PDA

View Full Version : விளையாட்டு - என் கேள்விக்கு என்ன பதில்?



பரஞ்சோதி
02-06-2009, 11:32 AM
நண்பர்களே!

நான் விரைவில் ஒரு வினாடி வினா போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

அதற்காக நான் என்னை தயார்படுத்தி வரும் நிலையில், மன்றத்தில் புதிய திரி தொடங்கலாமே என்ற எண்ணம் வந்தது, அதன் வாயிலாக இத்திரி.

நான் கேட்கும் கேள்விகளுக்கு விடை காணுங்கள். கோக்குமாக்காக இருந்தாலும் விடை சொல்லுங்க. நான் மட்டுமல்ல நான் விடை சொல்ல வாய்ப்பு கொடுத்து மற்றவர்களும் கேள்விகள் கேட்கலாம், ஆக எல்லோரும் கேள்விகள் கேட்கவும், பதில் சொல்லவும் வாங்க.

வழக்கம் போல் உங்கள் பேராதரவை தருவீங்கன்னு நம்பி தொடங்குகிறேன்.

பரஞ்சோதி
02-06-2009, 11:34 AM
போட்டி எண்: 1

கீழே இருக்கும் படத்தில், ஒன்று மட்டும் மற்றதிலிருந்து வேறுபடுகிறது, அது எது? எப்படி?

http://img.photobucket.com/albums/v452/paransothi/forum/B-T-1.jpg

பாரதி
02-06-2009, 11:36 AM
வினாவைக் காணோமே..??
இருந்தாலும் விடை இதுதான் என நினைக்கிறேன்.
A & E ஒரே மாதிரியானவை.

ஆதி
02-06-2009, 11:39 AM
D வேறு படுகிறது..

எல்லாப் படத்திலும் உள்ள சட்டங்கள் ஒன்றுக்கு மேலொன்று என சரிவாய் அடுப்பட்டுள்ளன..

D- படத்தில் மட்டும் கடைசி சட்டம் நான்காம் சட்டத்துக்கு கீழ் வைக்கப்பட்டுள்ளது..

அமரன்
02-06-2009, 11:44 AM
வாழ்த்துகள் ஆதி!

பரஞ்சோதி
02-06-2009, 11:46 AM
வினாவைக் காணோமே..??
இருந்தாலும் விடை இதுதான் என நினைக்கிறேன்.
A & E ஒரே மாதிரியானவை.

ஆஹா!

அண்ணா, வினா எழுப்பும் முன்னரே விடை காண வந்த உங்களுடைய ஆர்வம் என்னை உற்சாகப்படுத்துகிறது.

நான் தட்டச்சு செய்யும் போது தவறுதலாக எண்டர் அடிக்க படம் உடனே வந்து விட்டது.

பாரதி
02-06-2009, 11:48 AM
ஆதியோட பதில் சரி.. வாழ்த்துகிறேன்.
(A & E இரண்டாம் சட்டம் மற்றவற்றிலிருந்து மாறுபட்டிருக்கிறது.. அது சரி.... வினாவை எப்ப தந்தீங்க பரஞ்சோதி?)

பரஞ்சோதி
02-06-2009, 11:48 AM
D வேறு படுகிறது..

எல்லாப் படத்திலும் உள்ள சட்டங்கள் ஒன்றுக்கு மேலொன்று என சரிவாய் அடுப்பட்டுள்ளன..

D- படத்தில் மட்டும் கடைசி சட்டம் நான்காம் சட்டத்துக்கு கீழ் வைக்கப்பட்டுள்ளது..

மிகச் சரியான விடை தம்பி.

பலே கில்லாடிகள் எல்லாம் இருக்கீங்க, உங்களை மடக்குற மாதிரி எடக்கு மடக்கு கேள்விகள் கேட்டால் தான் திரி சுவாரஸ்யமாக செல்லும் என்று நினைக்கிறேன்.

பாராட்டுகள் தம்பி.

பரஞ்சோதி
02-06-2009, 11:50 AM
போட்டி எண்: 2

இப்படங்களில் எதில் அதிக முக்கோணங்கள் இருக்கின்றன. அது எது? மற்றதில் இருக்கும் முக்கோணங்களின் எண்ணிக்கையும் என்ன?

http://img.photobucket.com/albums/v452/paransothi/forum/B-T-2.jpg

பாரதி
02-06-2009, 11:57 AM
A = 7
B = 11
C = 8
D = 6

ஆதி
02-06-2009, 11:57 AM
B- படத்தில் தான் அதிக்க முக்கோணம் இருக்கிறது -11

A - 5

C - 6

D - 4

சரியா அண்ணா ??

பரஞ்சோதி
02-06-2009, 12:01 PM
A = 7
B = 11
C = 8
D = 6

அருமையான கண்டுபிடிப்பு அண்ணா, கடினம் என்று நினைத்தேன், உடனே சொல்லி அசத்திட்டீங்க.

C - மட்டுமே தவறு அண்ணா, அதில் இன்னும் முக்கோணங்கள் தேடுங்க.

பரஞ்சோதி
02-06-2009, 12:03 PM
B- படத்தில் தான் அதிக்க முக்கோணம் இருக்கிறது -11

A - 5

C - 6

D - 4

சரியா அண்ணா ??

அதிகபட்சம் எது என்பதை கண்டுபிடிச்சிட்டீங்க தம்பி, பாராட்டுகள். ஆனால் மற்ற விடைகள் சரியல்ல :)

பாரதி
02-06-2009, 12:04 PM
c = 10 சரியா பரஞ்சோதி...?

பரஞ்சோதி
02-06-2009, 12:09 PM
C - 10 முக்கோணங்களை கொண்டது.

அதிக முக்கோணங்கள் மற்றும் அனைத்தும் முதன் முதலாக விடை கண்ட பாரதி அண்ணாவுக்கு பாராட்டுகள்.

பரஞ்சோதி
02-06-2009, 12:12 PM
போட்டி எண்: 3

ஒருத்தர் பூவுல வாழ்க்கையை முடிச்சிட்டு மேலோகம் சென்றார், அங்கே ஏராளமான கதவுகள் இருந்தன, அதில் ஒன்றை தவிர மற்றவை நரகலோகம் செல்லும், அந்த சொர்கலோகம் செல்லும் கதவு எது என்பதை கண்டறிந்து உதவுங்கள்.

http://img.photobucket.com/albums/v452/paransothi/forum/B-T-3.jpg

தாமரை
02-06-2009, 12:16 PM
சொர்க்கத்தில கூட்டமே இருக்காது. அதான் ஈயாடுது.. :)


E - சொர்க்கத்தின் கதவுகள் திறந்தே இருக்கும். அதான் சாவித்துவாரம் பூட்டமுடியாத இடத்தில் இருக்கு

பரஞ்சோதி
02-06-2009, 12:17 PM
சபாஷ் தலை

சரியான பதில்.

ஹி ஹி ரொம்ப கதவுகள் இருப்பதால் நரகம் கூட்டமாக இருக்குது போல.

ஒரே ஒரு கதவு என்பதால் சொர்கலோகத்திற்கு ஆட்கள் குறைவாக போறாங்க.

சொர்க்கத்தின் வாசலை தொட்டு காட்டிய உங்களுக்கு என் பாராட்டுகள்.

பரஞ்சோதி
02-06-2009, 12:22 PM
பாலச்சந்தர் மாதிரி முக்கோணக்கதைக்கு பதிலாக முக்கோணப்புதிராக கொடுத்து நான் இப்போ வித்தியாசமாக சதுரப்புதிர் கொடுக்கிறேன்.

இப்படத்தில் எத்தனை சதுரங்கள் இருக்கின்றன?

http://img.photobucket.com/albums/v452/paransothi/forum/B-T-4.jpg

praveen
02-06-2009, 12:29 PM
பாலச்சந்தர் மாதிரி முக்கோணக்கதைக்கு பதிலாக முக்கோணப்புதிராக கொடுத்து நான் இப்போ வித்தியாசமாக சதுரப்புதிர் கொடுக்கிறேன்.

இப்படத்தில் எத்தனை சதுரங்கள் இருக்கின்றன?

http://img.photobucket.com/albums/v452/paransothi/forum/B-T-4.jpg

29 சதுரம்

தாமரை
02-06-2009, 12:32 PM
ஒற்றைச் சதுரங்கள் : 22
இரட்டைச் சதுரங்கள் : 12
மூன்றுச்சதுரங்கள் : 5
நான்கு சதுரங்கள் = 1
வெளியிலிருக்கும் வெள்ளைச் சதுரம் - 1

ஆக மொத்தம் 41.. ஹி ஹி..

SathyaThirunavukkarasu
02-06-2009, 03:28 PM
மொத்தம் 35 சதுரங்கள்

பரஞ்சோதி
03-06-2009, 07:21 AM
ஒற்றைச் சதுரங்கள் : 22
இரட்டைச் சதுரங்கள் : 12
மூன்றுச்சதுரங்கள் : 5
நான்கு சதுரங்கள் = 1
வெளியிலிருக்கும் வெள்ளைச் சதுரம் - 1

ஆக மொத்தம் 41.. ஹி ஹி..

