PDA

View Full Version : மத்திய மந்திரியானதும் டெல்லியில் அழகிரி செய்த முதல் உதவி



praveen
01-06-2009, 09:24 AM
அழகிரியை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம்

சென்னை: டெல்லி ரயில் நிலையத்தில் ரயிலை தவற விட்டு பெரும் அவதிக்குள்ளாகி, மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் துரித நடவடிக்கையால் தமிழ்நாடு செல்லும் ரயிலில் சிறப்பு ஏசி பெட்டி இணைக்கப்பட்டு அதன் மூலம் சென்னை திரும்பிய பயணிகள் அழகிரியை எங்களது வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம் என்றனர்.

சென்னை, வண்ணாரப்பேட்டை பெஸ்ட் பிரண்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆண்டு தோறும் கோடை விடுமுறை நாட்களில் இந்தியா முழுவதும் டூர் செல்வது வழக்கம். அதே போல 25 வது முறையாக இந்த ஆண்டும் சுற்றுலா செல்ல முடிவு செய்தனர்.

140 பேர் 3 பிரிவுகளாக ரயிலில் டிக்கெட் எடுத்தனர். 20-ந் தேதி டெல்லி சென்றனர். 23-ந் தேதி ஆக்ராவை சுற்றி பார்த்தனர். 24-ந் தேதி அரித்துவார் சென்றனர். 25-ந் தேதி காஷ்மீர் சென்று அங்கு 4 நாட்கள் தங்கி மலை பிரதேசங்களை கண்டுகளித்தனர்.

காஷ்மீரில் அனைத்து இடங்களையும் பார்த்து விட்டு 29-ந் தேதி காஷ்மீரில் இருந்து 12.25 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்று அங்கிருந்து 6.45 மணிக்கு புறப்படும் ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை வருவதற்கு டிக்கெட் பதிவு செய்திருந்தனர்.

ஆனால் விமானம் 12.25 மணிக்கு புறப்படாமல் மாலை 4 மணிக்கு புறப்பட்டு இரவு 7 மணிக்குத்தான் டெல்லி வந்தடைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ரயிலைப் பிடிக்க முடியாமல் போனது.

ஆவேசமும், ஆத்திரமும் அடைந்த பயணிகள் விமானத்தை விட்டு இறங்காமல் போராட்டம் செய்தனர். உடனே விமான அதிகாரிகள் வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருவதாக உறுதியளித்துள்ளனர்.

இதனை நம்பிய பயணிகள் விமானத்தை விட்டு கீழே இறங்கி உள்ளனர். ஆனால் அதிகாரிகள் எதுவும் செய்யாமல் அப்படியே நழுவி விட்டனர். இதனால் பயணிகள் விமான நிலையத்தில் இருக்க இடம் இல்லாமல் குடிக்க தண்ணீர் இல்லாமலும், முதியவர்களும், குழந்தைகளும் தவித்துள்ளனர். உடனே சுற்றுலா பயணிகள் தமிழ் பத்திரிகையாளர்களை தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள் விரைந்து வந்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

இந்த நிலையில்தான் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி டெல்லி வரும் தகவல் அவர்களுக்குக் கிடைத்தது.

இதையடுத்து அழகிரியைப் பார்த்து சொன்னால் விமோச்சனம் கிடைக்கும் என்று நம்பி அவரது வருகைக்காக காத்திருந்தனர். இரவு 11.45 மணிக்கு மு.க. அழகிரி டெல்லி வந்தார்.

மத்திய அமைச்சரான பின்னர் அவர் டெல்லி வந்தது அதுதான் முதல் முறை. அவரைப் பார்த்த சென்னை பயணிகள், கண்ணீருடன் நடந்த விபரத்தை கூறி உள்ளனர்.

அவர்களை அமைதிப்படுத்தி ஆறுதல் கூறினார் அழகிரி. பின்னர் அவர்களில் ஒருவரின் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டார். இங்கேயே இருங்கள் பத்து நிமிடத்தில் நானே போன் செய்கிறேன் என்று கூறி விட்டு கிளம்பினார்.

சொன்னது போலவே பத்து நிமிடத்தில் போன் செய்த அழகிரி, 2 பஸ்களை அனுப்பியுள்ளேன். அதில் ஏறி தமிழ்நாடு இல்லம் வந்து சேருங்கள் என்று தெரிவித்தார்.

