PDA

View Full Version : அட்மினிஸ்ட்ரேட்டராக் இயக்குவது எப்படி?



நூர்
27-05-2009, 06:27 PM
அட்மினிஸ்ட்ரேட்டராக் இயக்குவது எப்படி?
மே 25,2009
விழுப்புரத்திலிருந்து வாசகர் ஒருவர் தான் எந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்யச் சென்றாலும் கம்ப்யூட்டர் என்னைத் தடுக்கிறது. அட்மினிஸ்ட்ரேட்டர் ரைட்ஸ் என்றெல்லாம் சில பிழைச் செய்திகள் வருகின்றன.

நான் பயன்படுத்துவது என்னுடைய சொந்த கம்ப்யூட்டர். இதற்காக நான் கம்ப்யூட்டர் வாங்கிய கம்பெனியைத் தொடர்பு கொள்ள வேண்டுமா என்றெல்லாம் கேட்டிருந்தார். இதே போல் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் குறித்துப் பல கடிதங்கள் நமக்கு வந்திருக்கின்றன. இந்த பிரச்சினை குறித்து இங்கு பார்க்கலாம்.

விழுப்புரம் வாசகர் தெரிவித்திருப்பது உண்மையே. ஏதேனும் ஒரு புதிய புரோகிராமினை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்கையில் சில கம்ப்யூட்டர்களில் "You must have Administrator rights to install (insert program name) on this computer. Please log in to an account with Administrator rights and run this installation again."

என்று ஒரு செய்தி கிடைக்கும். இது எதைக் குறிக்கிறது? அட்மினிஸ்ட்ரேட்டர் உரிமைகள் என்றால் என்ன என்று முதலில் பார்க்கலாம்.

கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை அட்மினிஸ்ட்ரேட்டர் என்று கருதப்படுபவர்தான் அந்த கம்ப்யூட்டரின் ஏகோபித்த தலைவர். கம்ப்யூட்டரில் எந்த தடையும் இன்றி எங்கும் செல்லக் கூடியவர்.

அவர் மட்டுமே கம்ப்யூட்டரில் பைல் அல்லது போல்டர் எதனையும் உருவாக்கலாம், அழிக்கலாம், எடிட் செய்திடலாம். செட்டிங் குகளை மாற்றலாம். குறைந்த பட்ச உரிமை கொண்ட யூசர்களைக் காட்டிலும் அதிக உரிமை கொண்டவர் அட்மினிஸ்ட்ரேட்டர்.

உங்களுடைய வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் நீங்கள் கம்ப்யூட்டர் அட்மினிஸ்ட்ரேட்டராக அக்கவுண்ட் வைத்துக் கொள்ளலாம். உங்கள் குழந்தைகள் அல்லது மனைவிக்கு யூசர் அக்கவுண்ட்களை உருவாக்கித் தரலாம்.

உங்கள் கம்ப்யூட்டரில் புதிய புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திடுகையில் கம்ப்யூட்டர் அந்த செயல்பாடு அட்மினிஸ்ட்ரேட்டரால் அவருக்கு அளிக்கப்பட்ட உரிமையில் மேற்கொள்ளப்படுகிறதா என்று கண்காணிக்கும்.

பொதுவாக இது போன்ற கண்காணிப்பு அந்த புரோகிராம் மிகவும் அட்வான்ஸ்டு ஆக அல்லது பலமுனைகளில் இயங்கக் கூடியதாக இருந்தாலே மேற்கொள்ளப்படும். எனவே இது போன்ற கண்காணிப்பின் அடிப்படையில் ஏதேனும் செய்திகள் கிடைத்தால் அவ்வளவுதான்

இனி என்ன செய்திட என்று விரக்தி அடைய வேண்டாம். இந்த அட்மினிஸ்ட்ரேட்டிவ் அக்கவுண்ட் பொதுவாக மறைத்து வைக்கப்பட்டிருக்கும். இதனை எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம்.


விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இதனைப் பெற முதல் செயலாகக் கம்ப்யூட்டரை சேப் மோடில் இயக்குங்கள். இதற்கு கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடுங்கள். விண்டோஸ் பூட் ஆகிக் கொண்டிருக்கையில் எப்8 பட்டனை அழுத்துங்கள். அடுத்து உங்களுக்கு எந்த வகையில் பூட் செய்திட என்று ஒரு பட்டியல் தரப்படும்.

அதில் Safe Mode என்பதைத் தேர்ந்தெடுங்கள். பின் என்டர் கீயினைத் தட்டுங்கள். திரையில் லாக் இன் திரையில் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் கிடைப்பதனைப் பார்க்கலாம். அடுத்து அட்மினிஸ்ட்ரேட்டிவ் அக்கவுண்ட்டிற்கான பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே நுழைந்திடுங்கள். இனி அனைத்தையும் உரிமையுடன் மேற்கொள்ளலாம்.

அடுத்து நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் யூசர் அக்கவுண்ட்டிற்கு எப்படி அட்மினிஸ்ட்ரேட்டர் உரிமையினை வழங்கலாம் என்று பார்க்கலாம். அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டில் நுழைந்த பின்னர் டெஸ்க் டாப்பில் உள்ள My Computer ல் ரைட் கிளிக் செய்திடவும்.

கிடைக்கும் மெனுவில் Manage என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அங்கிருந்து Local Users and Groups போல்டரை விரிக்கவும். அதன்பின் Administrators என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். பின் Add என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் எந்த அக்கவுண்ட்டிற்கு அட்மினிஸ்ட்ரேட்டிவ் உரிமையத் தர விரும்புகிறீர்களோ, அந்த வழக்கமான அக்கவுண்ட்டின் பெயரை என்டர் செய்திடவும். இது வழக்கமாக உங்கள் பெயராக இருக்கும்.

