PDA

View Full Version : தொந்தி



ஆதவா
03-06-2009, 09:55 AM
எனக்கு
தொந்தி வளருகிறது என்று
அம்மா சொன்னாள்
நண்பர்கள் தொந்தியை வைத்து
கிண்டல் செய்தார்கள்
ஜெஸிகா கூட
முகம் சுளித்தாள்

தாமரை
தொந்தியினால் ஏற்படும்
பிரச்சனைகளைக் கூறினார்
அதிகம் பணம் சேர்ந்துவிட்டது
உடல் சோர்ந்துவிட்டது என்று
பெயர் குறிப்பிட முடியாத
நண்பனொருவன் கூறினான்

தொந்தி கரைச்சான் லேகியம்
தின்னதில் குடல் சுருங்கியது
தெருப்பிள்ளையாரிடம் வேண்டியதில்
அவர் என்னைவிட தொப்பையாக
இருப்பதாக வருத்தப்பட்டார்
மனச்சலனங்களைப் போக்க
பெருத்த தொந்தியுடைய
பெஞ்சமினை நாடவேண்டியிருந்தது

பிரயோஜனமற்ற பிரயோனத்தில்
சோர்ந்த தொப்பையோடு
வீட்டில் மல்லாந்து படுத்துறங்கையில்
தொந்தி வெளியின் பரப்பு
விளையாடத் தேவையாக இருந்தது
எனது இரு மகள்களுக்கும்

(தாமரை மற்றும் பெஞ்சமினுக்காக.....)

பென்ஸ்
09-06-2009, 09:04 PM
பெரும் மனச்சுமை
கொஞ்சம் இறங்கியது
தொப்பை..!!!

அமரன்
11-06-2009, 07:58 AM
அன்பு ஆதவா.
தொந்தி, குடிகாலத்தின் பரிசா.

தொந்தியில் பிள்ளைகள் சறுக்கி விளையாடுவது மிக மிக நுட்பமான உணர்வு. அதை அழகாக அலைய விட்ட கவிதை. பாராட்டுகள் ஆதவா.

kavitha
17-06-2009, 08:31 AM
யாருப்பா ஜெசிகா? :)

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
21-06-2009, 02:20 PM
ரொம்ப நாளாச்சு ஆதவா இந்த மாதிரி ஒரு கவிதைய படிச்சு. கலக்கிட்டீர்ங்க போங்க. ஜெசிகா பெஞ்சமின் யாருன்னு அடிக்குறியிட்டிருக்கலாம்.

இன்பக்கவி
22-06-2009, 05:39 PM
எனக்கு அவங்க யார் என்று தெரியல...
ஆனால் அவங்க தொந்திக் கூட கவிதை படைக்க முடியுமோ????:lachen001:
எப்படி எல்லாம் சிந்திகிறீங்கள்....:confused::confused:
எனக்கு நட்பு..காதல்...குடும்ப உறவுகள்...சமுதாயம் அப்படி என்று யோசித்து நேரத்தை வீண் பண்ணிடேனோ:traurig001:
...
இனி நண்பர்களை எல்லாம் நல்லா நோட்டம் :D:Dவிடனும்பா....:icon_rollout::icon_rollout:

இளசு
23-06-2009, 07:19 PM
என் அப்பாவையும்
என் பிள்ளைகளையும்
ஒரு சேர நினைக்க வைத்த கவிதை!

அன்று நான்..
இன்று என் பிள்ளைகள்..

இப்படி(யும்) ஒரு நன்மை இருப்பதால்
இருந்துவிட்டுத்தான் போகட்டுமே தொந்தி!

அசத்தல்... ஆதவா!

( இனிய பென்ஸ்..
ஆதவன் அப்பா ஆனபின் இக்கவிதையை அவனுக்கே பரிசளிப்போம்..)

ஷீ-நிசி
27-06-2009, 09:06 AM
தொந்திக்குலாம் கூட கவிதையா!!!

ஆதவா..... இதெல்லாம் எப்படிபா.... !!