PDA

View Full Version : காதல் சடுகுடு!! ("த்ரில் அனுபவம்!!")



poo
23-09-2003, 08:14 PM
வணக்கம்..

இதை முழுசா படிச்சி முடிக்கிறவங்களுக்கு ஒரு "மெகா பரிசு" இருக்கு!! (அது என்னன்னு அப்புறம் சொல்றேன்!!)


காதல்...காதல்..காதல்.. இப்படி முழுநேரமும் காதலே தொழிலென சுற்றிய காலத்தில் பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் நடந்தன என் வாழ்வில்..

அவற்றில் ஒன்றை இங்கே தருகிறேன்...

(சுவாரஸ்யம் இல்லாமலிருப்பதாய் தோணினால் எனக்கு சரியாக சொல்லத் தெரியவில்லையென அர்த்தம்!! :lol: )

தயவுசெய்து பொறுத்துக்கொண்டு படியுங்கள்..இறுதியாய் திட்டுங்கள்!!!

உங்களை திருப்பதிக்கு கூட்டிக்கிட்டு போலாம்னு ஆசை..

கிளம்பலாமா?!! :?:


என் காதலி வீட்டில் திருப்பதிக்கு போறதா திட்டம் போட்டிருந்தாங்க ..

அவங்க மொட்டையடிக்க போறாங்களா இல்ல.. என் காதலுக்கு நாமம் போடப்போறாங்களான்னு சந்தேகமே வரல எனக்கு.. ஏன்னா.. நம்ம ஆளு அவ்வளவு "ஸ்ட்ராங்.." 3-ரோஸஸ் டீதான் குடிப்பேன்னு அவ ஒருநாள் சொல்லுபோதே அதை கணிச்சிட்டேன்..

பயத்துக்கு பூ.. -ன்னு இன்னைக்கு இளசு அண்ணன் சொன்னாருல்ல.. அது இன்னைக்கு நேத்தல்ல... ஆதிகாலத்துலயே வந்துட்ட பட்டம்..( :D )
அப்படித்தான் பயந்தேன்.. அவ தனியா குடும்பத்தோட டூர் போறாளே.. போறவழியில பஸ் உருண்டுட்டா.. என்ன ஆகறது.. அவளைவிட்டு பிரிஞ்சிடுவோமோன்னு பயம்..

"இருந்தாலும் போனாலும் இணைந்தே.". காதல் மதத்துல வேதவாக்காச்சே இது!..

நான் முடிவு பண்ணிட்டேன்.. அவளோட நானும் திருப்பதிக்கு போகனும்!!

<span style='color:brown'>"ஏடுகுண்டலவாடா.. ஏதேச்சும் செய்யேண்டா"-</span>ன்னு.. யோசிக்க ஆரம்பிச்சேன்..

ஆனா பாருங்க.. காதலிச்சா கொஞ்சம் (நிறையவே!!) கிரிமினல் யோசனைகளும் நல்லாவே வரும்..

"காதல் தீவிரவாதி.."- பொடா இல்ல இங்க..., போடாதான்!!.. (கழுத்தைப்பிடிச்சி வெளியே தள்ளி பொண்ணுங்களோட அப்பன்கள் சொல்லும் "போடா")

டூருக்கு ரெண்டு நாள் முன்னாடி அவளோட பேசினேன்..

ஆமாங்க...அதேதான்.. சுண்ணாம்பாறு போட் ஹவுஸ்ல எப்பவும் உட்கார்ந்து பேசுவமே அதே இடத்துலதான்...

"நானும் வருவேன்" கண்ணை கசக்காம.... , ம்ம்...ம்ம்... கொட்டமா அழுத்தமா சொன்னேன்.. (நான்தான் காதல் தீவிரவாதியாச்சே!!)

" குழந்தைபோல.. அடம் பண்ணாதடா கண்ணா" .. (அடிப்பாவி.. கண்ணையே கசக்கல பப்பாங்கிறாளே..நல்லவேளைடா சாமி.., அழுதிருந்தா பீடிங் பாட்டில் வாங்கி தந்திருப்பாபோல!)

ஒருவழியா "சரிடா... என்னவோ பண்ணு.. ஆனா.. விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை!!!" (கழண்டுக்கிறயேடி!!!)

பஸ்ல போறதா சொன்ன அவ திட்டத்தை ரயிலா மாத்துன்னு சொன்னேன்..

அவ... - "அம்மா" சொன்னா சொன்னதுதான்.. (அங்கேயுமா?!..) மாத்தறது கஷ்டம்னு கைவிரிச்சா..

கண்ணை கசக்குடி... சிணுங்குடி... சாப்பிடாம.. ரயிலு..ரயிலு..- ன்னு காய்ச்சல் வந்தாப்போல
உளறுடி...... (எட்டுப்பட்டி ராசா- பாட்டுல வர்றாப்போல சொல்லி..)

ஒருவழியா ரயிலு.... உட்டேன் பாரு ஒரு ·பிகிலு... ஆனா.. அடுத்த நாளே பயங்கர ·பீவரு..

ஒரே ரயிலில போய்டலாம்.. சரி.. நாலுநாள் எப்படி ஒட்டிக்கிட்டே ஓட்டறது?!..

அவளோட அம்மா ஏற்கனவே கொஞ்சம்........... (மாமியா மாறிவிட்டதால் மரியாதைகருதி!! ஹிஹி...)மாட்டிக்கிட்டா அவ்ளோதான் டின் கட்டிடுவாங்க..

தைரியமா மூணு டிக்கெட் புக் பண்ணினேன்.. நான் ஒரு ஆள்.. ஆனா மூணு டிக்கெட்!!

அந்த நாளும் வந்துடுத்து...

சாயங்காலம் 4 மணிக்கு ரயில்.. காலையில 11 மணிக்கு ஒரு போன் போட்டேன்.. என் அண்ணன் வீட்டுக்கு.. அவர்+அண்ணி+ 1 குட்டி பையன்.. தனியா தங்கி இருக்காங்க..