அல்லது வேறு வித்தியாசமான பெயராகவும் இருக்கலாம். (பெயரில் என்ன இருக்கிறது!) எதுவாக இருந்தாலும் ஏற்கனவே உள்ளதைச் சரியாக அப்படியே என்டர் செய்திட வேண்டும். இதைச் செய்து முடித்தபின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

அடுத்து கம்ப்யூட்டரை வழக்கம்போல ஸ்டார்ட் செய்திடவும். உங்கள் வழக்கமான அக்கவுண்ட்டினைத் தேர்ந்தெடுங்கள். இதற்கு அட்மினிஸ்ட்ரேட்டர் உரிமையினைக் கொடுத்து செட் செய்துவிட்டதால் இந்த அக்கவுண்ட்டிலேயே கம்ப்யூட்டர் உள்ளே நுழைந்து புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடலாம். இனி நீங்கள் விரும்பும் அல்லது தடையைச் சந்தித்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுங்கள். அது இன்ஸ்டால் ஆகும்.


இப்போது நீங்கள் நினைக்கலாம். அட்மின்ஸ்ட்ரேட்டிவ் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்ட் மறந்து போனால் என்ன செய்திடலாம் என்று. இந்த சூழ்நிலைகளும் சில வேளைகளில் எழலாம். ஏனென்றால் இந்த அக்கவுண்ட்டை பாஸ்வேர்டுடன் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தி இருக்க மாட்டீர்கள். சரி, இப்போது என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.


மறுபடியும் கம்ப்யூட்டரை சேப் மோடில் ஸ்டார்ட் செய்திடுங்கள். சேப் மோடில் சென்று இயங்கியவுடன், Start, Run பாக்ஸ் சென்று ‘Control userpasswords2’ என டைப் செய்திடுங்கள். ஒரு புதிய விண்டோ ஒன்று உங்கள் பாஸ்வேர்ட்கள் அனைத்தையும் கொண்டு தோன்றும்.

இங்கே உங்கள் அட்மினிஸ்ட்ரேட்டிவ் அக்கவுண்ட்டை கிளிக் செய்திடுங்கள். அடுத்து அதில் Reset Password என்ற பட்டனைக் கிளிக் செய்திடுங்கள். இப்போது கிடைக்கும் New Password மற்றும் Confirm New Password ஆகிய இரண்டு கட்டங்களிலும் புதிய பாஸ்வேர்டினைத் தரவும். பின் ஓகே கிளிக் செய்திடவும். பாஸ்வேர்ட் மாற்றப்பட்டிருக்கும்.

இதனை முடித்த பின்னர் மீண்டும் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடவும். இப் போது இன்னொரு யூசர் அக்கவுண்டிற்குக் கூட அட்மினிஸ்ட்ரேட்டிவ் ரைட்ஸ் கொடுக்கலாம்.

நன்றி:தினமலர்

அறிஞர்
27-05-2009, 08:05 PM
பகிர்ந்துகொண்டதற்கு நன்றி நூர்

அன்புரசிகன்
28-05-2009, 05:32 AM
இதை முறியடிக்க இயங்குதளத்தினை நிறுவும் போது கடவுச்சொல்லை கொடுத்தால் சரி.

இதிலும் சிறந்த வழி ஒன்று உண்டு. (bat கோப்பாக்கி இயக்குவது) அது மன்றத்தில் பகிர்வது விதிமுறைகளுக்கு அப்பாற்றட்டதாகிவிடும்.

பகிர்வுக்கு நன்றிகள்.

anna
31-05-2009, 08:15 AM
என்ன செய்தாலும் அட்மினிஸ்ரேட்டர் பாஸ்வேர்ட் மறந்து போனால் ஒண்ணும் செய்ய முடியாது.

praveen
31-05-2009, 09:39 AM
என்ன செய்தாலும் அட்மினிஸ்ரேட்டர் பாஸ்வேர்ட் மறந்து போனால் ஒண்ணும் செய்ய முடியாது.

யார் சொன்னது விண்டோஸ் பாஸ்வேர்டு மறந்து போனால் அதனை ரீசெட் செய்ய நிறைய வழிகள் உள்ளன. அது மைக்ரோசாப்டினால் அங்கீகரிக்கப்பட்ட முறை அல்ல என்பதனால் சட்டவிரோதம் போல கருதப்படுகிறது.. உங்கள் சொந்த கணினியாக இருந்து நீங்களே அதற்கு உரிமையாளர் என்றால் இந்த லிங்கை பிடித்து செல்லுங்கள்.

http://www.pcloginnow.com/

இது முழுக்க முழுக்க இலவச மென்பொருள், இதனை பிரச்சினை வரும் போது பதிவிறக்கி கொள்வோம் என்றில்லாமல் முதலிலே பதிவிறக்கி CD யாக பதிந்து வைத்து கொண்டால் பின்னாடி பிரச்சினை வரும் போது பயன்படுத்த எளிதாக இருக்கும்


மேலே கண்டதில் அது ப்ரிவேர் என்று தான் தந்திருக்கிறார்கள், அந்த பதிவிறக்க நேரடி சுட்டி

http://sourceforge.net/project/showfiles.php?group_id=231735&package_id=281647&release_id=618599

மாற்று சுட்டி
http://www.mydigitallife.info/2008/07/06/pcloginnow-pc-login-now-free-download-to-reset-windows-admin-or-user-password/