PDA

View Full Version : பிரபாகரன் செய்த ஒரே தவறு, நல்லவனாக அற்புத மனிதனாக இருந்ததுதான் - சீமான்புதியவன்
31-05-2009, 04:38 AM
பிரபாகரன் செத்துவிட்டாராம். மாவீரனுக்கு ஏதடா மரணம். வார்த்தையில் வேண்டுமானால் அவர் மரணம் அடைந்திருக்கலாம்.
வாழ்க்கையில் அவர் ஒருபோதும் மரணம் அடையமாட்டார். பிரபாகரன் செய்த ஒரே தவறு, நல்லவனாக அற்புத மனிதனாக இருந்ததுதான் என்று இயக்குனர் சீமான் கூறினார்.
இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னை புரசைவாக்கம் தாணா
தெருவில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்றிரவு பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இயக்குனர் சீமான் பேசுகையில், ”இயக்குனர் பாரதிராஜா ஒரு மாபெரும் கலைஞன். பாலா, சேரன், தங்கர்பச்சான் உள்ளிட்ட எண்ணற்ற கலைஞர்கள் பூத்துக்குலுங்க காரணமாக உள்ள அடிமரம். அவர் அலுவலக வாசலில் உள்ள வேப்பமரமும் நாங்களும் ஒன்றாக வளர்ந்தவர்கள். அவர் அலுவலகத்தை தாக்கியுள்ளனர்.
ஒரு தமிழன் தமிழனாக இருந்ததற்காக கிடைத்த பரிசு இது. ஈழத் தமிழர்கள் இலங்கையில் மிரட்டப்படுகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள் இங்கு மிரட்டப்படுகிறார்கள். என்னைத் தொடர்ந்து 4 முறை சிறையில் அடைத்தார்கள். நான் என்ன தவறு செய்தேன். என் இனம் அழிக்கப்படுவதைக் கண்டு நல்ல அப்பனுக்குப் பிறந்த என்னால் பொறுக்க முடியவில்லை. நான் சிறையில் அடைக்கப்பட்டதால் என் தொழில் பாதிக்கப்பட்டது. என்னுடைய காரை எரித்தார்கள். உயிர் என்பது உதிரும் மயிரைப் போன்றது. ஒரு லட்சம் துப்பாக்கிகளைக் கடந்து சென்று பிரபாகரனை சந்தித்தவன் நான். இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். பேசினா அடிப்போம் இதுதான் ஜனநாயகமா?
தா.பாண்டியன் காரை எரித்தார்கள். யாரை கைது செய்தீர்கள். தமிழன் மனதில் இடிவிழுந்து நிற்கிறான். தமிழ்ச்சாதி உறைந்து போய் கிடக்கிறது. இந்தியா நடத்த வேண்டிய போரை நாங்கள் நடத்தியுள்ளோம் என்று ராஜபக்சே கொக்கரிக்கிறான். 25,000 ஈழத் தமிழர்களை உயிரோடு புதைத்துள்ளனர் சிங்களர்கள். பிரபாகரன் இறந்து விட்டார், அவர் உடலை எரித்து சாம்பலை கடலில் வீசிவிட்டோம் என்கின்றனர். பிரபாகரன் செத்துவிட்டாராம். மாவீரனுக்கு ஏதடா மரணம். வார்த்தையில் வேண்டுமானால் அவர் மரணம் அடைந்திருக்கலாம்.
வாழ்க்கையில் அவர் ஒருபோதும் மரணம் அடையமாட்டார். பிரபாகரன் செய்த ஒரே தவறு, நல்லவனாக அற்புத மனிதனாக இருந்ததுதான். திரிகோணமலையை அமெரிக்காவுக்கு விட்டுக் கொடுத்திருந்தால் இவ்வளவு பெரிய இழப்பை சந்தித்து இருக்க மாட்டார். சிங்களர்கள் செய்த அட்டூழியத்தைப் போல நாமும் செய்திருக்க வேண்டும். ஆனால் பிரபாகரன் செய்யவில்லை. கற்பழிப்புகளை நடத்தினார்கள். பச்சிளங் குழந்தைகளை கொன்று குவித்தார்கள். பிரபாகரன் உத்தரவிட்டிருந்தால், கொழும்பு நகருக்குள் புகுந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்திருக்க முடியும். அதை அவர் விரும்பவில்லை.
மருத்துவமனை, பள்ளிக்கூடம், பொதுமக்கள் வாழும் பகுதிகளில் குண்டுபோட வேண்டாம் என்று கூறிவிட்டார். இன்றைக்கு, பிரபாகரனின் 75 வயது தந்தையும், 72 வயது தாயாரும் சிங்கள இராணுவத்தின் பிடியில் இருக்கிறார்கள். விசாரணை என்கிற பெயரில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவர்களை எப்படியெல்லாம் சித்ரவதை செய்கிறார்களோ? தெரியவில்லை. சிங்கள இராணுவம் செய்த அத்துமீறல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் ஆதாரம் இருப்பதாக இன்றைக்கு அமெரிக்கா செல்கிறது. இந்த அமெரிக்கா அன்றைக்கு ஏன் சொல்லவில்லை?ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் எல்லாம் முடிந்த பிறகு இன்று இலங்கைக்கு சென்று பார்வையிடுகிறார். உலகத் தமிழ் இனமே வேண்டுகோள் விடுத்திருந்தபோது அன்றைக்கு அவர் சென்றிருக்கலாமே? அன்று செல்லவில்லை. சீனா செங்கொடி தூக்கி நிற்கிறது. அந்தக் கொடியை தூக்க அதற்கு என்ன தகுதி இருக்கிறது. இங்கிலாந்து, இஸ்ரேல் போன்ற நாடுகள் எல்லாம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வந்து நிற்கின்றன. ஆனால் இந்தியா எதிராக உள்ளது. இதைச் சொன்றால் இறையாண்மை மீறலா? நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட 350 பேர் வெள்ளைக்கொடி தாங்கி சிங்கள இராணுவத்தை நோக்கி வந்தார்கள். அவர்களை வஞ்சகமாக கொன்று கொடுஞ்செயல் புரிந்ததை உலகில் யாராவது கண்டித்துள்ளார்களா?
இதுவரை நடந்தது முன்னோட்டம்தான். இனி தாண்டா போர் நடக்கப் போகிறது. 5ஆம் கட்டப் போரில் பிரபாகரன் கடை பிடித்த மரபுகளை நாங்கள் கடைபிடிக்கப் போவதில்லை. ஒரு சிங்களன் கூட நிம்மதியாக உறங்க முடியாத அளவிற்கு தாக்குவோம். கொழும்பு நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவோம். மானமுள்ள கடைசி ஒரு தமிழன் இருக்கும்வரை சிங்களர்களுக்கு எதிரான போராட்டம் தொடரும். நள்ளிரவில் ஒரு பெண் நகை அணிந்து பாதுகாப்பாக நடந்து செல்லும் போதுதான் சுதந்திரம் கிடைத்து விட்டதாக அர்த்தம் என்று காந்தி கூறினார். இந்த காந்தியின் கனவை பிரபாகரன் நனவாக்கினார்.
அற்புதமான தமிழ்த் தேசத்தை அங்கு நிர்மாணித்தார். நீதித்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் கட்டமைத்தார். அங்கு திருடன் இல்லை, எந்த குற்றமும் நடைபெறவில்லை. அப்படிப்பட்ட தேசத்தை சிறைத்து விட்டார்கள். இதற்கு காரணமாக இருந்த இந்திய அரசை கண்டிப்பது தவறா? இந்தியா என்றால் ஒரு தேசம். வாஜ்பாய் உள்ளிட்ட வேறு பலரும் பிரதமராக இருந்துள்ளார்கள். தேசத்தை நான் குறை கூறவில்லை. காங்கிரஸ் அரசையும் அதன் தலைமையையும்தான் குற்றம்சாற்றுகிறேன்.
இங்குள்ள தமிழர்கள் பலர் நடந்து கொண்டதை நினைக்கும்போது அவமானமாக இருக்கிறது. பணமா? போராட்டமா? என்ற கேள்வி எழுந்த போது, பணத்தின் பக்கம் சேர்ந்து விட்டானே என் தமிழன் என்று நினைத்து வெட்கப்படுகிறேன். என் வீட்டுக் கூரை தீப்பிடித்து எரியும்போதுதான், தண்ணீர் எடுத்து வருவேன் என்ற எண்ணத்தில் பல தமிழர்கள் இங்கு உள்ளனர். இந்தநிலை நல்லதா? உனக்கு பாதிப்பு வரும் போது உதவுவதற்கு அருகில் யாரும் இருக்க மாட்டார்கள். வைகோ, தா.பாண்டியன் பாராளுமன்றத்தில் இருந்தால், தமிழக மீனவர்கள் கடலில் சுடப்பட்டு செத்திருப்பார்களா? இனிமேலாவது தமிழர்கள் வெகுண்டு எழ வேண்டும். இல்லைவிட்டால், தமிழ் இனத்தை காப்பாற்ற வேண்டும்.
இன்றைக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசுக்கு உகந்த நபர் மாவீரன் பிரபாகரன்தான். இந்தியாவும் சீனாவும் பாகிஸ்தானும் எந்த காலத்திலாவது ஒன்றாக சேர்ந்ததுண்டா? எந்தப் பிரச்சனையை எடுத்துக்கொண்டாலும் சீனாவும், இந்தியாவும் அல்லது இந்தியாவும், பாகிஸ்தானும் எதிரும் புதிருமாகத்தான் இருப்பார்கள். அவர்கள் மூன்று பேரையும் ஒன்றாக சேர்த்து வைத்த பெருமை பிரபாகரனைத்தான் சேரும். பிரபாகரனை எதிர்ப்பதற்குத்தான் இவர்கள் மூன்று பேரும் ஒன்றாக சேர்ந்துள்ளார்கள்.
இலங்கைக்கு எதிராக ஐ.நா.சபையில் இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்த தீர்மானம் இன்றைக்கு தோற்கடிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு ஆதரவாக நின்று இந்த தீர்மானத்தை இந்தியா தோற்கடித்திருக்கிறது. தீர்மானம் வெற்றி பெற்றிருந்தால் முதல் குற்றவாளியாக இந்தியா நின்றிருக்கும். அதன் அருகில் சீனாவும், பாகிஸ்தானும் நிற்கும். அந்தப் பழிக்கு பயந்துதான் தீர்மானத்தை இந்தியா தோற்கடித்துள்ளது. எங்கள் ஆழ்மனதில் வேதனைத் தீ எரிந்து கொண்டிருக்கிறது. அது எப்படி வெடித்து வெளிக்கிளம்பப் போகிறது? என்பதைப் பார்க்கத்தான் போகிறீர்கள். மானமிக்க வீரம் பொருந்திய தமிழர் கூட்டம் இன்னும் இருப்பதை மறந்துவிட வேண்டும்” என்று இயக்குனர் சீமான் பேசினார்.