திருப்பதிக்கு என் நண்பர்கள் வர்றாங்கன்னு 3 டிக்கெட் எடுத்திட்டேன். ஆனா அவங்க (எவுங்க?!!) திடீர்னு வரலன்னு சொல்லிட்டாங்க.. நீங்க வாங்க போலாம்ன்னேன்..

கையில பைசா இல்லப்பா..- அண்ணி எப்பவும்போல மங்களம் (இவங்க திருமதி.மங்களம்....) பாடலாம்னு.. கைவிரிச்சாங்க..
நான் பார்த்துக்கிறேன்.. வாங்க...

(அப்பா.. ரிட்டையர்ட் ஆகும்போது ஆசை ஆசையா வாங்கிப்போட்ட மோதிரத்தை முத்தம் கொடுத்துக்கிட்டே...)

அவசரமா கிள(ப்)ம்பி.. அண்ணியை கொஞ்சம் சப்பாத்தியும்..புளி சாதமும் கட்டிக்கோங்கன்னு (இதுலதான் மேட்டரே இருக்கு!) அடம்பண்ணி .., ஆட்டோ பிடிச்சி ஸ்டேஷன் வந்தேன்..

சமைக்கும்போதே அண்ணிக்கிட்ட "அவ" மேட்டரை உடைச்சேன்.. அண்ணிக்கு அவளை அறிமுகப்படுத்தி இருக்கேன் ஏற்கனவே..(ஓசியில நிறையமுறை ஊசி மருந்தெல்லாம் வாங்கிவந்து அண்ணிக்கிட்ட தந்திருக்கேன்..)

அண்ணியை உள்ள ஒரு பெஞ்ச்ல உட்கார்த்தி அண்ணனை வாசலுக்கு கூட்டிக்கிட்டு போனேன்..கையை பிடிச்சி..(காலா நினைச்சி..) நாமமட்டும் போகல.. கூட ஒரு பொண்ணும் அவங்க ·பேமிலியும் வர்றாங்க.. போய்ட்டு வந்து பேசிக்கலாம் மீதியை.. பிளீஸ்.. கோபப்படாம வாங்க..ன்னு சொல்லி..என் அண்ணனை பேசவே விடாம... (அவன் முகத்தை பார்க்காம..)

என்னவளும் அவ குடும்பமும் உட்கார்ந்திருந்த பெட்டியை தேடி.. அவங்களுக்கு எதிர் சீட்ல உட்கார வைச்சேன்.. நான் மட்டும் ஏறவே இல்லை.. (ஒரே நடுக்கம்!!)

அன்னைக்கு மதியமே அவகிட்ட சொல்லிட்டேன்.. அண்ணி வராங்க... தெரிஞ்சவங்கமாதிரியும்..அவங்களும் திருப்பதிதான் போறாங்கங்கிறது தெரியாதமாதிரியும் நடந்துக்கோன்னு..

அவ என் அண்ணியை.. அட.. வாங்கக்கா.. எங்க கிளம்பிட்டீங்க.. (அடா..அடா...)..திருப்பதிக்கா... அட நாங்களும் அங்கதான்... அம்மா..இவங்க எனக்கு தெரிஞ்ச அக்கா.
பஸ்ல வருவாங்க... நல்லவேளை தனியா போறதா கடுப்பா இருந்துச்சி.. நீங்களாச்சும் வந்தீங்க..(அப்பாடா... ஒருவழியா..)

அண்ணி நல்லாவே ஒத்துழைப்பு கொடுத்தாங்க... (ஊசி,மருந்து உதவிக்கு பிரதி உபகாரம்!!)

ரயில் நகர ஆரம்பிச்சதும்.. கையை பிடிச்சி "மச்சான்.. கவலைப்படாத.. எதுவானாலும் பாத்துக்கலாம்.." தூக்கி ஏத்திவிட்டான் என் ·பிரண்ட்..(அடப்பாவிகளா..நீங்க ஏத்தி ஏத்தி உடுங்க.. நான் மாட்டிக்கிறேன்!!)

அவளைப் பார்த்தா சிரிப்பு வருது.. பார்க்காம இருக்கவும் முடியல...

விழுப்புரம் ஜங்ஷன்ல 5 மணிக்கு வண்டி நின்னுச்சு.. நான் தண்ணிப்பிடிக்க பாட்டில் எல்லாம் எடுத்துக்கிட்டு இறங்கினேன்..தண்ணி பிடிச்சிக்கிட்டு திரும்பும்போது பாக்கெட்ல ஏற்கனவே வைச்சிருந்த <span style='color:red'>"டயாஸிபாம்"</span>

ரயில்ல ஏறி மறக்காம "அந்த" பாட்டிலை அவங்க அம்மாக்கிட்ட தந்தேன்..

என்னவளோட தங்கச்சி படக்னு அதை பிடுங்கி.. மடக்..மடக்.. (போச்சுடா..)

ஒரு அரைமணிக்கு அப்புறம் தங்கச்சி ·ஆப் ஆயிடுச்சி...

மணி 8. திருவண்ணாமலைக்கிட்ட போய்க்கிட்டு இருந்தது ரயிலு..

சாப்பிடலாமே..

ஓ... பேஷா.. நீங்க வைங்க.. இதை சாப்பிடலாம்.. கெட்டுடும்
நாளைவரை தாங்காது..

நாங்க கொண்டுவந்த புளிசாதத்தை நைஸா ரெண்டு குடும்பத்தையும் சாப்பிட வைச்சேன்..

ஏன் சொல்லுங்க.. ம்ம் அதே...

எங்க சாப்பட்டை அவங்க சாப்டாச்சு.. நாளைக்கு நாங்க என்ன பண்றது..அவங்க சாப்பாட்டை.. so, ரயிலைவிட்டு இறங்கினதும் பிரியமுடியாதே!!..[b](ஹாஹா.. வெற்றி!!)

