PDA

View Full Version : ஸ்டாலின் - துணை முதல்வர்அறிஞர்
29-05-2009, 02:56 PM
துணை முதல்வரானார் ஸ்டாலின் : கவர்னர் அறிவிப்பு

சென்னை: தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார். தற்போதைய மத்திய அமைச்ச*ரவையில் பங்கேற்பது தொடர்பாக தி.மு.க.,வுக்கும் காங்கிரசுக்கும் இடையே நிலவிய இழுபறி நி*லையை முடிவுக்கு கொண்டு வருவதில் பெரும்பங்கு ஆற்றிய ஸ்டாலினுக்கு இந்த துணை முதல்வர் பதவி ஒரு பரிசாக அமையும்.


தி.மு.க.,வின் இளைஞர் அணிப்பிரிவுச் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றிய ஸ்டாலின் சமீபத்தில்தான் தி.மு.க.,வின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.முதல்வர் கருணாநிதி கவர்னர் பர்னாலாவிற்கு ஸ்டாலினை துணை முதல்வராக்க பரிந்துரை செய்தார். இதை ஏற்று கவர்னர் ஸ்டாலினை துணை முதல்வராக நியமனம் செய்துள்ளார்.


தற்போது உள்ளாட்சி துறையை கவனித்து வரும் ஸ்டாலினுக்கு வேறு சிலத் துறைகளும் தரப்பட்டுள்ள. தொழில்கள், பாஸ்போர்ட், டி.ஆர்.ஓ., சிறுபான்மையினர் நலன், சமூக சீர்திருத்தம், பொது நிர்வாகம் போன்ற முக்கிய இலாகாக்களும் தரப்பட உள்ளது. அன்பழகன் தொடர்ந்து அவை முன்னவராகவே நீடிப்பார்.


இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அ*றிக்கையில் தனது உடல் நிலை சரியில்லாததால் ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியும், தன்னிடம் உள்ள சில இலாகாக்களையும் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
நன்றி-தினமலர்

அமரன்
29-05-2009, 03:00 PM
கலைஞரின் குருகுலத்தில் படித்தவர் ஸ்டாலின். தள்ளாதவயதிலும் தனயனுக்கு குருவானவர் கலைஞர். மத்தியில் (தயாநிதி) மாறன். மானிலத்தில் (ஸ்டாலின்) கருணாநிதி. நல்ல பொருத்தம்.

lenram80
29-05-2009, 06:44 PM
காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயா, போன்றவர்களுக்கு வாரிசே இல்லாத நிலையில் கலைஞர் அவரது காலணியையே அரசியலில் மட்டுமல்ல... பதவியிலும் அமர்த்தி விட்டு இருக்கிறார். இதன் மூலம் தமிழ் நாட்டை அவரது அடுத்த தலைமுறை ஆள வசதி செய்து கொடுத்து 'சிறந்த தந்தை'ஆகி விட்டார்.

ஆளவும் செய்தார். வாழவும் செய்தார். யார் வாழ என்பது தான் கேள்வி. கலைஞரைப் போல இந்த உலகில் மிகப் பெரிய அரசியல் சாணக்கியன் எவருமில்லை.

நாட்டின் பெரிய பதவிகளை நினைத்தால் அடைய கூடிய சோனியா & அவர் குடும்பத்தை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

மண்ணோ? மலையோ?

தூயவன்
30-05-2009, 03:17 AM
வாழ்க (குடும்ப) கு.மு.க சாரி தி.மு.க

aren
30-05-2009, 04:18 AM
நிச்சயம் இது ஒரு சிறந்த முடிவு. இதன் மூலம் கோஷ்டி சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் கருணாநிதி அவர்கள்.

உடம்பு சரியில்லாத காரணத்தால் பல நல்ல திட்டங்களை தமிழ்நாடு இழக்ககூடாது என்ற நினைத்ததாலும் ஸ்டாலின் அவர்களுக்கு பதவி உயர்வு கொடுத்திருக்கலாம்.

குடும்பத்துக்கு உதவினார் என்று நினைத்தாலும் தமிழ்நாட்டிற்கு நல்லது நடக்குமாயின் நான் அனைவரும் அதற்கு ஆதரவு கொடுக்கலாம்.

மத்தியில் நேரு அவர்களின் குடும்பத்தினரே பதவியில் இருக்கிறார்கள். அதுபோல ஒவ்வொரு மாநிலத்திலும் அடுத்த தலைமுறை தலைவர்கள் அடியெடுத்துவைக்க ஆரம்பித்துவிட்டர்கள். இந்த முறை மத்திய மந்திரிசபையில் பலர் மாஜி மந்திரிகளின் பிள்ளைகள்தான். இதெல்லாம் அரசியலில் சகஜம். ஒருவரும் விதிவிலக்கல்ல.

வாஜ்பாய், காமராஜர், எம்ஜியார், ஜெயலலிதா, அண்ணா போன்றவர்களுக்கு வாரிசுகள் கிடையாது. ஆகையால் அவர்களின் குடும்பங்கள் அரசியலுக்கு வரவில்லை. அப்படி வாரிசு இருந்திருந்தால் நிச்சயம் வந்திருப்பார்கள் என்றே நம்புகிறேன்.

இன்பா
30-05-2009, 04:48 AM
ஒரு வகையில் யோசித்தால் முடியாட்சி நடந்துக் கொண்டிருக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆரென் அவர்கள் சொல்வதுப் போல் இது இன்றைய காலகட்டத்தில் தவிர்க முடியாத ஒன்றாகிவிடுகிறது.

தொடர்ந்து அவர் குடும்ப வாரிசுகளுக்கே முதன்மை இடம் கொடுக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது இது கண்டிக்கத்தக்கது. வாரிசுகளை தவிர சிறந்து செயல்படுபவர்கள் வேறுயாருமில்லை என்ற தோன்றாத்தை உருவாக்கியிருக்கிறார். இருப்பினும் ஸ்டாலினை முழுவதுமாக குறை கூறிவிட முடியாது. முதல்வர் இடத்துக்கு தகுதியானவர் தான். ஆரம்பங்களில் இருந்ததை விட இன்று நல்ல நிர்வாகத் திறமை கற்றிருக்கிறார்.

வாரிசு அரசியலும் முடிவுக்கு வரும், இப்போதெல்லாம் மக்கள் இனம் கண்டு பழிவாங்குகிறார்கள்.

சிறந்து செயல்பட வாழ்த்துக்கள்.

ரங்கராஜன்
30-05-2009, 05:02 AM
வாழ்க (குடும்ப) கு.மு.க சாரி தி.மு.க

அதே அதே

praveen
30-05-2009, 05:48 AM
வாரிசு அரசியலை தீவிரமாக எதிர்த்து பத்திரிக்கைகளில் எழுதி, பொதுவிலே பேசி வரும் துக்ளக் சோ கூட ஸ்டாலின் அரசியலில் இருப்பது வாரிசு அரசியல் இல்லை என்று தான் சொல்கிறார்.

கருணாநிதி குடும்ப அரசியல் நடத்துகிறார் என்பவர்கள் இப்போது தான் அதிகம் சொல்கிறார்கள், மிசாவின் போது ஸ்டாலினை கருனாநிதி மகன் என்பதற்காகவே திருமணம் ஆகி சில நாட்களில் கைது செய்து, சிறையில் வைத்து அடித்து உதைத்திருந்திருக்கிறார்கள். அப்போது வாரிசு அரசியல் என்ற வார்த்தை எங்கே போனது.

இவர் என்ன தான் தனது குடும்பத்தவர்களை நியமித்தாலும், அவர்கள் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று தான் அரசியல் பொறுப்பை இங்கே ஏற்கிறார்கள் என்பதை அனைவரும் மறந்து விடுகின்றனர்.