praveen
31-05-2009, 06:51 AM
உண்மையிலே அவர் செய்த ஒரே ஒரு தவறு என்ன என்று அனைவருக்கும் தெரியும். அது மட்டுமில்லாமல் இருந்திருந்தால் அனைத்து தமிழ்மக்களின் ஆதரவு என்றென்றும் இருந்திருக்கும். இந்த மாதிரி நிலை வந்திருக்காது. காலம் அனைத்தையும் மறக்கும் என்பதால் இதனையும் மறந்து தான் போகும்.

ஆனால் தமிழர்களின் வரலாற்றில் மாவீரன் என்றால் அது பிரபாகரன் தான் என்று நிலை நிறுத்தி விட்டார். இவர் இடத்தை இனி வரும் காலத்தில் கூட எவரொருவரும் பிடிக்க இயலாது. நேதாஜி அவர்களை பின்பற்றியவர் இறப்பு பற்றிய சர்ச்சையிலும் அவரைப்போலவே இருக்கிறார்.

anna
31-05-2009, 07:44 AM
ஸ்டாரை நீக்கி பதியும் முன் கவனமாக பதியுங்கள்.

அமரன்
31-05-2009, 09:11 AM
உண்மையிலே அவர் செய்த ஒரே ஒரு தவறு என்ன என்று அனைவருக்கும் தெரியும். அது மட்டுமில்லாமல் இருந்திருந்தால் அனைத்து தமிழ்மக்களின் ஆதரவு என்றென்றும் இருந்திருக்கும். இந்த மாதிரி நிலை வந்திருக்காது. காலம் அனைத்தையும் மறக்கும் என்பதால் இதனையும் மறந்து தான் போகும்.

பிரவீன்.

நீங்கள் சொல்வதைப் போல் பிரபா செய்தது தவறுதான். அதனால் கணிசமானளவு தமிழர்களின் ஆதரவை இழந்திருக்கிறார் என்பதும் உண்மை. ஆனால் அதைச் செய்யாதிருந்தாலும் இந்நிலை தோன்றி இருக்கும். அந்தத் தவறுக்கு முந்திய காலங்களில் ஓட்டம் இதனைச் சொல்கிறது.

விக்ரம்
31-05-2009, 11:59 AM
இதுவரை நடந்தது முன்னோட்டம்தான். இனி தாண்டா போர் நடக்கப் போகிறது. 5ஆம் கட்டப் போரில் பிரபாகரன் கடை பிடித்த மரபுகளை நாங்கள் கடைபிடிக்கப் போவதில்லை. ஒரு சிங்களன் கூட நிம்மதியாக உறங்க முடியாத அளவிற்கு தாக்குவோம். கொழும்பு நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவோம். மானமுள்ள கடைசி ஒரு தமிழன் இருக்கும்வரை சிங்களர்களுக்கு எதிரான போராட்டம் தொடரும்.
என்ன பேசுறோம்னு தெரிந்து தான் பேசுறானா இவன்? (என்னடா சீமானை ஒருமையில் பேசுறேனு நினைக்காதீங்க, அவன் ஒருமையில் பேசுவதை பெருமையாய் நினைக்கிறான்)

இவன் தமிழ் நாட்டில இருந்து இப்படி பேசுறானே, இதுக்கான விளைவு நடக்கப் போகும் இடம் இலங்கைனு தெரியுமா இவனுக்கு.. இவனுக உசுப்பேத்தி, உசுப்பேத்திவிட்டே விடுதலைப் புலிகளை இன்று இந்த நிலைமைக்கு ஆளாக்கி இருக்கானுக..

என்ன பண்றது? ஒரு காலத்தில் இந்திரா, எம்.ஜி.ஆர், கலைஞர் செய்ததை இன்னிக்கு சீமான், பாரதிராஜா போன்றவர்கள் செய்கிறார்கள்..

இதனால் இவர்களுக்கு கிடைக்கும் லாபமென்ன?


இன்றைக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசுக்கு உகந்த நபர் மாவீரன் பிரபாகரன்தான்.
பிரபாகரன் ஒரு மாவீரன், அவர் ஒரு இன விடுதலைக்காக போராடினார் என்று சொல்லலாம். தன் இன விடுதலைக்காக தனது மகன் சார்லஸ் அந்தோணியையும் இழந்தார், அதுவும் பெருமை.. அதுக்காக உலக அமைதிக்கான நோபெல் பரிசு என்பதெல்லாம், என்ன பேசுறோம்னு தெரியாம பேசுறது..

இந்த ஒரு வார்த்தை போதும், இவன் (சீமான்) பெரிய ஜோக்கர்னு நிரூபிக்க. அப்படியே பாரதிராஜா, கவுண்டமணி, செந்தில்னு லிஸ்டை increase பண்ணி கடைசியில உன் பேரையும் போட்டிருக்கலாமே..


மானமிக்க வீரம் பொருந்திய தமிழர் கூட்டம் இன்னும் இருப்பதை மறந்துவிட வேண்டும்” என்று இயக்குனர் சீமான் பேசினார்.
விவேகமற்ற வீரம் வேஸ்ட் னு முதல்ல புரிஞ்சுக்க மக்கா..

வீரமற்ற விவேகமும் வேஸ்ட் னு எனக்கு யாராவது பதில் கொடுக்கலாம்.

வீரமற்ற விவேகத்தினால், மானம் மட்டும் தான் போகும்.

விவேகமற்ற வீரத்தினால் உயிரே போகும்.

மானம் போனதுக்கு அப்புறம் உயிரெதற்கு னு என்னிடம் எதிர்க் கேள்வி எழுவதற்கு முன்னர், உயிர் போனதுக்கு அப்புறம் மானம் இருந்தென்ன, இல்லாட்டி என்ன பயன் என்றும் யோசிக்கலாம்.

விக்ரம்
31-05-2009, 12:10 PM
பிரபா செய்தது தவறுதான். அதனால் கணிசமானளவு தமிழர்களின் ஆதரவை இழந்திருக்கிறார் என்பதும் உண்மை. ஆனால் அதைச் செய்யாதிருந்தாலும் இந்நிலை தோன்றி இருக்கும். அந்தத் தவறுக்கு முந்திய காலங்களில் ஓட்டம் இதனைச் சொல்கிறது.
குறிப்பிட்ட தவறை செய்யாமல் இருந்திருந்தால், 1. அவர் உயிரோடு இருந்திருப்பார், 2. விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் என்று உலக நாடுகள் சொல்லியிருக்காது, 3. இலங்கையும் இந்த அளவுக்கு அத்துமீற விட்டிருக்கமாட்டார்கள்..

புதியவன்
31-05-2009, 01:12 PM
பதிவை திருத்தி பதிந்தமைக்கு நன்றி

Narathar
31-05-2009, 01:41 PM
ஆனால் தமிழர்களின் வரலாற்றில் மாவீரன் என்றால் அது பிரபாகரன் தான் என்று நிலை நிறுத்தி விட்டார். இவர் இடத்தை இனி வரும் காலத்தில் கூட எவரொருவரும் பிடிக்க இயலாது. நேதாஜி அவர்களை பின்பற்றியவர் இறப்பு பற்றிய சர்ச்சையிலும் அவரைப்போலவே இருக்கிறார்.

உங்கள் பதிவை ரசிக்கின்றேன்.................
உங்கள் பதிவின் இறுதியில் கொடுத்திருக்கும் அழுத்தம் ஒவ்வொரு தமிழ்பேசும் உள்ளத்திலும் கட்டாயமாக இருக்கும்............ இருக்க வேண்டும்!

