PDA

View Full Version : கம்ப்யூட்டருக்கு புதியவரா நீங்கள்!!



நூர்
01-06-2009, 11:33 AM
கம்ப்யூட்டருக்கு புதியவரா நீங்கள்!!

ஜூன் 01,2009,

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நாம் அடிக்கடி கேள்விப்படும் மற்றும் பயன்படுத்தும் சில சொற்றொடர்கள் இங்கு விளக்கத்துடன் தரப்படுகின்றன.

Attachment: இமெயில் மெசேஜ் உடன் இணைத்து அனுப்பப்படும் ஒரு பைல். இந்த பைல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். படங்கள், பாடல்கள், எம்.எஸ். ஆபீஸ் பைல்கள், சுருக்கப்பட்ட ஸிப் பைல்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஒரு சில இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் அவற்றின் வழியே அனுப்பப்படும் அட்டாச்மெண்ட் பைல்களுக்கு அதிக பட்ச அளவை வைத்துள்ளன. மேலும் மிகப் பெரிய அளவிலான பைல்களை இணைத்து அனுப்புகையில் அவற்றை அனுப்பும் நேரமும் டவுண்லோட் செய்திடும் நேரமும் அதிகமாகும்.



Bandwidth: இணைக்கப்பட்ட இரு வேறு சாதனங்கள் இடையே நடைபெறும் டேட்டா பரிமாற்றத்தில் அதிக பட்ச டேட்டா பரிமாற்ற வேகத்தின் அளவை இது குறிக்கிறது. இது டேட்டா பயணிக்கும் வேகம் அல்ல.


Client: கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டரும் கிளையண்ட் என அழைக்கப்படும்.


Desktop: மானிட்டர் திரையில் பைல்களையும் ஐகான்களையும் படங்களாகக் காட்டும் இடம். இதனைக் கொண்டுதான் மேஜையில் வைத்து இயக்கப்படும் கம்ப்யூட்டரை Desktop Computer என அழைக் கின்றனர்.


Dialogue Box: கம்ப்யூட்டர் பயன்பாட்டின் போது நம்மிடம் இருந்து தகவல்களைப் பெற்று இயங்க விண்டோஸ் இயக்கத்தில் எழுந்து வரும் ஒரு தகவல் கேட்பு கட்டம். தேவைப்படும் தகவல்களைத் தர இதில் தயாராக படிவம் போல வடிவமைக்கப்பட்டிருக்கும்.

Doc: இது ஒரு பைலின் பெயரில் உள்ள துணைப் பெயர். இந்த பெயருடன் உள்ள பைல் மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவான பைல் என்பதனை இது குறிக்கிறது.

Domain Name: இன்டர்நெட்டில் உள்ள தகவல் தளங்களை இச் சொல்லால் குறிப்பிடுகின்றனர். அந்த தளத்தின் பெயரை இது குறிக்கிறது.

Download:கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக் குறிப்பிடுகிறோம். இருப்பினும் இன்டர்நெட் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கம்ப்யூட்டரிலிருந்து ஒரு பைல் இறக்கிப் பதியப்படுவதனையே இது பெரும்பாலும் குறிக்கிறது.

Firewall: நெட் வொர்க் (இன்டர் நெட் உட்பட) கில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் உள்ளே அனுமதியின்றி வரும் அடுத்தவரின் முயற்சியைத் தடுக்கும் ஒரு சாப்ட்வேர் அல்லது சிறிய ஹார்ட்வேர் சாதனம்.

Internet Telephony: வழக்கமான டெலிபோன் இணைப்பில்லாமல் இன்டர்நெட் மூலம் தொலைபேசி தொடர்பு கொண்டு பேசும் முறைக்கு இந்த பெயர்.

ISP Internet Service Provider: இன்டர்நெட் இணைப்பு தந்து இன்டர்நெட் தளங்களைப் பார்வையிட வசதி தரும் ஒரு நிறுவனம். இந்த இணைப்பு நேரடியாக கம்பி இணைப்பாகவோ அல்லது தொலைபேசி வழியாகவோ அல்லது வயர்லெஸ் மோடம் வழியாகவோ இருக்கலாம்.