சமீபத்தில் ராமதாஸ் தேர்தல் களத்தில், அனல் கக்கிய போது ஸ்டாலினுக்கு ஒரு தகுதியும் இல்லை இருந்திருந்தால் எப்போதோ முதல்வராகிவிடுவார் என்று சொன்னார்.

கடந்த (அதவாது நடப்பில் இருக்கும் சட்டமன்ற) தேர்தலின் போது, எதிரணியினர், இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றால், கருனாநிதி முதல்வராக மாட்டார், வெற்றி பெற்ற பின் ஸ்டாலினையே முதல்வர் ஆக்குவார் என்று பிரச்சாரம் செய்தனர்.

உடல்நலம் குன்றியிருக்கும் நிலையில் வேறெருவரை அந்த முதல்வராக நியமிக்காமல், அந்த பொறுப்புகளை துனைமுதல்வர் என்று ஒருவரை அடையாளம் காட்டி அவரிடம் ஒப்படைத்திருப்பது சரியான செயலே.

முழுக்க முதல்வர் பதவி ஒருவர் பொதுத்தேர்தலில் மக்கள் முன் சொல்லி வெற்றி பெற்ற பின்னரே தான் பெற வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலை தவிர.

கட்சியில் ஏகோபித்த ஆதரவும், கருனாநிதிக்கு அடுத்த நிலையில் இருக்கும் அன்பழகனின் பல நாள் ஆசை தான் ஸ்டாலினுக்கு துனை முதல்வர் பதவி. இவர் இதில் சோபித்தால் தான் அடுத்த பொதுத்தேர்தலில் ஸ்டாலின் தான் முதலமைச்சர் என்று சொல்லி ஒட்டுக்கேட்க முடியும்.

கலைஞர் அரவனைப்பில் நிச்சயம் சிறப்பாக துனை முதல்வராக்கிய பின் தந்த கூடுதல் அமைச்சு பனிகளை சிறப்பாக செய்து முடிப்பார் என்றே தோனுகிறது.

ஆதி
30-05-2009, 06:09 AM
வாழ்த்துக்கள் ஸ்டானின் அவர்களுக்கு..

மக்களுக்கு நல்லது நடக்கும் என்றால் யார் முதல்வரானாலும் சரிதான்..

அமரன்
30-05-2009, 07:16 AM
மக்களுக்கு நல்லது நடக்கும் என்றால் யார் முதல்வரானாலும் சரிதான்..

அதே.. அதே..

இன்பா
30-05-2009, 08:18 AM
கலைஞர் மகன் என்பதற்காகவே...!!!!!! மிசாவின் போது ஸ்டாலினை உள்ளே வைத்து அடித்தது மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது...!!!

அந்த காலத்திலும் காங்... என்னத்த சொல்ல...!!!!!

பரஞ்சோதி
30-05-2009, 09:28 AM
ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இவர் நாகரீகமானவர்.

இவரது சிறப்பான செயல்பாட்டினால் தமிழகம் முன்னேறும்.

அமரன்
30-05-2009, 09:44 AM
நாடு இவரால் நன்மை பெறுமா என்றுதான் பார்க்க வேண்டும். இவர் யார் என்று பார்க்கக் கூடாது. தாமரையைக் காணும்போதெல்லாம் அதன் பிறப்பிடமா நினைவுக்கு வருது?

சிவா.ஜி
30-05-2009, 09:47 AM
நாடு இவரால் நன்மை பெறுமா என்றுதான் பார்க்க வேண்டும். இவர் யார் என்று பார்க்கக் கூடாது. தாமரையைக் காணும்போதெல்லாம் அதன் பிறப்பிடமா நினைவுக்கு வருது?

:icon_b::icon_b::icon_b:

சிவா.ஜி
30-05-2009, 09:48 AM
ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இவர் நாகரீகமானவர்.

இவரது சிறப்பான செயல்பாட்டினால் தமிழகம் முன்னேறும்.

:lachen001::lachen001::lachen001:

பரஞ்சோதி
30-05-2009, 09:49 AM
ஏன் அண்ணா சிரிக்கிறீங்க. நம்பிக்கை தானே வாழ்க்கை.

அமரன்
30-05-2009, 09:53 AM
யாராவது ஒருவர் ஸ்டாலின் நிர்வாக, ஆளுமைத் திறன் பற்றிக் கூறுங்களேன். அவருடைய பணியில் தமிழ்நாடு எப்படி ஒளிரக் கூடும் என்று சொல்லுங்களேன்.

ரங்கராஜன்
30-05-2009, 10:12 AM
நாடு இவரால் நன்மை பெறுமா என்றுதான் பார்க்க வேண்டும். இவர் யார் என்று பார்க்கக் கூடாது. தாமரையைக் காணும்போதெல்லாம் அதன் பிறப்பிடமா நினைவுக்கு வருது?

சேற்றில் முளைத்த செந்தாமரை என்று ஒரு உவமையே இருக்கு அமரன்

சிவா.ஜி
30-05-2009, 10:23 AM
ஏன் அண்ணா சிரிக்கிறீங்க. நம்பிக்கை தானே வாழ்க்கை.

தப்பா நினைக்காதீங்க பரம்ஸ். நம்மீது நம்பிக்கை வைத்தால் அது நம் வாழ்வு. அரசியல்வாதிகள்மீது நம்பிக்கைவைத்தால்...அது அவர்களுக்கு வாழ்வு. இதில் தமிழ்நாடு முன்னேறும் என்று படித்ததும் சிரித்துவிட்டேன்.

அதுமட்டுமல்ல....மிக வருடங்களுக்கு முன் தொலைக்காட்சியில் செய்தி வாசித்த ஒரு அபலைப்பெண் நினைவுக்கு வருகிறார்.

பரஞ்சோதி
30-05-2009, 10:25 AM
யாராவது ஒருவர் ஸ்டாலின் நிர்வாக, ஆளுமைத் திறன் பற்றிக் கூறுங்களேன். அவருடைய பணியில் தமிழ்நாடு எப்படி ஒளிரக் கூடும் என்று சொல்லுங்களேன்.

அமரன், ஸ்டாலின் அவர்கள் சென்னையின் மேயராக இருந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டார்.

பரஞ்சோதி
30-05-2009, 10:27 AM
தப்பா நினைக்காதீங்க பரம்ஸ். நம்மீது நம்பிக்கை வைத்தால் அது நம் வாழ்வு. அரசியல்வாதிகள்மீது நம்பிக்கைவைத்தால்...அது அவர்களுக்கு வாழ்வு. இதில் தமிழ்நாடு முன்னேறும் என்று படித்ததும் சிரித்துவிட்டேன்.

அதுமட்டுமல்ல....மிக வருடங்களுக்கு முன் தொலைக்காட்சியில் செய்தி வாசித்த ஒரு அபலைப்பெண் நினைவுக்கு வருகிறார்.

ஆஹா!

இதில் என்ன தப்பாக எடுக்க இருக்குது அண்ணா.

நீங்க சிரிச்சதை பார்த்து எனக்கும் சிரிப்பு வந்துட்டது.

தொலைக்காட்சி செய்தி பெண் என்பது உண்மையல்ல என்று நினைக்கிறேன். அதே பெண்ணுடன் பிறகு ஒரு தொடரில் கூட அவர் நடித்தார். பழுத்த மரம் கல்லடி படும் தானே.

சிவா.ஜி
30-05-2009, 10:36 AM
ஓ அப்படியா பரம்ஸ்..அது உண்மையில்லாத பட்சத்தில், எனக்கு தவறான செய்தியே சொல்லப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன்.