அருமை, அருமை

எங்கே நீங்க வெறும் 40 (41) விடை சொல்லி, நானும் சரின்னு சொல்லி, பின்னர் மக்கள் எப்படின்னு விளக்கம் கேட்டால், என் கேள்விக்கு நானே விடை காண மண்டையை உடைச்சிக்கணுமோன்னு நினைச்சேன்.

என் வேலையை எளிதாக்கிய உங்களுக்கு கூடுதல் பாராட்டுகள். சபாஷ் தலை.:icon_b:

பரஞ்சோதி
03-06-2009, 07:39 AM
இதில் எதுங்கோ மற்றவையிலிருந்து வேறுபடுது?

http://img.photobucket.com/albums/v452/paransothi/forum/B-T-5.jpg

samuthraselvam
03-06-2009, 08:09 AM
E- மட்டும் வேறுபடுகிறது என்று நினைக்கிறேன்

அதில் தான் டிசைன் மாறுபட்டு இருக்கிறது..

தாமரை
03-06-2009, 08:20 AM
மற்றவற்றில் ஒன்றன் மேல் ஒன்று அடுக்கப்பட்ட S இருக்க E இல் ஒரு S மட்டும் திரும்பி இருக்கு..

பரஞ்சோதி
04-06-2009, 06:12 AM
மிகச் சரியான விடைய சொன்ன சகோதரிக்கு என் பாராட்டுகள்.

விளக்கமான பதில் கொடுத்த தாமரை சகோதரிக்கும் என் பாராட்டுகள் :)

பரஞ்சோதி
04-06-2009, 06:17 AM
கீழே இருக்கும் படத்தில் எத்தனை முக்கோணங்கள் அமைக்க முடியும்?

http://img.photobucket.com/albums/v452/paransothi/forum/B-T-6.jpg

அமரன்
04-06-2009, 07:49 AM
23 முக்கோணங்கள்.

தாமரை
04-06-2009, 08:28 AM
கேள்விக்கேற்ற பதில்தானா அமரன்.

கேள்வியைக் கவனியுங்கள்

கீழே இருக்கும் படத்தில் எத்தனை முக்கோணங்கள் அமைக்க முடியும்?

நீங்க சொல்றது ஏற்கனவே இருக்கற முக்கோணங்களின் எண்ணிக்கை.

:D ;)

பூமகள்
04-06-2009, 09:44 AM
முதல்ல எல்லாம் அறிஞ்சவங்கள(பெரியவங்க:wuerg019:) இந்த விளையாட்டிலிருந்து நீக்கி கேள்வியாளர்களா மாத்தனும்...:icon_ush::rolleyes:(பரம்ஸ் அண்ணா யாரைச் சொல்றேன்னு உங்களுக்கு புரியுதா???!! ;))

பின்னே எங்கள மாதிரி சின்ன புள்ளைக விளையாடுவதற்குள்ளே சரியான விடையை எழுதிடறாரே...:eek::eek: அவ்வ்வ்வ்வ்வ்வ்............:traurig001::traurig001:

aren
04-06-2009, 09:57 AM
ஆமாம், சின்னப்பசங்களுக்கு பதில் சொல்ல வாய்ப்பே கிடைக்க மாட்டேங்குது.

பூமகள்
04-06-2009, 10:01 AM
23 முக்கோணங்கள்.
ஒற்றை முக்கோணம் - 12

இரட்டை முக்கோணம் - 7

பெரிய இரட்டை முக்கோணம் - 4

மொத்தம் 23 முக்கோணங்கள் படத்துல அமைஞ்சி இருக்கு. ஆனால், படத்தை உடைத்து மாற்றி மாற்றி வைத்து முக்கோணம் அமைக்கனுமான்னு பரம்ஸ் அண்ணா சொல்லலையே.....!!:icon_ush::confused:

அதனால இருக்கறத எண்ணிட்டோம். :icon_rollout::icon_rollout:

அமரன்
04-06-2009, 10:13 AM
ஆமாம், சின்னப்பசங்களுக்கு பதில் சொல்ல வாய்ப்பே கிடைக்க மாட்டேங்குது.

சின்னப்பசங்க துறுதுறு எனப் பதில் சொன்னாலும் பிழை பிடிச்சுடுறாங்க.

பரஞ்சோதி
06-06-2009, 12:16 PM
ஒற்றை முக்கோணம் - 12

இரட்டை முக்கோணம் - 7

பெரிய இரட்டை முக்கோணம் - 4

மொத்தம் 23 முக்கோணங்கள் படத்துல அமைஞ்சி இருக்கு. ஆனால், படத்தை உடைத்து மாற்றி மாற்றி வைத்து முக்கோணம் அமைக்கனுமான்னு பரம்ஸ் அண்ணா சொல்லலையே.....!!:icon_ush::confused:

அதனால இருக்கறத எண்ணிட்டோம். :icon_rollout::icon_rollout:

23ம், சரியான விடைக்கு கிட்ட தட்ட நெருங்கிட்டீங்க சகோதரி. :icon_b:

பரஞ்சோதி
06-06-2009, 12:17 PM
23 முக்கோணங்கள்.

அமரன் தம்பி விடைக்கு அருகில் வந்தாச்சு.

சரி, சரியான விடை: 25 முக்கோணங்கள்.

முயற்சி செய்த அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

பரஞ்சோதி
06-06-2009, 12:18 PM
சரியான ஜோடியை கண்டுபிடிச்சி சேர்த்து வையுங்க :)

http://img.photobucket.com/albums/v452/paransothi/forum/B-T-7.jpg

அமரன்
06-06-2009, 05:06 PM
A-C
B-F
E-H
D-G

நேசம்
07-06-2009, 07:16 AM
அமரன் சரியாக கண்டுபிடிச்சுட்டாரு நினைக்கிறேன்.உண்மைதான் பூமகள் நம்ம கண்டுபிடிக்கறத்துக்குள்ள கண்டு பிடிச்சுறாங்க*

பரஞ்சோதி
14-06-2009, 07:20 AM
தம்பி அமரனின் பதில் மிகச்சரியானது.

இத்திரியை சில நாட்களாக கவனிக்காம விட்டு விட்டேன், மன்னிக்கவும்.

பரஞ்சோதி
14-06-2009, 07:20 AM
இக்கடிகாரங்களில் எது தவறான கடிகாரம், ஏன்?

http://img.photobucket.com/albums/v452/paransothi/forum/B-T-8.jpg

நேசம்
14-06-2009, 08:53 AM
B சரியா அண்ணா

மதுரை மைந்தன்
14-06-2009, 12:51 PM
கடிகாரம் D ஏனெனில் மணி காட்டும் சிறிய முள் அளவுக்கதிகமாக இருக்கிறது.

அமரன்
14-06-2009, 05:03 PM
கடிகாரம் D ஏனெனில் மணி காட்டும் சிறிய முள் அளவுக்கதிகமாக இருக்கிறது.

விடை சரி. காரணம் பிழை என்று நினைக்கிறேன்.

சரியான காரணம் நிமிடக் கம்பிக்குள் செக்கன் கம்பி மறைந்திருக்கிறது.

பரஞ்சோதி
15-06-2009, 09:33 AM
B சரியா அண்ணா

விடை தவறு தம்பி.

அப்படியே விடை சொல்லும் போது காரணத்தை சொன்னால் நன்றாக இருக்கும்.

பிரச்சனை இல்லை, திரும்பவும் பாருங்க, விடை சொல்லுங்க தம்பி

பரஞ்சோதி
15-06-2009, 09:34 AM
கடிகாரம் D ஏனெனில் மணி காட்டும் சிறிய முள் அளவுக்கதிகமாக இருக்கிறது.


இல்லைங்க விடை தவறு.

யாருமே கடிகாரத்தை உத்து பார்க்கலை போலிருக்குது.

பரஞ்சோதி
15-06-2009, 09:38 AM
விடை சரி. காரணம் பிழை என்று நினைக்கிறேன்.

சரியான காரணம் நிமிடக் கம்பிக்குள் செக்கன் கம்பி மறைந்திருக்கிறது.


தம்பி, காரணம் சரியாக இருக்கலாம், ஆனால் விடை தவறு :)

அமரன்
15-06-2009, 09:43 AM
தம்பி, காரணம் சரியாக இருக்கலாம், ஆனால் விடை தவறு :)

c ச் c ... விடை பிழைச்சுட்டுதே.

பார்வை கூர்மையை அதிகரிக்க சாப்பாட்டுல இன்னும் எறும்பைக் கூடச் சேருங்கன்னு வீட்ல சொல்லனும்..:lachen001:

இருதடவை எட்டு வந்துட்டுது.

பரஞ்சோதி
15-06-2009, 09:49 AM
ஹா! ஹா!

