PDA

View Full Version : ஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்கள்.



அமரன்
01-06-2009, 08:31 AM
ஐரோப்பியப் பாராளுமன்றத்துக்கானா தேர்தல் எதிர்வரும் ஏழாம் திகதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் முதன்முதலாகத் தமிழர்களும் போட்டி இருக்கிறார்கள்.

ஐரோப்பியப் பாராளுமன்றத்துக்கானா தேர்தல் நெருங்குகிறது. இந்தத் தேர்தலில் முதன்முதலாகத் தமிழர்களும் போட்டி இருக்கிறார்கள்.
எட்டு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் இலண்டனிலிருந்து ஜனனி ஜனநாயகம் என்ற பெண் சுயேட்சையாகப் போட்டி இடுகிறார். இவருக்கு பிரித்தானிய தமிழர் பேரவையும் இனவாதத்துக்கு எதிரான அமைப்புகளும் ஆதரவு வழங்குகின்றன. இலண்டனில் மட்டும் இரண்டு இலட்சம் வாக்குரிமை உள்ள ஈழத் தமிழர்கள் வசிக்கிறார்கள் என்பது குறிப்படத்தக்கது. அதைவிட இந்தியத் தமிழர்களும் கணிசமானளவு வசிக்கின்றார்கள்.

பதின்மூறு உறுப்பினர்களை அனுப்பும் இல்-து-ஃபிரான்சில் பேராசிரியன் ஜூலியான் தலைமையில் ஒரு சுயேட்சைக் குழு போட்டி இடுகின்றது. பேராசிரியன் ஜூலியான் என்கிற சுகிர்தராஜ் இந்தியாவின் பாண்டிச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவருடைய தலைமையின் கீழ் நான்கு தமிழர்கள் உள்ள்டங்கலாக துருக்கி, ஆபிரிக்க தேசங்களைச் சேர்ந்த சிலரும் போட்டி இடுகின்றனர். இவர்களுக்கு பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தனது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது.

ஒரு தமிழராவது ஐரோப்பியப் பாராளுமன்றத்துக்குப் போகும் பட்சத்தில் ஒடுக்கபட்ட தமிழர்களின் குரலாக அவர்கல் ஒலிப்பார்கள் என்ற நம்பிக்கை பெரும்பான்மை தமிழரிடம் துளிர்த்துள்ளது.