எப்படியோ இன்றைய ஸ்டாலினை ஒரு வாரிசாகப் பார்க்காமல் அனுபவமுள்ள அரசியல்வாதியாகப் பார்க்கவேண்டும்.

xavier_raja
30-05-2009, 10:44 AM
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்வார், தம் மக்கள் நலம் ஒன்றே மனதினில் கொள்ளவார் (தலைவர் சும்மாவா பாடினார் அப்போதே)

praveen
30-05-2009, 11:47 AM
தொலைக்காட்சி செய்தி பெண் என்பது உண்மையல்ல என்று நினைக்கிறேன். அதே பெண்ணுடன் பிறகு ஒரு தொடரில் கூட அவர் நடித்தார். பழுத்த மரம் கல்லடி படும் தானே.


ஓ அப்படியா பரம்ஸ்..அது உண்மையில்லாத பட்சத்தில், எனக்கு தவறான செய்தியே சொல்லப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன்.

தமிழக வரலாற்றில், சென்னை தொலைக்காட்சி கொடைக்கானல் மூலம் டிராண்ஸ்மீட் செய்ய ஆரம்பித்த காலத்தில் செய்தி வாசிப்பாளினிகள் மீது பெரிய ஈர்ப்பு இருந்தது, இதில் பிரபலமானவர் முதலில் சோபனாரவி அவர்கள். அவர்களின் செய்தி உச்சரிக்கும் தொனியை பலர் ரசித்தாலும் சிலருக்கு பிடிக்கவில்லை போலும். அவர் மீது அவதூறு பரப்பபட்டது. ஆனால் அது உண்மையில்லை என்று எல்லோருக்கும் தெரியும், ஆனால், வக்கிரம் பிடித்த ஆண் வர்க்கம் அந்த செய்தியை ரசித்தது.

உண்மையில் டெல்லியில் ஆங்கில செய்தி வாசிக்கும் கீதாஞ்சலி ஐயர் என்பவரை போல தமிழில் ஒருவர் செய்தி வாசிப்பதில் வித்தியாசமான தனக்கென பானியில் பெண் ஒருவர் செய்தி வாசிக்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு, நிலையத்தில் நிரந்தரமாக மாத சம்பளத்தில் பனியமர்த்தப்பட்டவர் இவர் ஒருவரே. அதற்கு முன்னும் பின்னும் பலரும் ஒரு செய்தி வாசிப்பிற்கு இவ்வளவு என்று அமர்த்தப்பட்டவர்களே.

இவருக்கு பின் பல பெண் செய்தி வாசிப்பாளர்கள் வந்தாலும், பாத்திமா பாபு அவர்கள் இளம் பெண் என்பதால் அதிக பேர் இவர் செய்தி வாசிப்பை ரசித்து பார்த்தனர். இன்று இவர் என்ன புடவை கட்டினார், என்ன நகை அணிந்திருக்கிறார் என்று செய்தி வாசிப்பாளினிகளை கண்டு ரசிப்பதிலே குடும்பத்து பெண்கள் ஆர்வம் காட்டினார்கள். அந்த காலகட்டத்தில் இயக்குநர் பாரதிராஜா அவர்கள் தனது படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று பாத்திமா பாபு அவர்களை அனுகினார். சினிமாவில் நடிக்க அப்போது விருப்பம் இல்லாத்தால் அவர் மறுத்தது அப்போது பெரிய செய்தி. அதன் பின்னர் எப்படியோ இட்டுக்கட்டி வழக்கமாக கதை பரப்பப்பட்டது. இந்த போலி செய்தியை மேடையில் பேசியதற்காக வளர்மதி என்ற எதிர்கட்சி பேச்சாளார் மீது வக்கீல் நோட்டீஸ் கூட விடப்பட்டது.

உண்மை ஊரை விட்டு கிளம்பும் முன் வதந்தி உலகையே சுற்றி வந்து விட்டும் என்ற பழமொழி சரி தான்.

ஏனென்றால் பத்திரிக்கையில் ஒரு பொய் செய்தி அல்லது தவறான சோர்ஸில் கிடைத்ததை கொட்டை எழுத்தில் போட்டு விடுவார்கள். பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் சட்ட நிபுனர் மூலம் நோட்டிஸ் விட்டபின் ஒப்புக்கு மறுப்பு செய்தியை ஒரு ஓரமாக வெளியிடுவார்கள்.

அமரன்
30-05-2009, 05:44 PM
அமரன், ஸ்டாலின் அவர்கள் சென்னையின் மேயராக இருந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டார்.

பொருத்தமானதவர்தானே பதவிக்கு வந்திருக்காரு.:icon_b:

விக்ரம்
30-05-2009, 07:15 PM
கட்சியில் ஏகோபித்த ஆதரவும், கருனாநிதிக்கு அடுத்த நிலையில் இருக்கும் அன்பழகனின் பல நாள் ஆசை தான் ஸ்டாலினுக்கு துனை முதல்வர் பதவி.
அன்பழகனின் ஏகோபித்த ஆதரவு என்பது எல்லாம் சும்மா உடான்ஸ்.

அன்பழகனை வைத்தே, இப்படி பேட்டி கொடுக்க வைப்பது போன்றவை எல்லாம், கலைஞரின் அரசியலில் சகஜம். அன்பழகனின் ஆசைப்படித்தான் என்று சொல்லி மக்களையும், உடன் பிறப்புகளையும் மாக்கான் ஆக்குவது.

கருணாநிதிக்கு சீனியர் நெடுஞ்செழியன், அண்ணாவிற்கு அப்புறம் நெடுஞ்செழியனை எப்படி கலைஞர் ஓவர்டேக் பண்ணினாரோ, அதே முறையில் தான் அன்பழகனை ஓவர்டேக் பண்ணியிருக்கார் ஸ்டாலின்.

ஸ்டாலின் நல்ல திறமைசாலிதான், மறுப்பதற்கில்லை. மேயர் பணியை திறம்படச் செய்தார் அதையும் மறுப்பதற்கில்லை. ஸ்டாலினுடைய திறமையால் தான், அவர் துணை முதல்வர் ஆனார் என்றால், தி.மு.கவில் உள்ள மற்ற தலைகளுக்கு எல்லாம் திறமையே இல்லையா???

ஸ்டாலினுக்கு கிடைத்த துணை முதல்வர் பதவிக்கு மிக, மிக முக்கிய காரணம் வாரிசு என்ற ஒரே தகுதி.. ஸ்டாலினால் குறிப்பிட்ட பதவியை திறம்பட செய்ய முடியும் என்பது additional தகுதி..

ஓவியா
30-05-2009, 08:04 PM
அன்பழகனின் ஏகோபித்த ஆதரவு என்பது எல்லாம் சும்மா உடான்ஸ்.

அன்பழகனை வைத்தே, இப்படி பேட்டி கொடுக்க வைப்பது போன்றவை எல்லாம், கலைஞரின் அரசியலில் சகஜம். அன்பழகனின் ஆசைப்படித்தான் என்று சொல்லி மக்களையும், உடன் பிறப்புகளையும் மாக்கான் ஆக்குவது.

கருணாநிதிக்கு சீனியர் நெடுஞ்செழியன், அண்ணாவிற்கு அப்புறம் நெடுஞ்செழியனை எப்படி கலைஞர் ஓவர்டேக் பண்ணினாரோ, அதே முறையில் தான் அன்பழகனை ஓவர்டேக் பண்ணியிருக்கார் ஸ்டாலின்.
ஸ்டாலின் நல்ல திறமைசாலிதான், மறுப்பதற்கில்லை. மேயர் பணியை திறம்படச் செய்தார் அதையும் மறுப்பதற்கில்லை. ஸ்டாலினுடைய திறமையால் தான், அவர் துணை முதல்வர் ஆனார் என்றால், தி.மு.கவில் உள்ள மற்ற தலைகளுக்கு எல்லாம் திறமையே இல்லையா???

