PDA

View Full Version : என்னுடன் சிரிக்கலாம் வாங்க.......மதுரை மைந்தன்
31-05-2009, 11:21 AM
இலங்கை தமிழர் படு கொலைகளை நினைத்து அழுத மனங்களை தேற்ற இதோ ஒரு நகைச்சுவை.

சென்னை மெரினா கடற்கரையில் வாக்கிங் போய் கொண்டிருந்தார் ஒரு தமிழர். அவர் பலருக்கு பல நன்மைகளை செய்திருந்ததால் கடவுள் அவர் முன் தோன்றி " நீ நல்ல காரியங்கள் பல செய்திருக்கிறாய். உனக்கு நான் ஒரு வரம் தரலாமென்றிருக்கிறேன். கேள்" என்றார்.

சற்று யோசித்த பின் அந்த தமிழர் கடவுளிடம் " இந்த வங்க கடலின் நடுவில் சென்னைக்கும் இலங்கைக்கும் ஒரு பெரிய பாலம் அமையுங்கள். நாங்கள் கடலைத் தாண்டி சென்று அங்கு தவிக்கும் எங்களது உறவுகளுக்கு உதவ வேண்டும். எங்களைத் தாக்க வரும் இலங்கை ராணுவத்தை தவிடு பொடியாக்க வேண்டும்".

இதைக் கேட்ட கடவுள் " இது ஒரு பெரிய வேலை. பல லட்சக் கணக்கான மூட்டைகள் சிமெண்ட் வேண்டியிருக்கும். நிறைய இரும்பும் தேவையாயிருக்கும். கொடிய இலங்கை ராணுவத்தையும் அதன் அரக்கர்களான மகிந்த ராஜபக்ஷேயையும் நான் விரைவில் கவனித்துக் கொள்ளவிருக்கிறேன். நான் பிரியப்பட்டு பிறப்பித்த ஆயிரக்கணக்கான சிசுக்களை மிருகத்தனமாக கொன்று என்னிடமே அனுப்பியிருக்கிறார்கள் அந்த கொடியவர்கள். பாலத்தை தவிர வேறுஏதாவது இருநதால் கேள்".

தமிழர் சொன்னார் " சரி. அப்ப நான் எனது மனைவியை புரிந்து கொள்ள வேண்டும். எனது மனைவி எனக்கு அடிபணிந்து நடக்க வேண்டும். நான் சென்ன படியெல்லாம் அவள் நடக்க வேண்டும்".

கடவுள் அவரை இடை மறித்து ' நீ கேட்டாயே பாலம் அது எவ்வளவு பெரிதாக வேண்டும்?"

அமரன்
31-05-2009, 11:23 AM
ஹி....ஹி... இதுக்கு பேச்சுலரான என்னால் பதில் கருத்துரைக்க முடியல. முறுவ முடிகிறது.

நன்றி மதுரை.

jk12
31-05-2009, 11:31 AM
' துன்பம் வரும் வேளையிலும் சிரிங்க '.... என்பதை நினைவுபடுத்துகிறது.

இப்போழுது உள்ள நிகழ்வை ஓட்டி, பழைய சிரிப்பு துளியை புதியதாக மாற்றி இங்கு பதிந்தமைக்கு வாழ்த்துக்கள் திரு.ம மை.

ம மை உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?!

மதுரை மைந்தன்
31-05-2009, 12:03 PM
ஹி....ஹி... இதுக்கு பேச்சுலரான என்னால் பதில் கருத்துரைக்க முடியல. முறுவ முடிகிறது.

நன்றி மதுரை.

உங்களுக்கு ஒரு வாட்டி கூட திருமணம் ஆக வில்லை என்றறிந்து மகிழ்ச்சி அடைவதா அல்லது துக்கப் படுவதா என்று தெரியவில்லை. பகிர்வுக்கு நன்றி அமரன்.

மதுரை மைந்தன்
31-05-2009, 12:07 PM
' துன்பம் வரும் வேளையிலும் சிரிங்க '.... என்பதை நினைவுபடுத்துகிறது.

இப்போழுது உள்ள நிகழ்வை ஓட்டி, பழைய சிரிப்பு துளியை புதியதாக மாற்றி இங்கு பதிந்தமைக்கு வாழ்த்துக்கள் திரு.ம மை.

ம மை உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?!

'துன்பம் வரும் வேளையிலும் சிரிங்க' என்பதிலிருந்தே எனக்கு திருமணம் ஆகி விட்டது என்பது புரியும். பகிர்வுக்கு நன்றி நண்பரே

மதி
31-05-2009, 01:40 PM
மைந்தரே..
அமரன் நிலை தான் எனக்கும்... இன்னும் ஒரு தடவை கூட கல்யாணம் ஆகல... :)

நேசம்
31-05-2009, 02:01 PM
உங்களுக்கு ஒரு வாட்டி கூட திருமணம் ஆக வில்லை என்றறிந்து மகிழ்ச்சி அடைவதா அல்லது துக்கப் படுவதா என்று தெரியவில்லை. பகிர்வுக்கு நன்றி அமரன்.
.

இருபால*ருக்கும் ச*ந்தோச*ம் தான் இல்லையா அம*ர*ன்..