சாப்பிடும்போதே ஒரு ஆசை.. எழுந்து பாத்ரூம் பக்கம் போனேன்.. இன்னொரு டயாஸியை தண்ணி பாட்டில்ல போட்டுக்கிட்டேன்..

அவங்க அம்மா.. சாப்பிட்டு முடிச்சி தண்ணீன்னு கையை நீட்டும்போது.. தலையை நீட்டி இந்தாங்க... அவங்க உஷார் பார்ட்டி... பாட்டிலை தூக்கிப்பார்த்தவங்க..
தூசியா இருக்குப்பா..(சரியா நசுங்காம உள்ளுக்குள்ள நீச்சலடிச்ச மாத்திரை தூள்கள்..) கொட்டிடு.. (அய்யோடா..........)

அப்புறமென்ன இரவு முழுக்க கண்கள் நான்கும் கூர்க்கா வேலை பார்த்துக்கொண்டே...

அதிகாலை 4-ல் இறங்கி பேருந்தில் இடம்பிடித்து ஏழுமலையானை அடந்தோம்..

வரி........................................சை மிக நீளமாய்..

நின்றால் (காத்திருக்கும் அறை) கோடவுனில் அடைத்துவிடுவார்கள்.. 24 மணி நேரமாவது ஆகும்.. உள்ளே
அடைந்து கிடந்தால் பேசமுடியாது.. தனித்தனி அறையில் மாட்டிவிட்டால்?!..

யோசித்தேன்...... ஐடியா பிறந்துவிட்டது....

திருப்பதியைச்சுற்றி நிறைய இடங்க ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு இரவு வரிசையில் நின்றுகொள்ளலாம்..

பகலெல்லாம் வீணாகிவிடும் உள்ளே அடைத்துவிட்டால்.. என்ன சொல்கிறீர்கள்..

என்னவளும் ஜால்ரா போட... அவளின் அம்மா தலை அசைந்தது..

பகலெல்லாம் சுற்றினோம்.. பஸ் ஏறி இறங்கும்போதெல்லாம் பறந்தேன்.. அவளை இறுதி ஆளாய் இருக்கவைத்து
கரங்களை இருகப்பற்றி இதயத்தை இனிக்கச் செய்தேன்..

(இதையெல்லாம் என்னவளின் தங்கை.. பார்த்துக்கொண்டிருந்ததாய்
பின்னாளில் சொன்னாள்.. அன்று கண்டுக்காமல் விட்டமைக்கு கோடி நன்றிகளை சொன்னேன்!)

மாலைப்பொழுது... ரூம் வாடகைக்கு எடுக்கவேண்டுமென அவளின் அம்மா...

அய்ய்ய்ய்ய்யயோ... அப்போ ராத்திரி தனியாவா?!!....

விடக்கூடாது... மீண்டும் யோசித்தேன்... " கிளிக்"

நாங்க போனது புரட்டாசி மாதம்.. தினமும் இரவுவேளைகளில் ஏதேனும் நடக்குமாம்..சாமி வீதியுலா வருமாம்.. அன்று பிரம்மோற்சவம் என ஒரு கடைக்காரன் சொன்னது நினைவில்..

ஏங்க.. ரூம் போடறது வேஸ்ட்... நைட் சாமி வருமாம்.. நாமதான் உள்ள போகல.. வெளிய வர்ற சாமியை ஏன் மிஸ் பண்ணனும். இங்க பாருங்க செம கூட்டம்.. அதனால ஒரு பயமும் இல்ல..
பார்க்-லயே உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கலாம்..

அதுக்கும் சரி.. (மச்சம்டா மச்சான்.. -போய்ட்டு வந்து கதை சொன்னப்ப என் நண்பன் சொன்னது!)

10 மணி நேரம் ரயில்... பகலெல்லாம் பஸ்பஸ்ஸா ஏறி சுற்றல்.. யாரால தூங்காம இருக்கமுடியும்..

எங்க ரெண்டுபேரைத்தவிர..

புல்வெளியில் கால்நீட்டிவிட்டார்கள் அனைவரும்...

சால்வையை உதறினோம்... கம்பிநீட்டினோம்.. கைபிடித்து கடைவீதிகளில் துள்ளலாய் ஓடினோம்... அந்த நிமிடங்கள் இன்னமும் மறக்கவில்லை..

எது வாங்குவதென இலக்கில்லாமல் இறக்கைகள் விரித்த குஞ்சாய்.. விசிலடித்து பறந்தோம்..

சரியாய் 1 மணி நேரம்.. வாங்கியதென்னவோ ஒரே ஒரு ஸ்கார்ப்..(தலையில் பனிக்கு கட்டுவோமே!!)

நல்லபிள்ளையாய் வந்து படுத்துக்கொண்டு அந்த இருளில் மெல்லிய கீற்றாய் வீசிய மின்னொளியில் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டேயிருந்தோம்..

இரண்டு இரவுகள்.. தூங்காத இரவுகள்...

பிரம்மோற்சவம் என்ன ஆனதென தெரியவில்லை!!!

காலையில் எழுந்து.. அவளின் அம்மா திட்டினார்... ஏன் எழுப்பவில்லையென..(என்னையல்ல..) அந்த பரிதாப ஜீவனை.. (அவள் அல்ல.. அவளின் அப்பா!!!)

அன்று மாலை ஊர் கிளம்ப வேண்டுமென்பதால் சாமிப்பார்க்கும் முடிவில்லை..

சரி.. இதுதான் போச்சு.. திருத்தணியாவது போலாமென்றார்..

ஓ.. போலாமே........

திருத்தணி போனோம்.. பல இடங்களில் மறைந்திருந்து அவளை படமெடுத்தேன்..