ஸ்டாலினுக்கு கிடைத்த துணை முதல்வர் பதவிக்கு மிக, மிக முக்கிய காரணம் வாரிசு என்ற ஒரே தகுதி.. ஸ்டாலினால் குறிப்பிட்ட பதவியை திறம்பட செய்ய முடியும் என்பது additional தகுதி..


விக்ரம் நீங்க கூறிய அனைத்தும் என் மனதிலிருந்தவை, இருப்பினும் உள்ளூர்கரங்க சொன்னா சிறப்பாகயிருக்கும் என்று ஒதுங்கி விட்டேன். நன்றி.

விக்ரம்
30-05-2009, 08:52 PM
விக்ரம் நீங்க கூறிய அனைத்தும் என் மனதிலிருந்தவை, இருப்பினும் உள்ளூர்கரங்க சொன்னா சிறப்பாகயிருக்கும் என்று ஒதுங்கி விட்டேன். நன்றி.
உண்மையைச் சொல்வதற்கு எல்லை இருக்கா சகோதரி?

ஸ்டாலின், அழகிரி போன்றவர்கள் கட்சியில் குறிப்பிட்ட அந்தஸ்தைப் பெற்றாலும், அவர்கள் கட்சிக்காக உழைத்திருக்கிறார்கள்.

தயாநிதி மற்றும் கனிமொழி ஆகியோர் பதவி பெறுவதற்கு முன்னர் கட்சிக்காக உழைத்திருக்கிறார்களா என்பது அநேக உடன் பிறப்புகளின் ஆதங்கம்..

ஓவியா
30-05-2009, 09:34 PM
உண்மையைச் சொல்வதற்கு எல்லை இருக்கா சகோதரி?.. ..

அதற்க்கில்லை அண்ணா, மலேசியாவில் பிறந்து லண்டனில் வசிக்கும் எனக்கு தமிழ்நாட்டு அரசியல் எல்லாம் எப்படி தெரியும் என்று யாராவது மதிப்பிட்டால்.. அதான் 'கம்''னு இருந்துட்டேன்.

aren
31-05-2009, 03:18 AM
இந்திராகாந்தி இறந்தவுடன் அனைவரும் நரசிம்மராவ் தான் பதவிக்கு வருவார் என்று எதிர்பார்த்தார்கள். அர்ஜுன்சிங் தான் தான் தலைவர் என்று அவரே பிரகடனப்படுத்திக்கொண்டார். ஆனால் அனைவரையும் கடந்து ராஜீவ் காந்தி தலைவராக அறிவிக்கப்பட்டு பிரதமராக பதவியேற்றார். இதற்கு காரணம் வாரிசு அரசியல் என்பது மட்டுமல்ல பின்னாளில் ஒருவர் தலைவராக முன்னிருத்தி ஓட்டு கேட்கும்பொழுது அந்த தலைவரை தலைவராக ஏற்று மக்கள் ஓட்டு போடவேண்டும்.

இந்த தேர்தலை காங்கிரஸில் முன்னின்று நடத்தியவர் ராகுல்காந்திதான். அப்படியென்றால் காங்கிரஸில் தலைவர்களே இல்லையா. அப்படி எடுத்துக்கொள்ள முடியாது. யாரால் கட்சிக்கு அதிக பலம் கிடைக்கும் என்று பார்க்கவேண்டும். அவரையே தலைவராக ஏற்று மக்கள் முன் நிறுத்தவேண்டும்.

நடந்துமுடிந்த தேர்தலில் கருணாநிதி அவர்கள் மருத்துவமனையில் இருந்தபொழுது அழகிரி, ஸ்டாலின் மற்றும் மாறன் ஆகியோரே தேர்தலில் முன்னின்று மக்களிடம் வாக்குகேட்டனர்.

நெடுஞ்செழியன் அவர்கள் தனித்து போட்டியிட்டபொழுது 512 வாக்குகளே கிடைத்தது என்பதை அனைவரும் மறந்திருக்கமாட்டார்கள்.

ஸ்டாலின் அவர்கள் எப்படி நிர்வாகம் செய்யப்போகிறார் என்பதை பொருத்திருந்து பார்க்கவேண்டும், பின்னர் முடிவெடுக்கலாம்.

praveen
31-05-2009, 06:46 AM
கருணாநிதிக்கு சீனியர் நெடுஞ்செழியன், அண்ணாவிற்கு அப்புறம் நெடுஞ்செழியனை எப்படி கலைஞர் ஓவர்டேக் பண்ணினாரோ, அதே முறையில் தான் அன்பழகனை ஓவர்டேக் பண்ணியிருக்கார் ஸ்டாலின்.

உங்கள் கருத்து சரியல்ல, கருணாநிதி நெடுஞ்செழியனை ஓவர்டேக் செய்தது உங்கள் வார்த்தைப்படி அண்ணா மறைவிற்கு பிறகு தான். இங்கே கட்சியில் கலைஞர் இருக்கையிலே துனை முதல்வர் பதவி வழங்கப்பட்டது நிர்வாகம் சிறப்புற நடைபெறவே. இதனை முன்னின்று செய்து கலைஞரின் சிரமத்தை குறைத்து அவர் உடல்நலம் காக்க நினைப்பவர் பேராசிரியர் அவர்கள். அவர் ஒரு போதும் முதல்வர் பதவிக்கோ அல்லது அடுத்த முதல்வர் தான் என்றோ எங்கும் சொன்னதில்லை. இப்போதும் தமிழக அரசு அறிவித்த அறிவிப்பின்படி துனை முதல்வர் என்று பெயர் பெற்றாலும் ஸ்டாலின் அன்பழகனுக்கு அடுத்த இடத்தை தான் பெறுகிறார்.

சும்மா ஏதாவது சொல்லவேண்டும் என்று சொல்வது தவறு, எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின்னர் எங்கோ இருந்த ஜானகி அம்மாள் அடுத்து ஜெயலல்லிதா எப்படி அடுத்து கட்சியை கைப்பற்றினார். நெடுஞ்செழியன் என்ன ஆனார். பெருவாரியான கட்சியினர் எண்ணப்படியே அது நடக்கும். இதென்ன ரயில்வே வெயிட்டிங் லிஸ்ட் ரிசர்வேசனா இல்லை மடமா?.


அவர் துணை முதல்வர் ஆனார் என்றால், தி.மு.கவில் உள்ள மற்ற தலைகளுக்கு எல்லாம் திறமையே இல்லையா???

இதெல்லாம் விதாண்டாவாதம், ஒரு நாட்டில் ஒருவர் ஜனாதிபதியாகிறார் என்றால் மற்ற எல்லோரும் வேஸ்ட்டா அல்லது தகுதி இல்லாதவர்களா?. எல்லோருக்கும் பதவிகள் தரப்படுகின்றன, அப்படியே இந்த பதவியும் தரப்பட்டுள்ளது.