மலர்ச்சி அடைந்த பயணிகள் பஸ்களில் ஏறி தமிழ்நாடு இல்லம் சென்றனர். அங்கு மு.க.அழகிரி அவர்களை வரவேற்று எம்.பி.க்கள் தங்கும் 13 அறைகளை ஒதுக்கி அங்கு போய் தங்குங்கள் என்று பயணிகளை கேட்டுக் கொண்டார்.

அத்தோடு நில்லாமல், அதிகாலை 3.45 மணிக்கு அட்டகாசமான சாப்பாடு, காபி போன்றவற்றை வழங்கினார். பின்னர் அரசு அதிகாரி ஒருவரை அங்கேயே தங்கி, சென்னை பயணிகளுக்குத் தேவையானதை செய்யுமாறு உத்தரவிட்டார்.

பிறகு ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியை தொடர்பு கொண்டு, சென்னை பயணிகளின் நிலையைக் கூறி, அவர்களுக்காக தனிப் பெட்டி ஒன்றை தமிழ்நாடு செல்லும் ரயில் ஒன்றில் இணைத்து அனுப்ப உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மம்தாவும் அதை ஏற்று அன்று தமிழ்நாடு செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தனிப் பெட்டியை இணைக்க ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சென்னை பயணிகள் அந்த தனிப் பெட்டியில் ஏறி சென்னை வந்து சேர்ந்தனர்.

புறப்படும் முன்பு மு.க.அழகிரியை தமிழக பயணிகள் சந்தித்து கண்ணீர் மல்க பூங்கொத்து, பொன்னாடை வழங்கி நன்றி தெரிவித்தனர். நீங்கள் மட்டும் இல்லாவிட்டால் எங்கள் கதி என்ன ஆயிருக்கும் என்றே தெரியவில்லை இந்த உதவியை என்றும் மறக்க மாட்டோம் என்று கூறிவிட்டு விடை பெற்றனர்.

இன்று காலை 7.45 மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை வந்து சேர்ந்தது. பயணிகளை உறவினர்கள் ஆனந்த கண்ணீருடன் வரவேற்றனர்.

சுற்றுலா பயணிகளில் ஒருவரான கோவில்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன் கூறுகையில், நாங்கள் குழந்தைகளுடன் டெல்லி விமான நிலையத்தில் தவித்துக்கொண்டிருந்தோம். அப்போது கடவுள் போல மு.க. அழகிரி வந்தார். நாங்கள் அவரிடம் எங்கள் நிலை மையை கூறினோம்.

உடனே அவர் எங்களிடம் முதலில் நீங்கள் சாப்பிட்டீர்களா மிகவும் அன்போடு விசாரித்து, கவலைப்படாதீர்கள் நான் இருக்கிறேன் என்று கூறி 2 பஸ் மூலம் எம்.பி.க்கள் தங்கும் விடுதிக்கு அழைத்து சென்று 13 அறைகளை ஒதுக்கி தங்க வைத்து, சாப்பாடு, காப்பி என அனைத்து வசதிகளையும் செய்து தந்தார். மு.க.அழகிரியின் மனிதாபிமானத்தை எங்கள் வாழ்நாளில் மறக்கவே மாட்டோம் என்றார்.

அனிதா என்பவர் கூறுகையில், நாங்கள் பாஷை தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தோம். சாப்பாடும், தண்ணீரும் இல்லாமல் குழந்தைகள் தவித்துக் கொண்டிருந்தன. அப்போது மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வருவதாக கூறினர்.

நாங்கள் அவர் வருகையை எதிர்பார்த்து கொண்டிருந்தோம். இரவு 11.45 மணிக்கு வந்தார். உடனே அவரை சந்தித்து எங்கள் நிலைமையை எடுத்து கூறினோம். அவர் உடனே எங்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து எங்களை பத்திரமாக சென்னைக்கு அனுப்பி வைத்தார். அவருக்கு எங்கள் வாழ்நாள் முழுவதும் மு.க. அழகிரிக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.

இன்று காலை 7.50 மணிக்கு எங்களை தொடர்பு கொண்டு பத்திரமாக ஊர் போய் சேர்ந்தீர்களா என்றும் விசாரித்தார் என்றார்.