JPEG: படங்களுக்கான பைல் வடிவம். இந்த பைல் பார்மட்டில் படங்கள் சுருக்கப்பட்டு பின் பார்க்கையில் விரிக்கப்படுகின்றன. இதனால் இந்த வகை பைல்களின் அளவு மற்ற பட பைல்களின் அளவினைக் காட்டிலும் குறைவாக இருக்கும். இதன் மூலம் பட பைல்களைப் பரிமாறிக் கொள்வது எளிது.

Network: தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக கம்ப்யூட்டர்களையும் சார்ந்த சாதனங்களையும் இணைத்து உருவாக்கப்படும் ஒரு வலைப்பின்னல். இது கம்பிகள் வழியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. வயர்லெஸ் நெட்வொர்க்குகளும் சாத்தியமே.

Notification Area: கம்ப்யூட்டரில் எந்த எந்த புரோகிராம்கள் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று கம்ப்யூட்டர் திரையில் காட்டப்படும் இடம்.

Peer to Peer: கம்ப்யூட்டர்களை ஒன்றுக்கொன்று நேரடியாக எந்த சர்வரின் துணையின்றி இணைக்கும் முறைக்கான பெயர்.

POP 3:இமெயில் செய்திகளை தொலைவில் இருந்து பெறும் வழிகளில் இதுவும் ஒன்று.

Port: ஒரு அப்ளிகேஷன் புரோகிராமிற்கெனத் தனியாக ஒதுக்கப்பட்டு டேட்டா பரிமாறுவதற்கென உள்ள வழி.

Processor: கம்ப்யூட்டர் ஒன்று இயங்குவதற்கு மையமாக, உயிர்நாடியாக இருக்கும் சிப். இதனை கம்ப்யூட்டரின் மூளை எனலாம். ஒரு சில்லு போல இருக்கும் இதில் பல்லாயிரக்கணக்கான ட்ரான்சிஸ்டர்கள் சர்க்யூட் ஒன்றில் அமைக்கப்பட்டிருக்கும்.

சிப் ஒன்றில் வைக்கப்படும் இந்த ட்ரான்சிஸ்டர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் திறன் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

நன்றி:தினமலர் கம்யூட்டர் மலர்.01/06/09

வெற்றி
01-06-2009, 11:41 AM
புதியவர்களுக்கு மட்டுமல்ல .....எனக்கும் கூட சில புரியாத விசயங்கள் புரிந்தது

சிவா.ஜி
01-06-2009, 11:46 AM
தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நூர்.

பாலகன்
01-06-2009, 01:24 PM
நன்றி நண்பரே. இது மிகவும் பயனுள்ளது

நூர்
16-06-2009, 10:36 AM
கருத்திட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
இன்னும் சில...
-----------------------------------------
DOS (டாஸ்): இது Disk Operating System என்பதன் சுருக்கம். விண்டோஸ் இயக்கம் பயன்பாட்டுக்கு வரும் முன்பு இதுவே கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இருந்தது. இப்போதும் விண்டோஸின் ஒரு பாகமாக அடிப்படையிலான ஒரு இயக்கமாக உள்ளது.

கம்ப்யூட்டரின் இயக்கத்தில் பைல்கள் ஸ்டோர் செய்யப்படுவதனையும் அவை இயங்குவதையும் இந்த இயக்கம் கட்டுப்படுத்தி நிர்வகிக்கிறது. இந்த இயக்கத்திற்கான கட்டளைச் சொற்களை டைப் செய்து தான் இயக்க வேண்டும்.

Driver: (டிரைவர்) விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் தனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் டிரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான சாப்ட்வேர் புரோகிராம்.

விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பலவகையான சாதனங்களுக்கான டிரைவர் பைல்கள் ஏற்கனவே பதியப்பட்டே கிடைக்கும். அப்படி இல்லாத நிலையில் இந்த சாதனங்களுடன் சிடியில் அவற்றிற்கான டிரைவர்கள் தரப்படும்.


Hard Disk : (ஹார்ட் டிஸ்க்) பைல்களைப் பதிந்து வைத்து இயக்கப் பயன்படும் ஓர் அடிப்படை சாதனம். இதில் அனைத்து வகை பைல்களையும் பதியலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் (விண்டோஸ்), அப்ளிகேஷன் சாப்ட்வேர் (எம்.எஸ்.ஆபீஸ், பேஜ்மேக்கர் போன்றவை) மற்றும் இவற்றால் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தையும் இதில் பதியலாம்.