தினமனி தலையங்கத்தில் மிகவும் காலம் தாழ்த்தி செய்யப்பட்ட முடிவு, எப்போதே(முன்னரே) இதனை செய்திருக்க வேண்டும் என்று தலையங்கள் எழுதியுள்ளதை பாருங்கள்.

http://dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial&artid=66847&SectionID=132&MainSectionID=0&SEO=&Title=%3Cfont+color=%22red%22%3E%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%3C/font%3E%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D


எப்போதோ நடந்தேறியிருக்க வேண்டிய ஒன்று காலதாமதமாக இப்போதாவது நடந்திருக்கிறதே என்கிற வகையில் மகிழ்ச்சி. மு.க. ஸ்டாலினுக்குப் பதவியும் அங்கீகாரமும் ஆரம்பம் முதலே தாமதமாகத்தான் கிடைத்து வருகிறது. 1989-ல் 13 ஆண்டு அரசியல் வனவாசத்திற்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்தபோது மு.க. ஸ்டாலின் அமைச்சராக்கப்பட்டிருந்தால் யாரும் குற்றம் கண்டிருக்க மாட்டார்கள். ஏனோ, முதல்வர் கருணாநிதி அவரை அமைச்சராக்கவில்லை. இன்றைய அமைச்சரவையில், க. அன்பழகன் மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தவிர ஏனைய மூத்த அமைச்சர்களான ஆர்க்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், கோ.சி. மணி, பொன்முடி மற்றும் கே.என். நேரு ஆகியோர் முதன்முதலில் அமைச்சர்களானது அப்போதுதான்.


1996-ல் ஆட்சிக்கு வந்தபோது மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்த்தால் மீண்டும் ஏமாற்றம். சென்னை நகர மேயராக்கப்பட்டார். அவர் நிர்வாக அனுபவம் பெற வேண்டும் என்று தந்தையும் முதல்வருமான கருணாநிதி எதிர்பார்த்ததில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. அரசியலில் அனுபவமே இல்லாத பலரை அமைச்சர்களாக்குவதில் தயக்கம் காட்டாதவர் தனது மகனிடம் மட்டும் ஏன் தயக்கம் காட்டினார் என்பது புதிர்.


ஏனைய பல திமுக தலைவர்களைவிட, கட்சிப் பொறுப்பையோ ஆட்சிப் பொறுப்பையோ ஏற்கும் தகுதியும் அனுபவமும் மு.க. ஸ்டாலினுக்கு நிச்சயமாக உண்டு. அவரது அரசியல் வாழ்க்கை 70-களில் தொடங்கிவிட்டது. திமுக தலைவர் கருணாநிதியின் மகன் என்பதைவிட அடிமட்டத்திலிருந்து தன்னை உயர்த்திக் கொண்டவர் என்பதுதான் மு.க. ஸ்டாலினின் உண்மையான பலம்.


கட்சிக்குப் பிரசார நாடகங்கள் போடுவது, கட்சியின் போராட்டங்களில் பங்கு பெறுவது, இளைஞர் அணியை வலுவான அமைப்பாக மாற்றி இன்றைய தலைவர்கள் பலரை உருவாக்கியது என்று கட்சிக்கு அவரது பங்களிப்பு கொஞ்சநஞ்சமல்ல. அடிமட்டத் தொண்டராகத் தொடங்கிய அவரது அரசியல் வாழ்க்கை இளைஞரணி, சட்டப்பேரவை உறுப்பினர், சென்னை மாநகர மேயர், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர், அமைச்சர் என்று தொடர்ந்து இப்போது துணை முதல்வர் பதவியில் அவரை அமரச் செய்திருக்கிறது.


கட்சியைப் பொருத்தவரை அவர் தன்னை ஒரு சக்தியாகத் தொண்டர்கள் மத்தியில் வளர்த்துக் கொண்டிருப்பது உண்மைதான் என்றாலும், இதுவரை அவரால் தனது தனித்தன்மையைக் காட்ட முடியாமல் இருப்பது ஏன் என்பதுதான் பலருக்கும் புரியாத புதிர். ஏனைய அமைச்சர்கள் எல்லோரும் பத்திரிகையாளர்களிடம் சகஜமாகப் பேசுவதும், பேட்டியளிப்பதுமாக இருக்கும்போது மு.க.ஸ்டாலின் மட்டும் ஒதுங்கியே இருப்பது ஏன் என்று ஆச்சரியப்படாதவர்கள் இல்லை.


அதற்கு ஒரு முக்கியமான காரணம், அவர் கருணாநிதி என்கிற ஆலமரத்தின் நிழலில் இருப்பதுதான் என்று கருத வழியுண்டு. நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், மதியழகன் போன்ற ஜாம்பவான்கள்கூட கருணாநிதி என்கிற சூரிய வெளிச்சத்தின் முன்னால் பிரகாசிக்க முடியாதபோது இயல்பாகவே கூச்ச சுபாவம் கொண்ட மு.க. ஸ்டாலினால் மட்டும் அது எப்படிச் சாத்தியம்?


மேலும், மு.க. ஸ்டாலினுக்குத் தந்தை கருணாநிதியிடம் இருக்கும் பயம் கலந்த மரியாதையால்கூட தன்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்பாமல் இருக்கலாம். தனிமனித நாகரிகத்தைக் கடைப்பிடிப்பதில் மற்றவர்களிடமிருந்து எப்போதுமே வேறுபடுபவர் அவர். சட்டப்பேரவையில் ஜெயலலிதா தாக்கப்பட்ட சம்பவத்தின்போது எம்.எல்.ஏ.வான அவர் கடைப்பிடித்த நிதானம் அதற்கு ஓர் உதாரணம். தலை இருக்கும்போது வால் ஆடக்கூடாது என்று மு.க. ஸ்டாலின் நினைப்பதுகூட காரணமாக இருக்கலாம்.


மேயராகவும் சரி, உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் சரி மு.க. ஸ்டாலினின் செயல்பாடுகளில் யாரும் பழுது காண முடியாது. தகுதியும் திறமையும் வாய்ந்த அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து, தனது துறையின் செயல்பாடுகளில் குற்றம் காண முடியாதபடி நிர்வகிப்பதில் அவர் யாருக்கும் சளைத்தவரல்ல. அதேநேரத்தில், மிகப்பெரிய சாதனை என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவருடைய நிர்வாகத் திறமை பளிச்சிடவும் இல்லை.


முதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் முதுகுத்தண்டு அறுவைச்சிகிச்சைக்குச் சென்றபோதே ஸ்டாலினிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்க வேண்டும் என்பதுதான் நமது கருத்து. இந்தத் தள்ளாத வயதில் வீல் சேரில் முதல்வர் அங்குமிங்கும் பயணிப்பதும், தன்னை வருத்திக்கொண்டு நாளும் கிழமையும் பத்திரிகைகளுக்குப் பேட்டியளிப்பதும் பிரச்னைகளை எதிர்கொள்வதும் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. இந்தப் பொறுப்புகளைத் துணை முதல்வரான மு.க. ஸ்டாலின் இனிமேல் ஏற்றுச் செயல்படுவார் என்று நம்பலாம்.


இதுநாள் வரை முதல்வர் கருணாநிதியின் நிழலாக இருந்தவர் இனிமேல் தனது தனித்தன்மையைக் காட்ட வேண்டிய நேரம் கைகூடியிருக்கிறது. சுறுசுறுப்புடனும் அரசியல் சாதுர்யத்துடனும் தனது பொறுப்புகளை அவர் கையாளும் விதத்தில்தான் அவருடைய வருங்காலமும், திமுகவின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது.

தமிழக சரித்திரத்தில் முதன்முறையாக ஒரு துணை முதல்வர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அந்தவகையில் மு.க. ஸ்டாலின் ஒரு முதல்வர்கூட. "தினமணி'யின் வாழ்த்துகள்.

விக்ரம்
31-05-2009, 11:35 AM
கருணாநிதி நெடுஞ்செழியனை ஓவர்டேக் செய்தது உங்கள் வார்த்தைப்படி அண்ணா மறைவிற்கு பிறகு தான். இங்கே கட்சியில் கலைஞர் இருக்கையிலே துனை முதல்வர் பதவி வழங்கப்பட்டது நிர்வாகம் சிறப்புற நடைபெறவே.
முன்னர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு தான், நெடுஞ்செழியனை ஓவர்டேக் பண்ணினார் கலைஞர்.