நன்றி தட்ஸ்தமிழ்.காம்


பின்குறிப்பு : நானும் மன்றத்தில், இப்படி பத்திரிக்கை பிறதள செய்திகளை பதிக்காமல் தான் இருந்து வந்தேன், குறையே காண்பவர் எவரும் இந்த நிறையை பதிக்காததால் நான் பதிக்கிறேன்.

இம்மாதிரி, அரசியல்வாதிகளின் நிறையை நாம் புகந்தால் தான் எதிர்வரும் நாட்களில் அவர்கள் இன்னும் நிறைய செய்யகூடும்.

கா.ரமேஷ்
01-06-2009, 09:29 AM
நானும் இந்த செய்தியை பத்திரிக்கையில் படித்தேன் மிக்க மகிழ்ந்தேன், உண்மையில் அவரது பணி மக்களுக்கு தொண்டு செய்வதாய் அமையட்டும்.
வாழ்த்துக்கள்........!

அன்புரசிகன்
01-06-2009, 09:31 AM
இவ்வகையில் மாட்டிய சந்தர்ப்பம் எனக்கும் உண்டு. அந்த பயணிகள் வலி புரிந்தது... சூட்டோடு சூடாக நடவெடிக்கை எடுத்த மந்திரிக்கு வாழ்த்துக்கள்... நல்ல விடையம்.

நீங்கள் சொல்வது போல் அவர் செய்யும் நன்மைகளை சுட்டிக்காட்டி அதை பெரிதாக்கினாலே அவர் கெட்டவர் என்றாலும் பெயருக்காகவாவது நல்லது செய்வார்... இந்த செய்தியை பார்த்தால் நிச்சயம் கலைஞர் உச்சிகுளிர்வார்.

ஆதி
01-06-2009, 11:36 AM
வடநாட்டில் தமிழர்களின்
இடர்த்தீர்த்த தென்னவனே..
குடம் குடமாய் உன்மீது
குப்பை கொட்டிய வாய்களில்
அடுத்த சொல் இல்லாத படி
அடைப்பு ஒன்று போட்டுவிட்டாய்..
தந்தைக்கு நீ ஆற்ற வேண்டிய கடமையையும்
தமிழர்க்கு நீ ஆற்ற வேண்டிய கடமையையும்
தவறாமல் செய்துவிட்டாய்..

இப்படி முரசொலியில் நாளை கவிதையும் தீட்டுவார் ரசிகன்..

Narathar
01-06-2009, 11:44 AM
ஒரு மக்கள் பிரதிநிதி
மக்களுக்கு உதவியதை
இப்படி கட்டம் கட்டி பேச வேண்டியுள்ளது!

நாராயணா!!!!!

சிவா.ஜி
01-06-2009, 11:44 AM
கெட்டது செய்பவரை இகழ்வது மட்டுமல்ல, நல்லது செய்தவரை மனதார புகழ்வதும் நமது கடமைதான். அழகிரி அவர்களின் இந்த செயல் பாராட்டத்தக்கது.

அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

வெற்றி
01-06-2009, 11:58 AM
கெட்டது செய்பவரை இகழ்வது மட்டுமல்ல, நல்லது செய்தவரை மனதார புகழ்வதும் நமது கடமைதான். அழகிரி அவர்களின் இந்த செயல் பாராட்டத்தக்கது.
அவருக்கு என் மனமார்ந்த பாரட்டுக்கள்.
அதே..அதே

ஒரு மக்கள் பிரதிநிதி
மக்களுக்கு உதவியதை
இப்படி கட்டம் கட்டி பேச வேண்டியுள்ளது!
நாராயணா!!!!!
அந்த நிமிடம் வரை (அழகிரி அங்கே வரும் வரை) உதவ அதிகாரிகள் கூட வரவில்லையே நாரதரே...வாழ்த்தலாமே...அவரை

சிவா.ஜி
01-06-2009, 12:37 PM
மொக்கைச்சாமி, நாரதர் அழகிரியை பாராட்டவேண்டாமெனச் சொல்லவில்லை. நமது நாட்டின் நிலையை சொல்கிறார். அவரது வார்த்தைகளில் தெரிவது கசப்பான உண்மைநிலைதான். மக்களுக்காக பணி செய்யவே தேர்ந்தெடுக்கப்படும் அமைச்சர்கள், இப்படி எப்போதாவது ஒருமுறை நல்ல உதவிகள் செய்வதைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய நிலையிருக்கிறதே என ஆதங்கப்படுகிறார்.

