PDA

View Full Version : நொடி



ஆதவா
01-06-2009, 05:17 PM
கணம்

அந்த நொடி
அருகில் வருவதாக இருந்தது
எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தேன்
வயிறில் கலக்கம் உண்டானது
இதோ, அருகே வந்தேவிட்டது
கண்கள் கூசிக் கிடந்தது
அது என்னைக் கவனித்த
சுவடொன்றும் கிடைக்கவில்லை
என்னைக் கடந்து
வெகுதூரம் சென்றுவிட்டது
அதன்பிறகு வரவேயில்லை
எதிர்பார்த்த அந்த நொடி
--------------------
மயிரிழை...

அந்த நொடி
என்னையே பார்த்துக் கொண்டிருந்தது
என்னை விழுங்குவதாகவே
அதன் பார்வையின் வீரியம் இருந்தது
ஒரு கொலைவாளைக் கட்டிக்கொண்டு
என்னருகே வந்தது
என்னை வீசும் முன்னே
எப்படியோ தப்பிக் கொண்டேன்.
பிறகு ஒருக்கணமேனும்
அந்த நொடி
என்னைக் கவனிக்கவேயில்லை.
----------------------------
சுழற்சி.

ஒரு நொடிக்கும்
இன்னொரு நொடிக்குமிடையே
பெருத்த இடைவெளி இருந்தது
அதனுள் விழுந்தேன்
எழுந்து, பல்துலக்கி, குளித்து,
ஊனுண்டு, உறங்கிக்
களித்தேன்.
அடுத்த நொடி
என்னை நசுக்கும் முன்னரே
வெளியே வந்துவிட்டேன்
மீண்டும் இடைவெளிக்குள் விழுந்து

பென்ஸ்
02-06-2009, 06:28 AM
ஆதவா... விளக்கலாமா???

ஓவியா
03-06-2009, 12:31 AM
அட பென்சாவது விளக்கி கவிதையை சொல்லியிருப்பார் என்று வந்தால்.

பென்சுக்கே புரியலனா, எனக்கு!!!

ஆதவா
03-06-2009, 04:04 AM
கொஞ்சம் பிஸி... வேலை ரொம்ப அதிகமா இருக்கு.. பிறகு வந்து சொல்கிறேன்.. இருவரும் மன்னிக்கவும்!!

பென்ஸ்
03-06-2009, 06:32 AM
அட பென்சாவது விளக்கி கவிதையை சொல்லியிருப்பார் என்று வந்தால்.

பென்சுக்கே புரியலனா, எனக்கு!!!
என்ன கவிதாயினி ... கின்டல் தானே???
ஆதவா..சீக்கிரம் சொல்லப்பு.. அப்புறம் நாங்க பிசியாயிடுவோமில்ல...

ஓவியா
03-06-2009, 08:19 AM
கொஞ்சம் பிஸி... வேலை ரொம்ப அதிகமா இருக்கு.. பிறகு வந்து சொல்கிறேன்.. இருவரும் மன்னிக்கவும்!!

ஆரம்பத்திலே கால்ல விழுந்த வாசி மன்னிக்கறோம். முற்றிலும் விளங்கவில்லை என்று அர்த்தமில்லை, சுமாராகதான் புரியுது.



என்ன கவிதாயினி ... கின்டல் தானே???
ஆதவா..சீக்கிரம் சொல்லப்பு.. அப்புறம் நாங்க பிசியாயிடுவோமில்ல...

பென்சு, நான் எழுதுற கவிதை மட்டும்தான் எனக்கு விளங்கும். அதான் கவிதாயனி ஓவியா.

ஆமாம் நான் இப்பவே பிசியா ஆகிகிட்டுதான் போறேன்...

ஆதவா
03-06-2009, 09:49 AM
ஒரு சின்ன விஷயம்.. அதை எப்படி பெரிய விஷயமாக எழுதுவது.. இப்படியானதொரு தோணலே நொடி கவிதையின் பிரசவம்.

முதல் கவிதை "கணம்"

அந்த கணம் எதுவாகவேண்டுமென்றாலும் இருக்கலாம்.. உதாரணத்திற்கு என்னுடைய பிறப்பு... அது நிகழும் கணம்.. நொடி.... அது திரும்ப வரப்ப்போவதேயில்லை

(அய்யர் வரும்வரை அமாவாசை காத்திருக்காது எனும் பழமொழியை இங்கே நினைவு கூறுக.)

இரண்டாவது கவிதை மயிரிழை.