சபாஷ், சரியான விடை தம்பி.

சினன் வயசுல காப்பியிலோ, அல்லது ஏதேனும் பானத்தில் எறும்பு விழாமல் இருக்காது, அதிலும் கருப்பு எறும்பு சர்க்கரை பெட்டியில் கட்டாயம் இருக்கும், ஆக அப்படி விழுந்த எறும்பை காரணம் காட்டி வீணாக்காமல் இருக்க பெரியவங்க அடிச்சி விட்ட கதை அது.

நானும் ஒரு காலத்தில் பிள்ளையார் எறும்பை வாயில் போட்டு மென்றிருக்கிறேன். இப்போ கண்ணாடியும் போட்டிருக்கிறேன்.

பரஞ்சோதி
15-06-2009, 09:51 AM
அப்புறம் அனைத்து கடிகாரத்திலும் ஒரு பொதுவான தவறு இருக்குது, அதை கவனிச்சீங்களா?

தாமரை
15-06-2009, 10:11 AM
நாலு படம் குடுத்தா நாலு பேர் பார்வைக்கு நாலு தப்பு இருக்கத்தான் செய்யும். அதையெல்லாம் உத்து உத்துப் பார்த்துச் சொல்லணுமா என்ன?

பரஞ்சோதி
15-06-2009, 10:21 AM
பார்த்தேன், ரசித்தேன், சிரித்தேன்.

நன்றி தாமரையாரே! :)

பரஞ்சோதி
15-06-2009, 10:24 AM
இதில பலரும் ஜோடியாக இருக்க, ஒரே ஒருத்தர் மட்டுமெ தன் ஜோடியை தேடுறார், அவரு யாருங்கோ?

http://img.photobucket.com/albums/v452/paransothi/forum/B-T-9.jpg

தாமரை
15-06-2009, 10:33 AM
இதில பலரும் ஜோடியாக இருக்க, ஒரே ஒருத்தர் மட்டுமெ தன் ஜோடியை தேடுறார், அவரு யாருங்கோ?

http://img.photobucket.com/albums/v452/paransothi/forum/B-T-9.jpg

A J
B H
C L
D N
E K
F I
M O


யாரோ ஒரு "ஜி" தான் ஜோடி தேடறதா கிசு கிசு. மனோ"ஜி" யா? சிவா."ஜி"யா? கரிகாலன்"ஜி"யா? ராகவன் "ஜி" யா தெரியலை.

சிறுபிள்ளை
15-06-2009, 10:39 AM
போங்கப்பா வெரும் முட்டை முட்டையாதான் தெரியுது வேர ஒன்னும் தெரியல*

பரஞ்சோதி
15-06-2009, 10:40 AM
என்ன தலைவரே!

நீங்களே இப்படி சொல்லலாமா?

முட்டையும், கோழியும், கருவாடும் உங்களுக்கு பிடித்த உணவாச்சே

பரஞ்சோதி
15-06-2009, 10:42 AM
A J
B H
C L
D N
E K
F I
M O


யாரோ ஒரு "ஜி" தான் ஜோடி தேடறதா கிசு கிசு. மனோ"ஜி" யா? சிவா."ஜி"யா? கரிகாலன்"ஜி"யா? ராகவன் "ஜி" யா தெரியலை.

தாமரைஜி

உங்கள் பதில் மிகச் சரியான பதில்.

பாராட்டுகள்.

நீங்க கேட்ட கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியலையே?

சிறுபிள்ளை
15-06-2009, 10:56 AM
என்ன தலைவரே!

நீங்களே இப்படி சொல்லலாமா?

முட்டையும், கோழியும், கருவாடும் உங்களுக்கு பிடித்த உணவாச்சே

முட்டை கோழி ஓகே... ஆனால் கருவாடு சுத்தமா ஆகாதுங்கோ.....ஓஓஓஓ

சரியான பதில் தந்த தாமரைக்கு பாராட்டுக்கள்

தாமரை
15-06-2009, 11:00 AM
முட்டை கோழி ஓகே... ஆனால் கருவாடு சுத்தமா ஆகாதுங்கோ.....ஓஓஓஓ

சரியான பதில் தந்த தாமரைக்கு பாராட்டுக்கள்


அப்போ மண்ணில போட்டு புரட்டி அழுக்கு பண்ணி சாப்பிடுங்கோ...!!!:icon_b:

சிறுபிள்ளை
15-06-2009, 11:06 AM
அப்போ மண்ணில போட்டு புரட்டி அழுக்கு பண்ணி சாப்பிடுங்கோ...!!!:icon_b:

ரொம்பவே கடிக்கிராங்கப்பா.... இப்படி கடிக்கிறிங்களே இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க....

ஒரு ரோடு இருக்கு, அந்த ரோட்டுக்குள்ள எந்த வண்டிக்காரனும் போகக்கூடாதுன்னு
" நோ என்ரி" அதாவது வாகனங்கள் செல்லத்தடைன்னு போர்டு வெச்ச்சிருக்கான்.. அப்படி இருந்தும் அதுக்குள்ள ஒரு ஆட்டோக்காரன் போயிடுரான்... அந்த நேரம் பாத்து டிராபிக் போலிஸ் வந்துடுரான் ... ஆனாலும் அந்த போலிஸ்காரன் ஆட்டோக்காரனை ஒன்னும் சொல்லல அது ஏன்??

அமரன்
15-06-2009, 11:11 AM
அதான் போட்டு இருக்கே நோ என்ரி. அப்புறம் எப்படியாம் போலிஸ்கார் போடுவார் என்ரி.

இந்த மாதிரிக் கடிகளை வேறு நூலில் கட்டலாமே சிறுபிள்ளை.

தாமரை
15-06-2009, 11:11 AM
ரொம்பவே கடிக்கிராங்கப்பா.... இப்படி கடிக்கிறிங்களே இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க....

ஒரு ரோடு இருக்கு, அந்த ரோட்டுக்குள்ள எந்த வண்டிக்காரனும் போகக்கூடாதுன்னு
" நோ என்ரி" அதாவது வாகனங்கள் செல்லத்தடைன்னு போர்டு வெச்ச்சிருக்கான்.. அப்படி இருந்தும் அதுக்குள்ள ஒரு ஆட்டோக்காரன் போயிடுரான்... அந்த நேரம் பாத்து டிராபிக் போலிஸ் வந்துடுரான் ... ஆனாலும் அந்த போலிஸ்காரன் ஆட்டோக்காரனை ஒன்னும் சொல்லல அது ஏன்??

வண்டிக்காரணும் என்பதை வண்டியும் போகக்கூடாதுன்னு மாத்துங்க...

ஆட்டோக்காரன் போனா பிரச்சனை இல்லை. ஆட்டோ போனாதான் பிரச்சனை..

இப்படித்தான் பாருங்க... ஒரு கடைவீதியில கூட்ட நெரிசல் அதிகம் அப்படிங்கறதால எந்த வண்டியையும் அனுமதிப்பதில்லை. வாகனங்களுக்கு இந்தச் சாலையில் அனுமதி இல்லை அப்படின்னு போர்டு வச்சிட்டாங்க.

அதற்கு ஒரே ஒருத்தர் எதிர்த்து வழக்கு போட்டார்.

ஏன் தெரியுமா? அவர் பேர் மயில்வாகனம்.

:icon_b:

பரம்ஸ் அடுத்த கேள்வியைக் கேளுங்க சீக்கிரமா...

பரஞ்சோதி
15-06-2009, 11:13 AM
ஹி ஹி

ஆட்டோக்காரன் தலைவர் டயலாக்கை எழுதி வைச்சிருப்பார்.

என் வழி தனி வழி

சிறுபிள்ளை
15-06-2009, 11:15 AM
வண்டிக்காரணும் என்பதை வண்டியும் போகக்கூடாதுன்னு மாத்துங்க...

ஆட்டோக்காரன் போனா பிரச்சனை இல்லை. ஆட்டோ போனாதான் பிரச்சனை..

இப்படித்தான் பாருங்க... ஒரு கடைவீதியில கூட்ட நெரிசல் அதிகம் அப்படிங்கறதால எந்த வண்டியையும் அனுமதிப்பதில்லை. வாகனங்களுக்கு இந்தச் சாலையில் அனுமதி இல்லை அப்படின்னு போர்டு வச்சிட்டாங்க.

அதற்கு ஒரே ஒருத்தர் எதிர்த்து வழக்கு போட்டார்.

ஏன் தெரியுமா? அவர் பேர் மயில்வாகனம்.

:icon_b:

பரம்ஸ் அடுத்த கேள்வியைக் கேளுங்க சீக்கிரமா...

ஹா ஹா...அதுதான் இல்லை அந்த ஆட்டோக்காரனை கூப்பிட்டதே போலிஸ்காரந்தான் குப்புர விழுந்தாலும் மீசையில மண்ணு ஓட்டலன்னு சொல்லி வாதிடுவோம்ல... இருந்தாலும் உங்களோட பதில் கரெக்ட் தாமரை..