உண்மைதானே....

பென்ஸ்
01-06-2009, 01:19 PM
இருக்கலாம்... ஆனாலும்...
இந்த செயல் பாராட்டதக்கதாகவே எனக்கு தெரிந்தது சிவா...

Narathar
01-06-2009, 01:23 PM
மொக்கைச்சாமி, நாரதர் அழகிரியை பாராட்டவேண்டாமெனச் சொல்லவில்லை. நமது நாட்டின் நிலையை சொல்கிறார். அவரது வார்த்தைகளில் தெரிவது கசப்பான உண்மைநிலைதான். மக்களுக்காக பணி செய்யவே தேர்ந்தெடுக்கப்படும் அமைச்சர்கள், இப்படி எப்போதாவது ஒருமுறை நல்ல உதவிகள் செய்வதைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய நிலையிருக்கிறதே என ஆதங்கப்படுகிறார்.

உண்மைதானே....

அதே அதே!!!

புரிதலுக்கு நன்றி சிவா!:icon_b:

நேசம்
01-06-2009, 01:40 PM
தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் சிறப்பாக செயல்படுவதை விட காட்டிலும் இது போன்ற மனித நேய அடிப்படையில் செயல்படும்போது பாரட்டப்பட வேண்டியது தான்.மதுரை தாண்டி(?) இப்போதான பாரட்டை பெறுகிறார் அழகிரி.

ஓவியா
01-06-2009, 10:48 PM
மொக்கைச்சாமி, நாரதர் அழகிரியை பாராட்டவேண்டாமெனச் சொல்லவில்லை. நமது நாட்டின் நிலையை சொல்கிறார். அவரது வார்த்தைகளில் தெரிவது கசப்பான உண்மைநிலைதான். மக்களுக்காக பணி செய்யவே தேர்ந்தெடுக்கப்படும் அமைச்சர்கள், இப்படி எப்போதாவது ஒருமுறை நல்ல உதவிகள் செய்வதைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய நிலையிருக்கிறதே என ஆதங்கப்படுகிறார்.

உண்மைதானே....

சிவாஜி அண்ணா,
திரியின் தலைப்பை பார்த்ததுமே எனக்கு இந்த சந்தேகம்தான் வந்தது, ஏதோ நல்லது நடந்துள்ளது என்று படிக்க வந்தேன். முழுவதையும் படித்தப்பின் 'நாரதர்' அண்ணாவின் உணர்வு என் மனதிலும் பிம்பமாய் உதித்து மறைந்தது :redface::redface:

தமிழ்நாடு முன்னேறி வந்தால் போதும்.

இப்ப ஜவுலியும் நம்மலுதுதானாமே, அப்படியே மருமகன்கிட்ட சொல்லி ஜவுலி விலையை கொஞ்சம் கம்மியாக்க சொல்லுங்க, யப்பாடா என்னா விலை என்னா விலை... அதாங்க அந்த காஞ்சிபுரம் :D தர்மாவரம், பனாரஸ் இதுகல கம்மி பன்னினா போதும் ;) வருசத்துக்கு ஒருதபா வந்து அள்ளிக்கிட்டு வந்துடுவேன்.

aren
02-06-2009, 02:01 AM
நானும் இந்த செய்தியை படித்தேன்.

இதுதான் அழகிரி அவர்களின் தொடக்கம். இன்னும் பல நல்ல விஷயங்கள் நிச்சயம் நடக்கும். நம் தமிழர்கள் தலை நிமிர்ந்து நடக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

மதுரையை இன்னொரு சென்னையாக ஆக்கப்போவதாக சொல்லியிருக்கிறார். என்ன செய்யப்போகிறார் என்று பார்க்கலாம்.

மதுரை அருகில் இருப்பவர்கள் மதுரையில் நிலம் வாங்கி வைத்துக்கொண்டால் இன்னும் ஐந்து வருடத்தில் நல்ல விலைக்கு விற்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.

அன்புரசிகன்
02-06-2009, 05:44 AM
தமிழ்நாடு முன்னேறி வந்தால் போதும்.