மாலை.. ஊருக்கு கிளம்பவேண்டும்..

மீண்டும் ரயிலென தூபம் போட்டேன்...

ரயில் நிலையம் போனோம்.. அந்த நேரம் ரயில் இல்லையாம்.. மேலும் சென்னைக்குதான் உள்ளதாம்..விழுப்புரமெல்லாம் சான்ஸ் இல்லவேயில்லையாம்..

வருத்தமாய் பஸ்ஸில்தான் பயணமென..பேருந்து நிலையம் வந்தோம்..

இங்கிருந்து விழுப்புரம் போக 5 மணி நேரம்.. வேலூரைச்சுற்றி சென்றால் 8 மணி நேரமாகலாம்..

நான் சொன்னேன்.. இப்போது மணி 7. விழுப்புரம் நள்ளிரவில் போய் சேர்ந்தால் உங்கள் ஊருக்கு பஸ் இருக்குமா அப்போது.. (இருவரும் பக்கத்து ஊருதான்.. ஆனால் நாங்கள் வேறு ஊர் சொல்லிவிட்டோம்)
இல்லையென்றார்கள்..

அப்ப்டின்னா... காலையில போய் சேர்வதுபோல வேலூரைச்சுற்றி போலாம்.. ரோடும் நல்லா இருக்கும்!!
(இந்த ஒரு வார்த்தைக்கு கன்னாபின்னாவென வாங்கிக் கட்டிக்கொண்டேன்.. அவ்வளவு மோசமான சாலை!!)

பஸ்ஸில் மீண்டும் ஆரம்பித்தேன்...

காதலிக்கும்போது பொதுவாய் எல்லோரும் நீளமாய் நகம் வளர்ப்பார்கள்..

விரல்படாமல் அவளைத் தொடவேண்டுமானால் அதை உபயோகிக்கலாம்!!

திருத்தனியில் வாங்கிய பச்சை வாழைப்பழத்தில் ஒன்றை எடுத்து நகத்தால் கீறி உள்ளே பாதி(மீதி) மாத்திரையை சொருகினேன்..

அவளின் அம்மாவிடம் நீட்டினேன்.. அவர் வாங்கி உரித்து உடைத்தார்... அடக்கடவுளே.......
கீறின இடம் இலகுவாய் இருந்ததால் அங்கே சரியாய் உடைந்தது.. மாத்திரை பல்லிளித்தது.. உடனே அவர்களை கூப்பிட்டேன்.. திரும்பினார்.. அவளும்தான்..

ஏதோ பேச்சுக்கொடுத்துக் கொண்டே அவளிடம் கண்காட்டினேன்.. காப்பாற்றென கெஞ்சினேன்..

அவள் சமயோசிதமாய் ஏதோ இருக்கிறதென தட்டிவிட்டுவிட்டால் அதை..

அப்பாடா... அம்மா வாயில் வைத்தார்.. இலேசான கசப்பு.. கரைந்த தூள்களால்..

பொறுக்கிபயலுக.. மருந்துபோட்டு பழுக்கவைக்கிறானுங்க... எப்படி கசக்குதுபாரு..

(அட்றா..அட்றா...) .

ம்ம்.. ஆமாங்க.. பிஞ்சு பழம்...ஹிஹி.. பால்வடிய வழிந்தேன்!!

உறங்காமல்... அவளின் கேசத்தை வருடிக்கொண்டே.. மௌனமாய் பேசிக்கொண்டே வந்திறங்கினோம்..

இப்படியாக.. மூன்று இரவுகள் தொடர்ந்து ஒருநொடிகூட தூங்காமல் கழிந்தது!!

எந்த ஆபத்துமில்லாமல்..(டயாஸிபாமால்..அவள் அம்மாவிற்கு ஏதேனும் ஆயிருந்தால்?!!)


பயணம் முடிந்தது!!!


எத்தனை நெருக்கமாய் ஆழமாய் காதலித்தும்.. அவளின் குடும்பம் அறியாமலயே அவளுடன் மூன்று நாளும் பயணித்துவிட்டேன்!!!

உங்களை இன்னமும்(ஹஹஹஹஹா.........) அறுக்க மனமில்லாமல் முடிக்கிறேன்..


உங்களுக்கும் இதுபோன்ற த்ரில்லிங் நிகழ்வுகள் இருந்தால் சொல்லுங்களேன்..

(என்னைப்போல அறுக்க எவரால் முடியும்?!!)

முத்து
23-09-2003, 09:02 PM
பூ.. நீங்க கில்லாடியான ஆள்தான் போங்க.. இந்த விவரங்கள் எங்களைப் போன்ற மக்களுக்கும் ஒருவேளை உதவலாம்... அது சரி .. அந்த டயாசிபாம் எங்கு கிடைக்கும்?... :D .. இவ்வளவு சுவையான உங்கள் சாகசத்தை சுவையான சம்பவங்கள் பகுதியில் போட்டிருக்கலாமே..

suma
23-09-2003, 11:21 PM
பூ எப்படி உங்க ஆளை கரம் பிடித்தீர். காதலித்து மணம் புரிந்தால் எவ்வளவு சுவையான வாழ்வு கிடைத்து இருக்கும். நான் மிஸ் பண்ணிட்டேன். கரம் பிடித்ததை கூறுங்களேன் பிளீஸ்.......

Mano.G.
24-09-2003, 12:28 AM
இப்பதான் தெரியுது
தம்பியின் கல்யாண அழைப்பிதழின் அர்த்தம்.
நல்லா அனுபவச்சி இருக்கப்பா.

வாழ்த்துக்கள்
அண்ணன்.
மனோ.ஜி

பாரதி
24-09-2003, 01:38 AM
அன்பு பூ,
மூன்று நாள் அனுபவத்தை 10 நிமிடத்தில் படித்து விட்டேன்.. ம்ம்ம்ம்.. உங்களுடைய கல்யாண பத்திரிக்கையை நான் பார்க்கவில்லை.. இங்கே பதிவேற்றம் செய்யலாமே..?! அப்புறம் மெகா பரிசு இதுதானா...? ஒண்ணும் சொல்லவே இல்லியே...!