தமிழ் உலகில் அவருக்கான இடம் அவரை எதிர்ப்பவர்களாலும் மறுக்க முடியாத ஒன்று

கா.ரமேஷ்
01-06-2009, 07:19 AM
////அற்புதமான தமிழ்த் தேசத்தை அங்கு நிர்மாணித்தார். நீதித்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் கட்டமைத்தார். அங்கு திருடன் இல்லை, எந்த குற்றமும் நடைபெறவில்லை. அப்படிப்பட்ட தேசத்தை சிறைத்து விட்டார்கள்../////
நிதர்சனமான உண்மை.இப்படி ஒரு கட்டமைப்பை தேசத்தை உருவாக்கியதற்க்காகவே அவருக்கு ஆயிரம் நன்றிகள் சொல்லலாம்.எல்லாவற்றையும் அழித்து விலங்குகளைப் போல் கம்பிவலையத்திற்க்குள் கட்டுபடுத்தி காவு வாங்கும் இரக்கமற்ற கொடூரர்களை விடவும் அதற்க்கு துணைபோகும் வேடதாரிகளை விடவும் பிரபாகரன் எனும் மாபெரும் தலைவன் போற்றுதலுக்கு உரியவர்.
////இன்றைக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசுக்கு உகந்த நபர் மாவீரன் பிரபாகரன்தான்.////

இதில் தவறு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை வரலாறும் அதைத்தான் சொல்கிறது.எல்லோருக்கும் தெரிந்த உயர்திரு நெல்சன் மண்டேலா அவர்களே இதற்க்கு தகுந்த உதாரணம்,தன் இனத்திற்காக கொரில்லா போர்முறையை தலைமை ஏற்று நடத்தி பின் 27 ஆண்டுகாலம் சிறையில் இருந்த அவர் தென் ஆப்பிரிக்கா அதிபர் ஆன வரலாறு உண்டு.1993 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினையும் வென்றிருக்கிறார். http://en.wikipedia.org/wiki/List_of_Nelson_Mandela_awards_and_honours

பிரபாகரன் கையிலும் ஈழத்தை கொடுத்தால் தென் ஆப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா போல் அல்லது அதை விட சிறந்த தேசத்தை உருவாகுவார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

///இலங்கைக்கு எதிராக ஐ.நா.சபையில் இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்த தீர்மானம் இன்றைக்கு தோற்கடிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு ஆதரவாக நின்று இந்த தீர்மானத்தை இந்தியா தோற்கடித்திருக்கிறது. தீர்மானம் வெற்றி பெற்றிருந்தால் முதல் குற்றவாளியாக இந்தியா நின்றிருக்கும். அதன் அருகில் சீனாவும், பாகிஸ்தானும் நிற்கும். அந்தப் பழிக்கு பயந்துதான் தீர்மானத்தை இந்தியா தோற்கடித்துள்ளது./////
இதுதான் சரியான உண்மை தன் தவறை மறைக்க செய்த கூட்டு சதி இது.இதற்க்கு அப்பாவி தமிழ் மக்கள்தான் கிடைத்தார்களா?

எந்த ஒரு போராட்டமும் தீர்வு இல்லாமல் நிறைவடைந்ததாய் சரித்திரம் இல்லை.அந்த வகையில் தமிழனுக்கு தீர்வு கிடைத்துவிட்டதா? தமிழனை அடிமையாய் ஏளனமாய் நினைப்பவர்கள் இருக்கும் ,நடத்தும் நாட்டில் சக மனிதனாய் வாழமுடியுமா? தனி ஈழமாய் என்று சுதந்திரமாய் அவர்கள் வாழ்கிறார்களோ அன்றுதான் அவர்கள் போராட்டம் நிறைவு பெறும்.
இந்த அளவு மக்களை கொன்று குவித்து புலிகளை வென்றதாய் சொல்லும் அவர்கள் ஏன் நடுநிலை வாதிகளையும் பத்திரிக்கையாளர்களையும் உள்ளே அனுமதிக்க மறுக்கின்றனர்? பாதிக்கபட்ட மக்களுக்கு ஏன் அடிப்படை வசதிகள் கூட செய்து தர மறுக்கிறது? சொந்த மக்களுக்கு உணவு தர மறுக்கும் தேசம் ஒரு தேசமா?
எதற்க்காக தமிழர்களை இன்றளவும் துன்புறுத்துகிறார்கள்? கேள்விகளை அடுக்கி கொண்டே போக முடியும்.. இப்படியெல்லாம் கேள்வி கேட்ட தமிழர்களின் சொத்துக்கள் தாக்கப்படும்,சிறைக்குள் தள்ளப்படும் அவலம் ஏன்?
ஒரு தமிழனாய் இருக்க வேண்டாம் மனிதனாய் இருக்க மறந்ததேன்?

இந்திரா அவர்கள் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டார்கள் ஆனால் சோனியா கொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டார் என்பதே சரி.இப்பொழுது இந்திய அரசு புலிகல் இல்லை என மார்தட்டி கொள்ளாலாம், பயங்கர அச்சுருத்தல் அந்த தேசத்தில் இந்தியவிற்க்கு எதிராக உருவாகிருக்கிறது என்பது சிறந்த அரசியல் நோக்கர்கள் கருத்து. ஈழம் என்ற தேசம் அந்த மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என உண்மையாகவே நினைதவர் எம்.ஜி ஆர் அவர்கள் மட்டுமே....

விக்ரம்
01-06-2009, 08:24 AM
ஒரு மாவீரனுக்கு அமைதிக்கான நோபெல் பரிசு கொடுப்பது முரண்பட்ட விஷயமாகத் தெரியவில்லையா நண்பர் கா.ரமேஷ்..

வீரத்திற்கான நோபெல் பரிசு கொடுக்கலாம். ஆளுமைக்கான நோபெல் பரிசு கொடுக்கலாம்..

நெல்சன் மண்டேலாவுக்கு நோபெல் பரிசு கொடுத்தார்கள் என்றால், அவர் 27 வருசம் சிறைக்குள் அமைதியாய் இருந்தார் என்பதால், அவர் சிறைக்குள் இருந்த வரலாறு படித்தால் இன்னும் அழகாய் இருக்கும்..

பிரபாகரன் ஒரு மாவீரன் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை நண்பரே.

கா.ரமேஷ்
01-06-2009, 09:22 AM
அருமை தோழருக்கு,

எதை வைத்து சொல்கிறீர்கள் அவர் சிறைக்குள் அமைதியாய் இருந்ததற்க்கு அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது என?.
அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதற்கான காரணம் அமைதியான தேசத்தை உருவாக்கியதற்க்கும்,இரண்டு இனத்தினற்க்குள்ளும் நல்லுறவை ஏற்படுத்தியமைக்கும்தான் வழங்கப்பட்டதே தவிற அவர் அமைதியாய் சிறையில் இருந்ததற்க்கு அல்ல.
http://www.britannica.com/nobelprize/article-9050484
http://wiki.answers.com/Q/How_did_Nelson_Mandela_win_the_Nobel_Peace_Prize
http://www.anc.org.za/ancdocs/speeches/nobelnrm.html
அவரும் ஒருகாலத்தில் போராளிதான் பிறகு அமைதியை நிலைநாட்டி மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்க்கான சூழல் ஏற்பட்டவுடன் தனது கொள்கையை மாற்றி அமைதிக்கான முயற்ச்சியை மேற்கொண்டு அதிபரும் ஆனவர்.

மக்கள் சுதந்திரமாகவும் அமைதியாகவும் வாழும் சூழல் இலங்கை விசயத்தில் எடுபடுமா என்பது மிக பெரிய கேள்விக்குறி? அப்படி ஒரு சூழ்நிலை அமைந்தால் பிரபாகரனும் மனம் மாறுவார் அமைதி பாதைக்கு திரும்புவார் என சாத்தியகூறுகள் உள்ளன.அப்படி ஒரு தேசத்தை சிங்களவர்களால் ஜீரணிக்க முடியாது என்பது என் கருத்து.
தவிர வீரத்திற்க்கெல்லாம் நோபல் பரிசு கொடுக்கிரார்களா என எனக்கு தெரியவில்லை.நோபல் பரிசுக்கான வகைகள் இங்கே: http://almaz.com/

திரு மண்டேலா அவர்களின் சிறை அனுபவம் வாசிக்கும் வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை தோழரே.கண்டிப்பாக கிடைக்கும்போது படிக்கிறேன்.

Narathar
01-06-2009, 09:35 AM
இந்த அளவு மக்களை கொன்று குவித்து புலிகளை வென்றதாய் சொல்லும் அவர்கள் ஏன் நடுநிலை வாதிகளையும் பத்திரிக்கையாளர்களையும் உள்ளே அனுமதிக்க மறுக்கின்றனர்? பாதிக்கபட்ட மக்களுக்கு ஏன் அடிப்படை வசதிகள் கூட செய்து தர மறுக்கிறது? சொந்த மக்களுக்கு உணவு தர மறுக்கும் தேசம் ஒரு தேசமா?
எதற்க்காக தமிழர்களை இன்றளவும் துன்புறுத்துகிறார்கள்? கேள்விகளை அடுக்கி கொண்டே போக முடியும்.. .

நீங்கள் கேட்டுள்ள பல கேள்விகளுக்கான விடைகள் கீழுள்ள தேனீ இணையத்தில் வெளிவந்த கட்டுரையில் இருப்பதாக நான் கருதுகின்றேன்........