இப்ப ஜவுலியும் நம்மலுதுதானாமே, அப்படியே மருமகன்கிட்ட சொல்லி ஜவுலி விலையை கொஞ்சம் கம்மியாக்க சொல்லுங்க, யப்பாடா என்னா விலை என்னா விலை... அதாங்க அந்த காஞ்சிபுரம் :D தர்மாவரம், பனாரஸ் இதுகல கம்மி பன்னினா போதும் ;) வருசத்துக்கு ஒருதபா வந்து அள்ளிக்கிட்டு வந்துடுவேன்.
பார்ரா............. எதுல அக்கா குறியா இருக்காங்க என்று..?:lachen001:

அப்படியே சென்னை கோவை போன்றவற்றின் விலையையும் குறைச்சிடுங்க... அக்கா கொஞ்சம் கொஞ்சமா தமிழ்நாட்டையே வாங்கீடுவா.... :D

இன்பா
02-06-2009, 08:42 AM
நல்லது செய்தால் யாவரும் பாராட்டுவர்...

விக்ரம்
02-06-2009, 10:17 AM
இந்த செய்தியிலிருந்து புரிந்து கொள்வது என்னவென்றால், எங்கள் அண்ணன் அஞ்சா நெஞ்சன், சுற்றுலா துறையிலும் புகுந்து ஒரு கலக்கு கலக்குவார். அண்ணாரது புகழ் அவனியெங்கும் பரவ வாழ்த்துக்கள்..

அப்படியே இண்டர் நேஷனல் ஃபிளைட் லேட் ஆகி, டொமஸ்டிக் ஃபிளைட் மிஸ் பண்றவங்களுக்கும் உதவி பண்ணுவாரா? (நிச்சயமா கிண்டல் பண்ணலேங்க, வருமுன் காப்போம்கிற ஒரு நல்லெண்ணம் தான்)

ஓவியா
03-06-2009, 12:23 AM
பார்ரா............. எதுல அக்கா குறியா இருக்காங்க என்று..?:lachen001:

அப்படியே சென்னை கோவை போன்றவற்றின் விலையையும் குறைச்சிடுங்க... அக்கா கொஞ்சம் கொஞ்சமா தமிழ்நாட்டையே வாங்கீடுவா.... :D

அப்ப தமிழ் நாட்டை கூறு போட்டு விக்க ஒரு குருப்பு கிளம்பியாச்சுனு மறைமுகமா சொல்லறே அதானே!!!

பச்சை வெற்றிலையில் சுண்ணாம்பு தடவிக்கொண்டு
- ஓவியா

மதுரை மைந்தன்
03-06-2009, 03:21 AM
மனிதாபமான செயல். மதுரை மைந்தர்களை பெருமை பட வைக்கும்.

அன்புரசிகன்
03-06-2009, 12:54 PM
பச்சை வெற்றிலையில் சுண்ணாம்பு தடவிக்கொண்டு
- ஓவியா
ஆச்சர்யா படத்தில் வரும் வடிவுக்கரசி தான் ஞாபகத்திற்கு வாறா....

ஓவியா
03-06-2009, 11:49 PM
ஆச்சர்யா படத்தில் வரும் வடிவுக்கரசி தான் ஞாபகத்திற்கு வாறா....

அப்ப இப்ப எங்க அண்ணிக்கு வடிவுகரசியாட்டம் சண்டைகோழியா ஆகிட்டங்கனு சொல்லறே அப்படிதானே!! ;)

உதயா
16-06-2009, 05:49 AM
இது போல் ஒரு சம்பவம் எனக்கும் (எங்களுக்கும் 7 நண்பர்கள்) நடந்தது. பசியோடும் கையில் காசும் இல்லாமல் கோவையில் இருக்கும் போது.. எங்கிருந்தோ வந்த ஒருவர் எங்களை அன்போடு அழைத்து சென்று உப்புமா செய்து கொடுத்து செலவுக்கும் காசு கொடுத்து எங்களை அனுப்பி வைத்த அந்த அன்பு உள்ளம் படைத்தவரை என்றுமே மறக்க முடியாது.