இன்றோ தான் உயிரோடு இருக்கும்போதே, தன்மகன் ஸ்டாலின் அன்பழகனை ஓவர்டேக் செய்ய வைத்துவிட்டார் கலைஞர், ரொம்ப முன்னேறிட்டார்னு சொல்லலாமா? இல்லை விதண்டாவாதம் னு சொல்வீங்களா?

பத்திரிக்கையாளர் 'சோ'வே கூறினார். ஸ்டாலின் திறமை வாய்ந்தவர், அதனால் ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்ததில் தவறில்லை என்று சொல்பவர்கள், சோ சொல்லும் மற்ற விஷயங்களையும் ஒத்துக் கொள்வார்களா? நமக்கு தேவைப்படும்போதெல்லாம் 'சோ'வை அழைப்பதும், பின்னர் துரத்தியடிப்பதும் கருத்தில் கொள்ள வேண்டியவை.


இதனை முன்னின்று செய்து கலைஞரின் சிரமத்தை குறைத்து அவர் உடல்நலம் காக்க நினைப்பவர் பேராசிரியர் அவர்கள்.
அன்பழகன் அவர்களுக்கு கலைஞர் உடல் நலத்தில் உண்மையான அக்கறை இருந்தால், இவ்வாறு சொல்லியிருப்பார் -> கலைஞர் அண்ணா, கலைஞர் அண்ணா உங்களுக்கு இப்பவெல்லாம் முதுகுவலி, தண்டுவடம் அறுவை சிகிச்சை செய்ததினால் வலி போன்றவை அடிக்கடி வருகிறது.

உங்களால் அன்றாட அலுவல் சரிவர செய்ய முடிவதில்லை. இவ்வாறான சூழ்நிலையிலும் டெல்லிக்கு போய் பிசினஸ் எல்லாம் பேச வேண்டியிருக்கு. அதனால் நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க, நான் பார்த்துக்கறேனு தான் சொல்லணும்.

ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் இரண்டு ஆசைகள் இருக்கும். 1. பதவி ஆசை, 2. மக்களுக்கு சேவை செய்யும் ஆசை.

அன்பழகனுக்கு பதவி ஆசை இல்லை என்று வைத்துக் கொள்வோம். மக்களுக்கு சேவை செய்யும் ஆசை கூட இல்லையா என்ன? (இதுவும் விதண்டாவாதம்னு சொல்லமாட்டீங்கனு நினைக்கிறேன்)


அவர் ஒரு போதும் முதல்வர் பதவிக்கோ அல்லது அடுத்த முதல்வர் தான் என்றோ எங்கும் சொன்னதில்லை. இப்போதும் தமிழக அரசு அறிவித்த அறிவிப்பின்படி துனை முதல்வர் என்று பெயர் பெற்றாலும் ஸ்டாலின் அன்பழகனுக்கு அடுத்த இடத்தை தான் பெறுகிறார்.
ஒருவேளை அன்பழகனுக்கு அடுத்த முதல்வர் ஆகவேண்டும் என்று ஆசையிருந்தால், சும்மா விடுவாங்களா? வை.கோவுக்கு ஏற்பட்ட கதி தான் அன்பழகனுக்கும்.

அன்பழகனுக்கு முதல்வர் ஆகவோ (அ) துணை முதல்வராகவோ இஷ்டமில்லை என்றால், அவர் இன்றுள்ள அமைச்சர் பதவியைக் கூட பெற்றிருக்கமாட்டார்.

எனக்குள்ள ஆதங்கம் எல்லாம் -> தி.மு.க உடன்பிறப்புகளில் நிறையப் பேர் உண்மையாகவே கட்சிக்கும், மக்களுக்கும் உழைப்பவர்கள். ஆனால் அவர்களது உழைப்பெல்லாம் மு.கவின் குடும்பம் செழிக்கவும் உதவுகிறதே என்பதை ஏன் அவர்கள் யோசிக்க மறுக்கிறார்கள்.

கலைஞர் குடும்பத்தால் மட்டுமே வாழையடி வாழையாக தமிழகத்தையும், இந்தியாவையும் ஆளமுடியுமென்று கழக உடன்பிறப்புகள் நினைக்கிறார்களோ என்னவோ??!!


இதெல்லாம் விதாண்டாவாதம், ஒரு நாட்டில் ஒருவர் ஜனாதிபதியாகிறார் என்றால் மற்ற எல்லோரும் வேஸ்ட்டா அல்லது தகுதி இல்லாதவர்களா?.
உதாரணத்திற்கு தி.மு.கவிடம் 272க்கும் அதிகமான M.Pக்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த சமயத்தில் ஜனாதிபதிக்கான தேர்தல் வருகிறது என்றும் வைத்துக் கொள்வோம். அப்போது தி.மு.க சார்பில் நிறுத்தப்படும் ஜனாதிபதி வேட்பாளார் யாராக இருக்குமென்று, ஐந்துக்கும் குறைவான வயதுடைய குழந்தையைக் கேட்டாலே, அது மு.கவின் குடும்ப உறுப்பினர் தான் என்று பதில் சொல்லும்.

இதே நிலைமை அ.தி.மு.கவுக்கு வந்தால் சசிகலாவின் குடும்ப உறுப்பினராகத் தான் இருப்பார், அதனால் மு.கவின் குடும்பத்துக்கு தி.மு.கவில் முக்கியத்துவம் கொடுப்பது குடும்ப அரசியல் இல்லை என்று சொல்ல இயலுமா? (அ) விதண்டாவாதம் என்று சொல்வோமா?


எல்லோருக்கும் பதவிகள் தரப்படுகின்றன, அப்படியே இந்த பதவியும் தரப்பட்டுள்ளது.
போலீஸ் கமிஷனரில் எப்படி -> கமிஷனர், துணைக் கமிஷனர், மற்றும் இரண்டு இணைக் கமிஷனர் இருப்பாரோ, அதுபோல இணை முதல்வர் பதவியை உருவாக்கி ஆற்காட்டார் மற்றும் வீரபாண்டியார் போன்றவருக்கு கொடுத்தால் பதவிகள் தரப்படுகின்றன என்பதை ஒத்துக் கொள்ளலாம்..

ஆனால் இதயத்தில் அல்லவா கொடுக்கப்படுகிறது.

praveen
01-06-2009, 05:13 AM
பத்திரிக்கையாளர் 'சோ'வே கூறினார். ஸ்டாலின் திறமை வாய்ந்தவர், அதனால் ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்ததில் தவறில்லை என்று சொல்பவர்கள், சோ சொல்லும் மற்ற விஷயங்களையும் ஒத்துக் கொள்வார்களா? நமக்கு தேவைப்படும்போதெல்லாம் 'சோ'வை அழைப்பதும், பின்னர் துரத்தியடிப்பதும் கருத்தில் கொள்ள வேண்டியவை.
ஒருவர் கருத்தை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் இஸ்டம், குறிப்பிட்ட விசயத்தில் தனக்கு ஆதரவு கருத்து வருகிறதா என்று பார்ப்பது மனிதரின் சுபாவம். அதனை ஏற்றுக்கொண்டால் அவரின் மற்ற கருத்தையும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்று கட்டாயமில்லை.