( கவனிக்க இது எனது சொந்த கருத்து இல்லை... ஆனால் இக்கட்டுரையி ல்சில இடங்களில் நானும் ஒத்துப்போகின்றேன் என்பதால் இதை இங்கு பதிக்கின்றேன் )

http://www.thenee.com/html/010609-3.html

உயிர்” ஆயுதம்.

- அறிவுடன்

இன்னொரு சுற்று ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

அடங்க மாட்டேன் என்று வீராப்புடன் இருக்கும் இலங்கையை அடிபணிய வைத்தே ஆகுவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கும் மேற்குலகின் “மனிதாபிமானப்” போர் மீண்டும் ஆரம்பித்துவிட்டது.

துரதிஷ்டவசமாக மீண்டும் இது “தமிழர்களின் பிணங்கள்” மீது சாய்ந்து நீலிக் கண்ணீர் வடிக்கப் போகிறது.

இந்தத் தடவை மீண்டும் இங்கிலாந்து பத்திரிகை (டைம்ஸ்) ஒன்றிலிருந்து ஆரம்பிக்கிறது.

இறுதிக்கட்ட போருக்கு முன்பதாக ஐ.நா 6500 அப்பாவி மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கலாம் என்ற தம் கணிப்பைக் கூறியிருந்தது.

எனினும், இறுதிக்கட்டத்தில் எத்தனையாயிரம் என்பது பற்றி ஐ.நா வாலும் வாய் திறக்க முடியா அளவு சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமைந்திருந்ததால், தற்போது புகைப்படங்கள், மனித சாட்சியங்கள், வேறும் வழிகளில் கிடைக்கக்கூடிய ஒளிப்பதிவுகள் தொடக்கம் அத்தனை விடயங்களையும் சாட்சியங்களாகப் பாவித்து, எவ்வாறாயினும் ஒரு மனித அவலத்தை விசாரணை செய்ய வேண்டும் எனும் ஒரு விடயத்தினை மேற்குலக ஊடகங்கள் பிரதானப்படுத்தத் துணிந்துள்ளது.

இப்பயான ஒரு விசாரணை உண்மையாக அமைய வேண்டும் என்பதை விட மேற்குலகு சாராத இலங்கையை “அச்சுறுத்த” எத்தனிக்கும் முயற்சிகளாகவே இவற்றை ஏற்றுக்கொள்ள முடிகிறது.

இது முழுக்க முழுக்க மேற்குலக வர்க்க நலன் சார்ந்த கண்மூடித்தனமாக “அச்சுறுத்தலாகவே” இறுதியில் முடியப்போகிறது.

மிக இலகுவாக இதனைப் பார்ப்பது என்றால், ஐ.நா வோ அல்லது இந்த மனித நேய அபிமானிகளோ இலங்கை மீது வைக்கப்போகும் குற்றச்சாட்டு என்ன? இலங்கை அரசு அப்பாவி மக்கள் வகை தொகையாகக் கூடியிருந்த இடங்களில் அல்லது, அவர்களாகவே “பாதுகாப்பு வலயங்கள்” என்று பிரகடனப்படுத்திய இடங்களில் அப்பாவி மக்களை கொன்று குவித்தார்கள் என்பதாகும்.

கல்லறைகள்

இதன் அடிப்படையையே தகர்த்தெறிவதற்கு இலங்கைக்கு இரண்டு மிக வலுவாக காரணங்கள் இருக்கின்றன.

1. பாதுகாப்பு வலயம் பொது மக்களுக்காகத்தான் உருவாக்கப்பட்டது, ஆனால் அதற்குள் புலிகள் புகுந்து கொண்டார்கள், தம் கன ரக ஆயுத நிலைகளை அங்கே வலுப்படுத்திக்கொண்டார்கள்.

2. புலிகள் அமைப்பு ஒரு கட்டத்தின் பின் சீருடையில் போரிடவில்லை, மாறாக சிவிலியன்கள் போன்றே ஆயுதங்களை வெடிக்க வைத்ததற்கான ஆதாரங்களும் இருக்கின்றன, எனவே இந்த மேற்குலகம் சொல்லும் “mass graves” அதாவது அங்கே பெருந்திரளில் காணப்படும் கல்லறைகளைத் தோண்டினாலும், அந்தக் கல்லறையில் இருப்பது பொதுமகனா இல்லை புலியா என்பதை நிரூபிக்க முடியாது.

ஏனெனில் புலிகளின் நெற்றியில் அவர்கள் புலிகள் என்று எழுதப்பட்டிருக்கப் போவதும் இல்லை, சிவிலியன்கள் போன்று தான் புலிகள் போரிட்டார்கள் என்பதை மறுதலித்து விட்டு இந்த விசாரணைகளை மேற்கொள்ளும் சாத்தியம் மேற்குலகுக்கும் இல்லை.

கல்லறைகளில் உறங்கும் அப்பாவி உடலங்களும் சில வேளை குண்டடி பட்ட உடலங்களாகவே இருக்கலாம், அந்த துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த உடல் எல்லாம் புலி தான் என்று அரசு வாதாடும் போது அதை இல்லை என மறுத்துரைக்கும் நிலையிலும் இந்த மேற்குலகம் இருக்கப்போவதில்லை.

மனித சாட்சியங்கள்

இதற்கடுத்ததாக தம் மனித நேய அபிமானத்தைக் காட்டுவதற்கு, தற்போது முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும், “தப்பி வந்த” மக்களை மேற்குலகப் பிரதிநிதிகள் பயன்படுத்த முனைவார்கள்.

சில வேளைகளில் ஏலவே இப்படியான சாட்சியங்களை ஒளிப்பதிவு செய்திருக்கவும் கூடும்.

இந்த விடயத்தில் மிகக் கவனமாக இருக்கும் நோக்கில், வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களை அந்தப் பக்கமே செல்லக்கூடாது என்று இலங்கை அரசு மிகக் கடுமையாக நடந்து கொண்டது.

அதையும் மீறிச் சென்று குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கச் சென்ற சானல் 4 நிறுவனத்தின் ஊழியர்களை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளவும் இலங்கை அரசு தயங்கவில்லை.

இந்த ஒரு அடிப்படை விடயம்தான் “சந்தேகத்தின்” பிரதான காரணி என்று மேற்குலகம் வாதாட முனைந்தால், இதற்கு முன்னர் அரச சார்பற்ற சேவை அமைப்புகள் எனும் பெயரில் அப்பிரதேசங்களில் விடுதலைப் புலிகளுக்காக ஆயுதங்கள் கடத்தப்பட்டதும், அவர்களுக்கான உபகரண உதவிகள் மற்றும் அவர்களின் “ஆயுத அபிவிருத்தி” உதவிகளிலும் பங்கெடுத்த பல மேற்கு நாடுகள் பற்றிய விபரங்களும் அரசிடம் இருக்கிறது, அதுவும் இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறார்கள் தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர்,தமிழினி மற்றும் பலர்.

பொட்டம்மானையும் வைத்திருப்பதாகச் சொல்லும் அரசின் ஊகமும் உண்மையாகுமானால் இந்த மனித நேய அபிமானிகளின் முகங்கள் வெகு விமர்சையாக கிழிக்கப்படும் அபாயத்தை அரசாங்கம் அவர்களுக்கு எதிரான அச்சுறுத்தலாக முன்வைக்கும்.

அப்படித்தான் பொட்டம்மானைக் கொன்று போட்டாலும், அல்லது இந்தியாவின் “என்கவுன்டர்” முறையில் போட்டுத்தள்ளினாலும், அவர் தொடர்பான சாட்சியங்கள் ஒளிப்பதிவாகவாவது நிச்சயம் அரசாங்கம் வைத்திருக்கும்.

எனவே,” witness accounts” என்று மேற்குலகம் கொண்டுவரப்போகும் சாட்சியங்கள் தொடர்பில் அவர்களுக்கு எதிரான எதிர் சாட்சியங்களாக முன்னாள் புலிகளின் உறுப்பினர்களும், மக்களும் கூட அணி திரட்டப்படுவார்கள்.

விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து தப்பி வந்ததும் சுடச்சுட தம் உறவுகளை புலிகள் கொன்றுவிடுகிறார்கள், தப்பித்து வருபவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்கிறார்கள் என்று ஊடகங்களில், அந்தப் பதட்டத்திலும் “செவ்விகள்” வழங்கிய பல பேரின் அதே வகையான மனித சாட்சியங்கள் அரசிடமும் இருக்கும்.

எனவே, இரண்டையும் நேர் கோட்டில் வைத்து இலங்கை அரசை முழுமையாக குற்றவாளிகளாக்க முடியாமல் போகும்.

அதைத் தடுக்கும் அதற்கடுத்த காரணிதான், மேற்குலகம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்ட அடுத்த விடயம்.

அதாவது மக்களை புலிகள் மனிதக் கேடயங்களாக வைத்திருந்ததன் மூலம் மறைமுகமாவது இந்த மனித அவலத்திற்கு அவர்களும் பொறுப்பாளிகள் என்பதே அது.

புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாக வைத்திருக்கிறார்கள் என்ற கூற்று யுத்த காலத்திலேயே சர்வதேசத்தினால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம்.

இதன் அடிப்படையிலேயே பெரும்பாலான வெளிநாடு வாழ் தமிழர்களின் போராட்டங்கள் விழலுக்கிறைத்த நீராக எதற்கும் பிரயோசனமற்றுப் போனது.