பரஞ்சோதி
15-06-2009, 11:21 AM
இதுல எதுங்கோ வித்தியாசமானது?

http://img.photobucket.com/albums/v452/paransothi/forum/B-T-10.jpg

அமரன்
15-06-2009, 11:24 AM
B ரோ வித்தியாசமாக இருக்கேண்ணா.

தாமரை
15-06-2009, 11:25 AM
பி - தானுங்கோ

யாரோ இரண்டாவது முறுக்கலை சரியா செய்யாம விட்டுட்டாங்கோ...

பரஞ்சோதி
15-06-2009, 11:26 AM
மிகச் சரியான பதிலை சொன்ன அமரன் தம்பிக்கும், தாமரை அண்ணனுக்கும் என் பாராட்டுகள்.

வீட்டில முருக்கு சுத்துற அனுபவம் இப்போ கை கொடுக்குது போல :)

அமரன்
15-06-2009, 11:26 AM
பி - தானுங்கோ

யாரோ இரண்டாவது முறுக்கலை சரியா செய்யாம விட்டுட்டாங்கோ...

ஆமாமா.. முறுக்குச் சுடத் தெரியாத ஒருத்தர் சுட்டிருக்கார்.

பரஞ்சோதி
15-06-2009, 11:26 AM
தொடர்ச்சியாக நான்காவது எண் படத்திற்கு அப்புறம் வரும் படம் எதுங்கோ (A/B/C/D)?

http://img.photobucket.com/albums/v452/paransothi/forum/B-T-11.jpg

தாமரை
15-06-2009, 11:31 AM
நாலு பேர் சேர்ந்து, நாலு தெரு சுத்திக் களைச்சுப் போனா, அடுத்துத் தேவைப்படுவது "டீ"(D) தான்

பரஞ்சோதி
17-06-2009, 08:20 AM
ஆஹா!

சரியான விடை தல.

பாராட்டுகள்.

பரஞ்சோதி
17-06-2009, 08:20 AM
டீ குடிச்ச கையோடு முறுக்கு சாப்பிடுங்க.

கீழே இருப்பதில் எந்த முறுக்கு சின்ன முறுக்கு.

http://img.photobucket.com/albums/v452/paransothi/forum/B-T-12.jpg

samuthraselvam
17-06-2009, 10:38 AM
எல்லாமே ஒரே மாதிரி இருக்கே...

இருந்தாலும் J-ன்னு நினைக்கிறேன்..

தாமரை
17-06-2009, 01:07 PM
A,B,C,D,E,F,G,H,I

இதெல்லாம் 25 அலகுகள் இருக்க J பாவம் 24 அலகுகள் தான் இருக்கு

A,B,C,D,E,F,G,H,I

4+4+3+2+1+1+1+2+3+4 = 25

ஆனால் பாவம் J

4+4+3+2+1+1+1+2+3+3 = 24

(எங்க பாட்டி முறுக்கு சுடும் போது பக்கத்தில இருந்து பார்த்தவனாக்கும்)

அமரன்
17-06-2009, 08:01 PM
ஹி...ஹி....
அண்ணே..
வடை சுட்ட பாட்டியைத்தான் எனக்குத் தெரியும். உங்கள் புண்ணியத்தால முறுக்குச் சுட்ட பாட்டியையும் தெரிஞ்சு கொண்டேன்.

சின்னவயசுல எத்தை முறுக்கு வேணும்னு கேட்டு அத்தனை முறுகுல காதுல குடுத்தது ஞாபகத்துக்கு வந்துச்சு.

பூமகள்
18-06-2009, 02:29 AM
டீ குடிச்ச கையோடு முறுக்கு சாப்பிடுங்க.

கீழே இருப்பதில் எந்த முறுக்கு சின்ன முறுக்கு.

http://img.photobucket.com/albums/v452/paransothi/forum/B-T-12.jpg

"J" சின்னதாக தாமரை அண்ணா சொன்னது போல் தோன்றினாலும், எனக்கென்னமோ விடை H என்று தோன்றுகிறது. ஹெச்சுக்குள்ளே சுழி சின்னதா இருக்குக்கே....!! ;)

ஜே வா அல்லது ஹெச்சா... ??!! :confused::confused:

ரெண்டு பதிலிலும் எனக்கு பங்கிருக்குங்கோ... எதுவாவது ஒன்னு ஜெயிக்குமே....!! அப்போ நானும் சரியான விடை சொன்னவளா ஆயிடுவேன்... :D:D

சிவா.ஜி
18-06-2009, 07:22 AM
போங்கப்பா...நானும் இந்த விளையாட்டுல கலந்துக்கலான்னு பாத்தா எனக்கு ஒண்ணுமே தெரியமாட்டேங்குது. கடிகாரங்கறாங்க, முறுக்குங்கறாங்க....எனக்குத்தான் ஒண்ணுமே தெரியாம முறுக்கிட்டு நிக்குது.

அமரன்
18-06-2009, 07:25 AM
உங்களுக்கு நேரம் சரியில்லை சிவா.

பரஞ்சோதி
20-06-2009, 11:32 AM
சபாஷ் பூமகள் தங்கை

அட்டகாசமாக விடை கண்டுபிடிச்சிட்டீங்க. பாராட்டுகள்.

லீலுமா சகோதரி, நீங்க நம்ம சமுத்ராவிடம் கேட்டிருந்தால அவர் சரியான விடை சொல்லியிருப்பார்.

பரஞ்சோதி
20-06-2009, 11:55 AM
கீழே இருக்கும் படத்தில் எத்தனை அறுங்கோணங்கள் (6 பக்கங்கள்) உருவாக்கலாம்?

http://img.photobucket.com/albums/v452/paransothi/forum/B-T-13.jpg

lenram80
20-06-2009, 12:03 PM
(4 x 4) + (2 x 3) = 16 + 6 = 22

பரஞ்சோதி
20-06-2009, 12:07 PM
அன்பின் லெனின்,

விடைய நெருங்கிட்டீங்க, ஆனால் மிகச் சரியான விட அல்ல.

lenram80
20-06-2009, 12:14 PM
(4 x 3) + 3+ (2 x 3) = 12+3+ 6 = 21

பரஞ்சோதி
20-06-2009, 12:33 PM
சபாஷ் தல,

கலக்கிட்டீங்க, ஆமாம் அது என்ன கணக்கு என்று சொல்லுங்க, எல்லோருக்கும் உதவியாக இருக்குமுல்ல :)

அமரன்
20-06-2009, 09:26 PM
சபாஷ் தல,

கலக்கிட்டீங்க, ஆமாம் அது என்ன கணக்கு என்று சொல்லுங்க, எல்லோருக்கும் உதவியாக இருக்குமுல்ல :)

முதல் மூன்று நிலைக்குத்து நிரைகளில் தலா நான்கு வீதம் 12 அதாவது 3 x 4 = 12

நான்காவது நிலைக்குத்து நிரையில் 3

இரண்டாம் மூன்றாம் நிலைகுத்து நிரைகளில் சற்றே பெரிய அறுகோணங்களாக தலா மூன்று வீதம் 6. அதவாது 2 x 3 = 6

மொத்தம் (12+3+6) 21. இதுதான் கணக்கென்று நினைக்கிறேன் அண்ணா.

பரஞ்சோதி
21-06-2009, 07:36 AM
பாராட்டுகள் அமரன்

தெளிவான பதில்.

பரஞ்சோதி
21-06-2009, 07:38 AM
இந்த குறும்பு படங்களில் ஒருவர் மட்டுமே வித்தியாசமானவர், அவர் யாருங்கோ?

http://img.photobucket.com/albums/v452/paransothi/forum/B-T-14.jpg

பரஞ்சோதி
22-06-2009, 07:53 AM
என்னாச்சு யாருமே விடை சொல்ல வரலையா?

போட்டி பிடிக்கலையா?

அமரன்
22-06-2009, 08:11 AM
மற்ற எல்லாத்தையும் K விட சின்னதா இருக்கு

பரஞ்சோதி
22-06-2009, 08:20 AM
இல்லை தம்பி,

ஒரு குறிப்பிட்ட விசயத்தை நீங்க தவற விட்டு விட்டீங்க. அதை பிடிச்சிட்டா விடை வந்திடும் :)

lenram80
24-06-2009, 12:30 PM
விடை : N

விளக்கம்:

N கோட்டின் ஒரு முனையில் ஒரு சதுரம் வர வேண்டும். ஆனால், எல்லாமே வட்டமாக உள்ளது.

பரஞ்சோதி
24-06-2009, 12:35 PM
அருமை, அருமை

லெனின் கலக்கிட்டீங்கப்பூ.

அசத்தல் பதில், பாராட்டுகள்.

ஓவியா தங்கை தன்னிடம் இருக்கும் இபணம் ஆயிரம் அனுப்புவாங்க.