காலம் எனும் பாதை... அதில் எனக்கான நிகழ்வு எப்பொழுதும் காத்துக்கொண்டேயிருக்கிறது. உதாரணத்திற்கு "ஒரு விபத்து..." அந்த விபத்தை நான் தவிர்க்க முயலுகிறேன். பிறகு ஒருபொழுதும் அந்த விபத்து எனக்கு நேர்வதாக இல்லை.. ஏனெனில் காலம் கடந்துவிட்டது எனும் சொல்லுக்கு ஒப்ப... இந்த இரு கவிதைகளையும் இணைக்க முடியாமல்தான் தனித்தனியாகப் போட்டேன்.

மூன்றாவது கவிதை சுழற்சி.

இம்முறை, காலத்தின் உட்பகுதியைப் பிரிக்கிறேன்.. அதாவது நொடியை... அதற்குள்ளே உறங்கி, எழுந்து, உண்டு.... நான் மீளுவதற்குள் அடுத்த நொடி வந்துவிடுகிறது... மீண்டும் உறங்கி உண்டு..... இது ஒரு சுழற்சி..

காலம் உண்டாக்கும் சிறு அல்லது மிகக்குறு நிகழ்வொன்றின் பெரிய விவரிப்பு... இக்கவிதைகள்!!!

பென்ஸ் அண்ணா.. மற்றும் ஓவியாக்கா இருவரும் என்னை மன்னிப்பீர்களாக... காலம் கடக்க வைத்தமைக்கு!!!!

இருவரும் மீண்டும் மன்னிப்பீர்களாக,... உங்களிருவருக்கும் ஒரு கவிதை எழுதி வைத்திருக்கிறேன்!!!

அன்புடன்
ஆதவா

அமரன்
03-06-2009, 10:21 AM
விளக்கத்துக்கு நன்றி ஆதவா!
மாறுபடும் பார்வைக் கோணங்களின் கோளாறினால் ஏதோ ஒன்று வேறு நிறம் காட்டுவதாகவோ...
சமயோசித தப்புதல்களின் வெளிப்படுத்துகையாகவோ...
எள்ளல் துள்ளல் கலந்து கவிதை பிறந்ததாக நினைத்தேன்.

எவ்வாறாயினும் நீங்கள் தூரம் சென்றுவிட்டீர்கள்.
நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

ஆதவா
03-06-2009, 10:43 AM
விளக்கத்துக்கு நன்றி ஆதவா!
மாறுபடும் பார்வைக் கோணங்களின் கோளாறினால் ஏதோ ஒன்று வேறு நிறம் காட்டுவதாகவோ...
சமயோசித தப்புதல்களின் வெளிப்படுத்துகையாகவோ...
எள்ளல் துள்ளல் கலந்து கவிதை பிறந்ததாக நினைத்தேன்.

எவ்வாறாயினும் நீங்கள் தூரம் சென்றுவிட்டீர்கள்.
நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

அமரன்... தனித்துவிடப்பட்டுவிட்டேனா?

நான் உங்களோடே இருக்கிறேன்!!

நன்றிங்க அமரன்

பென்ஸ்
03-06-2009, 01:10 PM
வாசித்த நொடியில்... தெளிவு
நல்லவிளக்கம் ஆதவா... நல்ல கவிதையும்...

ஆதவா
03-06-2009, 01:29 PM
நன்றிங்க அண்ணா!!

ஓவியா
04-06-2009, 12:12 AM
நன்றி ஆதவா.

நான் சுமாராக ஒரு 80% சரியாகவே புரிந்து கவிதை உணர்ந்துள்ளேன் என்று உங்களின் விளக்கவுரைக்குப் பின் தெரிந்துக்கொண்டேன்.

நீங்களே விளக்கம் கொடுக்கும்பொழுது கவிதை ஒருமுறை வானம் தொட்டு வந்து எங்கள் மனதில் ஆழவிழுகிறது.

அற்புதமான சிந்தனை.

வாழ்த்துக்கள், வாழ்க உன் கற்பனை.

ஆதவா
04-06-2009, 01:28 AM
நன்றிக்கா... அதென்ன "நீங்க"..... பயமா?

ஓவியா
04-06-2009, 01:39 AM
நன்றிக்கா... அதென்ன "நீங்க"..... பயமா?

உண்மையான மரியாதை. ஒரு சிறந்த எழுத்தாளனுக்கு பரிசாக கிடைக்கவேண்டிய மரியாதை.


ஆதவாவின் அக்கா
- ஓவியா