அந்நேரங்களில் ஒருவேளை தம் நலன் சார்ந்து இலங்கை அரசை மாற்றிக்கொள்ளவும் முடியும் எனும் நிலையில் ஏறத்தாழ இந்த விடயத்தை முழு உலகமும் ஏற்றுக்கொண்டது.

எனவே, அவ்விடயம் இங்கு மீண்டும் பிரதானப்படுத்தப்படும் போது, இந்தக் குற்றச்சாட்டுகள் மீண்டும் உலக அரங்கில் வலுவாக எழுவற்கு ஏதுவாக தற்போது இந்த ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களே சாட்சி சொல்லப்போகின்றது.

அதாவது, தமது “நடு நிலை” யை வெளிக்காட்டி தாங்கள் சுத்தமான மனித நேய அபிமானிகள் என்று காட்டும் நோக்கில், மக்கள் பாதுகாப்பு வலயங்களில் புலிகள் தமது மோட்டார் மற்றும் ஆட்டிலறி நிலைகைளையும் வைத்திருந்தார்கள் என்னும் ஆதாரங்களையும் சேர்த்தே தான் வெளியிட்டிருக்கிறார்கள்.

கனரகம் சிறு ரகம்

இப்பொது இந்த ஒவ்வொரு நிலையையும் தாண்டிச்செல்லும் இந்த மனிதப் பேரவல வாதம் பாதுகாப்பு வலயத்திற்குள் இப்படி தொகை தொகையாக மக்கள் இருந்த போது இலங்கை அரசு கனரக ஆயுதங்களைப் பாவித்தது எனும் குற்றச்சாட்டிலாவது வந்து நிற்கும்.

அதையும் நியாயப்படுத்தும் விதமாக இரு தரப்பும் aerial photo, அதாவது உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்களை சாட்சியங்களாக முன்வைக்கும்.

மேற்குலகிடம், விசேடமாக டைம்ஸ் பத்திரிகையின் புது ஆதாரமாக் கிளம்பியிருக்கும் aerial புகைப்படங்களில், முன்னாள் பாதுகாப்பு வலயத்தில் (புலிகளின்) பெருந்தொகையான கல்லறைகள் காணப்படுகின்றன.

இவை புலிகளின் டிரேட் மார்க் மாவீரர் கல்லறைகளாக இருந்தாலும், ஒரு வேளை அவையனைத்தும் சிவில் உடைகளில் புதைக்கப்பட்டிருக்கும் போராளிகளாகவும் இருக்கலாம்.

இப்படி பல தரப்பட்ட நொண்டிச் சாட்டுகளுடன் மீண்டும் கிளம்பியிருக்கும் இந்த மனிதநேயப் பூதங்கள் இலங்கை அரசை அச்சுறுத்தும் பணியில் மீண்டும் இறந்து போன அப்பாவி மக்களின் பிணங்கள் மீது “அரசியல்” நடத்தப்போகிறது.

கா.ரமேஷ்
01-06-2009, 10:02 AM
அப்படியே மேற்குலக நாடுகள் தங்கள் வர்த்தகத்திற்க்காக காலூன்ற நினைக்கலாம் என வைத்துகொள்வோம். ஏன் இந்தியா,பாகிஸ்தான்,சைனா போன்ற நாடுகளின் நிலை இப்பொழுது என்ன? போர் முடிந்துவிட்டதல்லவா இதுவரைக்கும் நீங்கள் தீவிரவாதத்தை அழிக்கதானே நினைத்தீர்கள் இனி என்ன உங்களின் நிலை ? நீங்களாவது ஏதாவது செய்ய முற்படலாமே... நீங்களும் "அப்பாவி மக்களின் பிணங்களின் மீது அரசியல் நடத்துபவர்கள் தானோ?" . எல்லா நாடுகளுமே தங்களுக்கு தேவையானதை செய்யத்தான் முற்படுகின்றன மக்களுக்கு தேவையானதை விட்டு, அப்பாவி மக்களை பற்றி சிந்திக்க மனமில்லாத மனிதாபமில்லா அரசுகள்.

பூனைக்கு மணி கட்டும் கதைதான் போல இது. யார் கட்டுவார்கள் பொறுத்திருந்து பார்ப்போம் காலம்தான் பதில்சொல்லும்.

Narathar
01-06-2009, 11:13 AM
அருமை தோழருக்கு,

எதை வைத்து சொல்கிறீர்கள் அவர் சிறைக்குள் அமைதியாய் இருந்ததற்க்கு அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது என?.
அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதற்கான காரணம்


அமைதியான தேசத்தை உருவாக்கியதற்க்கும்,
இரண்டு இனத்தினற்க்குள்ளும் நல்லுறவை ஏற்படுத்தியமைக்கும்தான்


வழங்கப்பட்டதே தவிற அவர் அமைதியாய் சிறையில் இருந்ததற்க்கு அல்ல..

தோழரே

இந்த இரண்டில் எதையாவது தலைவர் பிரபாகரன் செய்ததாக நீங்கள் கருதுகின்றீர்களா?????

ஜயவர்த்தனே ஒப்பந்தத்தின் போது கிடைத்ததை வைத்து மற்றதை ஜனனாயக முறையில் பெற்றுக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தால் நீங்கள் சொல்வது சரி!

அல்லது ரணில் தேவைக்கு அதிகமான அதிகாரங்களை தந்தபோதாவது அவருடன் அரசியல் காய் நகர்த்தி மக்களுக்கு தேவையானதை பெற்றுக்கொடுக்க முனைந்திருந்தால் அப்போதும் அவருக்கு நோபல் பரிசு கொடுத்திருக்கலாம்!!!

இத்தனை சாவுகளும்
இத்தனை கோர முடிவையும் போராட்டம் சந்தித்திராது

என்பது என் தாழ்மையான கருத்து

கா.ரமேஷ்
01-06-2009, 11:52 AM
தோழருக்கு...!

ஜயவர்த்தனே ஒப்பந்தம் இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் , பிச்சை இடுவதைப்போல் கொடுப்பதை பெற்றுக்கொள்ள சொல்கிறீர்கள் அப்படிதானே?
காலம் மாற மாறா ,தென் ஆப்பிரிக்க சூழ்நிலை அப்படி இல்லை சம உரிமை தந்தனர் அந்த தேசத்தில் கருப்பின தலைவர் அதிபர் ஆக முடிந்தது.இலங்கையில் தமிழர் ஒருவர் அதிபர் ஆக முடியுமா? இலங்கை ராணுவத்தில் தமிழர்கள் உள்ளனரா? அரசு துறைகளில் எத்தனை பேர் தமிழர்கள் அதிகாரிகளாக இருக்கிறார்கள்? தமிழர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களின் கதி அங்கெ என்ன? இப்படி எதையுமே சரியாக செய்யாத ஒரு அரசின் கீழ் உள்ள ஒப்பந்தந்தில் எப்படி இருக்க முடியும் என அவர் நினைத்திருக்கலாம். அவர் விரும்பியது சம உரிமை அது எப்போதும் சிங்களவர்கள் தர விரும்பமாட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

//////அல்லது ரணில் தேவைக்கு அதிகமான அதிகாரங்களை தந்தபோதாவது அவருடன் அரசியல் காய் நகர்த்தி மக்களுக்கு தேவையானதை பெற்றுக்கொடுக்க முனைந்திருந்தால் அப்போதும் அவருக்கு நோபல் பரிசு கொடுத்திருக்கலாம்!!!/////////
ரணில் அப்படி என்ன தேவைக்கு அதிகமான அதிகாரத்தை கொடுத்தார் .அப்படி கொடுத்திருந்தால் ஈழம் அமைந்திருக்குமே, மொத்தத்தில் சிங்களவர்கள் தமிழர்களை அடிமைகளாகவே பாவிக்க விரும்பினர் என்பதே உண்மை.
அவர் தனக்கென்ற ஈழ தேசத்தை கட்டுகோப்புடன் வைத்திருந்தார்.கட்டமைபுகளை கட்டுகோப்புடன் வடிவமைத்திருந்தார். தனி தேசம் கிடைத்தால் தமிழ் மக்களை மட்டுமல்லது சிங்களவர்களையும் அனுசரித்து சென்றிருப்பார், கண்டிப்பாக அந்த தேசத்தில் அமைதியை நிலைநாட்டி இருப்பார் என்பதே என் கருத்து.

Narathar
01-06-2009, 12:51 PM
தோழருக்கு...!