பரஞ்சோதி
24-06-2009, 12:36 PM
கீழே இருக்கும் படங்களில் A, B, C, D இதில் ஒன்று மற்றதிலிருந்து மாறுபடுது, அது எது?

http://img.photobucket.com/albums/v452/paransothi/forum/B-T-15.jpg

தாமரை
24-06-2009, 12:49 PM
D தான் அதிலதன் இரண்டு ஒத்தைக் குச்சி இருக்கு..இரண்டு நாலுகுச்சி இருக்கு.

A - C ல் ஒத்தைக் குச்சி, இரண்டு குச்சி, மூணுகுச்சி, நாலு குச்சி அஞ்சு குச்சி வடிவங்கள் இருக்க..

D யில், ஒத்தைக் குச்சி இரண்டு, மூணு குச்சி, நாலு குச்சி இரண்டு

குச்சி குச்சி ராக்கம்மா!!!

ஆதி
24-06-2009, 12:50 PM
C - மற்றவற்றில் இருந்து மாறு படுகிறது சரியா அண்ணா ?

lenram80
24-06-2009, 12:51 PM
விடை: D

விளக்கம்:
A, B, C களில் உள்ள படங்களில் உள்ள கோடுகளின் எண்ணிக்கை 1,2,3,4,5.

ஆனால் D- ல் மட்டும் 1,1,3,4,4.

lenram80
24-06-2009, 12:53 PM
நான் விடையை பதித்து விட்டுப் பார்த்தால், அதற்குள் 2 பேர் பதில் சொல்லி இருக்கிறார்களே!

பூமகள்
25-06-2009, 02:06 AM
விடை D தான்..

தாமரை அண்ணா.. கொஞ்சம் எங்களுக்கும் வாய்ப்பு கொடுங்களேன்..:rolleyes: (நாங்க விடை சொல்ல யோசிப்பதற்குள் வந்து சொல்லி அழ வைக்கிறீங்களே... ஆவ்..............:frown:) கேள்வியின் நாயகரே விடையும் அளித்தால் நாங்க எல்லாம் எப்போ விளையாடுவது??:mad:

அமரன் அண்ணா, நாம எல்லாரும் சேர்ந்து ஒரு விதிமுறை அமுல்படுத்துவோம்.. 40 வயதுக்கு மேல இருப்பவங்க இந்த விளையாட்டுல பதில் தெரிஞ்சாலும் பதியக் கூடாதுன்னு... என்ன சொல்றீங்க...

தாமரை
25-06-2009, 03:33 AM
அமரன் அண்ணா, நாம எல்லாரும் சேர்ந்து ஒரு விதிமுறை அமுல்படுத்துவோம்.. 40 வயதுக்கு மேல இருப்பவங்க இந்த விளையாட்டுல பதில் தெரிஞ்சாலும் பதியக் கூடாதுன்னு... என்ன சொல்றீங்க...

ஒரு 40 வயசுக்காரர் 5 வயசு குழந்தையை தூக்கி வச்சிருந்தா 40 வயதுக்கு மேல இருப்பவங்க அந்த அஞ்சு வயசு குழந்தைதானே பூ?

பூமகள்
25-06-2009, 04:26 AM
ஹா ஹா.... சொற்சிலம்பரிடம் சொற்போரில் வெல்ல முடியுமா??!!

விட்டுக் கொடுத்துவிடுவார் தாமரை அண்ணா என்ற நம்பிக்கையில்..

பசங்க பட பக்கடா பையன் பாணியில்,

"ஏய்... இப்ப பாரேன்... தாமரை அண்ணா தலையில கைய வைச்சி யோசிக்க ஆரம்பிப்பாரு பாரேன்.. 'சரிம்மா தங்கச்சி..!' அப்படின்னு சொல்லுவாரு பாரேன்...!!.." :D:D

விக்ரம்
25-06-2009, 04:49 AM
C தவறான கடிகாரம், VIII இரண்டு முறை வருகிறது (14ம் தேதி கேட்ட கேள்விக்கான பக்கத்தை முதலில் பார்த்ததால் அது தான் கடைசி கேள்வி என்று தவறாய் புரிந்து பதிந்துவிட்டேன்).

நேற்றைக்கான கேள்விக்கு எனது பதில்.
D
காரணம்: A, B, C யில் 15 குச்சிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, D யில் மட்டும் 14 குச்சிகள் பயன்படுத்தப் பட்டிருக்கிறது..

பரஞ்சோதி
25-06-2009, 07:02 AM
சரியான விடை: D

என்பதை சொன்ன அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

அனைவரின் விளக்கமும் அருமை.

பூமகள் தங்கைக்காக 6 வித்தியாசங்கள் கண்டுபிடிங்க என்ற தனித்திரி தொடங்க இருக்கிறேன் :).

என்ன அப்படி செய்திடலாமா?

பரஞ்சோதி
25-06-2009, 07:03 AM
C தவறான கடிகாரம், VIII இரண்டு முறை வருகிறது (14ம் தேதி கேட்ட கேள்விக்கான பக்கத்தை முதலில் பார்த்ததால் அது தான் கடைசி கேள்வி என்று தவறாய் புரிந்து பதிந்துவிட்டேன்).

நேற்றைக்கான கேள்விக்கு எனது பதில்.
D
காரணம்: A, B, C யில் 15 குச்சிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, D யில் மட்டும் 14 குச்சிகள் பயன்படுத்தப் பட்டிருக்கிறது..

சரியான விடை நண்பரே!

தொடர்ந்து பங்கேற்று சிறப்பியுங்கள்.

பரஞ்சோதி
25-06-2009, 07:04 AM
ஹா ஹா.... சொற்சிலம்பரிடம் சொற்போரில் வெல்ல முடியுமா??!!

விட்டுக் கொடுத்துவிடுவார் தாமரை அண்ணா என்ற நம்பிக்கையில்..

பசங்க பட பக்கடா பையன் பாணியில்,

"ஏய்... இப்ப பாரேன்... தாமரை அண்ணா தலையில கைய வைச்சி யோசிக்க ஆரம்பிப்பாரு பாரேன்.. 'சரிம்மா தங்கச்சி..!' அப்படின்னு சொல்லுவாரு பாரேன்...!!.." :D:D

ஹி ஹி அவர் சொல்லன்னா என்ன, நான் சொல்லிடுறேன்.

ஒரு தனித்திரி உங்களை போன்ற குழந்தைகளுக்காக தொடங்கிடலாம்.

பரஞ்சோதி
25-06-2009, 07:05 AM
கீழே இருக்கும் நான்கு படங்களில் ஒன்று மட்டுமே ஏதோ ஒருவகையில் வேறுபடுது, அது எப்படி என்று கண்டுபிடிங்க பார்ப்போம்.

http://img.photobucket.com/albums/v452/paransothi/forum/B-T-16.jpg

தாமரை
25-06-2009, 07:11 AM
வரிசையா வடிவங்களை கொடுத்து எது வித்தியாசம்னு கேட்டுகிட்டு இருக்காரே?

இதிலிருந்து என்ன தெரியுதுன்னா பரஞ்சோதி மாமா நிறைய ஃபிகர் பாக்கறாரு....

:D :D :D

எனக்குப் பதில் தெரியும். ஆனால் சொல்லலை... போதுமா....?

பரஞ்சோதி
25-06-2009, 07:13 AM
ஹிஹி தாமரையாரும் எனக்கு முன்னாடியே நல்லா பிகர் பார்த்து செலக்ட் செய்து வைச்சதால தான் விடையை டாண் டாண்ணு அடிக்கிறார்.

எனக்கு தெரியும் விடை நீங்க கண்டுபிடிச்சிட்டீங்கன்னு, யாரும் சொல்லலைன்னா சொல்லிடுங்கப்பூ.

அமரன்
25-06-2009, 08:48 AM
சீச்சீ.. இந்தப் பழம் புளிக்கும்.

பாலகன்
25-06-2009, 09:38 AM
ஒரு ஆட்டோகாரன் தானே போகிறான் சிறுபிள்ளை அண்ணே.. அவனோட ஆட்டோ தான் வீட்டுல இருக்குமே? சரியா?

lenram80
25-06-2009, 11:15 AM
விடை: C

இதில் தான் ஒரு முக்கோணம் குறைவாக உள்ளது,
மற்ற எல்லாவற்றிலும், 2 சதுரம், 2 வட்டம், 2 கோடு, 2 முக்கோணம் உள்ளது.

பரஞ்சோதி
25-06-2009, 11:26 AM
தாமரையாரின் பதில் என்னவோ?

- போட்டு வாங்கும்

santhan
25-06-2009, 12:02 PM
"D" ,\ஏன் என்ரால் இதில்தான் நிலிக்குத ஸமசீர் அக்ச்சு இல்ல.மட்ட எல்லதுக்கும் உன்டு.னான் ஸொன்னது ஸரியா

தாமரை
25-06-2009, 12:05 PM
இதில இரண்டு பதில் இருக்கு பரம்ஸ்..