ஓவியா
31-05-2009, 05:50 PM
இந்த பொம்பணாட்டிங்கள வச்சு காமடி அடிப்பதே சில கனவன்களுக்கு அன்றாட வாழ்க்கையாகி போச்சு, என் வீட்டு அண்ணாவும் இப்படிதான் சும்மா எதாவது சொல்லி அண்ணியை கலாய்ப்பார். இதிலே அவங்க 2 பசங்களும் சேர்ந்து பண்ணர அட்டூழியம் இருக்கே!! கடவுளே.

தக்க சமயம் பார்த்து அடிச்ச 'நச்' நல்லா சிரித்தேன் மதுரை அண்ணா.

புகுந்த வீட்டுக்கு போக போகும் தங்கச்சிக்கு, எல்லா மனைவியும் கணவன்களை அடக்கி ஆழ பார்ப்பார்கள், நீயும் விட்டுடாத கண்ணு, என்று சொல்வது போல் உள்மனதில் எங்கோ ஒரு ஓசை கேட்குது அண்ணா :lachen001::lachen001:

மதுரை மைந்தன்
31-05-2009, 11:00 PM
மைந்தரே..
அமரன் நிலை தான் எனக்கும்... இன்னும் ஒரு தடவை கூட கல்யாணம் ஆகல... :)

கவலைப் படாதீங்க மதி.. திருமதிகள் இல்லாமல் வெகுமதிகள் பெற்ற அப்துல் கலாம் வாஜ்பாயி பெருந்தலைவர் காமராஜ் இவங்க பட்டியல்ல நீங்களும் இடம் பெறுவீர்கள். பகிர்வுக்கு நன்றி.

மதுரை மைந்தன்
31-05-2009, 11:09 PM
இந்த பொம்பணாட்டிங்கள வச்சு காமடி அடிப்பதே சில கனவன்களுக்கு அன்றாட வாழ்க்கையாகி போச்சு, என் வீட்டு அண்ணாவும் இப்படிதான் சும்மா எதாவது சொல்லி அண்ணியை கலாய்ப்பார். இதிலே அவங்க 2 பசங்களும் சேர்ந்து பண்ணர அட்டூழியம் இருக்கே!! கடவுளே.

தக்க சமயம் பார்த்து அடிச்ச 'நச்' நல்லா சிரித்தேன் மதுரை அண்ணா.

புகுந்த வீட்டுக்கு போக போகும் தங்கச்சிக்கு, எல்லா மனைவியும் கணவன்களை அடக்கி ஆழ பார்ப்பார்கள், நீயும் விட்டுடாத கண்ணு, என்று சொல்வது போல் உள்மனதில் எங்கோ ஒரு ஓசை கேட்குது அண்ணா :lachen001::lachen001:

உங்களை சிரிக்க வச்சதில் மகிழ்ச்சி. நீங்க நிறைய சிரிக்கணும்னு இன்னோரு நகைச்சுவை.

கணவன் மும்முரமாக பேப்பர் படிச்சுக்கிட்டிருந்தார். அவரது மனைவி " என்னங்க எப்போ பாரத்தாலும் பேப்பர் படிச்சுக் கிட்டு இருக்கீங்க. வந்து எனக்கு ஒத்தாசையா துணிமணிகளை துவைச்சு கொடுங்க".

கணவன்: " இலங்கைல நடந்த படு கொலைகளை படிச்சு நானே நொந்து போயிருக்கேன். நீ வேற"

மனைவி " அதாங்க சொல்றேன். ஒவ்வொரு துணியையும் இலங்கை ராணுவமாக நினைச்சு அதை அடிச்சு கசக்கி பிழிஞ்சீங்கனா மனசு ஆறுதல் அடையும்"

அன்புரசிகன்
01-06-2009, 06:47 AM
மதுரையாருக்கு திருமணமாகலையா??? அந்த வரம் கேட்டவரே அவர் தானே... இல்லையா மதுரையண்ணோய்...?:lachen001::D

உங்களுக்கு ஒரு வாட்டி கூட திருமணம் ஆக வில்லை என்றறிந்து மகிழ்ச்சி அடைவதா அல்லது துக்கப் படுவதா என்று தெரியவில்லை. பகிர்வுக்கு நன்றி அமரன்.
இது சந்தோச துக்கங்களுக்கு அப்பாற்பட்டு பொறாமை கலந்த வைத்தெரிச்சலாகவே எனக்கு படுகிறது..:D

ஆதி
01-06-2009, 07:05 AM
ஹி....ஹி... இதுக்கு பேச்சுலரான என்னால் பதில் கருத்துரைக்க முடியல. முறுவ முடிகிறது.அமரு இப்ப நீங்க பேச்சுலர்.. கல்யாணம் முடிஞ்ச பின்னர் "பேச்சு இலர்"

பகிர்வுக்கு நன்றி மதுரை ஐயா..

அமரன்
01-06-2009, 07:48 AM
அமரு இப்ப நீங்க பேச்சுலர்.. கல்யாணம் முடிஞ்ச பின்னர் "பேச்சு இலர்"

பகிர்வுக்கு நன்றி மதுரை ஐயா..

அருமை... அருமை...
ஆரோட பேச்சில்லன்னு சொல்லலையே!