ஜயவர்த்தனே ஒப்பந்தம் இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் , பிச்சை இடுவதைப்போல் கொடுப்பதை பெற்றுக்கொள்ள சொல்கிறீர்கள் அப்படிதானே?
காலம் மாற மாறா ,தென் ஆப்பிரிக்க சூழ்நிலை அப்படி இல்லை சம உரிமை தந்தனர் அந்த தேசத்தில் கருப்பின தலைவர் அதிபர் ஆக முடிந்தது.இலங்கையில் தமிழர் ஒருவர் அதிபர் ஆக முடியுமா? இலங்கை ராணுவத்தில் தமிழர்கள் உள்ளனரா? அரசு துறைகளில் எத்தனை பேர் தமிழர்கள் அதிகாரிகளாக இருக்கிறார்கள்? தமிழர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களின் கதி அங்கெ என்ன? இப்படி எதையுமே சரியாக செய்யாத ஒரு அரசின் கீழ் உள்ள ஒப்பந்தந்தில் எப்படி இருக்க முடியும் என அவர் நினைத்திருக்கலாம். அவர் விரும்பியது சம உரிமை அது எப்போதும் சிங்களவர்கள் தர விரும்பமாட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

//////அல்லது ரணில் தேவைக்கு அதிகமான அதிகாரங்களை தந்தபோதாவது அவருடன் அரசியல் காய் நகர்த்தி மக்களுக்கு தேவையானதை பெற்றுக்கொடுக்க முனைந்திருந்தால் அப்போதும் அவருக்கு நோபல் பரிசு கொடுத்திருக்கலாம்!!!/////////
ரணில் அப்படி என்ன தேவைக்கு அதிகமான அதிகாரத்தை கொடுத்தார் .அப்படி கொடுத்திருந்தால் ஈழம் அமைந்திருக்குமே, மொத்தத்தில் சிங்களவர்கள் தமிழர்களை அடிமைகளாகவே பாவிக்க விரும்பினர் என்பதே உண்மை.
அவர் தனக்கென்ற ஈழ தேசத்தை கட்டுகோப்புடன் வைத்திருந்தார்.கட்டமைபுகளை கட்டுகோப்புடன் வடிவமைத்திருந்தார். தனி தேசம் கிடைத்தால் தமிழ் மக்களை மட்டுமல்லது சிங்களவர்களையும் அனுசரித்து சென்றிருப்பார், கண்டிப்பாக அந்த தேசத்தில் அமைதியை நிலைநாட்டி இருப்பார் என்பதே என் கருத்து.

தென்னாபிரிக்காவையும் இலங்கையையும் நீங்கள் ஒன்றாக ஒப்பிடுவது சரியல்ல
தென்னாபிரிக்காவில் பெரும்பாண்மையான கறுப்பர் இனம் சிறுபான்மையான ஆக்கிரமிப்பாளர்களுடனேயே போராட்டத்தை முன்னெடுத்தார்கள். ஆனால் இலங்கையில் நிலமையே வேறு............

ஒரு வேளை அக்காலகட்டத்திலேயே ஜனநாயக நீரோட்டத்தில் புலிகள் இணைந்து தமிழர் பகுதியில் நல்லாட்சி தந்திருந்தால் இந்த இருபது வருட இடைவெளியில் தமிழர் ஒருவரை தம் நாட்டுக்கு தலைவனாக்கும் மனப்ப்பக்குவம் சிங்களவர்க்கு வந்திருக்கும்! ஏன் சிங்கள அரசில் வெளிநாட்டமைச்சராகவிருந்த லக்ஷ்மன் கதிர்காமர் அடுத்த பிரதமர் என்று சிங்கள மக்களாலேயே சிலாகிக்கப்பட்டவர் , அவரை புலிகள் கொலை செய்ததன் பிறகு கூட சிங்களவர் வீடுகளில் இன்றும் அவர் படத்தை தொங்கவிட்டிருக்கின்றார்களே.........

அடுத்த பிரதமர் வேட்பாளராக கட்சிக்குள் வியாபித்துவந்த தமிழரான ஜெயராஜ் பெர்னான்டோ பிள்ளையை கொன்றது யார்? எதற்காக? தமிழர் ஒருவர் சிங்களநாட்டில் தலைவராக வரக்கூடாது என்பதற்காகத்தானே? இதை யார் செய்தார்கள்? ஏன் செய்தார்கள்?

அன்று எதிர்க்கட்சி தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தை கொன்றொழித்தவர்கள் யார்? இவற்றை சற்று உங்கள் ஈழக்கண்ணாடியை கழட்டிவைத்துவிட்டு யோசித்துப்பாருங்கள்.

இத்தனை ஏன் ப.நடேசன் அவர்களே இலங்கை பொலிஸ் சேவையில் இருந்தவர் தானே? அவர் தமிழர் இல்லையா? ஐம்பதுகளில் இலங்கை அரச பதவிகளை அலங்கரித்தவர்களில் பெரும்பாண்மை சிறுபான்மையான தமிழர்கள் தான்! அதுதான் இந்தப்போராட்டத்தின் ஆணி வேர்!

நான் இங்கு சொல்லவருவது என்னவென்றால் ஆயுத்தத்தை விடுத்து ஜனநாயக வழியில் இப்போராட்டம் சென்ரிருந்தால் இன்று நிச்சயமாக நாட்டின் உயர் பதவியில் தமிழர்கள் இருந்திருப்பார்கள். அதை தவறவிட்டதில் பெரும் பங்கு புலிகளுக்கும் உண்டு. இன்று சிங்கள அரசில் எத்தனை தமிழ் அமைச்சர்கள் சகல அதிகாரங்களுடன் உள்ளார்கள்? அதைச்சொன்னால் அவர்கள் துரோகிகள் என்பீர்கள்.........

எப்போதுமே ஒரு பிரச்சனைக்கு இரண்டு பக்கமுண்டு........ அதில் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்காதீர்கள்

கா.ரமேஷ்
01-06-2009, 02:00 PM
தோழரே,
நீங்களும் ஒருதலை பட்சமாகவே பார்க்கிறீர்கள் எனவே என்னுகிறேன்.
பெரும்பாண்மை சிறும்பாண்மை என்பது தவறு,ஒரு தமிழனுக்கு சம உரிமை கொடுக்க முன்வரவில்லை என்பதே என் வாதம் அதுதான் புலிகல் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதற்கே அஸ்திவாரம்.
லக்ஷ்மன் கதிர்காமரை புலிகள் கொன்றார்கள் என எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?.விடுதலை புலிகள் அதை மறுத்துள்ளனர் இலங்கை அரசுதான் அவர்கள் செய்தார்கள்(வி.பு) என சொல்கிறார்கள்.ராஜீவை கொன்றது தாங்கள்தான் என ஏற்றுக்கொண்டவர்கள் இந்த விஷயத்தை செய்திருந்தால் ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.சிங்களவர்களே தமிழன் ஒருவர் வளர்ச்சி பிடிக்காமல் செய்திருக்கலாமெ பலியை அவர்கள் மீது போட்டிருக்கலாமே.

ஜெயராஜ் பெர்னான்டோ பிள்ளையை கொன்றதற்கான காரணம் அவரின் ஒருதலை பட்சம் பிரதமராக வேண்டும் என்ற கனவில் பெரும்பாண்மை பெற்ற சிங்களவர்களோடு இணைந்து கருணா போல் செயல்பட்டவர்.
அமிர்தலிங்கத்தை கொன்றது தவறு எனவே நானும் என்னுகிறேன் ஆனால் அதையும் வி.பு வின் துணை குழுக்களே செய்திருக்கிறார்கள்.
ப.நடேசன் போன்றோர் வருவதற்க்கு காரணம் என்ன அவர்களால் அங்கே பெயரளவில் பதவிக்கு இருந்தார்கள் அதன் காரணமாகவே வெளியெறி வந்திருக்கிறார்கள் நமக்கென்று அரசு இருந்தால்தான் இடையூரு இல்லாமல் பணி மேற்கொள்ள முடியும் என சுதந்திர வேள்விக்கு மாறி இருக்கிறார்கள்.போராட்டத்தில் கலந்துகொண்டு துணை நின்றிருக்கிறார்கள்.
ஆயுதத்தை விடுத்திருந்தால் அடிமையை விட கேவலமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்திருப்பார்கள் தமிழன் என்ற மாவீரன் இனம் மழுங்கி போய் இருந்திருக்கும்.ஆயுதத்தை எடுக்க வைத்ததே அவர்கள்தான் என சொல்கிறேன்.நிம்மதியாய் வாழும் ஒருவன் வன்முறைக்கு மாற விழையமாட்டான் ஆரம்பகால கட்டத்தில் தமிழர் பட்ட அவலங்களே அதற்க்கு சாட்சி,வண்முறைக்கும் வந்ததற்க்கு அதுதான் காரணம்.சிங்கள அரசில் நிறைய அமைச்சர்கள் சகல அதிகாரங்களுடன் இருக்கிறார்கள் ஏற்றுக் கொள்கிறேன் அனால் அவர்கள் மக்களுக்கு ஏதும் செய்வதற்க்கற்ற திராணியற்றவர்களாய் அவர்கள் மட்டும் சந்தோசமாய் சிங்களவர்களுக்கு சந்தோசப்படும்படியாய் இருக்கிறார்கள்.
ஆயுதம் ஏந்தும் வண்முறையில் எனக்கும் நம்பிக்கை இல்லை ஆனால் இலங்கை விசயத்தில் அவர்களை பாதுகாத்துக்கொள்ளவே ஆயுதம் தேவைப்பட்டிருக்கிறது. உங்கள் கூற்றுப்படியே இப்போது வண்முறை(வி.பு) ஒழிந்துவிட்டதல்லவா பார்க்கலாம் அடுத்து இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை.(ஆரம்ப கால கொண்டாட்டமே தமிழருக்கு எதிராய் அவிழ்த்து விடப்பட்டிருக்கிறது குறிப்பிடதக்கது).தமிழருக்காக இப்போது என்ன செய்யபோகிறார்கள் என அதைதெரிந்துகொள்ள ஆர்வத்துடனே இருக்கிறோம் பாதிக்கப்பட்ட என் இனத்திற்க்கு எதுவும் செய்ய திராணியற்ற தமிழர்களில் ஒருவனாய்.