நேசம்
16-06-2009, 06:50 AM
சில நாட்களுக்கு முன்பு அழகிரி வந்த போது போக்குவரத்தை நிறுத்திய காவல் துறையினரை பார்த்து நான் எப்பொழுதும் மதுரை மக்களில் ஒருவன்.ஆகையால் எனக்காக எப்பொழுதும் போக்குவரத்தை நிறுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார்.இது தினந்தந்தியில் வந்த செய்தி

அய்யா
16-06-2009, 07:21 AM
இந்த செய்தியிலிருந்து புரிந்து கொள்வது என்னவென்றால், எங்கள் அண்ணன் அஞ்சா நெஞ்சன், சுற்றுலா துறையிலும் புகுந்து ஒரு கலக்கு கலக்குவார். அண்ணாரது புகழ் அவனியெங்கும் பரவ வாழ்த்துக்கள்..

அப்படியே இண்டர் நேஷனல் ஃபிளைட் லேட் ஆகி, டொமஸ்டிக் ஃபிளைட் மிஸ் பண்றவங்களுக்கும் உதவி பண்ணுவாரா? (நிச்சயமா கிண்டல் பண்ணலேங்க, வருமுன் காப்போம்கிற ஒரு நல்லெண்ணம் தான்)

விக்ரம் அண்ணாவின் பதிவுகளுக்கு நான் என்றும் இரசிகன். ஆயினும் இப்பதிவு தொடர்புடைய செய்திக்கு எவ்வகையில் பொருந்துகிறது என்று சிந்திக்க வைக்கிறது.

:)

தாமரை
25-06-2009, 05:05 AM
தினசரிகளில் அழகிரி பற்றிய தகவல்கள் அதிகம் இடம் பிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. படித்து தான் பாருங்களேன்

http://www.dailythanthi.com/article.asp?NewsID=496392&disdate=6/25/2009
http://www.dailythanthi.com/article.asp?NewsID=496374&disdate=6/25/2009

aren
25-06-2009, 07:28 AM
லோக்சபா தேர்தலுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் இன்னும் ஆறு மாதத்திற்குள் ஆரம்பித்துவிடவேண்டும் என்று ஒரு அன்புக் கட்டளை இட்டுருக்கிறாராம். அப்படின்னா கூடிய விரைவில் தமிழகத்தில் தேர்தல் வந்தாலும் வரலாம்.

பா.ராஜேஷ்
25-06-2009, 02:26 PM
நல்லது நடந்தால் மகிழ்ச்சியே. இவை அனைத்தும் தேர்தலுக்காக அல்லாமல் உண்மை தொண்டாய் இருந்தால் தமிழகம் வளர்வதாக கொள்ளலாம்.

தாமரை
26-06-2009, 06:04 AM
அழகிரியின் இன்றைய அறிவிப்பு...

http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=11880

தாமரை
29-06-2009, 05:29 AM
இன்றைய தினமலர்ச் செய்தி...

http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=11949

praveen
29-06-2009, 05:45 AM
தாமரை அவர்களே, செய்தியை இங்கே தாருங்கள், அப்போதான் இங்கேயே படிக்க முடியும், எனக்கு பிற தளம் சென்று படிக்க விருப்பம் இல்லை.

நகைச்சுவைக்காக பதிந்தது:
யாருக்கு பயந்து செய்தியை தராமல் சுட்டியை மட்டும் தருகிறீர்கள், நான் இருக்கிறேன் தைரியமாக தாருங்கள். இல்லாவிட்டால் அழகிரி அவர்களிடம் மனு கொடுக்க வேண்டி இருக்கும்.

அமரன்
29-06-2009, 07:09 AM
இப்படியே போனால் அழகிரி அரசியலில் மட்டுமல்லாது நிசத்திலும் அழகுகிரி ஆகிடுவார்.

தாமரை
01-07-2009, 10:21 AM
http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=12022

ராஜீவ் காந்தி மருந்து திட்டம்: துவக்கி வைத்தார் அழகிரி...

குறைந்த விலையில் தரமான மருந்துகளை தயாரிக்கும் கம்பெனிகளுக்கு ஆதரவான இத்திட்டம், தமிழகம், இராஜஸ்தான் இரு மாநிலங்களிலும் துவங்கப்படுகிறது.

இது உள்நாட்டு மருந்து கம்பெனிகளை உற்சாகத்தில் ஆழ்த்தும் திட்டம்.

விக்ரம்
01-07-2009, 02:37 PM
சென்னை ஐகோர்ட் நீதிபதிக்கு போன் செய்து கட்டளையிட்ட மத்திய அமைச்சர் யார்?

இப்போ இருக்கிற, தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்களில் அஞ்சா நெஞ்சன் யாருங்கங்க?

