PDA

View Full Version : பசங்க...



பாரதி
02-06-2009, 08:58 AM
ஒரு வாத்தியாருக்கு மதியம் சாப்பிட்டதுக்கு பின்னாடி குட்டித்தூக்கம் போடுறது வழக்கம். ஒரு நாள் துணிச்சலான ஒரு பையன் “ஐயா, மதியம் ஏன் தூங்குகிறீங்கள்?” அப்படீன்னு கேட்டான்.

அதுக்கு அவரு “நான் தூங்கவில்லை. முற்றும் துறந்த முனிவர்களைப் பார்த்து, என் சந்தேகங்களை நீக்கிக் கொண்டு வருகிறேன்” அப்படீன்னார்.

அந்தப் பையனும் சரின்னு கேட்டுகிட்டான்.

கொஞ்ச நாள் கழிச்சு, பள்ளிக்கூடத்துல வாத்தியாரு வெளிய போயிருந்தப்ப அந்தப் பையன் கொஞ்சம் கண்ணசந்துட்டான். வெளிய போன வாத்தியார் வந்ததும் அவன் தூங்குறத பாத்துப்புட்டாரு.

அவன எழுப்பச் சொல்லி “ஏன் தூங்கினாய்?” அப்படீன்னு கேட்டாரு.

அவன் “ ஐயா.. நான் தூங்க வில்லை. நீங்கள் தினம் சென்று பார்த்து விட்டு வரும் முனிவர்களை காணச் சென்றேன்” அப்படீன்னான்.

வாத்தியாருக்கு ஒரே கோவம். ”அப்படியா...? அந்த முனிவர்கள் என்ன சொன்னார்கள்?” அப்படீன்னு கிண்டலா கேட்டாரு.

அதுக்கு அந்த பையன்..” உங்களைக் காண தினமும் இங்கே வரும் ஆசிரியரின் மாணாக்கன் நான் என்று முனிவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள், அப்படி எந்த ஒரு ஆசிரியரும் அவர்களைக் காண வருவதில்லை என்று கூறினார்கள் ஐயா..!” அப்படீன்னு ஒரு போடு போட்டான் பாருங்க.

praveen
02-06-2009, 09:42 AM
இதிலிருந்து பாரதி, சிறுவயதிலே நகைச்சுவை உணர்வு கொண்டுள்ளார் என்று தெரிகிறது :)

சரி அதற்கு, உங்கள் ஆசிரியர் என்ன பதில் சொன்னார் என்று சொல்லுங்கள்.

பாரதி
02-06-2009, 09:47 AM
ஆ.... பிரவீண்... நாம ரெண்டு பேரும் ஒண்ணாத்தானே படிச்சோம்.
எனக்கு இப்படித்தான் கத சொல்லணும்னு சொல்லிக்கொடுத்ததே நீங்கதானப்பூ.. வாத்தியார்கிட்ட அடி வாங்குறது எல்லாம் நமக்கு சகசம்தானே... இதுக்கெல்லாம் பயப்படலாமா...? வாங்க பாஸ்....

praveen
02-06-2009, 09:57 AM
நல்ல வேளை அந்த வாத்தியாரே நான் தான் என்று திருப்பி விடாமல் இருந்த மட்டில் உங்கள் பதிலுக்கு நன்றி :).

பாரதி
02-06-2009, 10:00 AM
ல் போட்டதுல சந்தோசம்தான்... ...(எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க...! பாசக்கார மதுரப் பயபுள்ளக...)

அமரன்
08-06-2009, 08:50 PM
ஹி...ஹி...
நாங்கூட ஒரு தடவை தூங்கிட்டேன். வாத்தியாரு புடிச்சுட்டாரு. (எந்த நேரமும் தொணதொணக்கும் ஒருத்தன் தொல்லை இல்லாமல் இருந்தால் கண்டுபிடிக்கிறதுல என்ன கஷ்டம்) ஏதோ முதன் முதலா நிலாவைத் தொட்டது எஸ்.ஜே.சூரியா எனக் கண்டு பிடித்த மாதிரி கம்பீரமாக கடைசி பெஞ்சுக்கு நடந்து வந்து வஞ்சாருங்க. உடனே நீங்க படிப்பிச்சதை மீட்டுப் பார்த்தேன் சொன்னேன்.. அதுக்கப்புறம்... வலி தாங்க முடில.. பின்னே வாத்தியாருதான் என் மாமாவாச்சே. வீட்டுக்கு வந்தும் பிரசாதம் தந்தாரு.

சிவா.ஜி
09-06-2009, 12:45 AM
ஆஹா....இப்படியெல்லாமா யோசிப்பாய்ங்க....

ஓவியன்
12-06-2009, 08:30 AM
ஹீ, ஹீ..!!

பையனின் பதிலைக் கேட்டதும், அந்த வாத்தியாரோட முகம் எப்படி இருந்திருக்கும்...!! :D:D:D


ஆஹா....இப்படியெல்லாமா யோசிப்பாய்ங்க....

ஆமா, பாய்ங்க, Boyங்க..!! :)

அதுதான் ’பசங்க’ என்று பாரதி அண்ணா தலையங்கம் வைச்சிருக்காரு..!! :icon_rollout::icon_rollout::icon_rollout:

அன்புரசிகன்
12-06-2009, 09:53 AM
ஆனா இந்த பையன் ரொம்ப நல்லா படிப்பான் போலிருக்கே...

வாத்தியார் கற்பிக்கும் போது தானே தூக்கம் வரும். இவனுக்கு மாறியல்லவா நடந்துள்ளது.............. :D

மன்மதன்
12-06-2009, 02:40 PM
கடைசி பெஞ்சுன்னாவே விவரம்தான்..!!

அன்புரசிகன்
12-06-2009, 02:49 PM
கடைசி பெஞ்சுன்னாவே விவரம்தான்..!!
போங்க மன்மதன்.... நீங்க கூட கடைசி பெஞ்சு தான். நீங்க ரொம்ப விவரமா???:lachen001:

அறிஞர்
12-06-2009, 03:18 PM
நம்ம பசங்களுக்கு குறும்பு ஜாஸ்திதான்...
"முனிவர்கள் தினம் வரச்சொல்லியிருக்கிறார்கள்" என்று சொல்லி..
தினமும் தூங்கியிருக்கலாமே....