விக்ரம்
02-06-2009, 10:55 AM
கா.ரமேஷ் அண்ணா உங்களிடம் ஒரு கேள்வி -> அன்பால் ஒரு விஷயத்தை சாதிக்க முடியுமா? (அ) வம்பால் (ஆயுதப் போராட்டம்) சாதிக்க முடியுமா? தயவு செய்து ஒரு வரியில் பதில் சொல்லுங்கள். சும்மா சுத்தி வளைச்சு பேசி, மீண்டும் அதே இடத்துக்கு வந்து நிற்க வேண்டாம்.

அன்பால் இன்று சாதிக்க முடியாவிட்டாலும், நாளையாவது சாதிக்கலாம்.

ஆனால், வம்பால் என்றுமே சாதிக்க முடியாது என்பது universal truth.

ஈழத்தைப் பொறுத்தவரை, இனி என்ன பண்ணலாம் என்று யோசிப்பதனால் மட்டுமே அவர்களுக்கு ஒரு விடிவு காலம் பொறக்கும். தமிழகத்தில் இன்னும் நிறைய புலிகள் ஆதரவுப்படை இருக்கிறது என்று காட்டிக் கொள்வதினால், புலிகளுக்கோ (அ) ஈழத்துமக்களுக்கோ ஒன்றும் பிரயோஜனம் கிடைக்கப் போவதில்லை.

புலிகளே தங்கள் ஆயுதத்திற்க்கு மௌனம் கொடுக்கிறோம் என்று அறிவித்தது எதைக் காண்பிக்கிறது என்றால், அவர்களும் மிதவாதம் (அ) அறவழியில் போராடப்போகிறார்கள் என்பதை உணர்த்துகிறது. இனிமேல் புலிகள் சார்பில் எவ்வித கொரில்லா தாக்குதல்களும் இருக்காது என்பதே என் கணிப்பு.

தற்போது மேற்கத்திய நாடுகளின் கைகளும் ஈழத்தில் அவதியுறும் மக்களுக்கு சப்போர்ட்டாக இருப்பதை கவனித்தில் கொண்டு நோக்கினால், மிக விரைவில் நம் தமிழ்நாடு போன்ற சுய அந்தஸ்து கொண்ட ஈழ மாநிலம் மலரும்.

நம்பிக்கை தான் வாழ்க்கை. நம்புவோம். நம்பிக்கையை நிறைவேறச் செய்ய அறவழியில் போராடுவோம்.

இந்தியாவில் உள்ள தமிழ்நாடு போன்ற ஒரு சுய அந்தஸ்து கொண்ட மாநிலம் வேண்டும் அதற்காகத் தான் போராடுகிறோம் என்று சொல்லியிருந்தால், ஒரு 3 வருஷத்துக்கு முன்னவே அப்படி ஒரு மாநிலம் உருவாகியிருக்கும்..

கா.ரமேஷ்
02-06-2009, 12:22 PM
அன்பு சகோதரருக்கு,

நான் முன்னேயெ குறிப்பிட்டுருக்கிறேன் எனக்கும் வண்முறை கலாச்சாரத்தில் இஷ்டமில்லை.அன்பு எல்லோரும் விரும்பும் விஷயம்,நான் மட்டும் என்னவோ அன்பை விரும்பாதவன் என்று நினைக்காதீர்கள்.எனக்கும் அன்பு பிடிக்கும் அமைதி வழி பிடிக்கும்.

மனிதனை மனிதன் கொல்லும்,அடிமையாக்க விழையும் ஒரு தேசத்தில் அன்பை பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.1 லட்சத்திற்க்கு மேற்பட்ட சொந்த தேசத்து மக்களை எந்த தேசம் கொன்றிருக்கிறது சொல்லுங்கள் அவர்கள் மீது அன்பு எப்படி வரும் சொல்லுங்கள்.எனக்கும் இருவரும் சமமாக நடத்தப்பட்டு சகோதரர்களாக உலாவ வேண்டும் என்பதே என் அவா.ஆனால் அங்கு அப்படி ஒரு சூழ்நிலை இல்லை சிங்களவர்கள் தமிழர்களை சகோதரர்களாக பாவிக்க விரும்பவில்லை என்பது உண்மை அவர்கள் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் எனும் ஒரு எண்னம் ஓடிக்கொண்டிருக்கிறது உண்மை, அது மாறும் வரை தமிழர்கள் அங்கு அவர்களோடு இணைந்து வாழ்வது என்பது கஷ்டமான விடயம்.அவர்கள் இப்போது புலிகளை வென்றதாக நினைக்கவில்லை,தமிழர்களை அடிமையாக்கியதாகவே நினைக்கிறார்கள்.
http://tamilwin.com/view.php?2aSWnBe0dbj0K0ecQG7X3b4j9EO4d3g2h2cc2DpY2d436QV3b02ZLu2e
http://thatstamil.oneindia.in/news/2009/05/22/lanka-tamils-allege-rapes-in-idp-camps.html
தங்கள் உயிருக்கே உத்திரவாதம் இல்லாத ஒரு தேசத்தில் அவர்களோடு அன்பை செலுத்த சொல்கிறீர்கள்.ஆரம்ப காலத்திற்குள் நுழைய விரும்பவிலை ஆனால் திரு.செல்வநாயகம் போன்ற தலைவர்கள் அறவழியையே கடைபிடித்தனர் அப்பொழுதும் ஒன்றுமெ நடக்கவில்லை.

எங்களை போன்றவர்கள் புலி ஆதரவு படை என்று காட்டிக்கொள்ள விரும்பவில்லை,அதே சமயத்தில் அந்த மக்களுக்கு ஒரே ஆதரவு அவர்கள் தான் அதையும் அங்கே இழந்து விட்டார்கள் இனி அம்மக்களின் நிலை என்னவாகும் எனத்தான் பதறுகிறோம்.இனி என்ன பன்னலாம் என்று யோசிக்க சொல்கிறீர்கள் இதுவரை இனமக்களை அழித்தது தவிற அவர்களை இவ்வுலக சமுதாயம் காப்பாற்ற ஒரு நாதியும் இல்லையே என வேதனை படுகிறோம் வெக்கி தலை குனிகிறோம். இதுவரை எதுவுமே செய்யாமல் வேடிக்கை பார்த்த உலகம் இனிமேல் என்ன செய்ய போகிறது?

அவர்கள் எந்த தாக்குதலும் நடத்தவேண்டாம் ,இனி ஒரு தமிழன் உயிர்கூட போக கூடாது என்பதே ஆவல்.அப்படி மவுனமாய் இருக்கும் ஒன்றுமே அறியாத அப்பாவி தமிழனின் உயிருக்கு உத்திரவாதம் தருவது யார்

தனி தமிழ் மாநிலம் அமையும் என்கிறீர்கள் நன்றி.அப்படி ஒன்று அமைந்தால் சந்தோசப்படுபவர்களில் நானும் ஒருவன்.இந்த செய்தியையும் கொஞ்சம் படித்துவிட்டு சொல்லுங்கள்.

http://www.maalaimalar.com/2009/05/24150119/CNI0370240509.html

//இந்தியாவில் உள்ள தமிழ்நாடு போன்ற ஒரு சுய அந்தஸ்து கொண்ட மாநிலம் வேண்டும் அதற்காகத் தான் போராடுகிறோம் என்று சொல்லியிருந்தால், ஒரு 3 வருஷத்துக்கு முன்னவே அப்படி ஒரு மாநிலம் உருவாகியிருக்கும்./////
எதை வைத்து சொல்கிறீர்கள் என தெரியவில்லை.

இவ்வளவு உயிர்கள் பலியானது போதும்,இனிமேலாவது அவர்களை சுதந்திரமாக வாழ விடுவார்களா தெரியவில்லை அப்படி அமையவேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.அப்படி நடக்கவில்லை என்றால் அம்மக்களின் நிலை? உங்களைப்போலவே நம்பிக்கை வக்கிறேன் அப்படி நடக்கவில்லையென்றால் என்ன நிகழும் என உங்கள் சிந்தனைக்கே வழிவிடுகிறேன்.அறவழியெல்லாம் ஆரம்பித்து போராடிய பிறகே இந்த பாதைக்கு வந்திருக்கிறார்கள் என எனக்கு தெரிந்தவரை நினைக்கிறேன்.இப்போதைக்கு நிச்சயம் அவர்கள் வன்முறைக்கு மாறமாட்டார்கள் என்பதே எனது கருத்தும் ஆனால் இதை நீடிக்க விடுவதும் மரணிக்க செய்வதும் இலங்கை அரசின் கையிலேயே இருக்கிறது. உயிர் உறவுகளை இழந்த மக்களுக்கு ஆறுதல் கூறி பொறுத்திருந்து பார்ப்போம்.காலம் பதில் சொல்லும்.

Narathar
03-06-2009, 01:15 PM
ஆயுதத்தை விடுத்திருந்தால் அடிமையை விட கேவலமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்திருப்பார்கள் தமிழன் என்ற மாவீரன் இனம் மழுங்கி போய் இருந்திருக்கும்..

இதையே தான் நானும் உங்களுக்கு சொல்கின்றேன்......