சேரன்கயல்
24-09-2003, 04:16 AM
அன்பு பூ...
அசத்தலான அனுபவத்தை அழகாக இங்கே சரமாக்கியிருக்கிறீர்கள்...உங்களின் அனுபவம் போல சாகசங்கள் எனக்கு இல்லை இருப்பினும் வேறு வகை அனுபவங்கள் உண்டு...உங்கள் மனைவியாருக்கு சகோதரி மட்டும்தான் போல...என் கதையில் 3 சகோதரர்கள்...கிட்டதட்ட காதலுக்கு மரியாதை ரேஞ்சில் அண்ணன்கள்...அஜானுபாகுவான தம்பி...ஹா ஹா ஹா...எப்படியோ கத்தியின்றி ரத்தமின்றி...கல்யாணத்தயும் முடித்துவிட்டேன்(டோம்)...

"பயத்திற்கு பூ" என்பதை...இந்தப் பதிவைப் பார்த்து நம்பமுடியவில்லை...

gankrish
24-09-2003, 07:11 AM
பூ.. இதுதான் காதல் என்பதா..
இளமை பொங்கி விட்டதா..
இதயம் தொட்டு விட்டதா..
சொல் பூவே....

ரசிக்கும்படியாக இருந்தது. நான் நெனெச்சேன் நீங்க எப்படியாவது அந்த பழத்துல மாட்டிப்பீங்கன்னு. நீங்க கேரளாவுக்கே வாழைப்பழம் கொடுத்திட்டீங்க. வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க.

இக்பால்
24-09-2003, 07:45 AM
பூ தம்பி.... தங்கள் பெண் தவறான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து
விட்டது என கவலைப் படாத வகையில் ... உங்களைப் பற்றி
தங்கையின் பெற்றோர்கள் மகிழ்வு கொள்ளும் வகையிலும் ஒரு
நல்ல வாழ்க்கையை அவருக்கு கொடுத்து வாழ்க்கையில்
சிறப்பும் மேன்மையும் அடைய என் வாழ்த்துக்கள். பிரார்த்தனைகள்.
நடப்பவை அனைத்தும் நல்லவையாக அமைய வேண்டுகிறேன்.

-அன்புடன் அண்ணா.

இக்பால்
24-09-2003, 07:47 AM
இரண்டு இரவுகள்.. தூங்காத இரவுகள்...

பிரம்மோற்சவம் என்ன ஆனதென தெரியவில்லை!!!


வந்த சிரிப்பை அடக்கவோ...தவிர்க்கவோ முடியவில்லை.

-அன்புடன் அண்ணா.

mania
24-09-2003, 11:21 AM
அனுபவித்து எழுதியிருக்கிறாய் பூ . மிக ரசித்து படித்தேன் .
அன்புடன்
மணியா
பி.கு : ஆமாம்....இந்த பூ சுத்தற பழக்கம் அப்போவே இருந்ததா !!?
வீர்சிங் இதுவரை அந்த டையாசிபாமை பற்றி ஒன்னும் சொல்லவில்லை. எங்கு கிடைக்கும் (பவுடராக )!!!??

இக்பால்
24-09-2003, 11:32 AM
மணியா அண்ணா எதிலும் ஒரு முன் ஜாக்கிரதைதான்.
(பவுடராக வேண்டுமாம்.)

Emperor
24-09-2003, 02:31 PM
அருமையான ஒரு காதல் கதை பூ அவர்களே, இதை வாசிக்கையில் எனது வசந்தகாலம் என் ஆழ்மனதில் ஓடியது, நான் காதலித்தபோது செய்த சில சிலுமிஷ்ங்களை நினைவுபடுத்துகிறது, ஆனால் எங்கள் காதல் வெற்றி பெறவில்லை, பல காரணங்களால் நாங்கள் இருவரும் பிரிய நேரிட்டது. அது ஒரு சோக கதை.
ஆனால் நீங்கள் காதலித்தவரையே திருமணம் முடித்ததை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன், நீங்கள் இருவரும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.
வாழ்க வளமுடன்.

இளசு
24-09-2003, 07:23 PM
இவ்வளவு சுவையான உங்கள் சாகசத்தை சுவையான சம்பவங்கள் பகுதியில் போட்டிருக்கலாமே..

செய்துவிட்டேன் முத்து!

தம்பி பூ...

மிக வித்தியாசப் பதிவு..
கடைசி வரை சுவாரசியம்.. விறுவிறுப்பு!

காதல், பாசம், நகைச்சுவை, வில்லத்தனம்.. என பல்சுவைப் படைப்பு!

தில்லானா மோகனாம்பாளில் வடிவாம்பாளின் கழுகுப்பார்வையை மீறி
சண்முகம் - மோகனா இரயிலில் ஆடும்
நயன நாடகம் நினைவுக்கு வந்தது...

நினைவுப்பயணம் தொடரட்டும்..
மன்றத்துக்கு இதுபோல் இன்னும் பல சுவைப்பதிவுகள் கிடைக்கட்டும்!

என் சிறப்பு பாராட்டுகள்.

poo
24-09-2003, 08:07 PM
உண்மையில் எனக்கு மனசெல்லாம் சந்தோஷமா இருக்கு... இத்தனை வரவேற்ப்பு கிடைக்கும்னு சத்தியமா நினைக்கல...
(மிச்சமீதிகளையும் சொல்லலாம்போல?!!)


அந்த "மெகாபரிசு?!!..." சும்மா கதை சாமி ... அப்படியாச்சும் படிக்க மாட்டீங்களான்னு நப்பாசை!! (மன்னிக்கவும்!)