வீட்டிலே ஒரு பாம்பு நுழைந்து விட்டபோது, அதனை அடிக்க அவசரத்திற்கு சாக்கடை தள்ளும் குச்சி இருந்தால் உபயோகப்படுத்துகிறோம். பின்னர் அந்த குச்சியை வீட்டிற்குள் கொண்டு சென்று நடுவீட்டிலா வைப்போம். தேவைக்கு பய்ன்படுத்தி வாழ்க்கையை வளமாக்கி கொள்பவன் தான் மனிதன்.


ஒருவேளை அன்பழகனுக்கு அடுத்த முதல்வர் ஆகவேண்டும் என்று ஆசையிருந்தால், சும்மா விடுவாங்களா? வை.கோவுக்கு ஏற்பட்ட கதி தான் அன்பழகனுக்கும்.

அன்பழகனுக்கு முதல்வர் ஆகவோ (அ) துணை முதல்வராகவோ இஷ்டமில்லை என்றால், அவர் இன்றுள்ள அமைச்சர் பதவியைக் கூட பெற்றிருக்கமாட்டார்.

அன்பழகனை விடுங்கள், ஜெ. கட்சியில் நெடுஞ்செழியன் நிலை என்னவாக இருந்தது என்று யோசித்து பாருங்கள். ஜெ. காலில் மட்டும் விழாமல் இருப்பதற்கு மட்டுமே அவருக்கு சலுகை இருந்தது. ஆனால் பேராசிரியர் இங்கே அனைத்திலும் முன்னிறுத்தப்பட்டு கெளரவிக்கப்படுகிறார்.

அவரவர் அவரவர் திறமை உணர்ந்து, இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள், அவ்வளவே, நீங்கள் ஏன் தேவையில்லாமல் லபோதிபோவென அடித்து கொள்கிறீர்கள். அன்பழகனை கருணாநிதி கூடப்பிறந்த சகோதரர் போல பார்த்து கொள்கிறார். எந்த விசயம் என்றாலும் அவரிடம் கலந்து (ஏன் தனது குடும்ப சிக்கலை கூட அவரிடம் சொல்லி ஆலோசனை பெற்று) தனது குடும்ப மூத்த உறுப்பினர் போல வைத்து கொண்டிருக்கும் போது அவருக்கு என்ன கவலை.

முதல்வர் பதவி என்பது ஒருவருக்கு மட்டுமே, ஆனால் அமைச்சர் பதவி என்பது 40 பேருக்கு கூட ஒரு மந்திரி சபையில் கொடுக்க முடியும் என்ற சிறிய விசயம் தெரியாமல் போனதே உங்களுக்கு.


எனக்குள்ள ஆதங்கம் எல்லாம் -> தி.மு.க உடன்பிறப்புகளில் நிறையப் பேர் உண்மையாகவே கட்சிக்கும், மக்களுக்கும் உழைப்பவர்கள். ஆனால் அவர்களது உழைப்பெல்லாம் மு.கவின் குடும்பம் செழிக்கவும் உதவுகிறதே என்பதை ஏன் அவர்கள் யோசிக்க மறுக்கிறார்கள்.

கலைஞர் குடும்பத்தால் மட்டுமே வாழையடி வாழையாக தமிழகத்தையும், இந்தியாவையும் ஆளமுடியுமென்று கழக உடன்பிறப்புகள் நினைக்கிறார்களோ என்னவோ??!!

உங்கள் கேள்வியிலே பதில் இருக்கிறது. கலைஞர் பொதுவாழ்க்கைக்கு வந்தவுடன் அவரின் குடும்பத்தவர்களும் பொதுவாழ்க்கையில் (திமுக கட்சியில்) ஒன்றினைந்து விட்டார்கள். ஸ்டாலின் மட்டுமல்ல, அவரின் குடும்பத்தினர் கூட கலைஞர் அவர்களை உறவுமுறை சொல்லி (அப்பா, தாத்தா இப்படி) அழைப்பதில்லை, தலைவர் என்றே அழைக்கின்றனர், என்றால் திமுக இயக்கம் எந்த அளவிற்கு அவர்கள் குடும்பத்தில் ஊடுறுவி இருக்கிறது என்று தெரியும்.

இதைப்பற்றி அந்தக்கட்சியில் இருப்பவர் யோசிக்கட்டும், செயல்படட்டும், வெளியே இருக்கும் மற்றவர்களுக்கு அதைப்பற்றி என்ன கவலை, என் கணவர் என்னை நன்றாக நடத்தவில்லை என்று ஒரு பெண் சொல்ல உரிமை உள்ளது, ஆனால் அதனை பக்கத்து வீட்டுக்காரார் சொல்ல உரிமை இல்லை.


உதாரணத்திற்கு தி.மு.கவிடம் 272க்கும் அதிகமான M.Pக்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த சமயத்தில் ஜனாதிபதிக்கான தேர்தல் வருகிறது என்றும் வைத்துக் கொள்வோம். அப்போது தி.மு.க சார்பில் நிறுத்தப்படும் ஜனாதிபதி வேட்பாளார் யாராக இருக்குமென்று, ஐந்துக்கும் குறைவான வயதுடைய குழந்தையைக் கேட்டாலே, அது மு.கவின் குடும்ப உறுப்பினர் தான் என்று பதில் சொல்லும்.

இதே நிலைமை அ.தி.மு.கவுக்கு வந்தால் சசிகலாவின் குடும்ப உறுப்பினராகத் தான் இருப்பார், அதனால் மு.கவின் குடும்பத்துக்கு தி.மு.கவில் முக்கியத்துவம் கொடுப்பது குடும்ப அரசியல் இல்லை என்று சொல்ல இயலுமா? (அ) விதண்டாவாதம் என்று சொல்வோமா?

திமுக 272க்கு அதிகமான MPக்கள் இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம் என்று வீண் வாதம் செய்வது விதண்டாவாதமா இல்லையா?.


போதும் விவாதம் இத்துடன் (அல்லது உங்கள் பதிலுடன்)நிறுத்தி கொள்வோம், செய்தி சோலையில் விவாதங்கள் கூடாது என்று நினைக்கிறேன்.

நேசம்
01-06-2009, 05:26 AM
விக்ரம் சொல்லும் கருத்து திமுக கட்சி மட்டுமன்றி அனைத்து தரப்பு மக்களுக்கு தெரிந்தே இருக்கு.தெரிந்தே தேர்வு செய்கிறார்கள்.அதனால நாம் போசி பயனில்லை.இதற்கு காரணமாக சொல்ல கூடிய விசயம் ஒன்றுதான். அது அதிமுகவுக்கு மாற்றாக திமுக இருப்பதுதான்.இது அதிமுகவுக்கு பொருந்தும்.ஆனால இந்த விசயத்தில் ஸ்டாலின் எந்த பதவிக்கும் பொருந்தமானவர்.ஏனென்றால் அவரது அரசியல் வாழ்க்கை அப்படிப்பட்டது.ஸ்டாலினை தவிர்த்து வேறு யாரையும் மக்கள் கூட ஏற்றி கொள்ல மாட்டார்கள்

வெற்றி
01-06-2009, 12:15 PM
கொஞ்சம் யாதர்த்தமாக யோசித்தால் இது ஒன்றும் தவறாக படவில்லை ..
(இந்த வார அவுட் லுக் அட்டை படம் யாரவது பார்த்தீர்களா?? ) :) :) அது தான் ஜோக்

ஆதி
01-06-2009, 01:10 PM
அன்பழகனின் ஏகோபித்த ஆதரவு என்பது எல்லாம் சும்மா உடான்ஸ்.

அண்ணா, ஏகோபித்த ஆதரவு என்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை என்றாலும், அவரின் ஆதரவு என்று ஸ்டாலினுக்கு என்பது மட்டும் உண்மை..

