PDA

View Full Version : எப்படி இப்படி...?



பாரதி
01-06-2009, 06:28 AM
அன்பு நண்பர்களே,நேற்று மாலையில் இருந்து எனக்கு ஒரு வித்தியாசமான தோற்றம் மன்றத்தில் வருகிறது. அதாவது மன்றத்தில் வருகை தருபவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்து, இன்று காலையில் இருந்து நான் மட்டுமே மன்றத்தில் இருப்பதாக மன்றப்பக்கம் காட்டுகிறது!கீழே இணைத்துள்ள படங்களைப்பாருங்கள்.


http://www.tamilmantram.com/photogal/images/83/large/1_latest.jpg


http://www.tamilmantram.com/photogal/images/83/large/1_02062009.jpg

ஆனால் நான் பிராக்ஸியில் வந்து பார்க்கையில் மற்றவர்களும் மன்றத்தில் இருப்பதைக் காண முடிகிறது. இப்பதிவை பிராக்ஸியில் இருந்தே இடுகிறேன்.

நேற்று நான் இட்ட நான்கு இடுகைகளை நேரடியாக சென்றால் காண முடிகிறது. என்னுடைய ஐகேஷ் நேரடியாக மன்றம் வருகையில் 1561.6 எனவும் காட்டுகிறது.ஆனால் பிராக்ஸியில் வருகையில் என்னுடைய நேற்றைய இடுகைகளைக் காண முடியவில்லை. என்னுடைய ஐகேஷ் 1549.4 என காட்டுகிறது.

ஒரே நேரத்தில் நேரடியாகவும் பிராக்ஸி மூலமும் மன்றத்திற்கு வர முடிகிறது. ஏதோ பிரச்சினை இருக்கிறது. என்னுடைய கணினியில் என்றால் மன்ற ஐ-கேஷ் கூட வாய்ப்பிருக்காது என எண்ணுகிறேன்.

இந்தப்பிரச்சினையை முதன்முறையாக பார்க்கிறேன். மன்ற உறவுகள் யாருக்கேனும் இப்படி இருக்கிறதா..?

aren
01-06-2009, 06:31 AM
நம் தலைவர் வந்து உங்களுக்கு விளக்கமாக எழுதுவார் என்றே நினைக்கிறேன். எனக்கும் இது புதிராகவே இருக்கிறது

praveen
01-06-2009, 06:47 AM
தனிமடலில் நான் தெரிந்ததை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

மன்றம் புதிய சர்வருக்கு மாற்றப்பட்டுள்ளது, பழைய சர்வரில் நீங்கள் முதலில் லாகின் ஆகி இருக்கிறீர்கள் என்று தெரிகிறது.

உங்கள் கம்ப்யூட்டரில் ஹோஸ்ட் பைலில் தமிழ்மன்றம் குறித்து திருத்தி இருந்தால் நீக்கி லாக் அவுட் ஆகி குக்கிஸ் எல்லாவற்றையும் நீக்கி மீண்டும் லாகின் ஆகி பாருங்கள்.

விரைவில் பழைய சர்வர் நிறுத்தப்படும் என்று நினைக்கிறேன்.

பாரதி
01-06-2009, 08:24 AM
உங்கள் உதவிக்கு நன்றி பிரவீண்.

மன்றம் புதிய வழங்கிக்கு மாறுவது குறித்து மகிழ்ச்சி. இனி மன்றத்தின் வேகம் கூடும் என நம்புவோம். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட மன்றத்தின் வேகம் வெகுவாக குறைந்ததால் அறிஞரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.

முன்பு அடிக்கடி மன்றத்தில் நுழைவதில் பிரச்சினை ஏற்பட்டதால் பிரவீணின் ஆலோசனைப்படி விண்டோஸ் ஹோஸ்ட் ஃபைலில் தமிழ்மன்றத்தின் முகவரி இணைக்கப்பட்டிருந்தது. இப்போது வழங்கியை மாற்றுவதால் அந்த முகவரியை நீக்கி, இண்டர்நெர் எக்ஸ்புளோரரின் தற்காலிக கோப்புகளை நீக்கி, இண்டர்நெட் எக்ஸ்புளோரை மீள இயக்கிய பின் இப்போது எந்த பிரச்சினையும் இன்றி மன்றம் காட்சி அளிக்கிறது.

