PDA

View Full Version : குழந்தை ஓவியம் II



ஆதவா
03-06-2009, 09:56 AM
அவள் வரைந்த காகிதத்தின் வழியே
லாஸ்காக்ஸின்
கொம்புடைந்த காட்டெருமையொன்று
திறக்காத கதவின் வழியே
மூர்க்கமாக முட்டி வெளியேறுகிறது
ஒன்றன்பின் ஒன்றாய்
வீடுமுழுக்க
புற்களினிடையே பூண்டுகள்
முளைத்துக் கொண்டேயிருக்கின்றன
தரைமுழுக்க
நிறங்களின் சாம்ராஜ்யம்
கொடிகட்டிப் பறக்கிறது
என் தலைக்கு மேலே
ஒரு விண்மீன்
ஊர்ந்து செல்லுகிறது
இன்னும் என்னென்ன
உருப்பெற காத்திருக்கின்றனவோ
அதென்னவோ தெரியவில்லை
நான் வரையும் பொழுது
எதுவுமே உருப்பெற்று
வெளியேறியதில்லை!

(ஓவியாவுக்காக....)

இளசு
30-06-2009, 07:07 PM
புகைப்படங்களில் நேர்த்தியாய் காட்சிதருவதில்
குழந்தைகள், விலங்குகளை விஞ்சமுடியாது..

படைப்புகளில் உயிர்ப்பு வர - திறன் மட்டும் போதுமா?
நிர்மல மனம்... கட்டற்ற அதன் வீச்சும் வேண்டுமா?

வினாக்கள் எஞ்சி நிற்க...

ஓவியம் சிறப்பா
பார்த்த பார்வையின் விசாலமா

எனக் கூடுதல் வினாவுடன்
ஆதவனை வாழ்த்துகிறேன்!

ஆதவா
05-09-2009, 02:42 PM
மிக்க நன்றிங்க அண்ணா..

ஓவியமும் சிறப்புதான், பார்வையும் சிறப்புதான்....