இதனை முறையாகவும் கவனமாகவும் கையாள வேண்டும். இது கெட்டுப் போவதைத்தான் ஹார்ட் டிஸ்க் கரப்ட் ஆகிவிட்டதாகக் கூறுவார்கள். ஒரு முறை கெட்டுப் போனால் அதனை மீண்டும் சரி செய்வது சிரமமான காரியம்.

எனவே இதில் பதியப்படும் பைல்களுக்கு நகல் எடுத்து தனியே இதைப் போன்ற வேறு சாதனங்களில் பதிந்து வைப்பது நல்லது.


Hardware: (ஹார்ட்வேர்) கம்ப்யூட்டர் சார்ந்த அனைத்து சாதனங்களும் இந்த சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. மதர்போர்டு, சிப், மவுஸ், கீ போர்டு, பிரிண்டர், மோடம், ரௌட்டர் என அனைத்தும் இந்த சொல்லில் அடங்கும்.


Motherboard: (மதர்போர்டு) பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றில் அமைக்கப்படும் பெரிய அளவிலான சர்க்யூட் போர்டு. இதில் தான் கம்ப்யூட்டரின் ஒவ்வொரு சாதனமும் இணைக்கப்படுகிறது.

Registry:(ரெஜிஸ்ட்ரி) விண்டோஸ் இயக்கத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள ஒரு பைல். கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ஹார்ட் வேர் மற்றும் சாப்ட்வேர் குறித்த தகவல்களை உள்ளடக்கிய பைல்.

இதில் நாமாக மாற்றங்கள் ஏற்படுத்தும் முன் இதன் பேக் அப் காப்பி ஒன்றை எடுத்துக் கொள்வது நல்லது. புரோகிராம்களின் அடிப்படைச் செயல்பாட்டில் மாற்றங்களை மேற்கொள்ள இந்த பைலில் உள்ள வரிகளில் தான் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.

Software:(சாப்ட்வேர்) ஹார்ட்வேர் எனக் கூறப்படும் சாதனங்களை இயக்கும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் அல்லது புரோகிராம்களின் தொகுப்பு என இதனைக் கூறலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் புரோகிராம், சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் (எம்.எஸ். ஆபீஸ், கேம்ஸ் போன்றவை) ஆகிய அனைத்தும் இந்த சொல்லால் குறிப்பிடப்படும்.


SPAM: (ஸ்பேம்) என்பது தேவையற்ற நமக்கென எழுதப்படாத ஆனால் நம் முகவரிக்கு அனுப்பப் படும் ஒரு தீங்கு விளைவிக்கும் மெயில் கடிதமாகும். இமெயில் வசதியில் ஒட்டிக் கொண்டுள்ள மிகப் பெரிய தீங்கு இதுதான்.

ஒருவரின் இமெயில் இன்பாக்ஸில் இவை சென்று அதன் இடத்தைப் பிடித்துக் கொள்வதுடன் கம்ப்யூட்டருக்கும் தீங்கு விளைவிக்காமல் இருக்க நாம் பயர்வால் (Firewall) பயன்படுத்துகிறோம். அல்லது ஆன்ட்டி வைரஸ் புரொகிராம் பயன்படுத்துகிறோம். இவற்றின் வழியாகத்தான் அனைத்து இமெயில்களும் கடந்து செல்ல வேண்டும். இவை இரண்டும் அனைத்து இமெயில்களையும் சோதனை செய்கின்றன. இமெயிலுடன் இணைக்கப்பட்டு வரும் அட்டாச்மென்ட் என்னும் பைல்களையும் சோதனை செய்கின்றன.

சந்தேகப்படும் வகையில் ஏதேனும் மெயில் அல்லது அட்டாச்மெண்ட் இருந்தால் உடனே அதனை குவாரண்டைன் என்னும் பாதுகாப்பான இடத்தில் வைத்து அது யாருக்காக அனுப்பப்பட் டுள்ளதோ அவருக்கு தகவல் தெரிவிக்கின்றன.