மெகாபரிசாக என் மெகா நன்றிகளை ஏற்றுக்கொள்ளுங்கள்!!!


(என்னுடைய திருமண இதழை இங்கே கொடுக்க என் அண்ணன் இளசுவின் அனுமதி வேண்டும்!)




பூ எப்படி உங்க ஆளை கரம் பிடித்தீர். காதலித்து மணம் புரிந்தால் எவ்வளவு சுவையான வாழ்வு கிடைத்து இருக்கும். நான் மிஸ் பண்ணிட்டேன். கரம் பிடித்ததை கூறுங்களேன் பிளீஸ்.......

அது ஒரு பெரிய்ய்ய்ய்ய கதை சுமா!! (சொல்லவா... தாங்குவீர்களா?!!)

முத்து
24-09-2003, 08:23 PM
"பயத்திற்கு பூ" என்பதை...இந்தப் பதிவைப் பார்த்து நம்பமுடியவில்லை...

சேரன் கயல் நேற்றே இதைச் சொல்ல நினைத்தேன்... இப்போ நீங்கள் சொல்லிவிட்டீர்கள் ... பூ .. இதைப் பதிய எவ்வளவு நேரம் ஆனது ...?

இளசு
24-09-2003, 08:23 PM
தாராளமாய்ப் பதியுங்கள் தம்பீ...

poo
24-09-2003, 08:29 PM
தாராளமாய்ப் பதியுங்கள் தம்பீ...

நன்றி அண்ணா... (தனித்தலைப்பிலா அல்லது இங்கேயா?!!.. விளம்பரத்துக்காக அல்ல.. விழிப்புணர்வுக்காகவே பதிக்கலாமாவென கேட்டேன்!!(பாரதி நண்பருக்காகவும்!!))

இளசு
24-09-2003, 08:42 PM
தனித்தலைப்பாய் இருக்கட்டும் என்பது என் எண்ணம்.

karikaalan
26-09-2003, 01:06 PM
பூஜி!

அருமையான காதல். காதல் நேர்ந்தால் என்னென்னவெல்லாம் செய்யத் துணிவு பிறக்கிறது -- காதலித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் ரகசியம் அது. உமது காதல் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

poo
27-09-2003, 05:20 PM
வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணன்களே!!

poo
28-09-2003, 05:56 AM
.. இவ்வளவு சுவையான உங்கள் சாகசத்தை சுவையான சம்பவங்கள் பகுதியில் போட்டிருக்கலாமே..


நண்பா..இங்கே(சுவையான சம்பவங்கள்..) போட்டிருந்தால் இத்தனைபேர் படித்திருக்க மாட்டார்கள். எனவேதான் அங்கே போட்டேன்!! (பலபேர் இந்தப்பக்கம் வருவதில்லை என எனக்கு தெரியும்!!)

பாருங்கள் அங்கிருந்து இங்கே மாற்றியவுடன் படிப்பதற்கே ஆள் இல்லை!! (இளசு.. அண்ணா.. இப்படி பண்ணிட்டிங்களேண்ணா?!!!)

Chiru_Thuli
03-10-2003, 07:55 PM
பூ,
என்ன ஆகுமோ ஏதாகுமோ என்று இருக்கையின் நுனிக்கே வந்து விட்டேன்.

பயங்கரமான க்ரிமினல் மூளையா இருக்கும் போல இருக்கு?

உண்மையோ , பொய்யோ சம்பவம்+ சொல்லிய விதம் அருமை.

பைத்தியகாரன்
04-10-2003, 05:53 PM
அண்ணா இதற்காகவே காதலிக்கலாம் போல......சுவையான அனுபவம்

முத்து
04-10-2003, 07:53 PM
அண்ணா இதற்காகவே காதலிக்கலாம் போல......சுவையான அனுபவம்

உண்மைதான் நண்பரே .. இந்த மாதிரி த்ரில் அனுபவத்துக்காகவே காதலிக்கலாம்தான்.. ( ம்ம்.. என்ன செய்வது... இது மாதிரி நிறைய விஷயங்களை மிஸ் பண்ணிட்டேன்னு தோணுது ... :( )

karavai paranee
05-10-2003, 05:37 AM
பார்த்தேன் சி¡¢த்தேன்
பலகணங்களை பா¢தவிக்கவைத்தேன்
இழந்தேன் வாழ்வையும் அவளையும்;

நண்பர் பூவின் காதல் கதையை கேட்டவுடன் பொறாமைதான் வருகின்றது. எனக்கு கிடைக்காத ஓன்று காதல். பருவக்காதலாக இருந்திருந்தால் எப்பவோ பத்தியிருக்கும். பூ¢ந்தகாதல் அதனால் பி¡¢ந்து சென்றுவிட்டோம்.

அருமையானதொரு பதிப்பு
பூவிற்குள் எப்படி இத்தனை புதிர்கள்
வியப்புக்குறிகள் ஏராளம் எனக்குள்ளே ! ! !

வாழ்த்துக்கள் நண்பா !
எப்படி கரம்பிடித்தீர்கள் என அதையும் சொல்லிவிடுங்கள். சுவாராஸ்யமாக இருக்கும்.

(குறிப்பு. யாராவது சினிமாக்காரா;கள் இந்த கதையை சுட்டுவிடப்போகின்றார்க். கவனம். முதலிலேயே பதிந்துவைத்துவிடுங்கள்.)

நடபுடன் பரணீதரன்

(அன்று வந்தது வெள்ளை நிலா ! வெளிச்சம் காட்டி என் உறக்கம் பறித்தது.
இன்று வருவதோ கறுப்பு நிலா ! எனது வெளிச்சத்தில் உறங்க நினைக்கின்றது )

இக்பால்
05-10-2003, 06:23 AM
பயங்கரமான க்ரிமினல் மூளையா இருக்கும் போல இருக்கு?

