PDA

View Full Version : கிரிக்கெட் தரவரிசை



அறிஞர்
29-05-2009, 01:26 PM
டாப் கிரிக்கெட் தரவரிசை டோனி தொடர்ந்து முதலிடம்


துபாய், மே 29: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் இந்திய கேப்டன் டோனி முதல் இடத்தில் உள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணிகள் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து 3வது இடத்தில் உள்ளது.

ஒருநாள் போட்டிக்கான வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. பேட்டிங்கில் இந்திய கேப்டன் டோனி 815 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.

இந்திய வீரர்கள் யுவராஜ், சேவாக் இருவரும் முறையே 4வது மற்றும் 7வது இடத்தில் உள்ளனர். பந்துவீச்சில் முதல் 10 இடத்தில் இந்திய வீரர்கள் யாரும் இல்லை. ஜாகீர்கான் (17), ஹர்பஜன் (23) இடத்தில் உள்ளனர். ஆல்ரவுண்டர் பட்டியலில் யுவராஜ் 3வது இடத்தில் உள்ளார்.
அணிகளுக்கான தரவரிசையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்தியா 3வது இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாடும், ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்காவும் முதலிடத்தில் உள்ளன. டெஸ்ட் பேட்டிங்கில் கம்பீர் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பந்து வீச்சில் ஹர்பஜன் 6வது இடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டரில் ஹர்பஜன், இர்பான் பதான் முறையே 9வது மற்றும் 10வது இடத்தில் உள்ளனர்.

பேட்டிங்:
பெயர் நாடு புள்ளி
டோனி இந்தியா 815
சந்தர்பால் வெ.இண்டீஸ் 777
கெய்ல் வெ.இண்டீஸ் 771
யுவராஜ் இந்தியா 769
எம்.ஹ¨சே ஆஸி. 767
டி வில்லியர்ஸ் தெ.ஆப்ரிக்கா 752
சேவாக் இந்தியா 747
ஸ்மித் தெ.ஆப்ரிக்கா 731
கிப்ஸ் தெ.ஆப்ரிக்கா 712
காலிஸ் தெ.ஆப்ரிக்கா 707

பந்துவீச்சு:
குலசேகரா இலங்கை 724
மில்ஸ் நியூசி. 697
முரளிதரன் இலங்கை 696
வெட்டோரி நியூசி. 694
ஹசன் வங்கதேசம் 687
பிராக்கன் ஆஸி. 677
ஜான்சன் ஆஸி. 672
மோர்ட்சா வங்கதேசம் 671
அப்ரிடி பாகிஸ்தான் 660
பிராடு இங்கிலாந்து 660

பரஞ்சோதி
30-05-2009, 09:53 AM
தகவல்களுக்கு நன்றி அறிஞரே!

இப்போதைக்கு தோனிக்கு ஈடாக யாரும் இல்லை போலிருக்குதே.

பந்து வீச்சில் நம்மவர் முதல் பத்தில் எட்டி பார்ப்பது அவசியம்.

ராஜா
30-05-2009, 09:54 AM
அஃப்ரிடி எல்லாம் பந்துவீச்சுப் பட்டியலில் இடம்பிடித்திருக்கும்போது, இந்திய முன்னணி வீச்சாளர் எவருமில்லாதது வருத்தமே..!

பா.ராஜேஷ்
02-06-2009, 06:28 PM
வாழ்த்துக்கள் தோனி! தொடர்ந்து முதலிடம் வகிக்க வாழ்த்துக்கள்!!

Mathu
07-07-2009, 09:58 AM
அஃப்ரிடி எல்லாம் பந்துவீச்சுப் பட்டியலில் இடம்பிடித்திருக்கும்போது, இந்திய முன்னணி வீச்சாளர் எவருமில்லாதது வருத்தமே..!

அண்ணரின் வருத்தம் நியாயமானது, ஆனால் ஒன்றை ஒத்துகொண்டே ஆகவேண்டும் அஃபிரிட்டியின் பந்துவீச்சில் மிகப்பெரிய மாற்றம், நல்ல தரம் தெரிகிறது இப்போ மிக பெரிய துடுப்பாட்ட காரர்களையே தடுமாற வைக்கிறார்.

நேசம்
07-07-2009, 10:31 AM
பகுதி நேர பந்து விச்சளராக இருந்து இடம் பிடிக்கும் போது இந்தியர்கள் முழு நேர பந்து விச்சளார்கள் இடம் பிடிக்க முடியவில்லையென்ரு தான் ராஜா அண்ணா சொல்றார் மது.நிங்கள் பல போட்டிகளின் தனது பந்து விச்சு முலம் அணியை அப்ரிது வெற்றி பெற செய்து இருக்கார்.