Taskbar: (டாஸ்க் பார்) விண்டோஸ் இயக்கத்தில் மானிட்டர் திரையில் கீழாக இயங்கும் நீள் கட்டம். இதில் ஸ்டார்ட் மெனு, விரைவாக அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க ஐகான்கள் அடங்கிய தொகுப்பு,

இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் பைல்களுக்கான கட்டங்கள் மற்றும் கடிகாரம், பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்கள் ஆகியவை இருக்கும். இவற்றைத் தேவைப்படும்போது கிளிக் செய்து பெறலாம்.

நன்றி:தினமலர்.

பரஞ்சோதி
16-06-2009, 11:55 AM
நன்றி அய்யா

பல்வேறு பயனுள்ள பதிவுகள் கொடுத்து எங்களை மகிழ்விக்கிறீங்க.

தொடரட்டும் உங்கள் சேவை.

mdkhan
16-07-2009, 02:57 PM
நன்றி ! நண்பன் நூர் அவர்களே !

நூர்
24-08-2009, 12:23 PM
கருத்திட்ட அனைவருக்கும் நன்றி . இன்னும் சில..
-----------------------------------------------

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் அடிக்கடி நாம் கேட்கும் சில கலைச் சொற்களும் அவற்றிற் கான சுருக்கமான விளக்கமும் கீழே தரப்பட் டுள்ளன.


டபுள் லேயர் ( Double Layer):

டிவிடி ஒன்றில் இரண்டு அடுக்குகளில் தகவல்கள் பதியப்படுவதனை இச்சொல்லால் குறிக்கிறோம். எனவே வழக்கமான டிஸ்க்குகளின் கொள்ளளவுக்குப் பதிலாக இவ்வகை டிவிடிக்களில் 8.5 கிகாபைட் வரை இதில் தகவல்களைப் பதியலாம்.


ஹார்ட் டிஸ்க் (Hard Disk):


உயர்ந்த திறன் மற்றும் அமைப்பு கொண்ட டிஸ்க். அனைத்து கம்ப்யூட்டர்களிலும் இணைத்து தரப்படும். இதில் தான் ஆப்ப ரேட்டிங் சிஸ்டங்களும் நீங்கள் உருவாக்கும் பைல்களும் பதியப்படும்.


ஸ்ட்ரீமிங் (Streaming) :


எந்தவித வயர் இணைப்பு இன்றி ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை அதனை ஏற்றுக் கொள்ளும் சாதனத்திற்கு கம்ப்யூட்டர் ஒன்றி லிருந்து அனுப்பப்படும் தொழில் நுட்பத்திற்கு இந்த பெயர் தரப்பட்டுள்ளது.


ஐ.பி. அட்ரஸ் (IP Address):

கம்ப்யூட்டர் நெட் வொர்க் மற்றும் இன்டர்நெட்டில் இணைக்கப்பட்டுள்ள ஒரு கம்ப்யூட்டருக்கு அடையாளம் தரும் முகவரி எண்.


மதர்போர்ட் (Motherboard):


பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள மெயின் சர்க்யூட் போர்டு. இதனுடன் மானிட்டர், கீ போர்டு, மவுஸ், பிரிண்டர், மோடம் போன்ற சாதனங்கள் இணைக்கப்பட்டு இயங்குகின்றன.


அட்டாச்மென்ட் (Attachment):


இமெயில் மெசேஜ் உடன் இணைத்து அனுப்பப்படும் ஒரு பைல். இந்த பைல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். படங்கள், பாடல்கள், எம்.எஸ். ஆபீஸ் பைல்கள், சுருக்கப்பட்ட ஸிப் பைல்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு சில இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் அவற்றின் வழியே அனுப்பப்படும் அட்டாச்மெண்ட் பைல்களுக்கு அதிக பட்ச அளவை வைத்துள்ளன. மேலும் மிகப் பெரிய அளவிலான பைல்களை இணைத்து அனுப்பு கையில் அவற்றை அனுப்பும் நேரமும் டவுண் லோட் செய்திடும் நேரமும் அதிகமாகும்.


கிளையண்ட் (Client): கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டரும் கிளையண்ட் என அழைக்கப்படும்.