உண்மையோ , பொய்யோ சம்பவம்+ சொல்லிய விதம் அருமை.


சிறுதுளி தம்பி...பொய்யில்லை. உண்மையில் இன்னும் நிறைய
சுவாரசியமான சம்பவங்கள் பூவிடம் உள்ளது. ஏதோ சிறுதுளி
இங்கே நமக்காக கொடுத்திருக்கிறார்.

கிரிமினல் மூளைதான். வீட்டிற்கு கூப்பிட்டால் ஜாக்கிரதையாக
இருங்கள் தம்பி.

-அன்புடன் அண்ணா.

அறிஞர்
06-10-2003, 04:51 AM
நல்ல சம்பவம்... வாழ்த்துக்கள்.. பூ......

poo
06-10-2003, 10:26 AM
பூ,
என்ன ஆகுமோ ஏதாகுமோ என்று இருக்கையின் நுனிக்கே வந்து விட்டேன்.

பயங்கரமான க்ரிமினல் மூளையா இருக்கும் போல இருக்கு?

உண்மையோ , பொய்யோ சம்பவம்+ சொல்லிய விதம் அருமை.



அண்ணா... அடிச்சி சொல்றேன்னா அத்தனையும் நெசம்!!!

poo
06-10-2003, 10:26 AM
அண்ணா இதற்காகவே காதலிக்கலாம் போல......சுவையான அனுபவம்


இன்னமும் பொண்ணு கெடைக்கலயா தம்பி?!!


(விடாதே... முயன்றால் முடியாததுண்டோ?!!!)

poo
06-10-2003, 10:28 AM
இந்த மாதிரி த்ரில் அனுபவத்துக்காகவே காதலிக்கலாம்தான்.. ( ம்ம்.. என்ன செய்வது... இது மாதிரி நிறைய விஷயங்களை மிஸ் பண்ணிட்டேன்னு தோணுது ... :( )

என்ன முத்து நமக்கொன்னும் அப்படி வயசாகலயே.. அதுமட்டுமில்லாம அவதாரத்துல போட்டோ பார்த்தேன்.. படு அம்சமாத்தான் இருக்கிறீர்... :D

poo
06-10-2003, 10:29 AM
வாழ்த்துக்கள் நண்பா !
எப்படி கரம்பிடித்தீர்கள் என அதையும் சொல்லிவிடுங்கள். சுவாராஸ்யமாக இருக்கும்.

(குறிப்பு. யாராவது சினிமாக்காரா;கள் இந்த கதையை சுட்டுவிடப்போகின்றார்க். கவனம். முதலிலேயே பதிந்துவைத்துவிடுங்கள்.)

நடபுடன் பரணீதரன்

(அன்று வந்தது வெள்ளை நிலா ! வெளிச்சம் காட்டி என் உறக்கம் பறித்தது.
இன்று வருவதோ கறுப்பு நிலா ! எனது வெளிச்சத்தில் உறங்க நினைக்கின்றது )

நன்றி கரவையாரே...

சொல்லத்தான் நினைக்கிறேன்.. சொல்லாமல் தவிக்கிறேன்!!

poo
06-10-2003, 10:29 AM
உண்மையில் இன்னும் நிறைய
சுவாரசியமான சம்பவங்கள் பூவிடம் உள்ளது. ஏதோ சிறுதுளி
இங்கே நமக்காக கொடுத்திருக்கிறார்.

கிரிமினல் மூளைதான். வீட்டிற்கு கூப்பிட்டால் ஜாக்கிரதையாக
இருங்கள் தம்பி.

-அன்புடன் அண்ணா.

அண்ணா.. அதெப்படி ஜாதகம் பார்த்தாப்போல சொல்றீக?!.. (கிரிமினல் மூளையை சொல்லல.. நிறைய இருக்குன்னு சொன்னீங்களே அதை!!)

poo
06-10-2003, 10:30 AM
மிக்க நன்றி அறிஞரே..

வாழ்த்துக்கள் வாழவைக்குமென நம்புகிறேன்!

முத்து
09-10-2003, 03:25 PM
[quote] இந்த மாதிரி த்ரில் அனுபவத்துக்காகவே காதலிக்கலாம்தான்.. ( ம்ம்.. என்ன செய்வது... இது மாதிரி நிறைய விஷயங்களை மிஸ் பண்ணிட்டேன்னு தோணுது ... :( )

என்ன முத்து நமக்கொன்னும் அப்படி வயசாகலயே

சரிதான் பூ ... ஆனா .. இந்த ஊருலபோய் நமக்கு ஏற்றமாதிரி எங்க தேடுறது ...எல்லாம் சுத்த வெள்ளை.... :cry:

( இன்னுமொரு சந்தேகம்... அந்த " நமக்கொன்றும்" பார்த்தவுடனே ... திரும்பவும் இன்னுமொரு த்ரில் அனுபவத்துக்கு அடிக்கல்லா... , அப்புறம் இங்க இருந்து உங்க வீட்டுக்கு பேக்ஸ்தான்...... :D )

Anonymous
09-10-2003, 04:48 PM
வாழ்த்துக்கள் நண்பா !
எப்படி கரம்பிடித்தீர்கள் என அதையும் சொல்லிவிடுங்கள். சுவாராஸ்யமாக இருக்கும்.

(குறிப்பு. யாராவது சினிமாக்காரா;கள் இந்த கதையை சுட்டுவிடப்போகின்றார்க். கவனம். முதலிலேயே பதிந்துவைத்துவிடுங்கள்.)

நடபுடன் பரணீதரன்

(அன்று வந்தது வெள்ளை நிலா ! வெளிச்சம் காட்டி என் உறக்கம் பறித்தது.
இன்று வருவதோ கறுப்பு நிலா ! எனது வெளிச்சத்தில் உறங்க நினைக்கின்றது )

நன்றி கரவையாரே...

