PDA

View Full Version : இன்றைய சமுதாயம்....



இன்பக்கவி
27-05-2009, 08:49 AM
பணத்தை தேடி
குடும்பத்தை மறந்த
தலைவன்..
தொலைக்காட்சி தொடரில்
மூழ்கி அழுது புலம்பும்
தலைவி....
வீட்டில் இருக்க வேண்டிய
பெரியோர்கள் நலிந்து
முதியோர் இல்லத்தில்...

பொய் பேசி பணம்
வாங்கி நட்பு வட்டாரத்துக்குள்
சீரழியும் மகன்....
இளையத் தலைமுறை என்று
உடையில் கவனம்
மறந்த மகள்....

வேலை தேடி அயல் நாடு
சென்று எல்லாம் தொலைத்து
வெறும் கையில் நாடு
திரும்பும் இளைஞர்கள்...
யாரோ விரித்த வலையில்
விழுந்து தீவிரவாதி-யாய்
மாறும் கூட்டம் ஒரு புறம்....
காதல் காதல் என்று
பித்து பிடித்து அலையும்
கூட்டம் மறுபுறம்....

குடும்பத்திற்ககா
கூலியாய் மாறும்
குழந்தைகள்...
மனைவியை கர்ப்பத்தால்
மட்டுமே நிரப்பும்
குடிகாரன்......
பள்ளியை மறந்த
குழந்தை தொழிலாளிகள்.....

மக்களின் வறுமையை
சாதகமாகி சுகமாய்
வாழும் அரசியல்வாதி.........
இது தான் நம் செழுமையான
சமுதாயம்......:traurig001:

பென்ஸ்
27-05-2009, 06:51 PM
கவிதா....

(மன்றத்தில் இன்னும் ஒரு "கவி" உண்டு... இப்படி பெயர் இருந்தாலே எழுதவும் ஆரம் பிச்சிடுவாங்களோ???)

கவிஞனின் பலம் சமுதாய சீர்கேடை சுட்டிகாட்டுவது...
அவனின் பலவீனம்... சாடுவதோடு விட்டுவிடுவது....

உங்கள் கவிதையின் கரு அழகு,
வார்த்தைகள் அழகு...
ஆனால்...!!!
அடுக்கிய விதம் ... இன்னும் செம்மைபடனும்...
அனாவசிய வார்த்தைகளை குறையுமானால் இன்னும் கவிதை இனிக்கும் என்பது என் கருத்து.

உங்கள் கவிதைகள் படித்து வருகிறேன்...
அனைதும் ருசித்தன... வாழ்த்துகள்....

இன்னும் நிறைய எழுதுங்கள், மன்றம் ஒரு எழுதுபலகை, பழகுங்கள் (நன்றி: இளசு)

அறிஞர்
27-05-2009, 08:14 PM
சமுதாயத்தை சாடும் கவியின் கவி....
எளிமையான வரிகளில்..
அழகான கவி.. வாழ்த்துக்கள்..

பாரதி
28-05-2009, 02:06 PM
இன்றைய சமுதாயத்தை எளிய வார்த்தைகளில் விளக்கியவிதம் நன்று.
பெஞ்சமினின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்.
இன்னும் எழுதுங்கள். நன்றி.

samuthraselvam
29-05-2009, 10:21 AM
அருமையான கவிதை வரிகள் கவி... வாழ்த்துக்கள்..