லெனின் சொன்னதில் தவறு இருக்கு, ஏன்னா D யில் மூணு சதுரங்கள் இருக்கு,

இன்னொரு விடை "D". மத்த மூணு உருவத்துக்கும் நட்ட நடு செண்டர்ல செங்குத்தா ஒரு கோடு கிழிச்சா இரண்டு பகுதிகளும் கண்ணாடி பிம்பங்களாகத் தெரியும்.

அதை இரண்டா மடிச்சா ஒரே அமைப்பு கிடைக்கும். ஆனா D அப்படி இல்லை..

இன்னும் ஒரு விடை இருக்கு.. புத்திசாலி மக்கள் கண்டுபிடிக்கட்டுமே...

ஆமாம் உங்களுக்கு அது தெரியுதா?

:D :D :D

santhan
25-06-2009, 12:21 PM
தாமரை!!!
நான் சொல்லவா!! "A" தவிர மட்ட எல்லாதிலயும் வட்டம் தனிதனியா இருக்கு.ஆனால் "A" இல் மட்டும்தான் இரண்டு வட்டமும் ஒன்ருக்குல் ஒன்ரா இருக்கு.நான் சொல்லுரது சரியா?
:)

தாமரை
25-06-2009, 12:31 PM
இன்னும் கூட இரண்டு விடை இருக்கு... :D :D :D

பரஞ்சோதி
25-06-2009, 02:29 PM
இதில இரண்டு பதில் இருக்கு பரம்ஸ்..

லெனின் சொன்னதில் தவறு இருக்கு, ஏன்னா D யில் மூணு சதுரங்கள் இருக்கு,

இன்னொரு விடை "D". மத்த மூணு உருவத்துக்கும் நட்ட நடு செண்டர்ல செங்குத்தா ஒரு கோடு கிழிச்சா இரண்டு பகுதிகளும் கண்ணாடி பிம்பங்களாகத் தெரியும்.

அதை இரண்டா மடிச்சா ஒரே அமைப்பு கிடைக்கும். ஆனா D அப்படி இல்லை..

இன்னும் ஒரு விடை இருக்கு.. புத்திசாலி மக்கள் கண்டுபிடிக்கட்டுமே...

ஆமாம் உங்களுக்கு அது தெரியுதா?

:D :D :D

ஹி ஹி உங்களுடைய ஒன்றிற்கு மேற்பட்ட விடைக்கு தான் நான் கேட்டேன்.

அப்புறம் என்னை பார்த்து, என்னை பார்த்து, என்னை பார்த்து, என்ன, என்ன, கேள்வி, கேள்வி, கேட்டு, கேட்டு புட்டீங்கப்பூ.

- திக்கி முக்கி குதிரையில் ஏறி ஓடியபடி

பரஞ்சோதி
25-06-2009, 02:34 PM
விடை: C

இதில் தான் ஒரு முக்கோணம் குறைவாக உள்ளது,
மற்ற எல்லாவற்றிலும், 2 சதுரம், 2 வட்டம், 2 கோடு, 2 முக்கோணம் உள்ளது.

பாராட்டுகள் லெனின், இது பொதுவான, சரியான விடை.

ஆனால் இன்னும் விடைகள் உருவாக்கலாம், அதனை கீழே ஒவ்வொருவராக சொல்லிட்டு இருக்காங்க, பார்ப்போம் எத்தனை விடைகள் வருதுன்னு.

lenram80
25-06-2009, 03:52 PM
பாராட்டுகள் லெனின், இது பொதுவான, சரியான விடை.

.


மிக்க நன்றி பரஞ்சோதி....

lenram80
25-06-2009, 03:57 PM
லெனின் சொன்னதில் தவறு இருக்கு, ஏன்னா D யில் மூணு சதுரங்கள் இருக்கு,

D - ல் உள்ள 3 -ஆவது சதுரம் அதற்கென்றே உள்ள கோடுகளால் (Dedicated lines) உருவாக்கப்படவில்லை.

முக்கோணம், மற்ற சதுரத்தின் கோடுகளை கொண்டு 3 வது சதுரம் உருவானதால் நான் அதை கணக்கில் எடுத்து கொள்ளவில்லை. மற்ற A, B, C - ல்
தனிப்பட்ட கோடுகள் மூலம் சதுரங்கள் உள்ளன.

அமரன்
25-06-2009, 07:37 PM
சீச்சீ.. இந்தப் பழம் புளிக்கும்.
cc இந்தப் பழம் புளிக்கும்னு போட்டிருக்கனுமோ.
ஹி...ஹி.. பிகரு.. பார்வை... அதிகம்... ஆருன்னு தெரியுதே..

தாமரை
26-06-2009, 03:37 AM
D - ல் உள்ள 3 -ஆவது சதுரம் அதற்கென்றே உள்ள கோடுகளால் (Dedicated lines) உருவாக்கப்படவில்லை.

முக்கோணம், மற்ற சதுரத்தின் கோடுகளை கொண்டு 3 வது சதுரம் உருவானதால் நான் அதை கணக்கில் எடுத்து கொள்ளவில்லை. மற்ற A, B, C - ல்
தனிப்பட்ட கோடுகள் மூலம் சதுரங்கள் உள்ளன.



http://img.photobucket.com/albums/v452/paransothi/forum/B-T-16.jpg

படத்தை நன்கு உற்றுப்பார்த்தால், இரண்டு தனிக் கோடுகளும் படத்தில் இரு கடைசிகளில் செங்குத்தாக உள்ளது எனப் புரியும். முக்கோணத்தின் அடிப்பாகத்திற்கும், மற்ற இரு சதுரங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியில் இருக்கும் சிறிய இடைவெளியும் கோடுகளால் இணைக்கப்பட்டு இருக்கிறது. அதனால்தான் அது மூன்றாவது சதுரமாகி விட்டது. முக்கோணத்தின் அடிப்பாகம் சரியாகப் பொருந்தி இருந்தால் நீங்கள் சொல்வது சரி.

D-ஐ தவிர மற்ற இடங்களில் துண்டுக் கோடுகள் வட்டங்களைத் தொட்டுக் கொண்டுதான் இருக்கின்றன என்பது இன்னொரு வித்தியாசம்.

B -ல் மட்டும் வட்டங்களுக்குள் ஒன்றுமில்லை.. இது இன்னொரு வித்தியாசம்.

பூமகள்
26-06-2009, 02:53 PM
பரம்ஸ் அண்ணா எனக்காகவே ஒரு திரி ஆரம்பிக்க இருப்பது கண்டு பெருமகிழ்ச்சி.. நன்றிகள் அண்ணா...

ஹி ஹி.. இந்த கேள்வி ரொம்ப கடினமா இருப்பதால் பெரியவங்க மட்டும் விளையாடிக்க அனுமதிக்கிறேன்..

தள்ளி நின்று குச்சி மிட்டாய் கடித்தபடி,

பரஞ்சோதி
27-06-2009, 12:31 PM
விடைகள் சொன்ன அனைவருக்கும் என் பாராட்டுகள்.

கூடுதலான விடை கண்டோருக்கும் என் பாராட்டுகள்.

காக்காய் கடி கூட கொடுக்காமல் தனியாக குச்சி மிட்டாய் சாப்பிடும் தங்கைக்கும் என் பாராட்டுகள்.

பரஞ்சோதி
27-06-2009, 12:32 PM
மூன்றாவது படத்தில் கீழே இருக்கும் மூன்றில் எது பொருந்தும்?

http://img.photobucket.com/albums/v452/paransothi/forum/B-T-17.jpg

lenram80
28-06-2009, 01:00 AM
...........B........

நேசம்
28-06-2009, 04:29 AM
B தான் நினைக்கிறென்

பூமகள்
28-06-2009, 05:47 AM
விடை : B...

கண்டுபிடிச்சிட்டேனே.. ஹ்ம்ம்.. லெனின் அண்ணா முந்திட்டார்.. பரவாயில்லை.. அடுத்த வாட்டி பார்த்துக்கறேன்.

பரஞ்சோதி
28-06-2009, 06:19 AM
சரியான விடையை கண்ட லெனின், ஆமோதித்த நேசம், அதை உறுதிப்படுத்திய பூமகள் ஆகியோருக்கு என் வாழ்த்துகள்.

பரஞ்சோதி
28-06-2009, 06:20 AM
அது அப்படி ஆனால், இது எப்படியாகும் :)?

http://img.photobucket.com/albums/v452/paransothi/forum/B-T-18.jpg

நேசம்
28-06-2009, 07:30 AM
c சரியான விடை

பூமகள்
29-06-2009, 02:04 AM
நடுவில் உள்ள கோட்டை கடிகார முள்ளுக்கு நேர் திசையில் திருப்பி, பின் அதன் மேல் இருக்கும் பொருட்களை ஒரு முறை கடிகார முள்ளுக்கு எதிர்திசையில் திருப்பினால் கிடைக்கும் விடை C.

