள்..பாசக்கார பயக என்று நினைத்தால் ECR ரோட்டில் என் காசில் கார் டேங் நிரப்பிக்கொண்டார்கள்..வந்த செக்போஸ்ட்க்கெல்லாம் 17 ரூ தெண்டமழுது எதிர்ப்பட்ட அழகு பதுமைகளை எல்லாம் கடந்து பாண்டிச்சேரியை அடையும் போது மாலை 4.31.52... அங்கே போனப்பின் தான் நண்பர்களுக்கு போன் போட்டு இங்க என்னப்பா இருக்குது பார்க்க என்றோம்



ஆரோவில் னு ஒன்னு இருக்குது மச்சி அங்கே பாரினர்ஸ் கு தனியா நமக்கு தனியா வழி இருக்கும் பாரினர்ஸ் ரூட்ல போ குஜாலா இருக்கும் எனச் சொல்ல மெதுவாய் உள்நுழைய டிரை பண்ணிய எங்களை லத்தியை காட்டி அப்படிக்கா போவச் சொல்ல தெரிந்த ஓட்டைகளில் எல்லாம் உள்ளே எட்டிப்பார்த்துக்கொண்டே சென்றோம்..ஆரோவில்லில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒண்ணுமில்ல 4 போட் ஒரு பாட்டிக்கடை..ஓரமாய் உட்கார்ந்திருக்கும் ஒரு மேட் பார் ஈச் அதர் ஜோடி காவல் காக்கும் 3 தொப்பை போலீஸ்..மொட்டை தலை பாரினர் அவனுடன் 4 யங் சன்பாத் எடுத்து கொண்டிருந்த வெள்ளைத்தோல் அழகிகள் அவர்களை சிசர்ஸ் சிகரெட் அடித்துக்கொண்டே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 32 1/2 இளசுகள்..

நாங்க கிங்க்ஸுடன் போய் கெத்தா அந்த 4 பெண்களை பார்த்தோம்..போலீஸ் எந்தரித்து வர இதான் சாக்கென்று ஆரோவில் வழியாய் நுழைய பார்த்தோம்..எங்களை தடுத்து மப்டி போலீஸ் 'எந்தூரு' என கடலூரு என்றோம் நாங்கள்..மேலும் கீழும் பார்த்து விட்டு அங்கிட்டு ஒரு வழி இருக்கு அப்படிக்கா போன்னு அசிங்க படுத்த டென்சன் ஆன நாங்க அட போங்கடா நாங்க நைட்டு F டிவில பாத்துக்கிரோம் னு டென்சனாய் பாண்டிச்சேரி பீன் போனோம்

அங்கே கருங்கல்லில் கங்காலிகள் காதலித்துக்கொண்டிருக்க டென்சாகி நல்ல பார் விசாரித்து தெரியாத்தனமாய் ஒரிஜினல் சரக்கு அடித்து தொலைத்து Monday லீவ் போட வேண்டியதாகி போச்சு

சமீபத்தில் பார்த்த படம்:

ரொம்ப நாளாய் என் லேப்பியில் ஸ்லீப்பாகிக்கொண்டிருந்த 'My little bride' என்கிற படத்தை தூசித் தட்டி போட்டேன்..

கொரியன் காமெடி பிளஸ் ரொமான்ஸ் படம் இது..நல்லா தான்யா இருந்தது ..ஹீரோயின் அவ்வளவு அழகு..அவ்ளோ குட்டி..



தாத்தா தான் செத்து போறதுக்குள்ளாற தன் நண்பருக்கு செய்த சத்தியத்துக்காக தன் பேத்திக்கும் தன் நண்பரின் பேரனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்..சின்ன வயதிலிருந்தே சண்டைகோழிகளாக வளர்ந்த இவர்களுக்குள் ஒற்றுமையும் இல்லை விருப்பமும் இல்லை..

ஆனால் ஹீரோ வந்த வரைக்கும் சரி என குட்டி ஹீரோயினை ஹனிமூன் தள்ளிட்டு போக அந்த பொண்ணு எஸ் ஆகி காலேஜ் பையன் ஒருத்தனை டாவடித்து அவன் கூட சுத்த..இந்த ஜோடிகள் வீட்டில் தம்பதிகள் போல நடிக்க..இப்படியே கதை நகருது

முடிவு சுபம் தான் ஆனா எனக்கு என்ன கோவம் னா அந்த சாவக்கிடந்த தாத்தா கடைசி வரை சாவாதது தான்

எனக்கும் இப்படி ஒரு தாத்தா இல்லாமா போய்ட்டாரே