குறிப்பிட்ட அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று, பிரதமர் மன்மோகன் சிங்கை பா.ஜ.க கோரியிருக்கிறது..

யாருக்காவது தெரியுமா? யார் அந்த குறிப்பிட்ட அமைச்சர் என்று??

நம்ம அழகிரி அண்ணன்கிட்ட சொன்னா, யாருன்னு கண்டுபிடிச்சுத் தருவாரா?

praveen
02-07-2009, 05:55 AM
நேற்று, ஒரு பத்திரிக்கையில் வந்த சிரிப்பு ஒன்றை பதிக்கப்பட்டிருந்தது, மன்ற உறுப்பினர் எவரும் மனம் வருந்தக்கூடாது என்பதனால் நீக்கப்பட்டது, ஆனால் இந்த திரியிலே துளிக்கூட அடிப்படை ஆதாரம் இல்லாமல் அழகிரி பெயரை பயன்படுத்தி மேலே கருத்து பதிந்து அவதூறு கிளப்பியிருக்கிறார்.

பொதுவாக பத்திரிக்கையில் வந்த செய்தி அடிப்படையிலே தான் இந்த மாதிரி செய்திகள் பதிக்கப்படுகின்றன, ஆனால் மேலே கருத்து பதிந்தவர் எந்தப்பத்திரிக்கையில் இந்தமாதிரி சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்லாமல், இஸ்டத்திற்கு அழகிரியை சம்பந்தப்படுத்தி கருத்து பதிந்திருக்கிறார். இதிலிருந்து அவரது உள்நோக்கம் என்ன என்று தெரிகிறது.

இன்றைய தட்ஸ்தமிழ் (் http://thatstamil.oneindia.in/news/2009/07/02/tn-raja-refutes-allegations-of-threatening-hc.html)தள செய்தி மூலம் ஆ.ராசா என்ற மந்திரி தான் அப்படி மிரட்டவில்லை என்று கூறியிருப்பதில் இருந்து சந்தேகத்திடமான பெயரில் அழகிரி பெயர் இல்லை என்று தெரிகிறது.

இந்த திரி ஆரம்பித்தவன் என்ற உரிமையில் மேலே பதிந்தவர் கருத்தை நீக்க கோருகிறேன்.

விக்ரம்
02-07-2009, 09:09 AM
மேலே கருத்தை பதிந்த நான், எந்த இடத்திலும் அழகிரி தான் மிரட்டினார் என்று கூறவில்லை. அழகிரி அண்ணன்கிட்ட சொன்னா கண்டுபிடிச்சு தருவாரா என்று தான் கூறியிருக்கிறேன்..

மேலும், நீதிபதியையே மிரட்டக் கூடிய அஞ்சா, நெஞ்சன் யாரு என்றும் தான் கேட்டிருந்தேன். நீங்களே ஒருத்தருக்கு அஞ்சா நெஞ்சன் என்று பட்டம் கொடுத்துவிட்டு, உலகத்தில் வேறு எந்த அஞ்சா நெஞ்சனும் இல்லை என்று நினைத்தால்... வடிவேலு ஸ்டைலிலே அய்யோ, அய்யோனு :icon_rollout: :icon_rollout: தான் சிரிக்கத் தோணுது...

இதற்கு முன்னரும், வேறு ஒரு திரியில் நான் சொல்ல வந்ததை, தவறாய்ப் புரிந்து, உங்களுடைய அன்பைக் காட்டுனீர்கள். நான் மனசில நினைச்சதை எனக்கு சொல்லத் தெரியலையோனு நினைச்சேன்.

பொறுப்பாளர்கள் யாருக்காவது அதே பொருள் பட்டால், தாராளமாக நீக்கலாம் with proper reason. அதே போன்று, சில கருத்துக்களை நீக்கும்போது கூட, நீக்கியதற்குப் பின்னர் வேறு அர்த்தம் வருமாறு நீக்கியதையும் கவனித்திருக்கிறேன், has to be avoided for fairness.

குறிப்பிட்ட செய்தி தினமலரில் இதோ சுட்டி (http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=4231)

வெறும் தட்ஸ் தமிழ் மட்டும் படிச்சா எப்படி? அது ஏங்க நான் என்ன எழுதுனாலும், என் பின்னாடியே குறை இருக்குமோனு கங்கணம் கட்டிட்டு திரியுறீங்க.

praveen
02-07-2009, 12:00 PM
விக்ரம், நல்லா சமாளிக்கிறீர்கள், ரசித்தேன். ம் தொடருங்கள் ரசிக்கிறேன்.