அமரன்
29-06-2009, 07:05 AM
இந்தளவுக்கு சுத்தில விட்டுத்தான் விடை கண்டுபிடிக்கணுமா.

நீங்க சின்ன முள்ளை சுழற்றி விடை அடைஞ்சிங்களா. பெரிய முள்ளை சுழற்றி விடை அடைஞ்சீங்களா.

பரஞ்சோதி
29-06-2009, 08:59 AM
நடுவில் உள்ள கோட்டை கடிகார முள்ளுக்கு நேர் திசையில் திருப்பி, பின் அதன் மேல் இருக்கும் பொருட்களை ஒரு முறை கடிகார முள்ளுக்கு எதிர்திசையில் திருப்பினால் கிடைக்கும் விடை C.



மிகச் சரியான விடை தங்கை

பாராட்டுகள். :icon_b:

பரஞ்சோதி
29-06-2009, 09:00 AM
c சரியான விடை

பாராட்டுகள் நேசம்,

உங்களது பதில் முதலில் பார்க்கலை. நீங்க தான் வெற்றியாளர். :icon_b:

பெண்கள் பிரிவில் பூமகள் வெற்றியாளர் :)

பரஞ்சோதி
29-06-2009, 09:02 AM
மேலே இருக்கும் A, B, C ல் ஒன்று மட்டுமே கீழே வந்து சேரும், அது எந்த எண்ணைத் தொடும்?

http://img.photobucket.com/albums/v452/paransothi/forum/B-T-19.jpg

பூமகள்
29-06-2009, 09:20 AM
விடை: C என்று நினைக்கிறேன்....
மத்தவங்க பார்த்து சரியான்னு சொல்லுங்க..

நேசம்
29-06-2009, 12:16 PM
c தான் கீழே வருகிறது.

தாமரை
29-06-2009, 12:27 PM
கடல் -- நிலவுக்கு போகுது அதாவது

C- --->3

அப்படின்னு முழுசா பதிலைச் சொல்லணும்.

இதை ஒரு நகரத்தின் சாலை வரைபடமா வச்சுகிட்டு A,B,C maRRum 1,2,3 ஆகியவற்றை மற்ற நகரங்களுக்குப் போகும் நெடுஞ்சாலையா கற்பனை செய்து சிக்னல் எல்லாம் வச்சு ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடத்துக்குப் போக குறுக்கு வழி கண்டுபிடிச்சா ஜாலியா இருக்குமே பரம்ஸ்.

lenram80
29-06-2009, 02:04 PM
எளிமையான கேள்விகளாக இருப்பதால்,
வெற்றியை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து, நான் இந்த போட்டி தொடரிலிருந்து விலகுகிறேன்.

பரம் ஜோதி அவர்களே... வேறு ஏதாவது கடினமான போட்டி ஒன்றை தனியாக தொடங்குங்களேன்.

பரஞ்சோதி
30-06-2009, 08:44 AM
கடல் -- நிலவுக்கு போகுது அதாவது

C- --->3

அப்படின்னு முழுசா பதிலைச் சொல்லணும்.

இதை ஒரு நகரத்தின் சாலை வரைபடமா வச்சுகிட்டு A,B,C maRRum 1,2,3 ஆகியவற்றை மற்ற நகரங்களுக்குப் போகும் நெடுஞ்சாலையா கற்பனை செய்து சிக்னல் எல்லாம் வச்சு ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடத்துக்குப் போக குறுக்கு வழி கண்டுபிடிச்சா ஜாலியா இருக்குமே பரம்ஸ்.

ஆஹா! இது அசத்தலாக இருக்குதே :)

மிகச் சரியான விடை, சரியான முறையில் சொல்லிட்டீங்க

மேலே சி என்று விடை சொன்ன எல்லோருக்கும் என் பாராட்டுகள்.

பரஞ்சோதி
30-06-2009, 08:49 AM
ஜோடி சேருங்கப்பா.

http://img.photobucket.com/albums/v452/paransothi/forum/B-T-20.jpg

MURALINITHISH
30-06-2009, 09:27 AM
A F
B C
E H
G D
சரியப்பா

தாமரை
30-06-2009, 09:31 AM
ஸ்வேதா வுக்கு பயனாளர் கணக்கு துவக்க வைத்து பதில் சொல்லச் சொல்றேன் பரம்ஸ்.

அனிருத் கிட்ட இதை வைத்து (31 சதுரங்கள்) (24+2+(10*0.5)) ஒரு கட்டடமே கட்டச் சொல்றேன்.

பரஞ்சோதி
05-07-2009, 08:11 AM
ஹி ஹி யாருங்கோ ஸ்வேதா?

அடிக்க வராதீங்க, உண்மையில் தெரியலை :)

தாமரை
05-07-2009, 08:13 AM
ஸ்வேதா என்னோட அஞ்சு வயசுப் பொண்ணு :) அனிருத்தோட தங்கை.


அனிருத் யாருன்னு கேட்கமாட்டீங்க என்று நம்பறேன்.

(மறக்கும்படியான சம்பவமா அது?)

பரஞ்சோதி
05-07-2009, 08:22 AM
A F
B C
E H
G D
சரியப்பா


மிகச் சரியான விடை.

பாராட்டுகள்.

பரஞ்சோதி
05-07-2009, 08:24 AM
ஸ்வேதா என்னோட அஞ்சு வயசுப் பொண்ணு :) அனிருத்தோட தங்கை.


அனிருத் யாருன்னு கேட்கமாட்டீங்க என்று நம்பறேன்.

(மறக்கும்படியான சம்பவமா அது?)

ஹி ஹி

அனிருத் மறக்க முடியுமா? அவர் செய்த கலாட்டாவை தான் மறக்க முடியுமா?

இராகவன் ஞே என்று விழிச்சதை தான் மறக்க முடியுமா?

புத்திசாலி(யின்) குழந்தை :)

தாமரை
05-07-2009, 08:36 AM
முழிச்சது இராகவன் இல்லை.. பென்ஸூ..

மறக்க மாட்டேன்னு சொல்லிகிட்டே மறந்திட்டீங்களே!!!

பரஞ்சோதி
05-07-2009, 08:44 AM
ஹி ஹி

ஸ்வேதாவுக்கு ஒரு போட்டி

தாமரையார் கடைக்கு சென்று பிட்சா வாங்கிட்டு வந்தார், வழக்கம் போல் கணக்கு போட்டு துண்டு துண்டாக வெட்டினார்? இப்போ பெரிய துண்டு ஸ்வேதாவுக்காம், சின்ன துண்டு அனிருத்துக்காம்?

ஸ்வேதா வாங்க, கண்டுபிடிங்க.

இதில் சின்ன துண்டு எது, பெரிய துண்டு எது?

http://img.photobucket.com/albums/v452/paransothi/forum/B-T-21.jpg

பரஞ்சோதி
05-07-2009, 08:45 AM
முழிச்சது இராகவன் இல்லை.. பென்ஸூ..

மறக்க மாட்டேன்னு சொல்லிகிட்டே மறந்திட்டீங்களே!!!

பென்ஸ் தான் அன்று முழுக்க முழிச்சாரே!

இராகவன் ஒரு முறை மாட்டிக்கிட்டு ஆளை விடு சாமின்னு சொல்லலையா?

அமரன்
05-07-2009, 12:16 PM
ஸ்வேதாவுக்கு பதினாலாவது துண்டு.

அனிருத்துக்கு பதினேழாவது துண்டு.

மிச்சமெல்லாம் அண்ணனுக்கா?

பரஞ்சோதி
05-07-2009, 12:48 PM
ஹி ஹி

அமரன் தம்பி

அனிருத் வருவதற்குள் ஓடி விடுங்க, இல்லைன்னா நிலைமை மோசமாகிவிடும்.

சரியான விடை சொன்னதால் உங்களுக்கு ரெண்டு துண்டு, எடுத்துக்கோங்க.

அமரன்
05-07-2009, 12:59 PM
அனிருத்தா..

அவரால (பட்டர்) பென்சுண்ணா தூக்கம் கேட்ட கதையைக் கேள்விப்பட்ட பிறகும் முரண்டு பிடிப்பேனா. எனக்கு ரெண்டே போதும். (எந்த முகூர்த்தத்துல அம்மா எனக்கு முருகன் பேரை வெச்சாங்களோ? பீட்சா கூட ரெண்டு துண்டு கிடைச்சுது)

தாமரை
05-07-2009, 03:46 PM
உம்ம பேரு சுத்தமான புள்ளையார் பேரு.. அதைப் பத்தி விநாயகப் புராணத்தில தனி அத்தியாயமே இருக்கு,,,,

பரஞ்சோதி
06-07-2009, 05:56 AM
நம்ம இன்ஜினியர் மன்மதனுக்கு ஒரு வேலை கிடைச்சுது, ஒரே அளவு உயரமுல்ல தூண்களை நேர்க்கோட்டில் நட வேண்டும். நம்ம ஆளு ஏதோ நினைப்பில் ஒரு தூணை மட்டுமே ஆழம் கம்மியா தோண்டி நட்டுவிட்டார். அது எது?

http://img.photobucket.com/albums/v452/paransothi/forum/B-T-23.jpg

samuthraselvam
06-07-2009, 06:05 AM
J தானே? சரியா அண்ணா?