ஸ்டாலினுக்கு அவையில் 4-ஆம் இடம் வழங்கப்பட்ட போது.. சிலர் அன்பழகனிடம் முனகி இருக்கிறார்கள்.. அதற்கு அன்பழகன், அடுத்த முதல்வரே அவர்தான் அப்படி இருக்கு 4-ஆம் இடம் கொடுத்தால் என்ன ? 2-ஆம் இடம் கொடுத்தால் என்ன ? இனி இப்படி எல்லாம் பேசிக் கொண்டு வராதீங்க என்று கொஞ்சம் கடுமையாக பேசி இருக்கிறார்..

அதனால் அன்பழகன் விருப்பம் என்பதில் தவறில்லை அண்ணா..கருணாநிதிக்கு சீனியர் நெடுஞ்செழியன், அண்ணாவிற்கு அப்புறம் நெடுஞ்செழியனை எப்படி கலைஞர் ஓவர்டேக் பண்ணினாரோ, அதே முறையில் தான் அன்பழகனை ஓவர்டேக் பண்ணியிருக்கார் ஸ்டாலின்.

நெடுஞ்செழியன் மட்டுமல்ல அண்ணா, இன்னும் நிறைய பேர் இருந்தாங்க.. கலைஞர் முதல் கட்ட தலைவர்கள் பட்டியலிலேயே கிடையாது என்பது இன்னொரு முக்கியமான விடயம்.. அப்படி இருக்க அவர் எல்லாரையும் ஓவர் டேக் செய்ய யாராவது உதவி இருக்கனும் இல்லையா ?

கலைஞருக்கு முதல்வராக ஆசையிருந்தது உண்மை.. ஆனால் செயர்க்குழுவை கலைஞருக்கு சாதகமாய் ஓட்டு குத்த வைத்தது எம்.ஜி.யாரின் கைத்திறமே ஒழிய கலைஞரின் சாதுர்யமில்லை..

அதற்கப்புரம் கலைஞர் பல தப்பான காய்களை நகர்த்தி அரசியலில் தன் கையை சுட்டுக் கொண்டார் என்பதும் உண்மை..

எம்.ஜி.யார் மீது கழகத்தில் புகார் கூறப்பட்ட போது.. செயர்குழுவை கூட்டி முடிவெடுப்போம் என்று கலைஞர் அறிக்கை விடுகிறார்..

அதையும் பொருட்படுத்தாமல் நெடுஞ்செழியன், பொதுச்செயலாளர் எனும் அதிகாரத்தை பயன்படுத்தி கலைஞரின் அனுமதி இல்லாமல் குழுவை கூட்டி எம்.ஜி.யாரை கட்சியில் விட்டு நீக்கினார்.. எல்லாதுக்கும் கடுப்புதான் காரணம்..

எம்.ஜி.யார், முதன்முதலில் காங்கிரஸில்தான் இருந்தார்.. காவியுடை கழுத்தில் உத்ராச்ச மாலை.. இப்படித்தான் அதிகமாய் இருந்தார்.. கிட்ட தட்ட ரஜினியும் அதே மாதிரிதான் இல்ல..

அப்போது கழத்தில் இருந்த சிவாஜியை ஐயப்பன் கோயிலுக்கு சென்று வந்ததற்காய் அண்ணா கூப்பிட்டு கண்டித்திருக்கிறார்.. சிவாஜி கழகத்தைவிட்டு விலகி காங்கிரஸில் இணைந்தார்..

எம்.ஜி.யார் காவியையும் உத்ராச்சத்தையும் கழட்டி எறிந்துவிட்டு கழகத்தில் இணைந்தார்..

இங்கிருந்து தான் எம்.ஜி.யாரின் வளர்ச்சி அதிகமானது.. மேடையில் மட்டுமல்ல படங்களிலும் அண்ணா நாமத்தை முழங்கினார்..

கழக கூட்டங்களுக்கு வேண்டுமென்றே தாமதமாகத்தான் வருவாராம் எம்.ஜி.யார்.. அதுவும் முக்கியமான தலைவர்கள் உரையாற்றும் பொழுதுதான் வருவாராம்.. எம்.ஜி.யாரை காணும் கூட்டம் உரையை ஒதுக்கிவிட்டு அவரை கவனிக்குமாம்.. கூட்டம் முடிந்து திரும்புகையில் எல்லா தலைவர்களும் மேடையை விட்டு இறங்கி வாகனத்தில் ஏறிய பிறகே எம்.ஜி.யார் இறங்குவாராம்.. தன் வாகனத்தில் ஏறியவுடன் கூட்டத்தார்க்கு கையசைப்பாராம்.. "ஏ" என்று பெரும் சப்தம் எழுமாம்.. அண்ணா முதல் அனைத்து தலைவர்களும் எம்.ஜி.யாரை திரும்பி பார்ப்பார்களாம்... இப்படித்தான் எம்.ஜி.யார் கழகத்தில் தன் பலத்தை பெருக்கிக் கொண்டார்..

கட்சியை விட்டு நீக்கிய பிறகு எம்.ஜி.யார் மதுரை சென்று ஒரு ஹோட்டலில் தங்கிவிட்டார்.. இரவு 12 மணிக்கு ஒரு அலைப்பு வருகிறது..
ரசிகர்கள் எல்லாம் சேர்ந்து உங்களை தலைவராக கொண்டு ஒரு கட்சி ஆரம்பித்திருக்கின்றனர்.. அதற்கு ஒரு பெயர் வேண்டும் சொல்லுங்கள் என்றார்களாம்.. யோசித்துவிட்டு அண்ணா அ.தி.மு.க என்று பெயர் சொல்லி இருக்கிறார்.. கறுப்பு துணியில் சிவப்பு தாமரை கொண்டதே அ.தி.மு.கவின் முதல் கட்சி கொடி..

மறுநாள் காலையில் தங்களின் கட்சியின் கொள்கை என்ன என்று கேட்ட நிருபர்களுக்கு எம்.ஜி.யார் சொன்ன பதில்.. "அண்ணாயிசம்"

நிருபர்கள் : "அண்ணாயிசம் என்றால் என்ன ?"

எம்.ஜி.யார் : அண்ணாயிசம் என்றால் அண்ணாயிசம்

இப்படிதான் எம்.ஜி.யார் கட்சி துவங்கினார்..

ஆரென் அண்ணா சொன்னது போல் நெடுஞ்செழியன் தனித்து நின்ற போது அவருக்கு கிடைத்த ஓட்டு 512.. இவரை விட எஸ்.வி.சேகர் அதிகமாய் ஓட்டு வாங்கினார் என்பது மிக கொடுமையான வரலாறு..

நெடுஞ்செழியன் ரொம்ப பாவம்.. அண்ணா இருக்கும் போது இரண்டாம் இடம்.. கலைஞர் வந்த பிறகும் இரண்டாம் இடம்.. எம்.ஜி.யார் கிட்ட சென்ற பிறகும் இரண்டாம் இடம், அம்மா வந்த பிறகும் இரண்டாம் இடம்.. இப்படி தன் அரசியல் வாழ்க்கை முழுக்க இரண்டாம் இடத்திலேயே இருந்து இறந்து போனவர்.. கழகம் வளர்த்த நாவலரை காலமும் காலத்தின் நாவும் மறந்து போனது இன்னொரு வருத்தத்துக்குரிய விடயமும் கூட..

பென்ஸ்
01-06-2009, 01:22 PM
அரசியல் செய்வதில் மட்டுமல்ல
குடும்ப அரசியல் செய்வதிலும் வல்லவர் கலைஞர்....
கட்சிக்கும், குடும்பத்திற்க்கும் இடையே சரியாக நடந்து செல்கிறாரே... (வெளங்கிரும்)