நேசம்
02-07-2009, 12:07 PM
இந்த திரி இவ்வளவு வளர்ந்து இருக்கா.... அந்த அளவுக்கு அழகிரி புகழ் உயருதா....

தாமரை
02-07-2009, 12:30 PM
தயாநிதி மாறனின் செய்திகள் பத்திரிக்கையில் அதிகம் வெளியாவது இல்லை, சேலம் ஈரோடு திருப்பூர் கோவை போன்ற ஜவுளி நகரங்களை இணைக்கும் விதமாக ஜவுளி ரெயில் ஒரு மணி நேரத்திற்கொன்று விடச் சொல்லி மம்தாவிடம் விண்ணப்பித்து உள்ளார். நடந்தால் பல தொழிலாளர்களுக்கு வசதியாக இருக்கும்.

ஆனால் அழகிரி செய்திகளும் ஸ்டாலின் செய்திகளும் பத்திரிக்கையில் தொடர்ந்து இடம் பிடிக்கின்றன.

தமிழக மைய அமைச்சர்களின் இது போன்ற அறிக்கைகள்.. திட்டங்கள் எல்லாம் சேர்த்து வைத்தால் அடுத்த தேர்தலில் என்ன என்ன சொன்னார்கள் என்ன என்ன நடந்தது.. எதெல்லாம் அறிவிப்போடு போச்சு என்று கணக்கெடுக்க வசதியாய் இருக்கும்னு தான் சேர்க்கறேன்..

எப்படியோ தேசிய பாதுக்காப்பு படை முகாம் அமைக்க ஏற்பாடு செய்யறார் சிதம்பரம். லேட்டுதான்.. அந்தப் படை சும்மா இருக்காம அதிரடிப் படை, போலீஸ் போன்றவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் திட்டமும் இருக்காம். பார்ப்போம்.

msvasan
03-07-2009, 10:25 AM
தாமரை உங்களுக்கு எதுக்கு இந்த இந்த தமிழ் மக்கள் மீது கோவம் , நம்ம அதிரடிப் படை, போலீஸ் இருவரும் தேசிய பாதுக்காப்பு படை வீரர்களுக்கு கற்பழிப்பதும் திருடுவது எப்படினு கத்து குடுத்து விடுவார்கள்

அமரன்
03-07-2009, 04:48 PM
தாமரை உங்களுக்கு எதுக்கு இந்த இந்த தமிழ் மக்கள் மீது கோவம் , நம்ம அதிரடிப் படை, போலீஸ் இருவரும் தேசிய பாதுக்காப்பு படை வீரர்களுக்கு கற்பழிப்பதும் திருடுவது எப்படினு கத்து குடுத்து விடுவார்கள்

வாங்க வாங்க எம்.எஸ்.வி

உறுப்பினர் அறிமுகப்பகுதியில் உங்களை அறிமுகம் செய்திடுங்களேன்.

தாமரை
03-07-2009, 06:46 PM
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செய்லாளர் வரதராஜன் குமுதம் பேட்டியில்:

மதுரையில் அழகிரி செய்து வந்த அராஜகங்களை அடாவடிகளை நாங்கள் எதிர்த்து வந்தது உண்மை, தேர்தல் நேரத்திலும் அவரது செய்கைகள் தொடர்ந்தன. அது கடந்த கால வரலாறு, ஆனால் இப்போது அவர் மத்திய அமைச்சர். அந்தப் பொறுப்பைப் பயன்படுத்தி மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த முனைந்திருக்கிறார். தனது தொகுதி நிதியிலிருந்து 50 இலட்சம் ஒதுக்கி இருக்கிறார். (எதுக்கு யாருக்கு என்று சொல்லவில்லை, இது நிருபரின் உள்குத்து???) அதனால் அவரைப் பாராட்டுகிறோம். மீண்டும் அராஜகத்தில் இறங்கினால் நாங்கள் எதிர்க்கவும் தயங்க மாட்டோம்.

--------------------------------------------------------------------------------

50 இலட்சம் ஒதுக்கீடு எதுக்குன்னு தெரிஞ்சவங்க சொல்லுங்க