டெஸ்க்டாப் (Desktop): மானிட்டர் திரையில் பைல்களையும் ஐகான்களையும் படங்களாகக் காட்டும் இடம். இதனைக் கொண்டுதான் மேஜையில் வைத்து இயக்கப்படும் கம்ப்யூட்டரை Desktop Computer என அழைக்கின்றனர்.

டயலாக் பாக்ஸ் (Dialogue Box): கம்ப்யூட்டர் பயன்பாட்டின் போது நம்மிடம் இருந்து தகவல்களைப் பெற்று இயங்க விண்டோஸ் இயக்கத்தில் எழுந்து வரும் ஒரு தகவல் கேட்பு கட்டம். தேவைப்படும் தகவல் களைத் தர இதில் தயாராக படிவம் போல வடிவமைக்கப்பட்டிருக்கும்.

டாக் (Doc): இது ஒரு பைலின் பெயரில் உள்ள துணைப் பெயர். இந்த பெயருடன் உள்ள பைல் மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவான பைல் என்பதனை இது குறிக்கிறது.

டொமைன் நேம் (Domain Name): இன்டர்நெட்டில் உள்ள தகவல் தளங்களை இச் சொல்லால் குறிப்பிடுகின்றனர். அந்த தளத்தின் பெயரை இது குறிக்கிறது.

டவுண்லோட் (Download):

கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக் குறிப்பிடுகிறோம். இருப்பினும் இன்டர்நெட் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கம்ப்யூட்டரி லிருந்து ஒரு பைல் இறக்கிப் பதியப்படு வதனையே இது பெரும்பாலும் குறிக்கிறது.


ஐ.எஸ்.பி.(ISP Internet Service Provider): இன்டர்நெட் இணைப்பு தந்து இன்டர்நெட் தளங்களைப் பார்வையிட வசதி தரும் ஒரு நிறுவனம். இந்த இணைப்பு நேரடியாக கம்பி இணைப்பாகவோ அல்லது தொலைபேசி வழியாகவோ அல்லது வயர்லெஸ் மோடம் வழியாகவோ இருக்கலாம்.

ஜேபெக் (JPEG): படங்களுக்கான பைல் வடிவம். இந்த பைல் பார்மட்டில் படங்கள் சுருக்கப்பட்டு பின் பார்க்கையில் விரிக்கப்படுகின்றன. இதனால் இந்த வகை பைல்களின் அளவு மற்ற பட பைல்களின் அளவினைக் காட்டிலும் குறைவாக இருக்கும். இதன் மூலம் பட பைல்களைப் பரிமாறிக் கொள்வது எளிது.

நெட்வொர்க் (Network):


தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக கம்ப்யூட்டர்களையும் சார்ந்த சாதனங் களையும் இணைத்து உருவாக்கப்படும் ஒரு வலைப்பின்னல். இது கம்பிகள் வழியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. வயர்லெஸ் நெட்வொர்க்குகளும் சாத்தியமே.


நோட்டிபிகேஷன் ஏரியா (Notification Area): கம்ப்யூட்டரில் எந்த எந்த புரோகிராம்கள் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று கம்ப்யூட்டர் திரையில் டாஸ்க் பாரில் காட்டப்படும் இடம்.

பி.ஓ.பி.3 (POP 3): இமெயில் செய்திகளை தொலைவில் இருந்து பெறும் வழிகளில் இதுவும் ஒன்று.

ப்ராசசர் (Processor): கம்ப்யூட்டர் ஒன்று இயங்குவதற்கு மையமாக, உயிர்நாடியாக இருக்கும் சிப். இதனை கம்ப்யூட்டரின் மூளை எனலாம். ஒரு சில்லு போல இருக்கும் இதில் பல்லாயிரக் கணக்கான ட்ரான்சிஸ்டர்கள் சர்க்யூட் ஒன்றில் அமைக்கப்பட்டிருக்கும். சிப் ஒன்றில் வைக்கப்படும் இந்த ட்ரான்சிஸ்டர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் திறன் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

நன்றி.தினமலர்.

tkpraj
26-08-2009, 03:12 PM
நன்றி நூர்!
பயனுள்ள தகவல்கள்!