தக்கசமயத்தில் ஆயுதத்தை கைவிட்டு ஜனநாயக வழிக்கு திரும்பியிருந்தால் தமிழன் இன்று தலை நிமிர்ந்து நின்றிருப்பான்.... அவனுக்கென்று ஒரு மரியாதை இருந்திருக்கும்.

நான் ஒன்றும் சிங்கள அரசுக்கு சாதகமாக பேசுவதாக எண்ண வேண்டாம், இன்றையதமிழர் நிலைக்கு முழுக்காரணத்தையும் புலிகள்தான் ஏற்க வேண்டும்..... அவர்கள் விட்ட வரலாற்றுத்தவறு... இன்று இலங்கை தமிழினம் தலை குனிந்து நிற்கின்றது!!!!!! இந்த ஆதங்கம் தான் என்னை இவ்வளவு எழுத வைத்துள்ளது.

அவர்களது ஆயுத போராட்டம் இன்று தமிழனுக்கு கவுரவமான வாழ்வைத்தேடித்தந்ததா? இல்லை மாவீர இனம் என்ற பெயரை தக்கவைத்ததா???? வெரும் உயிர் பலிகளை மட்டுமே தேடித்தந்துள்ளது....... அதைவிட உங்கள் ஆயுத போராட்டம் சாதித்தது என்ன?

இங்கு ஆரம்பத்தில் ஒருவர் குறிப்பிட்டிருந்தது போல விவேகமற்ற வீரத்தால் ஒன்றையும் சாதித்து விட முடியாது என்பதை புலிகளின் ஆயுத வெறி உலகுக்கு காட்டியுள்ளது.....

உங்களைப்போன்றவர்கள் சொந்த நாட்டை விட்டோடி எங்கோ இருந்துகொண்டு இணையத்தில் வீரம் பேசலாம்.... ஆனால் இன்னும் தாய்மண்ணில் இருந்துகொண்டு வெட்கி தலை குனிந்து நிற்கின்றோம்.....

இவ்வாறு நான் எனது மன ஆதங்கத்தை கொட்டுவதால் மன்றத்தின் சக அன்பர்கள் என் மீது கோபங்கொள்ளக்கூடிய சாத்தியம் கூட உள்ளது..... ஆனால் எவ்வளவு காலத்துக்குத்தான் மனதில் பட்டதை சொல்லாமல் மழுப்புவது?

யதார்த்ததை புரிந்து கொள்ளாமல் இன்னும் ஆயுத கனவுகளிலேயெ மிதந்து மீண்டும் எமது சமுகத்தை படுகுழியில் தள்ளாமல் ஜனநாயக முறையில் ஒரு நல்ல தலைமைத்துவத்தையும் முடிவையும் எட்டுவது எப்படி என்று இனியாவது சிந்திப்போம்......

கா.ரமேஷ்
04-06-2009, 06:05 AM
நான் ஒன்றும் சிங்கள அரசுக்கு சாதகமாக பேசுவதாக எண்ண வேண்டாம், இன்றையதமிழர் நிலைக்கு முழுக்காரணத்தையும் புலிகள்தான் ஏற்க வேண்டும்..... அவர்கள் விட்ட வரலாற்றுத்தவறு... இன்று இலங்கை தமிழினம் தலை குனிந்து நிற்கின்றது!!!!!! இந்த ஆதங்கம் தான் என்னை இவ்வளவு எழுத வைத்துள்ளது.

அவர்களது ஆயுத போராட்டம் இன்று தமிழனுக்கு கவுரவமான வாழ்வைத்தேடித்தந்ததா? இல்லை மாவீர இனம் என்ற பெயரை தக்கவைத்ததா???? வெரும் உயிர் பலிகளை மட்டுமே தேடித்தந்துள்ளது....... அதைவிட உங்கள் ஆயுத போராட்டம் சாதித்தது என்ன?

எப்படி இதை சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.விடுதலை நோக்கி புறப்படும் எந்த ஒரு இயக்கமும் ஏற்ற இறக்கங்களை சந்தித்ததுண்டு,போராட்ட முறைகள் மாறும் ஆனால் நோக்கம் ஒன்றாகத்தான் இருக்கும்.சில வாய்ப்புகளை தவற விட்டிருக்கலாம் ஆனால் அவர்கள் ஆயுதம் ஏந்தியதையோ ,இன்றைய நிலைக்கு அவர்கள்தான் காரணம் என சொல்வது ஏற்றுக்கொள்ளதக்கது அல்ல எனவே நினைக்கிறேன்.அவர்களை ஆயுதம் ஏந்த வைத்தவர்களே அவர்கள்தான்...அமைதி வழியில் ஆரம்பித்த போராட்டம்தான் இது என நினைவு படுத்த விரும்புகிறேன்,இன்றைய நிலைக்கு இந்திய அரசின் வஞ்சகம்,சைனாவின் மதப்பற்று,சிங்களவரின் இனவெறி இதுதான் காரணம்.


இங்கு ஆரம்பத்தில் ஒருவர் குறிப்பிட்டிருந்தது போல விவேகமற்ற வீரத்தால் ஒன்றையும் சாதித்து விட முடியாது என்பதை புலிகளின் ஆயுத வெறி உலகுக்கு காட்டியுள்ளது.....

உங்களைப்போன்றவர்கள் சொந்த நாட்டை விட்டோடி எங்கோ இருந்துகொண்டு இணையத்தில் வீரம் பேசலாம்.... ஆனால் இன்னும் தாய்மண்ணில் இருந்துகொண்டு வெட்கி தலை குனிந்து நிற்கின்றோம்.....

இவ்வாறு நான் எனது மன ஆதங்கத்தை கொட்டுவதால் மன்றத்தின் சக அன்பர்கள் என் மீது கோபங்கொள்ளக்கூடிய சாத்தியம் கூட உள்ளது..... ஆனால் எவ்வளவு காலத்துக்குத்தான் மனதில் பட்டதை சொல்லாமல் மழுப்புவது?

யதார்த்ததை புரிந்து கொள்ளாமல் இன்னும் ஆயுத கனவுகளிலேயெ மிதந்து மீண்டும் எமது சமுகத்தை படுகுழியில் தள்ளாமல் ஜனநாயக முறையில் ஒரு நல்ல தலைமைத்துவத்தையும் முடிவையும் எட்டுவது எப்படி என்று இனியாவது சிந்திப்போம்......
வீரமற்ற விவேகத்தால் ஒன்றும் சாதிக்க முடியாது ஏற்றுக்கொள்கிறேன்.சிங்கள ராணுவம் போல் மக்கள் வசிக்கும் பகுதிகளில் கொத்துகுண்டுகளையும்,விஷவாயு குண்டுகளையும் உபயோகித்து ஒரே நேரத்தில் அழிப்பதுதான் விவேகமா என்ன? அவர்களுக்கு ஆயுத வெறி இருந்திருந்தால் அதை அவர்களும் செய்திருப்பார்கள்,இவற்றை செய்ததின் மூலம் யாருக்கு ஆயுத வெறி என்று தெரிந்து கொள்ளுங்கள்.அவர்கள் பின்பற்றிய போர்நெறி முறை எந்த ஒரு போராட்ட குழுவும் பின்பற்றபடாத ஒன்று.

நான் எங்கோ இருந்து கொண்டுதான் எனது இன மக்களுக்காக கருத்துகளை எடுத்துரைக்கிறேன்,இதை வீரம் என்று நான் நினைக்கவில்லை என் மக்களின் மீது கனிந்துள்ள ஈரம் எனவே நினைக்கிறேன்..நீங்களும் ஒரு பாதுக்காப்பான இடத்தில் இருந்து கொண்டுதான் இதை எழுதிகொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்,கம்பி வலையத்திற்க்குள் தவிக்கும் அவர்களின் வலி உங்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவே நினைக்கிறேன்....அவர்களை தவிற அதை உணரும் வலி யாருக்கும் இருப்பதாக நான் நினைக்கமுடிவில்லை.
http://tamilwin.com/view.php?2aa8E9ttb0bcDDpYQ00eccC0jt20cc3ZZLuu24d336Wn544b32VVQ664d4eQUG7fdd0eePh2ggde
இன்றைய யதார்த்த நிலையை புரிந்துதான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன்,போர் முடிந்து விட்டதாக கூறுபவர்களிடம் கேளுங்கள் ஏன் ஒரு நாளைக்கு 16 பேர் வீதம் அந்த பகுதிகளில் இறக்கிறார்கள்,13 ஆயிரம் பேர் காணாமல் போயிருக்கிறார்கள்...அவர்களுக்கு உண்ண உணவு இல்லை... சொந்த நாட்டில் இருப்பதாக சொல்கிறீர்கள்,உங்களுக்கு கிடைக்கும் எல்லாம் அவர்களுக்கு கிடைக்கிறதா?அவர்கள் சொந்த நாட்டில் இல்லையா?.ஜனநாயக முறையை என்னைப்போன்றவர்கள் எதிர்பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்,இலங்கையில் எப்படிபட்ட ஜனநாயக முறை அமைய போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

உங்கள் கருத்துகளை சொல்வதற்க்கு உரிமை இருக்கிறது,சரியான வாதங்களுக்கு பதில் அளிக்க மற்ற உறுப்பிணர்களும் இருக்கிறார்கள் தோழரே.