PDA

View Full Version : அரசியல்த் தீர்வு விடயத்தில் அரசாங்கம் இரட்டை வேடம் -ஐ.தே.க



புதியவன்
28-05-2009, 04:19 PM
சிறிலங்காவின் தேசியப் பிரச்சினைக்கு அரசியல்த்தீர்வே இறுதியானது என்று ஜனாதிபதியே உணர்ந்துகொண்டுள்ளார். ஆனால் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகள் அரசியல்த் தீர்வென்பது அவசியமற்றதொன்றெனவும் சர்வகட்சிக்குவின் யோசனைகள் நடைமுறைக்கு வருமானால் வீதியில் இறங்குவோம் எனவும் எச்சரிக்கின்றன. இவ்வாறான தமிழர் பிரச்சினைகக்கு அரசியல்த்தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் இரட்டை வேடம் போடுகின்றது. இது குறித்து உடனடியாக நாட்டுக்குத் தெளிவுபடுத்தவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

சட்டம் ஒழங்கு, ஜனநாயகம், மனித உரிமைகள், பொருளாதாரம் மற்றும் வன்னிமக்களின் சகவாழ்வு அகியவற்றில் அக்கறை காட்டவேண்டிய அரசாங்கம் அவற்றைப் புறந்தள்ளிவிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் மீது சேறுபூசும் கொள்கைகளை மட்டும் கடைப்பிடித்தவருகின்றது. தற்போது ஏற்படடுள்ள இனவாதப்போக்குகள் தமிழ்மக்களை மீண்டும் பயங்கரவாதத்தினுள் தள்ளிவிடுவது போலவே உள்ளது எனவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்கட்சி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்திளார் மாநாட்டில் பேசுகையிலேயே அந்தக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் நீண்டகாலமாக நிலவிவந்த பயங்கரவாதப்பிரச்சினைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசாங்கத்தின் அடுத்தகட்டம் என்பதை அறிய நாடே எதிர்பார்த்திருக்கின்றது.

அரசியல்த்தீர்வே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வு என வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, அமைச்சர் விநாயகமூர்தி முரளிதரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அகியோர் உட்பட ஏனைய அரசியல் கட்சிகளும் தமிழ்மக்கள் சார்பில் நியாயமான தீர்வினையே கோரி நிற்கின்றனர்.

ஆனால் அரசாங்கமம் அதன் ஜனாதிபதியும் ஒன்றைக்கூறுகின்ற போது, அதற்கு எதிர்மறையான கருத்தினை அரசியல்ப்பங்காளிக்கட்சிகள் முன்வைத்தவருகின்றன.
ஆனால் இந்தக்கருததுக்கள் தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு பிரதிபலிப்பும் தென்பவதாக தெரியவில்லை.

அப்படி என்றால் அரசியல்த்தீர்வு என்பதிலும் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு என்பதிலும் அரசாங்கம் இரட்டை வேடம் போடுகின்றதா? என ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரிய சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி பதிவு.கொம்