பரஞ்சோதி
06-07-2009, 06:14 AM
இல்லையே தங்கை.

ஆனால் நெருங்கிட்டீங்க :)

samuthraselvam
06-07-2009, 06:46 AM
அப்ப.... I தான்.

நேசம்
06-07-2009, 07:36 AM
கே தான் சரி என்று நினைக்கிறேன்.

அமரன்
06-07-2009, 08:00 AM
நான் ஙே தான் :eek:

அன்புரசிகன்
06-07-2009, 08:03 AM
K?????

நேசம்
06-07-2009, 08:56 AM
நான் ஙே தான் :eek:

அதான் தெரியுமே.....
(அப்படின்னு பரஞ்சோதி அண்ணன் கேட்க போறாரு அமரன்)

தாமரை
06-07-2009, 11:58 AM
நான் என்ன செய்தேன்? இந்தப் படத்தை டவுன்லோட் செய்து பவர்பாயிண்டில் போட்டேன். தூண்களின் மேல் பகுதிக் கோட்டை தொட்டுச் செல்லுமாறு ஒரு கோடும், கீழ்பகுதி கோட்டைத் தொட்டுச் செல்லுமாறு ஒரு கோட்டையிம் போட்டேன்.

டாப்பில எல்லாம் ஒரு நேர்கோட்டில் இருந்தாலும், கீழ A இருக்கே நம்ம A, அது கொஞ்சம் வெளிய நீட்டிகிட்டு இருக்கு,

அண்ணன் பரம்ஸ் என்ன சொன்னார்? ஒரு தூணை மட்டும் ஆழம் கம்மியா தோண்டி நட்டுட்டார்னு சொன்னார். A தூண் நட்ட இடம் கொஞ்சம் பள்ளமா இருந்திருந்திருந்தா குழியோட ஆழம் கம்மியா இருந்தாத்தானே எல்லாம் ஒரே உயரத்தில் இருக்க முடியும்.

A அந்த அடிப்பாகத்தை கவனிங்க..

http://i326.photobucket.com/albums/k413/stselvan/poles.gif

அதனால A தூணுக்கு தான் குழியோட ஆழம் கம்மிங்கறது நாட்டாமை தீர்ப்பு.

பரஞ்சோதி
06-07-2009, 12:23 PM
கே தான் சரி என்று நினைக்கிறேன்.

ஹி ஹி என்ன தான் தாமரையார் படம் காட்டினாலும் கே (K) என்பது தான் சரி.

தூண்கள் வரிசையாக நிற்கின்றன. அருகே வர வர தூண்களின் உயரம் சம அளவில் உயருகிறது, ஆனால் கடைசியாக இருக்கும் தூண் அதற்கு முந்தையை தூணை விட பெரியதாக இருக்கிறது.

சரி, சரி மன்மதனின் வேலையே அப்படி தான், குழப்பம் தான்.

நேசத்திற்கு என் பாராட்டுகள். படம் காட்டிய தாமரையாருக்கும், முதலில் விடை சொன்ன சகோதரிக்கும், விடை தெரியாமல் ஞே என்று விழித்தவர்களுக்கும் என் பாராட்டுகள்.

பரஞ்சோதி
06-07-2009, 12:41 PM
மேலே இருக்கும் படத்தினை கண்ணாடியில் பார்க்கும் போது அதன் பிம்பம் எதுவாக இருக்கும்?

http://img.photobucket.com/albums/v452/paransothi/forum/B-T-24.jpg

நேசம்
06-07-2009, 12:49 PM
எப் சரியா அண்ணா.....

samuthraselvam
07-07-2009, 04:54 AM
நேசம் அண்ணா சொன்னது தான் சரி என்று நினைக்கிறேன்... F தான் சரி..

பரஞ்சோதி
07-07-2009, 04:57 PM
எப் சரியா அண்ணா.....

மிகச் சரியான விடை தோழரே! :icon_b:

பாராட்டுகள்.

மிகச் சரியான விடையை கணித்த சகோதரிக்கும் என் பாராட்டுகள்.

பரஞ்சோதி
07-07-2009, 05:01 PM
மன்ற மெக்கானிக் யாருங்கோ?

இந்த நட்டை டைட் செய்ய சரியான உபகரணம் எது?

http://img.photobucket.com/albums/v452/paransothi/forum/B-T-25.jpg

தாமரை
07-07-2009, 05:09 PM
D தான்,,,

A, C சின்னது.. B பெருசு..

பரஞ்சோதி
07-07-2009, 06:04 PM
மிகச் சரியான பதில் தாமரையாரே!

வாழ்த்துகள்.

விடையை கண்டுபிடித்தது ஸ்வேதா தானே :)

மன்மதன்
14-07-2009, 10:17 AM
சரி, சரி மன்மதனின் வேலையே அப்படி தான், குழப்பம் தான்.



தாமரையாரையே குழப்பியிருக்கேன்னா பார்த்துகோயேன்..:D

பரஞ்சோதி
14-07-2009, 10:20 AM
சக்கரத்தில் எது சரியாக பொருந்தும்?

http://img.photobucket.com/albums/v452/paransothi/forum/B-T-26.jpg

நேசம்
14-07-2009, 10:25 AM
c சரியா அண்ணா

பரஞ்சோதி
14-07-2009, 10:28 AM
தம்பி,

குட்டிப்பெண் ஸ்வேதா வருவதற்குள் மாத்திடுங்க, இல்லைன்னா உங்களை கிண்டல் செய்திடுவார் :)

நேசம்
14-07-2009, 10:32 AM
d சரியா அண்ணா

பரஞ்சோதி
14-07-2009, 10:58 AM
இல்லை தம்பி

ஆஹா! இன்னும் இருக்கிறது ரெண்டு துண்டு தான்,

இப்படி தப்பான துண்டா, துண்டா என்று சொல்லி பிட்சாவில் ரெண்டு பீஷ் காலி செய்திட்டீங்க.

நேசம்
14-07-2009, 11:06 AM
இரண்டவாது தடவை நான் நினைத்த விடைக்கு பதிலாக தவறுதலாக அடித்து விட்டேன்.பார்ப்போம் மற்றவர்கள் சொல்லும் விடையை நான் நினைத்தது சரியா இருக்கா

மன்மதன்
14-07-2009, 11:16 AM
b தான் பொருந்தும்.

அதில்தான் புள்ளிகள் இடைவெளி விட்டு இருக்கு.

சக்கரத்தில் இருக்கும் வரிசைகளை ஆராய்ச்சி செய்து :D
பார்த்தால் புரிகிறது.. :D:rolleyes:

பரஞ்சோதி
14-07-2009, 11:17 AM
ஆஹா!

நேசம், அப்போ நீங்க விடை கண்டுபிடிச்சாச்சு என்று நினைக்கிறேன்.

மற்றவர்கள் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்.

மன்மதன்
14-07-2009, 12:29 PM
ஆஹா!

நேசம், அப்போ நீங்க விடை கண்டுபிடிச்சாச்சு என்று நினைக்கிறேன்.

மற்றவர்கள் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்.

நண்பா ..இது நியாயமா..நான் சொன்னதை கண்டுக்கவே இல்லையே..:eek:

பரஞ்சோதி
18-08-2009, 07:40 AM
மன்னிக்கவும் நண்பா.

இது அறிவுக்கு வேலை கொடுக்கும் இடமாச்சே, நீ எங்கே வரப் போகிறாய் என்று நினைச்சிட்டேன்.

என் நினைப்பில் மண் விழுந்து விட்டது.

மிகச் சரியான பதில் சொல்லிவிட்டாய். பாராட்டுகள் என்னுயிர் தோழனே!

பரஞ்சோதி
18-08-2009, 07:51 AM
http://img.photobucket.com/albums/v452/paransothi/forum/B-T-28.jpg

இது என்னதுங்கோ?

தாமரை
18-08-2009, 08:00 AM
கண்ணாடிக் கதவில் ஒட்டப்பட்ட PUSH -- PULL லேபிளுங்கோ...

நம்மளை PULL பண்ணச் சொல்லுது..

அந்தப்பக்கமா வர்ரவங்களைப் PUSH பண்ணச் சொல்லுதுங்கோ...

பரஞ்சோதி
18-08-2009, 08:01 AM
ஆஹா! ஆஹா!

தாமரையாருக்கு இது எல்லாம் ஜூஜூபி, அசத்தல் பதில்.

பாராட்டுகள் தல!!!

ஓவியன்
18-08-2009, 08:09 AM
ஓ அதுவா இது.......!! :D:D:D