சொல்லத்தான் நினைக்கிறேன்.. சொல்லாமல் தவிக்கிறேன்

படத்திற்கு பெயர் நல்லாவே இருக்கு பூ!

இக்பால்
10-10-2003, 02:56 PM
உண்மையில் இன்னும் நிறைய
சுவாரசியமான சம்பவங்கள் பூவிடம் உள்ளது. ஏதோ சிறுதுளி
இங்கே நமக்காக கொடுத்திருக்கிறார்.

கிரிமினல் மூளைதான். வீட்டிற்கு கூப்பிட்டால் ஜாக்கிரதையாக
இருங்கள் தம்பி.

-அன்புடன் அண்ணா.


அண்ணா.. அதெப்படி ஜாதகம் பார்த்தாப்போல சொல்றீக?!.. (கிரிமினல் மூளையை சொல்லல.. நிறைய இருக்குன்னு சொன்னீங்களே அதை!!)
_________________
என்றென்றும் அன்புடன்
அன்பு- பூ....
பூக்களின் வாசத்தை சுவாசித்துக்கொண்டிருப்பவன்!!..

உங்கள் அண்ணா அல்லவா?-அன்புடன் அண்ணா.

Nanban
04-11-2003, 04:30 PM
சுவையான, விறுவிறுப்பான அனுபவத்தைச் சொல்லி இருக்கிறார் பூ!

அதுமட்டுமல்ல, மன்ற இளைஞர்கள் பலரிடமும் காதல் உணர்வையும் தூண்டிவிட்டார், பலே, பலே...

காதல் என்பது ஒரு இனிமையான அனுபவம் - அந்த சமயத்தில் சம்யோசிதமான காரியங்கள் பலவும் நடக்கும். பின்னர் யோசித்துப் பார்த்தால் இப்படிக் கூட நாம செய்தோமா என்று எண்ணத் தோன்றும்.....

அதே காரியத்துடனும், தைரியத்துடனும் எப்போதும் நடக்க முடியுமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்......

நண்பர் இசாக்கின் கவிதைகளை உரை நடையில் படித்தது போன்ற ஓர் உணர்வு......

பாராட்டுகள், விறுவிறுப்பான எழுத்து நடைக்கு.........

விகடன்
04-08-2008, 06:53 AM
பஸ்ஸில் போகும்போது வளைவு சுழிவுகளில் ஏதேனும் ஆனால் உடன் கட்டை ஏறுவது என்ற நோக்கில் புறப்பட்ட நீங்கள் இரெயிலில் என்று உறுதி செய்த பின்னரும் சென்றிருந்தமை ..... :D

குளுசையினை வைத்து அனைவரையும் மயக்கி காதல் புரிந்திருக்கிறீர்கள். தைரியமான ஆள்த்தாங்க...

"இதையெல்லாம் என்னவளின் தங்கை.. பார்த்துக்கொண்டிருந்ததாய்
பின்னாளில் சொன்னாள்……………………….." என்று ஓரிடத்தில் சொல்லியிருந்தீர்கள். அப்படியானால் காதல் கல்யாணத்தில்த்தான் முடிவடைந்திருக்கிறது என்று சொல்லுங்கள்.

எல்லாக் காதலும் கல்யாணத்தில்த்தான் முடிவடையும் என்பது எனக்கும் தெரியும்.
நான் கேட்பது,
நீங்கள் உங்கள் காதலியைத்தான் திருமணம் புரிந்திருக்கிறீர்கள்.... என்று… :D .

நல்லதொரு காதல் அனுபவத்தை சொல்லியிருக்கிறீர்கள். எல்லோரிற்கும் மருந்து கொடுத்து மயக்கிவிட்டு எம்மை மட்டும் பக்கத்தில் வைத்து உங்கள் காதல் லீலைகளை காண்பித்துவிட்டீர்கள்.

பகிர்வுக்கு நன்றி :)

arun
04-08-2008, 06:15 PM
காதலிக்கும் பெண்ணை கரம் பிடிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை

ஆனாலும் தங்களின் அசாத்திய தைரியத்திற்கு பாராட்டுக்கள் உண்மையில் தங்களின் அனுபவம் திரில்லிங்க் தான்

பூமகள்
05-08-2008, 08:18 AM
ஒரு விறுவிறுப்பான காதல் கதை அதிக திருப்பங்களோடு பார்த்தது போன்ற உணர்வு..!!

வியந்தேன்.. சுவைத்தேன்..!!

பூ அண்ணாவின் பதிவுகள் பல்சுவை கலவை..!!

பாராட்டுகள் பூ அண்ணா. :)

ஒருங்குறியாக்கிய விராடன் அண்ணாவுக்கு விசேட நன்றிகளும் பாராட்டுகளும்..!!

விகடன்
05-08-2008, 09:19 AM
ஒருங்குறியாக்கிய * * * * அண்ணாவுக்கு விசேட நன்றிகளும் பாராட்டுகளும்..!!


நான் ஒருங்குறியாக்கவில்லை. செல்வாதான் அதை செய்தார். நான், ஒருங்குறியாக்கப்பட்டதை மேலே வருவித்தவன். அவ்வளவுதான் :D

மதி
05-08-2008, 09:31 AM
அழகான காதல் த்ரில்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி பூ...
ஆனாலும் உங்களுக்கு தைரியம அதிகம் தான்... :)

பூமகள்
05-08-2008, 10:13 AM
நான் ஒருங்குறியாக்கவில்லை. செல்வாதான் அதை செய்தார். நான், ஒருங்குறியாக்கப்பட்டதை மேலே வருவித்தவன். அவ்வளவுதான் :D
"டிப்போ மிஸ்டேக்" போல்.. "கண் டிஸ்ப்ளே மிஸ்டேக்"..!!! :p:rolleyes: :icon_rollout: :D:D

ஒருங்குறியாக்கிய செல்வா அண்ணாவுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்..!! :)