எனினும் நான் நேற்று இட்ட இடுகைகள் எல்லாம் இப்போது காணப்பெறவில்லை. அதை மீள நான் பதிக்க வேண்டுமா..? அல்லது பொறுப்பாளர்கள் அதை நகர்த்துவார்களா..?

வழங்கியை மாற்றி புதிய வசதியை வழங்குவதை வரவேற்கும் அதே நேரத்தில், வாய்ப்பிருக்குமெனில் இனி வரும் காலத்தில் பயனாளர்களுக்கு முன்னறிவிப்பு தரலாம் என்ற ஆலோசனையை முன் வைக்கிறேன். நன்றி.

SathyaThirunavukkarasu
02-06-2009, 03:48 PM
எனக்கும் நேற்று இதே மாதிரி நிகழ்ந்தது, நான் என்னுடய கணினியில் தான் ஏதோ தவறு என்று நினைத்து விட்டுவிட்டேன். இப்ப்பொழுது இங்கு வந்தபின் தான் புரிகிறது

பாரதி
02-06-2009, 04:32 PM
ஓ... அப்படியா..? அப்பாடா... என்னைப்போலவே ஒருவருக்காவது தோன்றி இருக்கிறதே... உங்கள் கணினியில், தமிழ்மன்ற பயனர் கணக்கில் இருந்து முறையாக வெளியேறி, கணினியில் இருக்கும் தற்காலிக கோப்புகள் அனைத்தையும் ஏதேனும் மென்பொருள் கொண்டோ அல்லது இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் வசதிகளைக்கொண்டோ நீக்கி விடுங்கள். பிரச்சினை மறுபடி வராமலிருக்கட்டும்.

SathyaThirunavukkarasu
03-06-2009, 10:12 AM
ஓ... அப்படியா..? அப்பாடா... என்னைப்போலவே ஒருவருக்காவது தோன்றி இருக்கிறதே... உங்கள் கணினியில், தமிழ்மன்ற பயனர் கணக்கில் இருந்து முறையாக வெளியேறி, கணினியில் இருக்கும் தற்காலிக கோப்புகள் அனைத்தையும் ஏதேனும் மென்பொருள் கொண்டோ அல்லது இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் வசதிகளைக்கொண்டோ நீக்கி விடுங்கள். பிரச்சினை மறுபடி வராமலிருக்கட்டும்.

நீங்கள் சொன்னபடியே செய்துவிட்டேன் இனி வராமலிருக்கவேண்டும்.

நன்றி

அறிஞர்
03-06-2009, 01:41 PM
முன் அறிவிப்பு கொடுக்காததற்கு மன்னிக்கவும்.
--------
ஒரு சில வேலைகள், மாற்றங்கள் செய்யும் பொழுது... மன்றத்தில் சர்வர் மாற்றமும் நிகழ்ந்தது. மன்றத்தின் வேகம் அதிகரிக்கவே இந்த மாற்றங்கள்.

மாற்றம் நடந்த அந்த ஒரு சில மணி நேரத்தில் பதிந்த பதிவுகளை மீட்க இயலுமா எனத் தெரியவில்லை. பரிசோதித்து விட்டு பதில் தருகிறேன்.

பாரதி
03-06-2009, 03:21 PM
தகவலுக்கு நன்றி அறிஞரே. மன்றத்தின் வேகம் கூடுவது குறித்தும் மகிழ்ச்சி. நம்மிடையே எதற்கு இந்த.......? 4,5 பதிவுகள்தான் இட்டதாக நினைவு. மீட்க முடியாதென்றாலும் கவலையில்லை; விட்டுவிடுங்கள்.